2 April 2012

நல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )
குறும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொலைகாட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை ஆரம்பித்த வருடமே கதையை முடிவு செய்தும் அதை எடுப்பதற்கான சூழல் இல்லை ...

வழக்கம் போல சினிமா விமர்சனங்களில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த பொழுது , குறும்படங்களையும் விமர்சனம் செய்யலாமே என மூன்றாம் கோணம் ஷஹி கொடுத்த ஆலோசனைக்கேற்ப " குறும்பட கார்னர் " பகுதியில் சில குறும்படங்களை விமர்சனம் செய்து வந்தேன் ... விமர்சனங்களுக்காக குறும்படங்களை பார்க்க தொடங்கியதில் மீண்டும் என் குறும்பட ஆசை துளிர்க்க தொடங்கியது ...

இதற்கிடையில் நேசம் + யுடான்ஸ் அமைப்பினரின் புற்றுநோய் விழிப்புணர்வு கதை , கட்டுரை , குறும்பட போட்டிகளுக்கான அறிவுப்பு வரவே நாம் எடுக்கப்போகும் முதல் குறும்படமே ஒரு நல்ல நோக்கத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணம் என்னை மேலும் உந்தியது ...

அலுவல்களும் , குறுகிய கால அவகாசமும் இடையூறுகளாக இருந்த போதிலும் நினைத்த படி இரண்டே நாட்களில் குறும்படத்தை முடிக்க முடிந்ததில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு எனக்கு உறுதுணையாய் இருந்த நடிகர் சேஷன்,ஒளிப்பதிவாளர் ஆனந்த் சாரி , எடிட்டர் கார்த்திக் , இசையமைப்பாளர் உதய் மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

எனது குறும்படத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக     தேர்ந்தெடுத்தமைக்கும் , சான்றிதழ் வழங்கி கெளரவித்தமைக்கும் நேசம் +  யுடான்ஸ் அமைப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...இது வரை என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து நிறை , குறைகளை சுட்டிக்காட்டி உற்சாகம் அளித்து வரும் நண்பர்களும் , அன்பர்களும் அதே ஆதரவை என் புது முயற்சிக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ குறும்படத்திற்கான இணைப்பை தருகிறேன் ..

29 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள், படம் நாளை பார்க்கிறேன்

ananthu said...

நன்றி நண்பா ! மறக்காமல் பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள் ...

Gopi Ramamoorthy said...

படம் பாத்தேன். நன்றாக இருந்தது.

பொழுதைக் கொல்ல படத்தில் வருவது போலக் காத்திருக்கும் தருணங்களிலும் நண்பர்களுடன் கூடும்போதும், கவலையின் போதும் தான் நிறைய புகை பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கிரிக்கெட் ஆடும்போது சேஷன் பந்தை மிஸ் செய்யும் காட்சி நன்றாக இருக்கிறது. நல்ல ஒளிப்பதிவு.

ஃபிளாஷ்பேக் கருப்பு வெள்ளையில் - நல்ல ஐடியா

ஆரம்பத்தில் பையன் தனியாக ஆடுவது - நல்ல ஐடியா. ஆனால் ஒரு சோகமான ஃபிளாஷ்பேக் இருக்கிறது என்பதை அந்தக் காட்சி முதலிலேயே காட்டிக் கொடுத்துவிடுகிறது.

படத் தொகுப்பு, இசை, நடிப்பு, கேமரா எல்லாமே பிரமாதம்.

இன்னும் நிறைய நல்ல படங்கள் எடுங்கள்.

angelin said...

Congrats Ananthu

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

angelin said...
Congrats Ananthu

Thanks angelin , have seen after a long time !

ananthu said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

JZ said...

கருத்தாழமிக்க குறும்படம் அண்ணா.. இத்துடன் விட்டுவிடாமல் மேலும் பல குறும்படங்களையும் நீங்கள் எடுக்க வேண்டும்!

உங்களுக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

Kumaran said...

கண்டிப்பாக இப்பொழுதே பார்த்துவிடுகிறேன்.மிக்க நன்றி சகோ..நல்ல பகிர்வு.

கடம்பவன குயில் said...

உங்களின் முதல் குறும்படம் போலவே தெரியவில்லை. ரொம்ப கிளியரா திட்டமிட்டு எடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஷாட்டிலும் நேர்த்தி தெரிகிறது. வெல்டன். திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் . வாழ்த்துக்கள். கரண்ட் கட் ஆனதால் டீடெய்்ல் கருத்துரை வழங்க முடியவில்லை. மன்னிக்கவும்.

ரெவெரி said...

படம் நன்றாக இருந்தது...பாராட்டுக்கள்...உங்கள் குறும்பட பயணம் நெடு நாள் நீடித்து நெடும் படம் பலவும் வாய்க்க வாழ்த்துக்கள் அனந்து...

உலக சினிமா ரசிகன் said...

முதல் படத்திலேயே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் புகழும்...பாராட்டும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

ஹேமா said...

இன்றே பார்க்கிறேன் அனந்த்.நன்றி !

kovaikkavi said...

சகோதரா தங்களுக்கு முன்பு கருத்திட முயற்சித்துத் தவறி விட்டது. இப்போது இந்த முகத்தைக் கண்டதும் நினைவு வந்தது. பெயரை அழுத்த வலை வரவில்லை.என்ன செய்யலாம் என்று தமிழ்மணத்திற்குச் சென்று பிடித்தேன்.
குறும் படம் பார்த்தேன் ஒரு சிறுவன் பெரியவரைத் திருத்துவது நல்ல தீம். எனக்குப் பிடித்துள்ளது. தொழில் நுட்பமும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரா. மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். தொடருவேன்.
வேதா. இலங்காதிலகம்.

விச்சு said...

அனந்து சார் கலக்கிட்டீங்க. ப்ளாஸ்பேக் கருப்பு வெள்ளையில் காமித்தது. //சச்சினே இம்புட்டு பேச மாட்டார்// என்ற வசனம். அப்பா கேரக்டரே காமிக்காமல் படம்பிடித்த விதம்... ஒரு சிறிய கதையை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

இந்த கருத்துரையே டீடைல்டாக தான் இருக்கிறது ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

ரெவெரி said...
படம் நன்றாக இருந்தது...பாராட்டுக்கள்...உங்கள் குறும்பட பயணம் நெடு நாள் நீடித்து நெடும் படம் பலவும் வாய்க்க வாழ்த்துக்கள் அனந்து...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

உலக சினிமா ரசிகன் said...
முதல் படத்திலேயே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் புகழும்...பாராட்டும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

ஹேமா said...
இன்றே பார்க்கிறேன் அனந்த்.நன்றி !

நன்றி ஹேமா ...

ananthu said...

kovaikkavi said...
சகோதரா தங்களுக்கு முன்பு கருத்திட முயற்சித்துத் தவறி விட்டது. இப்போது இந்த முகத்தைக் கண்டதும் நினைவு வந்தது. பெயரை அழுத்த வலை வரவில்லை.என்ன செய்யலாம் என்று தமிழ்மணத்திற்குச் சென்று பிடித்தேன்.
குறும் படம் பார்த்தேன் ஒரு சிறுவன் பெரியவரைத் திருத்துவது நல்ல தீம். எனக்குப் பிடித்துள்ளது. தொழில் நுட்பமும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரா. மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். தொடருவேன்.
வேதா. இலங்காதிலகம்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

விச்சு said...
அனந்து சார் கலக்கிட்டீங்க. ப்ளாஸ்பேக் கருப்பு வெள்ளையில் காமித்தது. //சச்சினே இம்புட்டு பேச மாட்டார்// என்ற வசனம். அப்பா கேரக்டரே காமிக்காமல் படம்பிடித்த விதம்... ஒரு சிறிய கதையை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Ramani said...

குறும்படத்திற்கான கால அளவுக்குள்
இத்தனைப்பெரிய விசயத்தை இவ்வளவு நேர்த்தியாகச்
சொல்லிச் செல்வது கடினமான காரியமே
அருமையாகச் சொல்லிச் செல்லுகிறீர்கள்
வசனம் படப்பதிவு இசை அனைத்தும் அருமை
அனைவரும் மிகச் சரியாகக் கவனித்து பாராட்டி இருப்பது
மகிழ்ச்சியாக இருந்தது
சொல்லுவது போல் இல்லாமல்இன்னும் கொஞ்சம்
உணர்வது போல் எடுத்திருக்கலாமோ என்கிற எண்ணம் வந்தது.நிஜம்
மனம் கவர்ந்த அருமையான குறும்படம்
தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஹேமா said...

மிகவும் மனதைத் தொட்டது குறும்படம் அனந்த் !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா ...!

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...