18 February 2015

அனேகன் - ANEGAN - வேகன் ...


வி.ஐ.பி யின் வெற்றிக்கு பிறகு  அதே பாணி கமர்ஸியலோடு சேர்த்து தனுஷின் நடிப்புக்கும் தீனி போட்டிருக்கும் படம் அனேகன் . பஸ்ஸிலோ , ட்ரைனிலோ போகும் போது அநேகமாக அனைவரும் படித்திருக்கும் டைம் பாஸ் பாக்கெட் நாவல் டைப் கதை தான் அனேகன் . அதையே போரடிக்காமல் கொடுத்திருக்கிறது சுபா - கே.வி.ஆனந்த் கூட்டணி ...

ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் மது விற்கு ( அமைரா ) பல முகங்கள் , சம்பவங்கள்  முன் ஜென்ம நினைவாக வருகின்றன . முன் ஜென்ம காதலன் போலிருக்கும் அஸ்வினை ( தனுஷ் ) யும் காதலிக்கிறார் அமைரா. போன பிறவியில் தனக்கும் தன் காதலன் காளிக்கும் இழைக்கப்பட்ட அநீதியை கண்டுபிடிக்கும் அமைரா அதற்கு காரணமான வில்லனிடமிருந்து தப்பித்தாரா என்பதை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே எனும் மேஜிக்கால் மறக்கடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர் ...


தனுஸிற்கு வழக்கமான ஈஸி கோயிங்க் கதாபாத்திரம் தான் என்றாலும் நடிப்புக்கு தீனி போடுகிறான் காளி . 3 விதமான கெட்  அப்புகளிலும் வித்தியாசம் காட்டும் உடல்மொழி அவரின் சிறப்பு . சூனா ரூனா வுக்கு ஃபீலாகும் கூட்டம்  . டங்கா மாரிக்கு மெரசலாகிறது  . கார்த்திக்கை அஷ்வின் மிமிக் செய்யும் போது அப்ளாஸ் அள்ளுகிறது . கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது பழமொழி தனுஷிற்கு ஏகப் பொருத்தம் ...

மாஸ் ஹீரோ படத்தில் ஹீரோயினை  சுற்றி நகரும் கதை கிடைத்ததுக்கே அம்மணி அமைரா வுக்கு சுற்றிப்  போட வேண்டும் . 3 வித கெட்டப்புகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை நனைக்கிறார் சமுத்ரா . ஆல் த பெஸ்ட் அமைரா . பிரபு போல சேதாரத்தை அடித்தெல்லாம் நொறுக்காமல் செலெக்டிவான ரோலில் பின்னி எடுத்திருக்கிறார் கார்த்திக் . இவரது கேரக்டரை முதலில் வெறுமனே உலவ விட்டு பின் விஸ்வரூபம் எடுக்க விட்டிருப்பது சாமர்த்தியம் . கார்த்திக் தமிழில்  பேசினாலே புரிய நேரமாகும் , அவரை ஆங்கிலத்தில் ஓவராக அளவளாக விட்டிருப்பது  தான் கொஞ்சம் டப்பிங் பட ஃபீலை கொடுக்கிறது . ஆஷிஷ் வித்யார்த்தி க்கு கமிஷனராக அக்மார்க் வேஷம் . இவருக்கெல்லாம் ரிட்டையர்மெண்டே கெடையாதோ ?! . இவரது கேரக்டரில் உள்ள குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...டங்கா மாரி தியேட்டரையே அதிர வைத்தாலும் ஹாரீஸ் - ஆனந்த் கூட்டணியின் முந்தைய படங்களின் மேஜிக் இதில் மிஸ்ஸிங் . விஜய் நடித்திருக்க வேண்டிய படம் அவரே தனுஷை ரெக்கமண்ட் செய்ததுக்கு முதலில் நன்றி . ஹீரோயினை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்காது . க்ரைம் நாவல் டைப்பில் லாஜிக்கை  யோசிக்க விடாமல் நம்மை கதைக்குள் ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் . வில்லன் தரப்பு நியாத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருப்பது ஆரோக்கியம் ...

முதல் இருபது நிமிடங்கள் வரும் பர்மா எபிசோட் படத்தின்  மெயின் கதைக்கு தேவை தானா ? ,கார்த்திக் கம்பெனியில் எல்லோரும் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது மதுவுக்கு மட்டும் ஏன் பூர்வ ஜென்ம நினைவு வருகிறது ?தனுஷ்   மேல் மட்டும் ஆர்வம் காட்டும் அமைரா கூடவே உலா வரும் மற்ற பூர்வ ஜென்ம கேரக்டர்களை ஏன் கண்டு கொள்ளவே இல்லை ? அவ்வளவு பெரிய கம்பெனியில் திடீரென லிஃப்ட் விழுவது ஏன் ? ஆஷிஸ் வித்யார்த்தி ஏன் ஆர் வைத்த மோதிர விரலை மறைக்கிறார் ? 25 வருடங்கள் எதுவுமே ஆகாத போது ஏன் கார்த்திக் திடீரென பதறுகிறார் ? அவ்வளவு பெரிய ஆள் இந்த இரண்டு பேரின் கதையை முடிப்பதற்கு இவ்வளவு நாள் வெயிட் செய்ய வேண்டுமா ? இப்படி படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது தோன்றும்  நிறைய ஏன்களை படம் பார்க்கும் போது யோசிக்க விடாமல் வேகமாக திரைக்கதை அமைத்த விதத்தில் ஜெயிதிருக்கிறான் இந்த அனேகன் ...

ஸ்கோர் கார்ட் : 43 

6 February 2015

என்னை அறிந்தால் - YENNAI ARINTHAAL - பழைய கள் புது மொந்தை ...


நாம் எதிர்பார்க்கும் காம்பினேஷன்களில் ஒன்று அஜித்குமார்  - கவுதம் மேனன் கூட்டணி . ஏற்கனவே காக்க காக்க வில் தவறிப் போனது என்னை அறிந்தால் மூலம் நடந்திருக்கிறது . காக்க காக்க , வேட்டையாடு விளையாடு பார்ட் 2 போல படம் இருந்தாலும் படம் நெடுக மாஸ் அஜித்தை கிளாசாக காட்டி குறைகளை சமன் செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ...

த்ரிஷா , ஜோதிகா என்று தனது படங்களில் ஹீரோயின்களை அழகழகாக காட்டும் கவுதம் அஜித் மேல் காதல் வயப்பட்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு விதவிதமான கெட்டப்களில் இந்த படத்தில் தல அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார் . அனுஷ்கா ஒரு சீனில் சொல்வது போல அஜித் அழகுன்னா அவ்வளவு அழகு . ஆனால் அதற்காக விமானத்தில் முதல் தடவை பார்த்தவுடனேயே அனுஷ்கா ஜொள்ளு விட்டுக் கொண்டு லவ்வு வசனம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர் . அனுஷ்கா அந்த அளவு மொக்க பிகரா என்ன ? . அஜித்தை நடக்க மட்டும் விடாமல் நடிக்கவும் விட்டிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் . சூர்யா , கமல் இருவருக்கும் மேலே காப் கதாபாத்திரத்துக்கு அஜித் ஒரு ஸ்டைலிஷ் லுக் கொடுத்திருப்பது உண்மை . குறிப்பாக நிறைய இடங்களில் சோர்வாக போகும் திரைக்கதையை தூக்கிப் பிடிப்பது அஜித்தின் இமேஜ் மட்டுமே ...

த்ரிஷா , அனுஷ்கா இருவரில் சீன்கள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருப்பது த்ரிஷா மட்டுமே . கேரக்டர் படி வே.வி ஜோதிகா வின் ஜெராக்ஸ் தான் த்ரிஷா பட் கவர்கிறார் . அஜித்தை பார்த்து ஜொள் விடுவதை தவிர அனுஷ்காவிற்கு பெரிய வேலை எதுவுமில்லை . ஹீரோவாக் இருக்கும் போதே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட அருண் விஜய் க்கு ஒரு ஹான்ட்ஸ் ஆப் . வழக்கமான கவுதம் ப்ராண்ட் வில்லன் போல கத்தினாலும் சண்டைக்காட்சிகளில் ஹீரோவை விட ஒரு படி மேலாகவே ஸ்கோர் செய்கிறார் . படத்தின் மெயின் ப்ளாட்டுக்கு தொடர்பில்லாதது போல பட்டாலும் ஆஷிஷ் வித்யார்த்தி - அஜித் சம்பந்தப்பட்ட சீன்கள் ரசிக்க வைக்கின்றன . விவேக் இட்ஸ் ஓகே ரகம் ...


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , தாமரையின் வரிகளில் " மழை வர போகுது " ,
" உனக்கென்ன " போன்ற பாடல்கள் இனிமை . ஆனாலும்  ஆக்ஸன படத்துக்கு இவ்வளவு பாடல்கள் நடுநடுவே வந்து சோர்வடைய வைக்கின்றன . டான் மாசர்துரின் ஒளிப்பதிவு காப் படத்துக்கு க்ரேட் கலரிங் கொடுத்திருக்கிறது ...

கா.கா , வே.வி பாணியில் ஒரு போலீஸ்காரன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே என்னை அறிந்தால் . ஹீரோவுக்கு ஈக்குவலான வில்லன் கேரக்டர் , அதற்கு அருண் விஜயை தேர்வு செய்தது , அண்டர்க்ரவுண்டில் நடக்கும் ஆர்கன் திருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது , ஸ்டைலிஷ் மேக்கிங் , கடைசி 45 நிமிடங்கள் நம்மை கட்டிப்போடும் திரைக்கதை இவையெல்லாம் என்னை அறிந்தால் அறியத் தூண்டும் விஷயங்கள் ...


ஹாலிவுட்டில் வேறு வேறு ஹீரோக்களை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் எடுப்பது போல இங்கே கவுதம் எடுப்பதில் தப்பில்லை . ஆனால் பழைய பாட்டுக்கு நடுநடுவே மானே தேனே போடுவது போல முதல் இரண்டு படங்களின் தொடர்ச்சி போல இதையும் அமைத்திருப்பது பின்னடைவு . குறிப்பாக வே.வி ஜோதிகா போல த்ரிஷா , கா,கா ஜோதிகா போல அனுஷ்கா , சில சீன்களில் கமலை நியாபகப்படுத்தும் அஜித் ( கேரக்டர் ) இவற்றை தவிர்த்திருக்கலாம் . அதிலும் " தே ..., ஒ ... " போன்ற வசனங்களை இந்த படத்தில் வில்லனை விட ஹீரோ  அதிகமாக பேசுவது சறுக்கல் . 4 வருஷம் ஊர் ஊராக சுற்றி விட்டு  திடீர்னு போலீஸ் ஷூ போடுக்குட்டு உடனே அஜித் வேலைக்கு போவதெல்லாம் அதாரு உதாரு ...

முதல் பாதி படு ஸ்லோவாக  போவது படத்துக்கு பெரிய அடி . நம்மளும் அஜீத்துக்காக எவ்வளவு அடிய தான் பொறுக்கறது . பேசாம டி வியில வேட்டையாடு விளையாடு , காக்க காக்க போடும் போது பாதுருக்கலாமோ என்று நினைக்க வைக்குமளவுக்கு எனனே கவுதம் சாரே ?! . புது மொந்தையில் பழைய கள்ளாக இருந்தாலும் மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் பட்டி தட்டி ட்ரிம் செய்திருந்தால் நிச்சயம் இன்னும் கவர்ந்திருக்கும் இந்த என்னை அறிந்தால் ...

ஸ்கோர் கார்ட் : 42 Related Posts Plugin for WordPress, Blogger...