13 March 2022

எதற்கும் துணிந்தவன் - Etharkum Thunindhavan Movie Review


ஓடிடி யில் வரிசையாக ஹிட் கொடுத்த சூர்யாவுக்கு மூன்று வருடங்கள் கழித்து தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன் . விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் தனது படங்களை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவிற்கு இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

படத்தின் கதை பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டது . அதில் பாண்டிராஜ் தனக்கே உரிய கிராமத்து பிண்ணனி யில் குடும்ப செண்டிமென்டை சேர்த்துக் கொடுத்திருக்கிறார் . வக்கீல் கண்ணபிரானாக சூர்யா இந்த ஆர்டினரி கதைக்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக நடித்திருக்கிறார் .‌‌‌ஹீரோயின் பிரியங்கா ஆள் ஸார்டாக இருந்தாலும் அவர் எக்ஸ்ப்ரெஸன்ஸ் க்யூட்டாக இருக்கிறது . ஆஸ் யூசுவல் அம்மாவாக சரண்யா . கிராமத்து பிண்ணனி க்கு பொருந்தா வில்லனாக வினய் ...


காமெடியன் சூரியை விட இளவரசு - தேவதர்ஷினி ஜோடி காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .‌‌ பாலியல் மிரட்டல்களுக்கு எதிராக பெண்களை தைரியமாக இருக்க சொல்வது , காவலன் ஆப்பின் பயன்பாட்டை சொல்வது எல்லாம் படத்தின் பாஸிடிவ் . ஆரம்பத்திலும் , இடைவேளையிலும் அழகான காட்சியமைப்பு , ஒளிப்பதிவு ப்ளஸ் ...

வில்லன் வினய் ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ வை வெளியிடுவேன் என மிரட்ட அடுத்த காட்சியில் ஹீரோ ஏதாவது செய்வார் என பார்த்தால் அவர் கூலாக காஃபி சாப்பிட்டு விட்டு டூயட் பாடுவது சுத்த அபத்தல் . ஆக்சன் திரில்லாகவும் இல்லாமல் ஃபேமிலி  என்டர்டெய்னராக வும் இல்லாமல் தொங்குகிறது படம் .‌‌‌ இருப்பினும் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனக்கேயுரிய ஸ்டைலில் அழகாக இயக்குனர் எடுத்திருப்பதால் எதற்கும் துணிந்தவன் - குடும்பஸ்தன் ...

ஸ்கோரர் கார்ட் ‌: 40 

ரேட்டிங்க் : 2.5 * 

அன்புடன் ,

Vanga Blogalam அனந்து ...இந்த படத்தின் வீடியோ விமர்சனத்திற்க்கு கீழே பார்க்கவும் ..

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/YItpyzruim8" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

1 March 2022

வலிமை வென்றதா ? Valaimai Tamil Movie Review


பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?!  அஜித் - வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் ... 

தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் வலிமை . அதில் நடுநடுவே மானே தேனே என்று காதல் காட்சிகளை வைக்காமல் அம்மா சென்டிமெண்டை கொட்டியிருக்கிறார் வினோத் ‌‌. அது என்னவோ ஹாலிவுட் படத்தையும் , பழைய தமிழ் படத்தையும் ரிமோட்டில் மாறி மாறி பார்த்த அனுபவத்தை கொடுப்பது தான் துரதிருஷ்டம் ...

அஜித் சட்டை யை கழட்டி வைத்து சண்டை போடவில்லை , பறக்க பறக்க பஞ்ச் டயலாக் பேசவில்லை ஆனால் பைக்கில் பறந்து பறந்து சட்டை போட்டு அதகளப்படுத்துகிறார் . வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஆறுதல் என்றாலும் க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிவதை தவிர்த்திருக்கலாம் . ஹீரோயின் இல்லை என்கிற குறையை ஹிமா குரேசி நீக்குகிறார் . தம்பி கேரக்டர் ட்விஸ்ட் என எதிர்பார்த்து வைத்திருந்தால் அது தான் வொர்ஸ்ட் . தெலுகு இறக்குமதி வில்லன் கார்த்திகேயன் கலக்கல் நடிப்பு ஆனால் அவர் பாத்திரப் படைப்பு அந்த அளவு கவரவில்லை ‌‌...

அஜித் , ஆக்சன் காட்சிகள் , இசை , ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலம் ஆனால் ஆக்சன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் முடிக்காமல் இரண்டாம் பாதியை இழுத்து அம்மா சென்டிமெண்டை கலந்தடித்தது பலவீனம் . சிலர் கழுவி ஊற்றும் அளவு படம் அவ்வளவு மோசமில்லை அதிரடி ஆக்சன்களுக்காக குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் . மொத்தத்தில் பைக் ரேஸர்சை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த வலிமை பைக் புதுசு இன்ஜின் பழசு ...

ஸ்கோர் கார்ட். : 41 

ரேட்டிங்க். : 2.5 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam YouTube Channel ல் காணவும் 🙏 ...

அனந்து ...

Related Posts Plugin for WordPress, Blogger...