31 March 2019

சூப்பர் டீலக்ஸ் - SUPER DELUX - சுகானுபவம் ...


ரண்ய காண்டம் தந்த தியாகராஜன் குமாரராஜா வின் அடுத்த படத்துக்கான எட்டு வருட காத்திருப்புக்கு சரியான தீனி சூப்பர் டீலக்ஸ் . ஆனால் நிச்சயம் ஆரண்ய காண்டம் மாதிரி கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்த்தால் அது ஏமாற்றமே . இதில் எமோஷனல் டிராமா , ஃபேண்டஸி , பிளாக் ஹியூமர் , த்ரில் என அனைத்தையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி.கே...

கணவன் முகிலுக்கு ( ஃபர்ஹத் பாசில் ) தெரியாமல் பழைய காதலனுடன் மேட்டர் செய்யும் பெண் வேம்பு ( சமந்தா ) , நண்பர்களுடன் பார்க்கும் மேட்டர் சிடி யில் தன்  அம்மாவையே ( ரம்யா கிருஷ்ணன் ) பார்த்து அதிர்ச்சியாகும் சிறுவன் , பல வருடங்கள் கழித்து திருநங்கையாக வந்து
குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் கணவன் ஷில்பா ( விஜய் சேதுபதி ) கடவுளின் வலது கரமாக தன்னை நினைத்துக்கொண்டு வியாதிகளிலிருந்து மக்களை காப்பாற்ற பிராத்தனை செய்யும் அற்புதம்
( மிஷ்கின் ) இப்படி நால்வரின் சம்பவங்களை நான் லீனியரில் சொல்வதே சூப்பர் டீலக்ஸ் ...

மாஸ் ஹீரோ , ஹீரோயினாக இருந்தாலும் இது போன்ற கேரக்டர்களில் இமேஜ் பார்க்காமல் விஜய் சேதுபதி , சமந்தா வுக்கு வாழ்த்துக்கள் .
நான்கில் விஜய் சேதுபதி யின் எபிசோட்  அதிகம் கவர்கிறது . குறிப்பாக அந்த குட்டிப்பையன் ராசுக்குட்டி அற்புதம் . அவனை தொலைத்து விட்டு விஜய் சேதுபதி படும் பாடு ஹைலைட் . சமந்தா ஏதோ போரடித்தது படத்துக்கு போனேன் என்பது போல பழைய காதலனுடன் முதல் சந்திப்பிலேயே மேட்டர் செய்வது நெருடல் . அதனால் தான் இன்ஸ்பெக்டர் மெர்லின் ( பகவதி பெருமாள் ) ஷில்பாவுக்கு தொல்லை கொடுக்கும் போது வரும் வலி இவருக்கு கொடுக்கும் போது வரவில்லை . சமந்தா - ஃபர்ஹத் சண்டை போட்டுக்கொள்வது கூட மெலோட்ராமா . ஃபர்ஹத் நடிப்புக்காகக  இந்த சீன்களை ரசிக்க முடிகிறது ...


பிரார்த்தனை செய்யும் மிஷ்கினை விட அவர் அசிஸ்டன்ட் அதிகம் கவர்கிறார். நான்கு பசங்களில் காஜி யாக வருபவர் கவனிக்க வைக்கிறார்  . தேவிடியா என்று தன்னை திட்டின மகனை காப்பாற்ற டாக்டரிடம் போராடும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு நெகிழ்ச்சி . முதலில் ரசிக்க வைக்கும் நான்கு பசங்களின் காமெடி சீன்கள் ஏலியன் என்ட்ரிக்கு பிறகு போரடிக்கிறது . அடிச்சு மூஞ்சிய உடைக்கணும் ன்ற அளவுக்கு வெறுப்பேற்றும்  கேரக்டரில் வெற்றி பெறுகிறார் பகவதி . முக்கியமான இந்த கேரக்டருக்கு இன்னும் வெயிட்டான ஆளை போட்ருக்கலாமோ எனவும் தோன்றுகிறது ...

ஷில்பா - அற்புதம் சம்பந்தப்பட்ட ஸீன் அற்புதம் . அது கல்லு தானே சாமி என்பது டயலாக்காக ரசிக்க வைத்தாலும் கடவுள் பற்றிய சிந்தனை இயக்குனருக்கு  மேம்போக்காகவே இருக்கிறது  . ஆரண்ய காண்டம் போலவே முதல் சீனை மீட்டரில் இருந்து ஆரம்பிக்கும்  இயக்குனர் கொலை நடந்த வீட்டுக்குள் வரும் கெஸ்ட்டாக வரும் குடும்பம் ,  லைவாக பிரச்னையை எடுத்து முகநூலில் போடும் கவுன்சிலர் , அசைன்மெண்ட் கொடுக்கும் பாய் , திருநங்கையாக மாறிய அப்பாவிடம் அப்பாவித்தனமாக கேள்விகள் கேட்கும் ராசுக்குட்டி என சின்ன சின்ன கேரக்டர்கள் வாயிலாக கூட நம்மை அவர் உலகத்துக்குள் அழைத்து சென்று ஐக்கியமாக்குறார் ...

வினோத் , நீரவ் ஷா வின் ஒளிப்பதிவு , யுவனின் பின்னணி இசை எல்லாமே கண்ணையோ , காதையோ உறுத்தாமல் தேவையான அளவுக்கு இயக்குனருக்கு ஸ்பேஸ் கொடுத்து அடக்கி வாசித்திருப்பது பலம் . இண்டெர்வெல்லுக்கு பிறகு படத்தின் மேல் சுவாரசியம் குறைவதற்கு காரணம் நீளம் . ஃப்ரிட்ஜுக்குள் பிணம் இருப்பது தெரியாமல் " நான் வெஜ் வெக்கலையே " என்று கேட்கும் பிராமணர் ,  தமிழனா இருந்த ஷேர் பண்ணுன்னு சொல்லும் கவுன்சிலரின் அசிஸ்டன்ட் , ஸ்டார் ஆவதற்கு முன்னமே சமூக பிரச்சனைகளை பன்ச் டயலாக் பேசி பயிற்சி செய்யும் ஃபர்ஹத் பாசில் , நாடகத்தனமான பிரார்த்தனையை காறித்துப்பும் ரம்யா கிருஷ்ணன்  என செலெக்டிவாக இல்லாமல் எல்லாவற்றையும் கேரக்டர்கள் மூலமாக இயக்குனர் ஓட்டியிருப்பது மிக சிறப்பு . சூப்பர் டீலக்ஸ் எனும்
சுகானுபவத்தில் க்ளைமேக்சில் வந்து மனுஷ்யபுத்திரன் தத்துவம் பேசுவது திருஷ்டிப்பொட்டு ...

ரேட்டிங்  : 3.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 48


3 March 2019

தடம் - THADAM - தடம் பதிக்கும் ...


டையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி - அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால்
கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் ...

ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் ...

எழில் , கவின் என இரு கதாபாத்திரத்தில் ஒரு மரு கூட வித்தியாசம் இல்லாமல் வந்தாலும் உடல் மொழியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார் அருண் விஜய் . குற்றம் 23 க்கு பிறகு அமைந்த நல்லதொரு வேடத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் . இரண்டு ஹீரோயின்களில் தன்யா அழகிலும் வித்யா கதாபாத்திரத்திலும் கவர்கிறார்கள் . சோனியா அகர்வாலுக்கு வலுவான கேரக்டெர் ...


யோகி பாபு , ஜார்ஜ் மரியான் இருவரும் சீரியஸான படத்தில் தேவையான அளவு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . பெப்சி விஜயன் , ஸ்ம்ருதி போலீசாக பெர்ஃபெக்ட் . கோபிநாத்தின் ஒளிப்பதிவு , ஸ்ரீகாந்தின் எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பலம் . அருண்ராஜின் பின்னணி  இசை பெப் கொடுத்தாலும் மங்காத்தா வை நினைவு படுத்துகிறது ...

வித்தியாசமான கதைக்களன் , விறுவிறுப்பான திரைக்கதை இரண்டும் தான் தடத்தை தூக்கி நிறுத்துகின்றன . எழில் , கவின் இருவரும் ஒரே மாதிரி இருப்பது குழப்பம் தந்தாலும் போக போக ஒன்ற முடிகிறது . இருவரில் கவின் சம்பந்தப்பட்ட சீன்கள் சிம்ப்ளி சூப்பர்ப் . இண்டெர்வெல் சஸ்பென்ஸ் முடிச்சோடு  விடப்படும் படம் அதன் பின்னர் சூடு பிடிக்கிறது . ஸ்டேஷனுக்குள் தொடர்ந்து சீன்கள் வந்தாலும் சலிப்பை தராததற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் ...

இன்வெஸ்டிகேஷனில் சில லாஜிக் சொதப்பல்ஸ் உண்டு . டீட்ட்டைலாக சொன்னால் சுவாரசியம் கெட்டுப்போகும் . உதாரணத்திற்கு சொன்னால் போர்ஸ் ஏரியாவில் ஒரு கொலை நடக்கிறது . தெருக்கு தெரு சிசிடிவி இருக்கும் போது பெரிய ஏரியாவில் இல்லாமலா போகும் ? அவ்வளவு மழையிலும் ரத்தக்கறை காயாமல் இருப்பது எப்படி ? சில சில கேள்விகளை தடம்  எழுப்பினாலும் படம் போகிற போக்கில் அதை யோசிக்க விடாமல் செய்வது புத்திசாலித்தனம் . பேட்ட , விஸ்வாசம் கமர்ஷியல் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் தடம் வியாபாரத்தையும் தாண்டி நிச்சயம் இந்த வருடம் தடம் பதிக்கும் ...

ரேட்டிங்க் : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 45


Related Posts Plugin for WordPress, Blogger...