24 December 2017

வேலைக்காரன் - VELAIKKARAN - ஓவர் டைம் ...


ழக்கமாக சிறுசுகளை கவரும் டைம் பாஸ் படமாக இல்லாமல் இந்த முறை ஃபகத் ஃபாசிலுடன் சேர்ந்து  மோகன் ராஜா இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் சீரியஸ் அவதாரம் எடுத்திருக்கும் படம் வேலைக்காரன் . வேலைக்காரனை நம்பி நாம் போடும் முதல் தேறுமா ? பார்க்கலாம் ...

ரவுடி காசியின்  ( பிரகாஸ்ராஜ் ) பிடியிலிருந்து தன் குப்பத்து மக்களை  விடுவித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைக்கிறார் அறிவு ( எஸ்கே ) . அதற்காக ஒரு எஃப்.எம்.சி.ஜி கம்பெனியில் வேலைக்கு சேர்பவர் அங்கு நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நிறைய பேசுவதே சாரி பொங்குவதே வேலைக்காரன் ...

காமெடியையே மட்டும் நம்பி களமிறங்காத சிவகார்த்திகேயனுக்கு  நிச்சயம் இது ஒரு பரீட்சார்த்த முயற்சி . எஸ்கே , சதீஷ் , ரோபோ சங்கர் என ஒரு பட்டாளமே இருந்தும் முதல் பாதியில் மட்டும் ஓரளவு சிரிக்க முடிகிறது . ஆக்சன் காட்சிகளில் பெரிதாக எடுபடா விட்டாலும் அம்மா செண்டிமெண்ட் காட்சியில் அட போட வைக்கிறார் எஸ்கே . நன்றாக உழைத்திருந்தும் ஃபகத் , நயன்தாராவுக்கு நடுவில் ஒரு மாற்று குறைவாகவே தெரிகிறார் ...


இந்தியாவின்  மிகச்சிறந்த  நடிகர்களில் ஒருவர் ஃபகத்  ஃபாசில் . மனிதர் சின்ன சின்ன கண்ணசைவுகளில் தனது இயல்பான நடிப்பால் பிண்ணி பெடலெடுத்திருக்கிறார் . தனி ஒருவனில் அரவிந்த் சாமியை பயன்படுத்தியது போலவே இவரை சரியான முறையில் உபயோகப்படுத்திய ராஜாவுக்கு நன்றி. இவருடைய கேரக்டர் சஸ்பென்ஸை முன்னரே உடைத்திருந்தும் விறுவிறுப்புக்கு குறைவில்லை . கேரக்டரில் மட்டும் இல்லாமல் தோற்றத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அக்கா போல மெச்சூர்டாக இருக்கிறார் நயன்தாரா ...

பிரகாஷ் ராஜ் ரவுடியாக நடித்திருக்கும் பல்லாயிரத்து சொச்சம் படங்களில் இதுவும் ஒன்று . மனுஷன் கத்திக்குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்கும் போதும் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றி பேசி நம் காதுகளில் ரத்தம் வர வைக்கிறார் . சினேகா ,சார்லி , காளி வெங்கட் , ராமதாஸ் என ஒரு பட்டாளமே படத்தில் வீணடிக்கப்பட்டிருந்தாலும் ரோகினி மட்டும் கவர்கிறார் . அனிருத் இசையில் ஒரு குத்து பாட்டும் , மெலடியும்  தேறும் .   பின்னணி இசையில் இரைச்சல் இல்லாதது ஆறுதல் . குப்பத்தை கண்முன்னே நிறுத்திய கலை இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ...

தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு அதே போன்றதொரு ஹீரோ - வில்லன் மோதலை அதைவிட பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார் ராஜா . ரவுடிகளின் வெட்டுக்குத்துக்களை லைவாக  ரேடியோவில் கமெண்ட்ரி செய்வது , வேலைக்கார்களுக்கு முதலாளிகளின் மேல் இருக்கும் விசுவாசத்தை ( அஜித் படத்தின் தலைப்புக்கு நல்ல மார்க்கெட்டிங் இப்பவே ) உடைத்து ஒரு சின்ன பயத்தைக் காட்டினாலே அவர்கள் திருந்தி விடுவார்கள் என்கிற கான்செப்ட் , சூப்பர் மார்க்கெட்டில் வைத்து கார்ப்பரேட்கள் செய்யும் வியாபார தந்திரங்களை விளக்குவது என வேலைக்காரன் சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறான் ...


" உலகின் தலைசிறந்த சொல் செயல் " என்கிற வசனத்தை அடிக்கடி சொல்கிறார் ஹீரோ . ஆனால் அவரே எதையும் பெரிதாக செயலில் காட்டாமல் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பது படத்தின் சறுக்கல் . ஆளாளுக்கு பன்ச் பேசுவது போல இதில் போகிற போக்கில் எல்லோரும் ஏதோ வகையில் அட்வைஸ் செயகிறார்கள் . காசு இருக்கிறது என்பதற்காகவோ இல்லை கடனை வாங்கியோ தேவைக்கு மேலாகவே வாங்கி குவிக்கும் வாடிக்கையாளர்களை பற்றி எதுவும் சொல்லாமல் வெறும் கார்ப்பரேட்களை மட்டுமே குறை சொல்லியிருப்பது ஒன் சைட் கோல் ...

நுகர்வோரின் நலத்தை கவனத்தில் கொள்ளாமல்  லாபத்திற்காக கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்களின்  தில்லுமுல்லுகளை அங்கு வேலை பார்ப்பவர்களை வைத்தே முறியடிக்க நினைக்கும் கான்செப்ட் குட்  . லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் போகாமல் சீரியசான ரூட்டை பிடித்திருப்பதை பாராட்டலாம் . ஆனால் இரண்டாம் பாதியில் வேலைக்காரன் முழு நேர பேச்சாளனாக மாறியது துரதிருஷ்டம் . நார்மல் கதையை மக்களிடம் கொண்டு செல்வதற்கே நட்சத்திர பட்டாளத்தை வைத்து மார்க்கெட்டிங் பண்ண வேண்டுமெனும் பொழுது பல கோடி முதலீட்டில் தொழில் நடத்துபவன் அதை சக்சஸ் ஆக்க எவ்வளவு மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமென்கிற கேள்வியுடனேயே தியேட்டரை விட்டு வர முடிகிறது . மொத்தத்தில் வாயை குறைத்து ஓவர் டைம் இல்லாமல் துரிதமாக வேலையை முடித்திருந்தால் வேலைக்காரனுக்கு வெல்டன் சொல்லியிருக்கலாம் ...

ரேட்டிங்க் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 





10 December 2017

சத்யா - SATHYA - சைலண்ட் கில்லர் ...


நாயகனுக்கு பிறகு கமல் நடிப்பில் வந்த அருமையான படம்  சத்யா . அந்த பெயரை சிபி படத்துக்கு போய் வைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம் இருந்தாலும் , தெலுங்கில் ஏற்கனவே ஹிட் அடித்த படத்தையே தமிழில் ரீ மேக்கியிருக்கிறார்கள் என்பதும் , படத்தை பற்றிய பாசிட்டிவ் டாக்கும் ஆறுதல் ...

கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப்  செய்யப்பட  குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா ( சிபி ) . குழந்தையை காப்பாற்ற போலீசும் , புருசனும் எந்தவிதத்திலும் உதவாத நிலையில் காதலி ஸ்வேதா  ( ரம்யா ) வுக்காக சிபி சந்திக்கும் திடுக் திடுக் திருப்பங்களே சத்யா ...

சிபி சத்யராஜின் சின்ன வயசு ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் . படம் நெடுக ஸ்டிஃபாகவே இருப்பவர் காதல் காட்சிகளிலாவது  கொஞ்சம் கேசுவலாக இருந்திருக்கலாம் . டைட்டிலை போலவே படம் நெடுக இவர் ஷோல்டரிலேயே பயணம் செய்கிறது . சிபி யும் சிம்பிலாக நடித்திருந்தாலும் நம்மை ஏமாற்றவில்லை . ரம்யா க்யூட்டான ஹெச்.ஆர் ஆக வந்து நிறைய நிறைய ஐடி காரர்களை பெருமூச்சு விட வைக்கிறார் . மகளை கண்டுபிடிக்க சொல்லி சிபி இடம் அழும் இடத்தில் நடிப்பு மிளிர்கிறது ...


ஐ.டி எம்ப்ளாயியாக யோகி பாபுவை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது . சதீஷ் ஜாலியாக பேசும் போது  வராத சிரிப்பு கன் னை எடுத்து தலையில் வைக்கும் போது  வந்து தொலைக்கிறது . ஆக்சுவலி  காப் ஆனந்தராஜ் சீரியஸான படத்தில் சின்ன சின்ன தாக ரிலாக்ஸ் செய்கிறார் . ஏ.சி.பி யாக வரும் வரலக்ஷ்மி டைட்டான ட்ரெஸ்ஸில் ரிலாக்ஸாக நடித்திருக்கிறார் . சைமனின் பின்னணி இசை படத்துக்கு பலம் ...

சைத்தானில் சறுக்கிய இயக்குனர் பிரதீப் சத்யா வில் ஸ்டடியாகியிருக்கிறார் . படம் இடைவேளை வரை அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை நமக்கு கொடுத்துக்கொண்டே போகிறது . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில் வந்து நம்மை நிமிர வைக்கிறது . இண்டெர்வெலில் ஒரு சாண்ட்விட்ச்சை முடித்து விட்டு வந்து உட்காரும்  போது  " என்ன இது நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு " என்று வடிவேலு போல புலம்ப வைத்தது துரதிருஷ்டம் ...

குழந்தை ஏன் காணவில்லை என்பதற்கான முடிச்சுகளை பல இடங்களில் இருந்து போட்டு யோசிக்க வைத்தவர்கள் அதை அவிழ்க்கும் போது இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் . பாலாஜி , சதீஸ் என்று நிறைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் . ரியாலிட்டியோடு நகரும் படம் சிபி போலீஸ் ஆனந்தராஜி டம் வா , போ என்று சவடாலாக பேசும் போது சறுக்கிறது . தன்னை கொல்ல வந்தவனை பிடித்து விசாரிக்காமல் சிபி சுட்டு கொல்வது , கடத்தப்பட்ட குழந்தை அம்மாவை தேடி அழாமல் கேசுவலாக இருப்பது , குழந்தைக்காக செய்யப்படும் கொலைகள் என்று லாஜிக் லூப்ஹோல்ஸ் இருந்தாலும் க்ரிப்பான திரைக்கதையால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்திருக்கும் சத்யா சைலண்ட் கில்லர் ...

ஸ்கோர் கார்ட் : 42 

ரேட்டிங்க் : 3 * / 5 * 




19 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று - THEERAN - ஆதிக்கம் ...


சில வருடங்களுக்கு முன் ஸ்லீப்பர் ஹிட்  சதுரங்க வேட்டை யை கொடுத்த இளம் இயக்குனர் வினோத் தின் அடுத்த படைப்பு தீரன் அதிகாரம் ஒன்று . முதல் படத்தில் கிரிமினலின் கதையை க்ரிப்பாக சொன்னவர் இந்த முறை காப் ஸ்டோரியை  கார்த்தி யை வைத்து  கமர்ஷியலாக அதே க்ரிப் குறையாமல் தந்திருக்கிறார் ...

1999 - 2005  வரை தமிழகத்தில்  ஹைவேஸ்  அருகிலுள்ள வீடுகளில் புகுந்து  அங்குள்ளவர்களை  கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒரு வட  இந்திய கும்பலை தமிழ்நாடு போலீஸ் கண்டுபிடித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சினிமாவுக்காக காதல் , ஆக்ஸன் கமர்ஷியல்களை அளவோடு சேர்த்து வந்திருப்பவனே தீரன் ( கார்த்தி ) ...

டி.எஸ்.பி தீரனின் ப்ளாஷ்பேக் கில் தொடங்குகிறது படம் .  சிறுத்தை க்கு பிறகு நேர்மையான காப் பாக கார்த்தி அசால்ட் செய்கிறார் . ஆக்சன் காட்சிகளில் எடுத்திருக்கும் ரிஸ்க்  நன்றாக கை கொடுத்திருக்கிறது .  ஸ்பைடர் இல் ஸ்பெக்ஸ் போட்டு மொக்கையாக காட்டப்பட்ட ராகுல் ப்ரீத் இதில் பாவாடை சட்டையோடு சிக்கென்று இருக்கிறார் . மேக்கப்மேன் வாழ்க. பொதுவாக எவ்வளவு படித்திருந்தாலும் லூசுத்தனமாகவே   காட்டப்படும் தமிழ் சினிமா ஹீரோயின்களில் +2 வை பாஸ் செய்யவே திணறும் ப்ரீத் ரசிக்க வைக்கிறார் . ஆனால் படத்தின் வேகத்துக்கு ரொமான்ஸ் தடை என்பதை மறுப்பதற்கில்லை ...


லோக்கல் தாதாவாக ஹிந்தி வில்லனை காட்டி கொடுமைப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் உண்மையான ஹிந்தி பேசும் வில்லனாக வரும் அபிமன்யு நல்ல தேர்வு . சத்யம் சூரியனின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை ( கொஞ்சம் இரைச்சலாக இருந்தாலும் ) படத்துக்கு பலம் . திலீப் சுப்பராயனின் ஆக்சன் காட்சிகள் படத்தின்  ஹைலைட் . குறிப்பாக போலீஸ் வேன் - பஸ் சேஸிங் ஃபைட் சிலிர்க்க வைக்கிறது ...

சரியாக சொல்லப்படும் பட்சத்தில் காப்  - கிரிமினல் ஸ்டோரி என்றுமே போணியாகக்கூடியது தான்  என்பதை நிரூபிக்கிறான் தீரன் . வெறும் ஹீரோயிச படமாக இல்லாமல் வில்லன் கூடாரத்தை பற்றிய டீட்டைளிங்கால் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் . அதிலும் சில க்ராபிக்ஸ் காட்சிகளால் பிரிட்டிஷ்  காலத்தில் இங்கு நடைமுறையிலிருந்த  குற்றப்பரம்பரை பற்றிய விளக்கம் சிம்ப்ளி சூப்பர் . காதல்  மனைவி கோமா வுக்கு போன பிறகு கார்த்தி யோடு சேர்ந்து படமும் விறுவிறு ...

படத்தின் ஓட்டத்தோடு போலீஸ் படுகின்ற நடைமுறை பட்ஜெட் பிரச்சனைகளையும் சொல்லியிருப்பது க்யூட் . கைரேகை யை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் போலீஸ் டீமோடு சேர்ந்து நம்மையும் பதைபதைக்க வைக்கிறது திரைக்கதை . இண்டெர்வெல்லுக்கு பிறகு படம் வேகம் பிடித்தாலும் சில ரிப்பீட்டட் சீன்ஸை பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை . ஐட்டம் சாங்க் , கேசில் ஈடுபட்டிருக்கும் கார்த்தி - போஸ் வெங்கட்டுக்கு கொள்ளையர்களால் நேரும்  தனிப்பட்ட  பாதிப்பு போன்ற கமர்சியல் திணிப்புகளை தவிர்த்திருக்கலாம் . தீரனுக்கும் எதிர்த்த  வீட்டுப்பெண் ப்ரியா ( ராகுல் ப்ரீத் )  வுக்கும் இடையேயான காதலை கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் தீரனின் ஆதிக்கத்தை ரசிக்கலாம் ...

ரேட்டிங்க் : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 43 





20 October 2017

மெர்சல் - MERSAL - மொஃபசல் ...


ளைய தளபதியிலிருந்து தளபதியாய் விஜய்யும் , மௌனராகம் - ராஜாராணி, சத்ரியன் - தெறி , பல ரெண்டு , மூணு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் - மெர்சல் என்று அட்லீயும் ப்ரோமோஷன் ஆகியிருக்கும் படம் மெர்சல் . சுமாரான படத்தில் வரும் மொக்கையான ஜி.எஸ்.டி பற்றிய வசனத்தை பற்றி விவாதித்தே தமிழக பா.ஜ.க படத்தை ஹிட் ஆக்கி விடும் போல . ஓகே நாம படத்துக்கு வருவோம் !!!

மருத்துவத்துறை யில் உள்ள சில நபர்கள் கடத்தப்படுகிறார்கள் . அதை துப்பு துலக்கும் போலீஸ் டாக்டர் மாறனை ( விஜய் ) கைது செய்கிறது . ஆனால் அந்த நபர்களை கடத்தி கொலை செய்தது மாறன் அல்ல மேஜிசியன் வெற்றி
( விஜய் ) என தெரிய வர அது ஏன் , எதற்கு , எப்படி என்பதை ஒரு நீ...ண்ட ஃபிளாஷ்பேக்கோடும்  இது வரை பார்த்த பல படங்களின் மலரும் நினைவுகளோடும்  சொல்வதே மெர்சல் ...

மூன்று என்ன முப்பது கெட்டப் போட்டாலும் எந்த மாற்றத்துக்கும் தன்னை உட்படுத்தாத விஜய்  இதில் அப்பா வேஷத்தில்  மீசையை முறுக்கி மட்டும் வித்தியாசம் காட்டுகிறார் . அதே துள்ளல் , அதே டேன்ஸ் , அதே துறுதுறு விஜய் கண்ணுக்கு குளிர்ச்சி . ஆக்ஸனோடு அழுகை காட்சிகளிலும் கவர்கிறார் . அப்பா எபிசோட் நீளமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து . தலைவா தர்மசங்கடத்திற்கு பின் மீண்டும் விஜய்க்கு அரசியல் ஆசை தலை தூக்கியிருக்கிறது . எத்தனை நாள் தான் அணிலாகவே இருக்க முடியும் ???


சமந்தா , காஜல் அகர்வால் படத்துக்கு சுத்த வேஸ்ட் . என்னடா தம்பி என்று விஜயை விளிக்கும் இடத்தில் சமந்தா சமத்து . வடிவேல் வாயை குழட்டி காமெடி செய்ய முயற்சிக்கிறார் . நமக்கு தான் சிரிப்பு வந்து தொலையவில்லை . எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நல்ல தேர்வு . ஹிந்திக்கார வில்லன்கள் வந்து பேசும் டப்பிங் சீரியல் எஃபக்ட்டில் இருந்து தப்பித்தோம் . நித்யா மேனன் மட்டும் தளபதி , மதுரைவாசி என்று கொஞ்சல் பேச்சில் கிறங்க வைக்கிறார் . ஜி.கே.விஷ்ணு வின் ஒளிப்பதிவு , ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசை
( குறிப்பாக முதல் பாதி ) மட்டும் வேற லெவல் மத்தபடி படம்லாம் அதே பழைய குருடி கதவை தெறடி லெவல் ...

மாஸ் ஹீரோ படத்துக்கு லாஜிக் பாக்க கூடாதுன்றத விட படம் நம்மள பாக்க விடக்கூடாது . அத மறக்கடிக்குற மாதிரி திரைக்கதை இருக்கணும் . அதுவும் கொஞ்சமாவது புதுசா யோசிச்சு எடுக்கணும் . இதுல மூணு பேரு  திரைக்கதை , ரெண்டு பேரு  வசனம் . பழைய டிவிடி பாத்து சீன் எழுத எதுக்கு மூணு பேரு தெரியல , வசனம் லாம் ஃபேஷ்புக் , வாட்ஸப் ல வந்தது தான் அதுக்கு எதுக்கு ரெண்டு பேரு  . முதல் பாதில என்ன நடந்திருக்கின்ற ஆர்வத்த வெச்சு ஒப்பேத்திடுறாங்க . ஆனா அதுக்காக பாரிஸ் கார்னர் ல வச்சு ஏதோ ஃபாரீன் அயிட்டம் வாங்கிட்டு வர மாதிரி நம்ம ஹீரோ எல்லோர் முன்னாடியும் ஒரு ஆள  போட்டு தள்ளிட்டு இந்தியாவுக்கு வரதெல்லாம் சாரி ப்ரோ ...

படத்தோட மெயின் ப்ளாட் எஸ்.ஜே .சூர்யா வ பழி வாங்கணும் அதுக்கு என்னவோ அத பண்றத விட்டுட்டு ஒரு ஆக்சிடென்ட் கேச சரியான டைத்துக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாததால் ஒரு சின்ன பொண்ணு சாகறதும் அதுக்கு ஹீரோ அவங்கள போட்டு தள்ளுறதும் னு  பொறுமைய சோதிக்குறாங்க . அதுவும் 6 லட்சம் கேட்டு ஆஸ்பத்திரில பண்ற அட்றாஸிட்டி எல்லாம் நெறைய படத்துல வாந்தி எடுத்த சீன்ஸ் . ரமணா , இந்தியன் ன்னு நெறையவே  நாஸ்டோலிஜியா மொமெண்ட்ஸ் . டாக்டர் சொல்லித்தான் அம்மாக்கே தன்  குழந்தை யாருன்னு தெரியும் அந்த அடிப்படை நம்பிக்கையையே சிதைக்குற மாதிரி டாக்டர்ஸ இவ்வளோ சீப் பா காட்டியிருக்க வேணாம் ...


படம் போறதே தெரியலேன்னு யாராவது சொன்னா ஒன்னு அவங்க தூங்கியிருக்கணும் இல்ல கண்ண செக் பண்ணனும் . கோவில் கட்டுறது விட ஆஸ்பத்திரி கட்டலாம் என்ற வசனத்துக்கு நிச்சயம் தன்னை ஜோசப் விஜய் என கலாய்ப்பார்கள் என்று  தெரிந்தோ என்னமோ அதற்கு பாவ மன்னிப்பாக வில்லனின் பெயர் டேனியல் ( எஸ்.ஜே.சூர்யா ) . பொதுவா படத்துல வரவங்க ஹீரோ டபுள் ஆக்ட பார்த்து குழம்புவாங்க அது பார்க்குறவங்களுக்கு சந்தோசமா இருக்கும் . இதுல ரெண்டு விஜய்யும் ஒரே மாதிரி இருக்காங்களா
( ஒரு மருவாவது வச்சுருக்கலாம்டா ) நம்ம தான் காளிதாசனா  ?. கண்ணதாசனா ? னு குழம்பிடுறோம் .

படத்துல பாசிட்டிவே இல்லையா ?. இருக்கே . விஜய் விக் வச்சாலும் ஸ்மார்ட் ஆக இருக்கார் . மேஜிக் ஷோ லாம் பண்றது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்,  விஜய் யோட பன்ச விட சூர்யா " 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரி னா எல்லோரும் ஷாக் ஆகி பாப்பாங்க " ன்ற வசனம் , சமந்தா வர கொஞ்ச ஸீன் . நித்யா மேனன் , எஸ்.ஜே .சூர்யா நடிப்பு , நீ தானே பாடல் , ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் மற்றும் நடனம் , ஒரே டிக்கெட்டுல பல படங்களை காட்டின விதம் , எல்லோருக்கும் இலவச மருத்துவம் கொடுக்கணும்னு சொல்ற சமூக சிந்தனை அண்ட் தியேட்டர்ல சாப்புட்ட சாண்ட்விட்ச் ...

ஆக்ட்சுவலி  இந்த படத்துல தெரிஞ்சோ , தெரியாமலோ அட்லீ அண்ட் விஜய் நல்லா தான் சொல்லியிருக்காங்க . 1. சிஎம் , பிஎம் உட்பட எல்லோரும் அரசாங்க மருத்துவம் தான் பார்க்கணும் னு சொல்றாங்க . அப்போ அரசாங்க மருத்துவர்கள் தரமா இருக்கணும் . அதுக்கு காசு , சாதி பாக்காம சீட் கொடுக்கணும் , நீட் எழுதி பாசாகணும் . 2. சிங்கப்பூர்ல 7% ஜி.எஸ்.டி வாங்குறாங்க இலவசமா மருத்துவம் கொடுக்குறாங்க ( இது புருடா ) ஆனா நாம 28%  வாங்குறோம் ஏன் கொடுக்க முடில ? . நல்ல கேள்வி இங்க ஜி.எஸ்.டி வந்து நாலு மாசம் கூட ஆகல அங்க வந்து 20 வருஷம் மேலாக ஆச்சு . ஸோ இங்கயும் எல்லோரும் நியாயமா ஜி.எஸ்.டி கட்டி மருத்துவத்த இலவசமா கொடுக்க வைக்கணும் ...

மொத்தத்துல பழைய படங்களோட டிவிடி இல்லாதவங்க , இல்ல டவுன்லோட் பண்ணி பார்க்க முடியாதவங்க விஜய் க்காக ஒரு தடவ பார்த்துட்டு வரலாம் . ஏன்னா மெர்சல் மொஃபசல் பஸ் மாதிரி பழசா இருந்தாலும் அப்படியிப்படி கொண்டு போய் சேத்துரும் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

(பின்குறிப்பு) :   மொதல்ல படத்த  படமா மட்டும் எடுங்க அப்புறம் சொல்லுங்க படத்த படமா மட்டும் பாருங்கன்னு ...




29 September 2017

ஸ்பைடர் - SPYDER - வேவலாம் ...


மிழ் , ஹிந்தி , தெலுகு என இந்தியா  முழுவதும் ரவுண்ட் வரும் ஏ.ஆர். முருகதாஸின் லேட்டஸ்ட் படைப்பு ஸ்பைடர் . இந்த முறை மகேஸ் பாபு - எஸ்..ஜே.சூர்யா இருவருடனும் இணைந்திருக்கிறார் . 125 கோடி பட்ஜெட்டில் இரு மொழிகளில் தயாராகியிருக்கும் படம் அதற்கு வொர்த்தா ? பார்க்கலாம் ...

இன்டெலிஜென்ஸ் பீரோ வில் வேலை செய்யும் சிவா (   ) பொது மக்களின் ஃபோன் கால்களை வேவு பார்த்து ஏதாவது  பிரச்சனை என்றால் தனிப்பட்ட முறையில் போய் உதவி செயகிறார் . அவரது வழியில் குறுக்கிடும் சீரியல் கில்லர் சுடலை ( எஸ்.ஜே.சூர்யா ) யிடம் இருந்து இந்த ஸ்பை கொஞ்சம் கூட டர் இல்லாமல் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஸ்பைடர் ( ஹப்பாடா டைட்டிலுக்கு விளக்கம் கொடுத்தாச்சு ) ...

மகேஸ் பாபு அஜித்தின் கலர் , விஜய் யின் துறுதுறு வுடன் இருக்கிறார் . அழும்போது மட்டும் எம்.ஜி,.ஆர் மாதிரி முகத்தை மூடிக் கொள்கிறார் . ஆத்ம திருப்திக்காக இவர் மக்களை காப்பாற்றுவதெல்லாம் சரி ஆனால் நடுவுல ஹீரோயின் பின்னால 28 நாட்கள் சுத்துறதெல்லாம் தேவையில்லாத இடைச்செருகல் . ஸ்பை யாக மட்டுமில்லாமல் ஸ்பைடர் மேன் வேலையெல்லாம் ஹீரோ செய்வதை லாஜிக் பற்றி யோசிக்காவிட்டால் ரசிக்கலாம் ...

எஸ்.ஜே.சூர்யா ஹீராவாக நடித்து நம்மை கொன்றதற்கு பிராயச்சித்தமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் . ஓவர் ஆக்டிங் அவ்வப்போது வெளிப்பட்டாலும் மனுஷன் குரூரமான சிரிப்பால் மனசை அள்ளுகிறார் . தம்பியுடன் சேர்ந்து தனி மனிதர்களை கொல்வதெல்லாம் ஓகே ஆனால் இவர்
ஹாலிவுட் வில்லன்கள் போல பெரிய பெரிய சேதாரங்களை ஏற்படுத்தும் போது தான் நமக்கும் சேதாரம் அதிகம் ஆகிறது ...


காமெடி டிராக் கை கழட்டி விட்டது போல இந்த ஹீரோயின் , காதல் டூயட் எழவையெல்லாம் கழட்டி விட்டால் தேவலை . அதுவும் படம் தெலுங்கிலும் வருவதால் கண்ணாடி போட்ட ஹீரோயின் ( ராகுல் ப்ரீத் ) பாடலின் போது அதோடு சேர்த்து முக்கால்வாசி உடையையும் கழட்டி விட்டு ஆடுகிறார் .  ஆர்.ஜே.பாலாஜியை வீணடித்திருக்கிறார்கள் . பட வாய்ப்பில்லாத பரத்துக்கு இது ஓ.கே . படத்திற்கு ஹேரிஸ் ஜெயராஜ் இசையாம் . வில்லனுக்கு  கொடுக்கும் பி.ஜி.எம் மோடு அவர் நிறுத்தியிருக்கலாம்  . படத்தின்  சிறந்த பாடல் " மருதமலை மாமணியே முருகையா " தான் ...

ஹீரோ வேலையினை செட் செய்வதிலேயே சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் போக போக டெம்போவாக போகிறது படம் . வில்லனுக்கான சின்ன வயசு சைக்கோ பிளாஷ்பேக் படத்துக்கு ஹைலைட் . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில்  விடுகிறார்கள் . அது வரை நம்மூரு ஸ்டைலில் இருக்கும் படம் பிறகு ஹாலிவுட் ரேஞ்சுக்கு தாவும் போது இன்டென்சிட்டியை இழக்கிறது ...

எஸ்.ஜே.சூர்யா வின் ரோல் ராமன் ராகவ் , வேட்டையாடு விளையாடு சீரியல் கில்லர்களை நியாபகப்படுத்தினாலும் தனித்திருப்பது சிறப்பு . குடும்ப பெண்களை வைத்து அதிரடியாக சூர்யா விடம் சிக்கிய குடும்பத்தை மகேஸ் பாபு காப்பாற்றுவது காதில் பூ சுத்துவது போலிருந்தாலும் விறு விறு . ஹீரோ வை அதிகம் பேச விடாமல் ஆக்சனில் பேச வைத்திருப்பது அருமை . மொத்தத்தில் லாஜிக் பற்றியெல்லாம் ரொம்ப யோசிக்கவில்லையென்றால் இந்த  ஸ்பைடெரை  ஒரு முறை வேவலாம்  ...

ரேட்டிங்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


17 September 2017

துப்பறிவாளன் - THUPPARIVALAN - இன்டெலிஜெண்ட் ...



லக சினிமாக்களை பார்த்து  உல்டா அடிப்பவர் ,  கால்களுக்கு இடையிலேயே  ஷாட் வைப்பவர் , இவர் பட  கேரக்டர் கள்  எல்லோருமே ஒரே மாதிரி  கொஞ்சம்  மெண்டல்  போல இருப்பார்கள் இப்படி
பல விமர்சனங்கள்  இருந்தாலும் தமிழ் சினிமா உலகில்  மறுக்க முடியாத இயக்குனர் மிஸ்கின் . நடிகர் சங்க , தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில்  ஜெயித்தாலும் ரசிகர் களின் மனதை  ஜெயித்து  நல்ல  படத்தை  வணிக  ரீதியான வெற்றியோடு கொடுக்க முடியாமல் போராடி வருபவர்  நடிகர் விஷால் . இருவரும் முதன்முதலாய்  இணைந்திருக்கும் படம் துப்பறிவாளன் ...

மிகவும் பிரபலமான டிடெக்டிவ் சீரியஸ் செர்லாக் ஹோல்ம்ஸ் பாதிப்பில் மிஸ்கினத்தனங்களோடு தமிழாக்கம் செய்யப்பட்ட படம் துப்பறிவாளன் . தனக்கேற்ற சவாலான  கேசுக்காக காத்திருக்கும் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் ( விஷால் ) . ஒரு சின்னப்பையன் தன் நாயை கொன்றவனை கண்டுபிடிக்க சொல்ல அதன் வாலை பிடிக்கும் விஷால் சிட்டியின் பெரிய கொலைகளுக்கு காரணமான டெவில் ( வினய் ) & கோ வை டெஸ்டராய் செய்வதே துப்பறிவாளன் ...

கூலிங் க்ளாஸ் , தொப்பி சகிதம் நல்ல உடல்வாகோடு வாகாக கேரக்டருக்குள் ஐக்கியமாகி இருக்கிறார் விஷால் . பொதுவாக பெரிய பில்ட் அப் ஒபெனிங்கோடு வருபவர்  இதில்  முதல் சீனிலேயே  தூங்கி வழிந்தாலும் கேஸ் கொடுக்க வந்தவரின் மூக்கு கண்ணாடியை வைத்தே முழு கதையையும்  சொல்லுமிடத்தில் வித்தியாச விஷால் . படம் நெடுக இந்த இன்டெலிஜென்ஸ் தொடர்வது அருமை . ஆக்சன் காட்சிகளிலும் ஊரையே அடித்து பறக்க விடாமல் மார்சியல் ஆர்ட்ஸோடு வரும்  நேச்சுரல் ஃபைட் விசு(ஷா)வல் ட்ரீட்  . ரெஸ்டாரண்ட் ஃபைட் படத்துக்கு ஹைலைட் . " இந்த பாவி வீட்டுக்கு ஏண்டி வந்த " என்று காதலிக்காக சீரியஸாக  அழும் இடத்தில் மட்டும் தியேட்டர் சிரிக்கிறது ...


திறமையிருந்தும் பெரிய உயரத்துக்கு போகாத நடிகர் பிரசன்னா . அஞ்சாதே வில் வில்லனாக மிரட்டியவர் இதில் ஹீரோவுடன் கூடவே வரும் கேரக்டர் . ஹீரோவை ஏத்தி விடவேண்டுமென்பதற்காக அடக்கியே வாசிப்பவர் க்ளைமேக்சில் கலக்குகிறார் . வழக்கம் போல கவனிக்க வைக்கும் மிஸ்கின் வில்லன்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் வரவு வினய் . காபி குடித்துக்கொண்டே ஆளை காலி செய்யும் வினயமான வினய் நல்ல தேர்வு . ஆண்ட்ரியா வுக்காக கேரக்டரை ரசிக்கலாம் . மற்றபடி வில்லனோடு கூட வரும் ரீட்டா ரோல் தான். கே.பாக்யராஜ் என்று யாராவது சொன்னால் தான் நம்ப முடிகிறது . இதுவரை பார்த்திராத பாத்திரத்தில் அவரை பார்த்தது பாக்கியம் . சிம்ரன் , நரேன் எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்  . படத்தில் வயலின் இசை ஒரு கேரக்டராகவே வளம் வருகிறது ...

ஸ்லோவாக ஆரம்பிக்கும் படம் போக போக சூடு பிடிக்கிறது . ஆடியன்ஸையும் சேர்த்து யோசிக்க வைக்கும் திரைக்கதையில் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் . கத்தியின்றி ரத்தமின்றி காட்சிகளில் வன்மத்தை காட்டியிருப்பது மிஸ்கின் ஸ்பெசல்   . மின்னல் , லாஃபிங் காஸ் என்று வித்தியாச யுக்திகளில் செய்யப்படும் கொலைகள் தனிச்சிறப்பு . கேமராமேனுடன் சேர்ந்து பிச்சாவரம் காட்டுக்குள் க்ளைமேக்ஸை கச்சிதமாக  எடுத்திருக்கிறார்கள் . கடைசியாக சின்னப்பையனிடம் வினய் சாரி கேக்கும் இடம் ஹைக்கூ ...

காதலிக்காக விஷால் அழுவது , ஷாஜி ரத்த களரியுடன் ஆவூ வென கத்துவது என சீரியஸ் காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கும் அளவிற்கு பெர்ஃபாமென்ஸ் இருப்பது சறுக்கல் . நடக்கும் கொலைகளை விட வினய் தன்னை காத்துக்கொள்ள செய்யும் கொலைகள் அதிகம் . அதுவும் வினய் , ஆண்ட்ரியா , பாக்யராஜ் இவர்களது கூட்டணி பற்றிய டீட்டைலிங் இல்லாததால் நம்மால் ஒன்றை முடியவில்லை . சீராக செல்லும் படத்தில் ஆண்ட்ரியா போலீசிடம் இருந்து தப்பிக்கும் இடம் சொதப்பல் . இப்படி சில குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் இன்டெலிஜெண்டாக  வரும் துப்பறிவாளன் ஏ சென்டர் ஆடியன்ஸ்களை அதிகம் கவர்வான் ...

ரேட்டிங்க்   : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 43 





   

3 September 2017

குரங்கு பொம்மை - KURANGU BOMMAI - க்யூட் ...


வசரப்படாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விதார்த் புதுமுக இயக்குனர் நித்திலன்  இயக்கத்தில் நடித்திருக்கும் படம் குரங்கு பொம்மை . பாண்டிய நாடு க்கு பிறகு ஒரு அருமையான கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்திருப்பது கூடுதல் சிறப்பு ...

தஞ்சாவூரின் பெரும்புள்ளி ஏகாம்பரம் ( பி.எல்.தேனப்பன் ) தன் பால்ய நண்பன் சுந்தரத்தை  ( பாரதிராஜா ) வைத்து  குரங்கு ஸ்டிக்கர் போட்ட பையில் சிலையை கடத்துகிறார் . அது அவர் சென்னையில் கார் ஓட்டுனராக இருக்கும் கதிர் ( விதார்த் ) கைக்கு போகிறது . இந்த குரங்கு பை ( படத்துக்கு இந்த பேர் தான் பொருத்தமாக இருந்திருக்கும் ) யை அலைய விட்டு அதோடு நம்மையும் சேர்த்து அருமையான திரைக்கதையில் கோர்த்திருக்கிறார் இயக்குனர் ...

விதார்த் துக்கு அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு . லவ் சீன்களில் சுமாராக தெரிந்தாலும் அப்பாவின் நிலைமை தெரிந்து அழும் இடத்தில் அருமையாக நடித்திருக்கிறார் . பாரதிராஜா வுக்குள் இருக்கும் நடிகனுக்கு குரங்கு பொம்மை கொரில்லா தீனி . குமரவேலிடம் தன் கடந்த காலத்தை ஒரே ஷாட்டில் சொல்லும் போது சேன்ஸே இல்ல . இவர் மார்க்கெட் போன மற்ற இயக்குநர்களோட சேர்ந்து வெட்டியா தமிழன் தமிழன் னு கத்திக்குட்டு இருக்காம   இந்த  மாதிரி படங்கள்ல நடிக்கலாம் ...

படத்தில் முக்கியமான மற்ற இருவர் தேனப்பன் மற்றும் குமரவேல் . முதல் சீனிலேயே மிரட்டும் தேனப்பன்  உற்றுப் பார்த்தபடியே குமரவேலிடம் சிலையை பற்றி விசாரிக்கும் இடம் அருமை . ஃபீல் குட் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த குமரவேலுக்கு நெகட்டிவ் ஷேடில் இந்த படம் நல்ல திருப்பம் . கொஞ்சமே கொஞ்சமாய் செயற்கைத்தனம் தெரிந்தாலும் ஓவர் ஆல் அந்த கேரக்டருக்கு பலம் சேர்க்கிறார் குமரவேல் . கிருஷ்ணமூர்த்தி , கல்கி என்று சின்ன ரோல்களில் நடித்தவர்களும் கவனிக்க வைக்கிறார்கள் . ஹீரோயின் பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கணும்னு பேச்சுக்கு சொல்லுவாங்க இதுல பக்கத்து வீட்டுப் பொண்ணே  நடிச்சுருச்சோ என்னவோ ?!!


நான் லீனியரில் சொல்லப்படும் கதையை சரியான கலவையில் இணைத்திருப்பதே இயக்குனரின் வெற்றி . திரில்லர் படத்தில் திருடன் , இன்ஸ்பெக்டர் , கந்து வட்டி விடும் ரவுடி இப்படி சின்ன கேரக்டர்களை வைத்து ப்ளாக் காமெடி செய்திருப்பது பலம் . சீரியஸான சீனில் என்ன பை என்று கேட்கும் குமரவேலிடம் ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை என்று தேனப்பன் கலாய்ப்பது க்ளாஸ் ... 

சாதாரணமாக ரோட்டில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் சேகர் பணத்துக்காக அசாதாரணமாக செய்யும் வேலைகள் உறைய வைக்கின்றன . கிருஷ்ணமூர்த்தி , பிக்பாக்கெட் திருடன் ஒவ்வொருவருக்குமான  பணத்தேவையை  சொல்லியிருப்பது , ஏகாம்பரம் நான்  பணத்துக்காக வரல என் நண்பனுக்காக வந்தேன் என்று சொல்வது இப்படி கிடைக்கும் இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார் நித்திலன் ...

லாரியில் பின் கட்டப்பட்ட குழந்தை எங்கு போனது , அந்த போலீஸ் ஸ்டேஷன் சீனில் திடீரென விபத்து வருவது , அவ்வளவு பெரிய ஆள் ஏகாம்பரத்தை இவ்வளவு ஈசியாக ஏமாற்றி விட சேகர் திட்டம் போடுவது , மிடில் கிளாஸ் ஏரியாவில் நடக்கும் துப்பாக்கி சூடு கவனிக்கப் படாமல் போவது , பணம் கைக்கு வந்தவுடன் பங்களா , கார் என்று சினிமாட்டிக்காக சேகர் ஆளே மாறுவது இதெல்லாம் பக்கா பிளான் செய்த படத்திலும்  ஆங்காங்கே தெரியும் ஓட்டைகள் . மற்றபடி எந்த ஆடம்பரமுமில்லாமல் சிம்பிளாக வந்திருக்கும் இந்த ஒண்ணேமுக்கா மணி நேர குரங்கு  பொம்மை க்யூட் ...

ரேட்டிங்க்  : 3.5 * /' 5 * 

ஸ்கோர்  கார்ட் : 44 


26 August 2017

விவேகம் - VIVEGAM - விழலுக்கு இறைத்த நீர் ...


ரம்பிப்பதற்கு முன்  ஒன்றை சொல்லிக்கொள்ள வேண்டும் . முதலில் நான் நல்ல சினிமாவிற்கு ரசிகன் , பிறகு தான் ஹீரோ . அது கமல் , ரஜினி , அஜித் , தனுஷ் என்று யாராக இருந்தாலும் பொருந்தும் . என்னைப் பொறுத்தவரை நல்ல ரசிகன் என்பவன் நியாயமான விமர்சகனாக இருக்க வேண்டும் . அது தான் நேசிக்கிற ஹீரோவிற்கு அவன்  செய்யும் சிறந்த சேவை . மற்றபடி கண்மூடித்தனமாக விசில் மட்டும் அடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு சாரி , இது இடமல்ல ...

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் அண்ட் மரண மாஸ் ஹீரோ அஜித்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிறுத்தை சிவா தூக்கிப் பிடித்திருப்பதே விவேகம் . பல நாடுகளால் தேடப்படும் ஹேக்கர் நடாஷா ( அக்சரா ஹாசன் ) வை பிடிக்கும் பணி இன்டர்நேஷனல் லீட் ஏஜென்ட் ஏ.கே ( அஜித்  குமார் ) விடம் ஒப்படைக்கப்படுகிறது . அதை நிறைவேற்றும் ஏ.கேவுக்கு நடாஷா ஒரு அப்பாவி என்பது தெரிய வர அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை வேகமாக ஆனால் விவேகத்தை விட்டு விட்டு சொல்வதே விவேகம் ...

இப்போதிருக்கும் ஹீரோக்களில் ஜேம்ஸ் பாண்ட் வகையறா கதைகளில் நடிக்கும் தகுதியுள்ள ஒரே ஹீரோ அஜித் மட்டுமே . இந்த ரோலுக்காக அவர் நிறையவே மெனெக்கட்டிருப்பது நன்றாக தெரிகிறது . ஸ்டண்ட் காட்சிகளில் குறிப்பாக பைக் சேசிங் சீனில் சிலிர்க்க வைக்கிறார் . " உலகமே உன்னை எதிர்த்தாலும் " , " வெற்றிக்கு முன்னாடியே அத ஃபேஸ்புக் ல கொண்டாடுற பழக்கம் எனக்கு இல்ல " போன்ற வசனங்களில் தியேட்டர் அதிர் கிறது .  ஆனா என்ன அஜித் படம் நெடுக டயர்ட் ஏ ஆகாமல் சுடுகிறார் , சுடுகிறார் , சுட்டுக்கொணடே இருக்கிறார் . ஆனா பாக்குற நாம தான் டயர்ட் ஆயிடுறோம்...


சும்மா மரத்தை சுற்றும் ஹீரோயினாக இல்லாமல்  ஏ.கே வின் மனைவி யாழினியாக காஜல் அகர்வாலுக்கு நல்ல சென்டிமென்டல் ரோல் . 
க்ளைமேக்சில் இவர் பாடுவது கொஞ்சம் ஓவராக  இருந்தாலும் நிறைய  சென்டிமென்டை பிழியாமல் அடக்கியே வாசித்திருப்பது சுகம் . விவேக் ஓபராய்க்கு தமிழில் இது நல்ல மாஸ் அறிமுகம் . ஆ ஊ என்று கத்தும்  வில்லன்களுக்கு மத்தியில் ஸ்மைலி யோடே இருக்கும் விவேக் ஆறுதல் . ஆனால் படம் முழுக்க இவர் அஜித் புகழ் பாடிக்கொண்டேயிருப்பது அல்லக்கை இல்லாத குறையை தீர்க்கிறது . இதற்கு அவர் முதல் சீனிலேயே அடி  வாங்கி செத்துப் போயிருக்கலாம்  . எம்.ஜி.ஆர் , ரஜினி இவர்கள் கொடி  கட்டிப் பறந்ததற்கு நம்பியார் , ரகுவரன் போன்றோரும் காரணம் என்பதை இன்றைய இயக்குனர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார்களோ !!!

அக்சரா வுக்கு ஷார்ட்டாக இருந்தாலும் ஸ்வீட் ரோல் . படத்தின் ஆக்சன் அடிகளுக்கு  நடுவே கருணாகரன் ஒரு நல்ல வலி நிவாரணி . அனிருத்தின் இசை சும்மாவே அதிரும் இதில் குண்டு சத்தங்களுக்கிடையே அதுவே அமுங்கி விடுகிறது . பி.ஜி.எம் போட்ட இவருக்கும் , எடிட்டருக்கும் தனியே சுத்திப்  போட வேண்டும் . ரெண்டரை மணி நேரத்துக்கு நமக்கே தலை சுத்துதுன்னா பாவம் அவுங்க நிலைமையை நெனைச்சுப் பாருங்க மக்களே ...

வீரத்துல வெள்ளையும் சொள்ளையுமா வந்து கிராமத்துல நாலு பேர  அடிக்க விட்டாச்சு , வேதாளத்துல சிட்டி ரவுடியா வந்து பொளந்து கட்ட வச்சாச்சு , அடுத்து அவரை இன்டர்நேஷனல் லெவெள்ல கொண்டு போகணும்னு நினைச்ச சிவா அதற்கான கதையும் கெடைச்சாச்சு , செலவு பண்ண ப்ரொட்யூசர் இருக்கார் , தொழில்நுட்பம் இருக்கு வேறென்ன வேணும்னு நெனைச்சு இறங்கிட்டார் போல .  இது எல்லாத்துக்கும் மேல பாக்குறவங்கள கனெக்ட் பண்ற மாதிரி திரைக்கதை யும் , ஓரளவு நம்புற  மாதிரி யாவது சீன்களும் இருக்கணும்ன்றத அவர் சாய்ஸ் ல விட்டது தான் பிரச்சனை ...

ஓப்பனிங் சீன்லயே மூணு அடுக்கு பாதுகாப்பு னு பில்ட் அப் கொடுத்த ஏரியாவுக்குள்ள ஏதோ முருகன் கோவிலுக்குள்ளே கூட்டத்தை தள்ளி விட்டுட்டு முன்னாடி வரது மாதிரி அஜித் வரும் போதே நமக்கு பக்குன்னு இருக்கு . ஓகே நம்ம தல தானே பொறுத்துக்கிட்டா அடுத்த சீன ப்ப்ப்ப்பா . ப்ரிட்ஜுக்கு ரெண்டு பக்கமும் இவரை குறி பாத்துக்குட்டு 40 பேர் லேட்டஸ்ட் துப்பாக்கியோடு நிக்குறாங்க , இது பத்தாதுன்னு மேலே வேற நாலு ஹெலிகாப்டர் சுத்துக்கிட்டு இருக்கு . இதுல இருந்து லாம் நிச்சயம் தல தப்பிப்பார்னு குழந்தைக்கும் தெரியும் . ஆனா எப்படி தப்பிப்பார்னு சுவாரசியமா சொல்றது இயக்குனர் கையில இருக்கு . ஆனா தல " உலகமே உன்ன எதிர்த்தாலும் " னு தனியா பத்து நிமிஷம் பேசுறாப்ல அந்த பன்னாடைகளும் சுடாம  குறி வச்சுக்கிட்டே இருக்கானுங்க . அங்க தான் கதைல ட்விஸ்ட் , தல டைவ் அடிச்சு பேக் ல குதிக்குறாப்ல . ஆக்சுவலி இதோட அவர் தப்பிக்குற மாதிரி வச்சிருந்தா படமும் தப்பிச்சிருக்கும் . ஆனா டைவ் அடிச்சுக்குட்டே அவர் சுடறதுல ஹெலிகாப்டர் வெடிக்கறதும் இவர் தண்ணிக்குள்ள போய் தப்பிக்கறதும் சத்தியமா தாங்க முடியல ...


கமர்சியல் படம்னா லாஜிக் லாம் பாக்கக்கூடாது தான் , ஆனாலும்  சதுரங்க வேட்டை படத்துல  சொல்ற மாதிரி எல்லா பொய்க்கு நடுவுலயும் கொஞ்சமாவது உண்மை கலந்து இருக்கணும் . அப்படி இல்லேன்னா அது நிக்காது . ஒரு மாஸ் ஹீரோவுக்கான அப்நார்மல் ஒபெநிங்க் ஸீன் னு நெனைச்சு அத கூட மறந்துடலாம் .  ஒரு படத்தல சண்டை இருக்கலாம் , ஆனா படம் முழுக்க சண்டையாவே இருந்தா எப்படி பாஸ் . எல்லோருக்கும் தெரியும் ஹீரோ தான் ஜெயிப்பான்னு . ஆனாலும் வில்லன் வைக்குற செக் ல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறான் னு காட்டுறதுல தான் கிக் கே . இதுல நண்பா நண்பா னு விவேக் பேசுறதும் , நட்ப பத்தி தல சொல்றதும் ஒரு லெவெலுக்கு மேல நாம சசிகுமார் படத்துக்கு வந்துட்டோமான்னு நமக்கே பெரிய டவுட் வந்துருது . அத்துவான காட்டுக்குள்ள ஆ ன்னு கத்திகிட்டே 
எக்ஸர்ஸைஸ்  பண்ணா ஆச்சா ? சோறு தண்ணி வேணாம் . என்னமோ போங்கப்பா ...

படத்துல பாசிட்டிவ் னு பார்த்தா மேக்கிங் , லொகேஷன் எல்லாமே வேற லெவல் . ஆக்சன் சீன்ஸும் ரொம்ப சிரமப்பட்டு பண்ணிருக்காங்க . படம் முழுக்க தல , தல , தல தான் . ரத்தம் , சதை , நாடி நரம்பெல்லாம் தல ரசிகன் ன்ற வெறி ரத்தமா ஓடுறவங்களுக்கு படம் பக்கா ட்ரீட் . காஜல் அகர்வாலை வில்லன் க்ரூப்ல இருந்து காப்பாத்திட்டு ஏ.கே னு செவுத்துல துளை போட்டு காட்டுறது , கேங்ஸ்டர் கூட்டத்துக்கு நடுவுல சிங்கிள் ஆளா போய் மாஸ் காட்டுறது , பைக் ல பறந்து பறந்து அக்சரா வ காப்பாத்துறது எல்லாமே தமிழ் சினிமா ஆக்ஸன் சீன்களுக்கு ஒரு மைல்கல் . படம் முடிஞ்சு  வந்தும் யாராவது ஒளிஞ்சுக்கிட்டு  சுடுறாங்களோ ன்னு பாக்குற அளவுக்கு படம் 
ஓவர்டோஸா போனது தான் ப்ராப்ளம் . மாஸ் ஹீரோ , பிரம்மாண்டம் , தொழில் நுட்பம் இது எல்லாம் இருந்தும்  படம் பாக்குறவங்கள என்கேஜ் பண்ண தவறியதால் விவேகம் விழலுக்கு இறைத்த நீர் ...

ரேட்டிங் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40



20 August 2017

தரமணி - TARAMANI - தரமாக இருந்திருக்கும் ...


ரமணி படத்தைப் பற்றி நேர்மறையாகவோ , எதிர்மறையாகவோ விமர்சனங்கள் வந்துகொண்டே தானிருக்கின்றன . அனைவரையும் கவனிக்க வைத்த விதத்தில் படம் வெற்றியே . எதிர்பார்த்த விஐபி 2 வும் ஊத்திக்கொண்டதால் ஷோக்களின் எண்ணிக்கையை கூட்டியிருக்கிறார்கள் . படம் பார்த்தே ஆக வேண்டிய படமா ? இல்லை படு திராவையா ? பார்க்கலாம்...

ஆல்தியா ( ஆண்ட்ரியா ) கார்ப்பரேட் டில் 80K சம்பளம் வாங்கும் அல்டரா மாடர்ன் சிங்கிள் மதர் . ஒரு நாள் மழைக்காக ஒதுங்கும் போது காதல் தோல்வியில் தாடியுடன் திரியும் பிரபுநாத்தை ( வசந்த் ரவி ) யை சந்திக்கிறார்.
மழை முடிவதற்குள் தன் காதல்  கதையை சொல்லி முடிக்கிறார் பிரபு . பின் சினேகமாகும் இருவரும் அடுத்த கட்ட உறவுக்குள் இருவரும் போகும் போது எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை போல்டாக அதே சமயம் படம் நெடுக இயக்குனர் ராம் வாய்ஸ் ஓவரில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசி பேசி யே கொஞ்சம் போராகவும் சொல்வதே தரமணி ...

ஆண்ட்ரியா வின் அழகுக்கு மட்டுமல்ல நடிப்புக்கும் தீனி போடும் படம் . மிக இயல்பாக இந்த கேரக்டருக்குள் பொருந்துகிறார் . " உனக்கு சிக்ரெட் பிடிக்க தெரியல " என்று பிரபுவை கலாய்ப்பதாகட்டும் , ப்ரைவேட் ஃபோட்டோவை பேஸ்புக் கில் அப்லோட் செய்து பாஸை கதற விடுவதாகட்டும் , " வெளிய போடா நாயே " என்று பிரபுவை வீட்டை விட்டு அடித்து தொறத்துவதாகாட்டும் நிச்சயம் ஆண்ட்ரியா வை மறக்கடித்து தியா வாக மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறார் . திரும்பவும் வெறும் கிளாமர் ரூட்டுக்குள் போகாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அவர் நடிக்கவும் , அதற்கு வாய்ப்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் .  நிறைய வருடங்கள் கழித்து நிறைவான பெண் கதாபாத்திரத்தை கொடுத்த ராமுக்கு பாராட்டுகள்   ...


முதல் படத்திலேயே விக்ரம் ரவிக்கு செம்ம ரோல் . ஆள் தோற்றத்தில் தெலுகு நடிகர் சக்ரவர்த்தியையும் , நடிப்பில் கொஞ்சம் ரகுவரனையும் நியாபகப்படுத்தினாலும் தனித்துவம் தெரிகிறது . நட்பாக இருந்து காதலனாக மாறியவுடன் " அவன் ஏன் உன் போட்டோவுக்கு லைக் போட்டான் " , " ஏன் உன் பாஸ் கட்டிப்பிடிக்கிறான் " என்று ஆண்ட்ரியாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு நமக்கே  எரிச்சலை கொடுத்த  விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செயகிறார். ஆல் தி பெஸ்ட் ...

இரண்டு முக்கிய கேரக்டர்களுக்கிடையே சுழலும் படத்தில் அழகம் பெருமாள் அமைதியான  நடிப்பால் அழுத்தத்தை கொடுக்கிறார் . அவர் தன் மனைவியை பற்றி பிரபு விடம் சொல்லுமிடம் க்ளாஸ் . போலீஸ் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் ஆண்ட்ரியன் ரோல் படத்தின் மெயின் பிளாட்டில் இருந்து விலகுவது போல் பட்டாலும் அவரது நடிப்பும் , அதை மையமாக வைத்து ஹீரோ மனம் மாறுவதும் சிறப்பு . ஆண்ட்ரியாவிடம் ஜொள் விடும் போதும் சரி , காலில் விழும் போதும் சரி பாஸாக நடித்திருப்பவர் அட போட வைக்கிறார் ...

திருமணமான சில மாதங்களிலேயே கணவன் கேய் ( GAY ) என்று தெரிந்ததும் அவனை அசிங்கப்படுத்தாமல் ஆதரவாக பேசிவிட்டு பையனுடன் பிரிந்து வரும் ஆண்ட்ரியா , மூன்று லட்சம் கொடுத்து அமெரிக்கா அனுப்பி வைத்த காதலி ( அஞ்சலி ) ஆன்சைட்டிலேயே வேறொரு ஆண்மகனுடன் செட்டில் ஆனதால் விரக்தியுடன் சுற்றும் விக்ரம் ரவி இருவரும் வேறு வேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் ஆரம்பக்காட்சிகள் அவ்வளவு இயல்பு . மினி ஸ்கர்ட் போடுறவ  எல்லாம் மோசமானவளும் இல்ல , இழுத்துப் போத்தினவளெல்லாம் பத்தினியுமில்ல என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்கிறார் இயக்குனர் ...


பப் , பாய் ஃப்ரெண்ட் என்று ஜாலியாக சுற்றும் ஐடி ஆட்களுக்கு சட்டென்று வேலை போகும் அபாயத்தையும் ராம் காட்டத் தவறவில்லை . சமூகத்தில் தனியாக வாழும் பெண்ணை ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அட்வைஸாக இல்லாமல் இயலபாக காட்டிய விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . காதல் ஏற ஏற சப்ளிமெண்டாக சந்தேகமும் ஏறுவதை சில சீன்களில் நச்சென்று காட்டிய விதம் அருமை . " அவன் கூட படுக்கணுமா இல்லையான்றத நான் தான் முடிவு பண்ணனும் " , " உன் சைஸ் அவனுக்கு எப்படிடி தெரியும் " போன்ற வசனங்கள் படு ஷார்ப் . யுவனின் பிண்ணனி  இசையும் , மறைந்த முத்துக்குமாருடன் இணைந்து கொடுத்திருக்கும் பாடல்களும் பெரிய பலம் ...

ஆண் , பெண் உறவுகளை தைரியமாக சொல்வதென்று முடிவெடுத்த இயக்குனர் சிகரெட் , தண்ணி என்று பெண்களும் அடாவடியாக எதையாவது செய்வது மட்டும் தான் முற்போக்கு என்பது போல காட்டுவதும்   , லீட் கேரக்டரை ஆங்கிலோ இந்தியனாக காட்டி சேஃப்  கேம் ஆடியிருப்பதும் சறுக்கல் . பொதுவாக தான் சொல்வதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களோ என சந்தேகிப்பவர்கள் நிறைய வாய்ஸ் ஓவர் வைப்பார்கள் . ஆனால் இதில் ராம் தமிழ் மீனவர்கள் பிரச்சனை , ஏரிகளை ஆக்ரமித்து கட்டப்படும் கட்டிடங்கள் , அல்லாடும் பீஹார் தொழிலாளிகள் ,டீமானிட்டைசேஷன் என்று படத்தோடு  நேரடி தொடர்பில்லாத பல விஷயங்களை நடு நடுவே பேசி பேசி நம்மை சாவடிக்கிறார்  . கமல் சில நல்ல படங்களுக்கு நடுவே தன் நாத்தீக கருத்தை புகுத்தி நாசம் செய்வதை போல ராமும் செய்திருப்பது கொடுமை . ராம் நடுவே பேசுவது இங்கிலீஷில் பேசி அதற்கு தமிழ் விளக்கம் கொடுக்கும் மேஜரை நினைவுபடுத்துகிறது ...

அந்த காலத்தில் டீச்சர் கேரக்டர் என்றால் கொண்டை , குடை இருக்கும் . வில்லனுடைய கேர்ள் ஃப்ரெண்டுக்கு பெயர் ரீட்டா என்றிருக்கும் . அதே போல இப்போதெல்லாம் ஐடி யில் வேலை செய்ப்பவர்கள் எல்லாமே ஏதோ பப்பில் தவம் கிடப்பது போல காட்டுவது வழக்கமாகி விட்டது . அதையே ராமும் பின்பற்றியிருக்கிறார் .  ஏமாற்றிய காதலி அஞ்சலி திருமண வாழ்வில் தோற்று திரும்ப  வருவது , அவ்வளவு அசிங்கப்படுத்தியும் கடைசியில் ஆண்டிரியா விக்ரமை ஏற்றுக்கொள்வது , சும்மா சாட் செய்தாலே குடும்ப பெண்களை  கரெக்ட் செய்து விடலாம் என்பது போல காட்டி அவர்களை கொச்சைப்படுத்துவது இதெல்லாம்  என்ன தான் பெண் சுதந்திரம் பேசினாலும் இயக்குனருக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை காட்டுகிறது . இண்டெர்வெல் வரை பக்காவாக செல்லும் படம் பிறகு தடம் மாறுகிறது . ராமின் பேச்சை போலவே படமும் அலைபாயாமல் ஆண் - பெண் உறவு என்கிற நேர்கோட்டில் மட்டும் பயணித்திருந்தால் தரமணி இன்னும் தரமாக இருந்திருக்கும் . ஆனால் நீண்ட காலம் கழித்து  இவ்வளவு பெரிய விமர்சனம் எழுதியதிலிருந்தே படம் எந்த அளவு பாதித்திருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 45

30 July 2017

நிபுணன் - NIBUNAN - நிறைவு ...


சேவகனுக்கு பிறகு முதல்வன் வரை அர்ஜுன் எனது ஃபேவரைட் ஹீரோவாக இருந்தார் . அவருடைய 150 வது படத்தை  மிஸ் செய்யக்கூடாது என்பதற்காகவே படத்தை பார்த்தாகி விட்டது . எண்ணிக்கையையும் தாண்டி சோலோ ஹீரோவாக அர்ஜுனுக்கு நீண்ட நாட்கள் கழித்து நிறைவான படம் ...

சென்னையில் தொடர் கொலைகள் . ஒவ்வொரு கொலையிலும் அடுத்த கொலைக்கான க்ளூவை விட்டு செல்கிறான் சீரியல் கில்லர் .  சிஐடி  டிஎஸ்பி ரஞ்சித் காளிதாஸ் ( அர்ஜுன் ) தனது திறமைக்கே நேரடியாக சவால் விடும் அந்த சீரியல் கில்லரை தனது டீமுடன் ( பிரசன்னா & வரலக்ஷ்மி ) எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை நிதானமாக அதே சமயம் விறுவிறுப்பு குறையாமல் சொல்வதே நிபுணன் ...

ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் சீனிலேயே ஐந்து நிமிடங்களுக்குள் நான்கு பேரை போட்டுத்  தள்ளி வேலையை தொடங்கி விடுகிறார் . வயதானாலும் தனக்கேயுரிய ஸ்டைலிஷ் நடை , உடல் மொழி , ஃபைட் இவற்றால் கவர்கிறார் . உடற்கட்டு இளமையாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளில் முகம் வயதை காட்டிக் கொடுக்கிறது . அதுவும் சில சீன்களில் மனைவியே மகள் போல தெரிவது குறை . நடுநடுவே வந்து போகும் காதல் காட்சிகள் திரில்லர் படத்துக்கு வேகத்தடை ...


பிரசன்னா " ஜட்டிக்குள்ள பாம வைக்கணும் " என்று சொல்லும் போது தியேட்டரே அதிர்கிறது  . இவரை இன்னும் நன்றாக உபயோகப் படுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது . வரலக்ஷ்மி தொப்பையுடன் துறுதுறு போலீசாக நல்ல தேர்வு . அர்ஜுனின் தம்பி யாக வரும் வைபவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை . யாரும் எதிர்பார்க்காத ஒருவரை வில்லனாக போட்டது படத்தின் யுஎஸ்பி . ஆனால் அதற்கேற்ற வெயிட்டேஜ் அவர் கேரக்டருக்கு இல்லாதது குறை . அதுவும் க்ளைமேக்சில் ஓவராக பேசி ஹீரோவிடம் அடி வாங்கும்  வழக்கமான வில்லன் ...

முதல் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு படம் நம்மை நன்றாக உள் வாங்குகிறது . நடுநடு வே வரும் காதல் காட்சிகளை தவிர்த்து பார்த்தால் இண்டெர்வெல் வரை படம் வேகம் . வேறு வேறு ஆட்களின் கொலையில் அவர்களை சம்பந்தப்படுத்தும் நாட் நன்றாகவே இருக்கிறது . ஆனால் இரண்டாம் கொலையிலேயே அர்ஜுன் அதை நெருங்கியிருக்கலாம் . ஏனோ ஒத்திப்  போட்டிருக்கிறார்கள் ...

பின்னணி இசை , ஒளிப்பதிவு எல்லாமே ஒரு க்ரைம் த்ரில்லருக்கான பக்க பலம் . ப்ளாஷ்பேக் கை வழவழ வென்று இழுக்காமல் ஷார்ட் அண்ட் ஸ்வீட் டாக முடித்தது சிம்பலி சூப்பர்ப் . கொலைக்கான மோட்டிவ் ஓகேவென்றாலும் அழுத்தம் குறைவதாகவே படுகிறது . கொலை செய்து விட்டு மாஸ்க் போட்டு விடுவது , மெத்தட் ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எல்லாம் சில ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துகின்றன . சிற்சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக செல்லும் இந்த நிபுணன் நிறைவையே தருவான் ...

ரேட்டிங்                : 3 * / 5 * 
ஸ்கோர்  கார்ட்  : 42


22 July 2017

விக்ரம் வேதா - VIKRAM VEDHA - வெல்டன் ...


கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி விட்டது விமர்சனம் எழுதி . புதுப்படங்களை உடனே பார்க்கும் ஆர்வம் குறைந்தே போனது . விக்ரம் வேதா வை விடாததற்கு காரணம் விஜய் சேதுபதி யும் , மாதவனு ம் . கவண் போன்ற கமெர்சியல்களை விட இது போன்ற நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் ரோல்களிலேயே விஜய் சேதுபதி அதிகம் ஜொலிக்கிறார் . இந்த இருவரையும் சரியான புள்ளியில் இணைத்த புஷ்கர் - காயத்ரி க்கு பாராட்டுக்கள் ...

விக்ரமாதித்யன் தோள்களில் அமர்ந்து கொண்டு வேதாளம் கேள்வியாய் கேட்டு அவனை சுத்த விடும் . அது போல போலீஸ் விக்ரம் - தாதா வேதா இருவருக்கிடையேயான மோதலை சுவாரசியமான கேள்வி பதிலாய் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் . க்ளைமேக்ஸுக்கான பதிலை நம்மிடமே விட்டு சென்றது தையிரியம் ...

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமாக மாதவன் முழு தாடி , அரை தாடி என ஸ்டைலில் மாறினாலும் நடிப்பில் சீராக ( புரியும்ல ) இருந்து சிறப்பிக்கிறார் . இவருக்கு பெரிய ஃப்ளாஷ்பேக் எல்லாம் வைக்காமல் சில வசனங்களிலேயே சிம்பிளாக கேரக்டருக்குள் போய்  விடுவது சிறப்பு . உர்ரென்றே இருப்பவருக்கு வக்கீல் மனைவி ஸ்ரதா  ஸ்ரீநாத் நல்ல ரிலாக்ஸ் . நமக்கும் தான் . ஒற்றை மூக்குத்தியில் ஜொலிக்கும் ஸ்ரதா  ஸ்ஸ்ஸ்ரதா ...


இந்த அளவு ஓல்ட் கெட்டப் தேவையா என யோசிக்க வைத்தாலும் அந்த ரோலுக்கு தனது உடல் மொழியால் வெய்ட் ஏத்துகிறார் விஜய் சேதுபதி . ஸ்லோவாக இவர் கொடுக்கும் என்ட்ரி செம்ம மாஸ் . கையிலிருக்கும் ரொட்டியை போலீஸ் நாய்க்கு தூக்கி போட்டு விட்டு அசால்ட்டாக நடக்கும் இடம் க்ளாஸ் . ரெண்டு செய்கையிலேயே வேதாவாக நம் மனதில் நங்கூரம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார் . ஜிகர்தண்டா வில் சின்ன ரவுடி ரோலில் வந்து நம்மை சில் செய்த விஜய் சேதுபதியின் ஹாட் வெர்சன் இந்த வேதா ...

வேதாவின் தம்பி புள்ளி யாக வரும் கதிர் , விஜய் சேதுபதியின்  ஜோடியோ என புதிர் போட்டு பிறகு கதிருக்கு ஜோடியாக வரும் வரலக்ஷ்மி , ட்ரக் டீலர் ரவி , மாதவனின் போலீஸ் டீம் , சேட்டன் என படத்தில் நிறைய கேரக்டர்கள் வலம்  வந்தாலும் தொய்வில்லாத திரைக்கதைக்கு உதவுகிறார்கள் . பி,எஸ்.வினோத் தின் ஒளிப்பதிவு க்ரே பக்கங்களை ஜோராக காட்டுகிறது . சாம் பி.ஜி.எம் மில் பின்னியெடுக்கிறார் ...


போலீஸ் மாதவன் , அவருடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் சைமன் , கால் ஊனமுற்றவராக வரும் மேலதிகாரி இவர்களெல்லாம் குருதிப்புனல் படத்தை நம் கண்முன் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை . வழக்கமான காப் - டான் ஸ்டோரியை வெறும் மேக்கிங்கால் மட்டும் வித்தியாசப்படுத்தாமல் கதை சொல்லும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி  ஸ்கோர் செய்கிறார்கள் இயக்குனர்கள் . படம் முழுவதும் அடுத்து நடப்பதற்கான சின்ன சின்ன க்ளூவை தெறிக்க விட்டிருப்பது இண்டெலெக்சுவல் ஸ்க்ரீன்ப்ளே . கேட் அண்ட் மவுஸ் ஸ்டோரியில் நம்மையும் சேர்த்தே ஓட  வைத்திருப்பது இன்டெரெஸ்ட்டிங் ...

சர்ரென்று போகும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல்லடிப்பது போல படுகிறது . குருதிபுனலின் தாக்கம் , விக்ரம் , வேதா இருவருமே சுற்றியிருப்பவர்கள் மேல் கொஞ்சம் கூட கவனம்  வைக்காமல் இருப்பது , புள்ளி என்கவுண்டரில் வரும் குட்டி குழப்பம் இவையெல்லாம் சில சறுக்கல்கள் . " Well planned is Half done " என்பார்கள் அந்த விதத்தில் சரியான மாதவன் - விஜய் சேதுபதி காம்பினேஷன் அண்ட் டெச்னீசியன்ஸ் தேர்வு செய்த விதத்திலும் , நம்மை அதிகம் என்கேஜ் செய்த விதத்திலும் விக்ரம் வேதா வை வெல்டன் என்றே சொல்லலாம் ...

ரேட்டிங்க்            : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 





24 May 2017

சங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ...


து ஓய்ந்தாலும் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடிக்கு ஓய்வே இல்லையென நினைக்கிறேன் . அட்லீயின் தயாரிப்பில் ஐக் இயக்கத்தில் வந்திருக்கும் வழக்கமான ஹாரர் காமெடி யான ச.பு.க.தி  யில் ஜீவா - ஸ்ரீ திவ்யா - சூரி என்று காம்பினேஷன் மட்டுமே  மாறியிருக்கின்றன ...

ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வாசு ( ஜீவா )  தன் சிறு வயது கனவான பெரிய பங்களாவை  சில திகிடுதத்தங்கள் பண்ணி வாங்குகிறார் . வாங்கிய பிறகு தான் தெரிகிறது அவர் கதை விட்ட பேய் அந்த பங்களாவுக்குள் உண்மையிலேயே இருக்கிறது . தன் வீட்டையும் , குடும்பத்தையும் எப்படி பேயிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே  படம் . அதை பயத்தை குறைத்து பாசத்தை கூட்டி  கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

ஜீவா வுக்கு குடித்து விட்டு கும்மாளம் அடிக்காமல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பான கேரக்டர் . அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பில் ஜீவன் தெரிகிறது . சூரியே ஒரு சீனில்  குள்ளச்சி என்று கலாய்க்கும் ரேஞ்சில் தான் ஸ்ரீதிவ்யா கேரக்டர் இருக்கிறது . விஷால் , எஸ்.கே வை தொடர்ந்து ஜீவாவுடன் சூரியின் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது . ஜோடி இருந்தாலும் தனியாக அவருக்கு டூயட் வைக்காதது ஆறுதல் . ராதா ரவி தனக்கேயுரிய நடிப்பால் மிரட்டுகிறார் . தம்பி ராமையா தம் கட்டி பேசி செகண்ட் ஷோவில் தூங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் ...


ஹாரர்ராக ஆரம்பிக்கும் படம் காமெடிக்குள் பயணித்து இடைவேளை வரை அப்படியிப்படி ஓடி விடுகிறது . இந்த டெம்ப்ளேட்டில்  நிறைய படங்கள் வந்திருப்பினும் சமீபத்திய உதாரணம் தில்லுக்கு துட்டு . அதைப்போலவே இதிலும் எதிர் பார்ட்டியை பயமுறுத்த பேய் வேஷம் போடுகிறார்கள் . ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது . படத்தில் ஹாரர் என்று பெரிதாக எதுவுமில்லை . காமெடி மேம்போக்காக  இருப்பது போல பட்டாலும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது ...

வாடகை வீட்டு கஷ்டங்களை ஹைக்கூ போல அழகாக சொல்லியிருக்கிறார்கள் . அந்த திரைக்கதை அழகு படம் நெடுக இல்லாதது குறை . ஆர்.ஆர் ஓகே ஆனால் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் . குடும்ப செண்டிமெண்ட் பேசி விட்டு இலை மறை யாக இல்லாமல் வெறும் இலையை கட்டி சூரியை ஒட விட்டு காம டி பண்ணியிருப்பது நெருடல் . பயம் , காமெடி , செண்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கலவையாக கொடுக்க நினைத்திருக்கிறார்கள் . ஆனால் எதிலுமே நிறைவில்லாமல் பழைய சாவியை வைத்து கஷ்டப்பட்டே  கதவை தொறந்திருக்கிறார்கள் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *  

ஸ்கோர் கார்ட் : 40


1 May 2017

பாகுபலி 2 - BAHUBALI 2 - The Conclusion - கோடை கொண்டாட்டம் ...


" Why Kattappa Killed Bahubali " ? - இந்த கேள்வியை  தான் கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவே கேட்டுக்கொண்டிருந்திருக்கும்  . ஆனால் இந்த கேள்விக்கான பதிலை படம் பார்க்கும் போதே யூகிக்க முடிந்தாலும் அந்த பிரம்மாண்டம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது . பாகுபலி 1 வசூல் மூலம் ஷாருக் , சல்மான் , அமீர் என்று எல்லா கான்களையுமே  கலங்கடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . பாகுபலி 2 மூலம் ஹாலிவுட்டுக்கே சவால்  விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம் ...

கட்டப்பா ( சத்யராஜ் ) வின் வாக்குமூலம் வாயிலாக தொடங்கும் படம் அமரேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) யின் அட்டகாசமான அறிமுகம் , தேவசேனா
( அனுஷ்கா ) வுடனான காதல் ,   அன்னை சிவகாமியுடன் மனக்கசப்பு , அரியணைக்காக சகோதரன் பல்லதேவன்
( ராணா டக்குப்பட்டி ) செய்யும் சூழ்ச்சி என்று விரியும் படம் மகன் மஹேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) மகிழ்மதி யின்  ஆட்சியை கைப்பற்றுவதோடு முடிகிறது ...


தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்க்ரீனில் வந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கிறது . அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி . முதல் பாகத்தை விட இதில் அவருடைய உழைப்பு கடுமையானது . ஹீரோயிசம் இதில் படு தூக்கலாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும் அந்த பிரம்மாண்ட பாகுபலிக்கு பிரபாஸ் படு கச்சிதம் . ராணா தன்  பார்வையிலேயே வில்லத்தனத்தை காட்டுகிறார் . வில்லன் கேரக்டருக்கு உடம்பை இந்த அளவு வருத்தி ஏற்றியது இவராக தான் இருக்கும் . அரசணை வேண்டுமென்றால் அண்ணனாவது , தம்பியாவது என்கிற வன்மம் படம் நெடுக அவர் உடல்மொழியிலேயே தெரிகிறது ...

அரசிக்கேற்ற கச்சிதமான வேடத்தில்  அனுஷ்கா . என்ன படம் ரொம்ப வருடம் எடுத்ததாலோ என்னமோ அம்மணி டயட்டை மறந்துவிட்டார் . விளைவு சில சீன்களில் ஆன்டி போல தெரிகிறார் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் . " நான் இந்த பெரிய படத்தில் சின்ன நடிகன் " என்று மன்னிப்பு கடிதம் வாசித்தார் சத்யராஜ் . படம் பார்த்த பிறகு புரிகிறது . ஹீரோவுக்கு அடுத்த படியாக வரும் ரொம்ப சின்ன வேடம் என்று . முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இவரது காமெடி நிறையவே கை கொடுக்கிறது . படையப்பா வுக்கு பிறகு ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் . ஆஜானுபாகுவான ஆண்களுக்கு மத்தியில் உருவத்தில் சின்னவராக  இருந்தாலும் கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார் .  நாசர் நடிப்புக்கு கோபத்தில் சுவற்றை உடைக்கும் அந்த ஒரு சீனே போதும் . அனுஸ்கா வின் மாமா வாக வருபவரும் இந்த ஸ்டார் பட்டாளத்துக்கு நடுவே ஸ்கோர் பண்ணுகிறார் ...


மேலைநாடுகளுக்கு எந்தவிதத்திலும் இந்தியன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் . காதல் , ஆக்சன் , செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளிலும் படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்களிலும் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு . சி.ஜி . ஆக்சன் , செட் என்று எல்லாமுமே சேர்ந்து நம்மை புது உலகுக்குள் கொண்டு செல்கின்றன .
கீரவாணி யின் பின்னணி இசை இதில் முந்தையதை விட ஒரு மாற்று குறைவு தான் . கார்க்கியின் பாடல்கள் டப்பிங்க் நெடியில் இருந்தாலும் வசனங்கள் கவர்கின்றன .  ஆனால் இந்த டெக்கனிகள் பூச்சாண்டிகளை மட்டுமே நம்பாமல் திரைக்கதையில் தனது தனி முத்திரையை பதிக்கிறார் ராஜமௌலி ...

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் ஒரு வித தொய்வை கொடுத்தாலும் முதல்  பாதி போவதே தெரியவில்லை . படத்திற்கு ஆக்சன் காட்சிகள் தான் பலம்னாலும்  ஒரு சின்ன பெஞ்சில் முட்டிக்கொண்டாலே நமக்கு முட்டி ரெண்டு நாளைக்கு விண்ணுன்னு தெறிக்குது இதுல என்னென்னா கோட்டையே இடிஞ்சு விழுந்தாலும் திரும்பவும் எந்திருச்சு ஃப்ரெஷ்ஷா சண்டை போடுறாய்ங்க . பிரபாஸ் தாவி தாவி ஓடும் போது சோட்டா பீம் கண் முன் வந்து போகிறார் . பாகுபலி 1 இல் " ஐஸ்தராப்பூ ஸ்வஞிக " என்று நமக்கு புது பாஷை சொல்லிக்கொடுத்த வில்லன் இதில் மிஸ்ஸிங் . ஹாலிவுட்டின்  ஹீ மேன் , ஸ்பைடேர் மேன் , சூப்பர் மேன் இதுக்கெல்லாம் தாத்தா நம்ம ஹனுமான் . அதை திரையில் சொல்வதற்கும் நம்மிடம் ஆள் இருக்கிறது எனும் வகையில் உலக அரங்கில்  நம்மை தலைநிமிர வைத்திருக்கும் படம் பாகுபலி . "பாகூகூ கூ கூ  பலி " , " மகிழ் மதீஈ " என்று வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் கூவ வைத்திருக்கும் பாகுபலி 2 நிச்சயம் கோடை கொண்டாட்டம் ...

ரேட்டிங்க்           : 3.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 48








8 April 2017

காற்று வெளியிடை - KAATRU VELIYIDAI - களிப்பில்லை ...


மிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன ? ...

ஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி  எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின்  காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம் ...

கார்த்தி க்கு பைலட்டுக்கு ஏற்ற தோற்றம் . படத்தின் களம்  ஸ்ரீநகரில் நடப்பதாலோ என்னமோ மீசையை மழித்து ஒரு நார்த் இந்தியன் லுக் கொடுத்திருக்கிறார்கள் . பாவம் நம்ம பருத்தி வீரனுக்கு அது செட்டே ஆவல . போக போக  பழகி விட்டாலும் அவர் ரொமான்டிக்காக பார்ப்பதாக நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கும் போது நமக்கு வெறுப்பு தான் வருகிறது . அதிதி ராவ் அழகாக  இருக்கிறார் . அவரை ஒளிப்பதிவு இன்னும் அழகாக காட்டுகிறது . காதலுக்கும் , தன்மானத்துக்கும் இடையே தவிக்கும் கேரக்டரில் ராவ் ரணகளம் செய்கிறார் . ஆர்,ஜே.பாலாஜி  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் . மற்றபடி பொதுவாக வளவளவென்று பேசி எல்லோரையும் கலாய்ப்பவர்  இதில் காயடிக்கப்பட்ட காளை  போல உம்மென்று இருப்பது வேதனை ...


படத்தில் ரவிவர்மனின் கேமரா தனி கேரக்டர் போலவே கூட வருகிறது . பனிமலைகளை காட்டும் விதத்திலேயே நமக்கு லேசாக குளிருகிறது .
" அழகியே " பாடலை  அதிகமாக முணுமுணுக்க வைக்கும் ஏ.ஆர்.ஆர் படம் நெடுக ஆர்.ஆர் மூலம் மென்மையாக வருடுகிறார் . ஆஸ் யூசுவல் டெக்கனிகலாக எந்த குறையும் வைக்காமல் விருந்து படைக்கிறார்  மணி ...

ஃப்லைட்டில் சாகசம் காட்டி புதுப் பெண்ணை இம்ப்ரெஸ் செய்வது , ஒரு சீனிலேயே இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எஸ்டாபிளிஷ் பண்ணுவது  , ஹாஸ்பிடலில் வைத்து நடக்கும் சண்டையில் மொத்த குடும்பத்தின் குணாதிசியங்களை சொல்வது , " நீ என்னை  செல்ல நாய்க்குட்டி மாதிரி ட்ரீட் பண்ற " என்று ஈகுவல் ரிலேஷன்ஷிப் புக்கு ஏங்கும் அதிதியின் குரல் ஆண்களே நோக்கி பாயும் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வைப்பது என மணியின் மேஜிக் படத்தில் தெளிக்க விடப்பட்டிருக்கிறது ...

ரெண்டரை  மணி நேர படத்துக்கு இது மட்டும் போதுமா ? அலைபாயுதே , ஓ.கே வில் கையாண்ட அதே காதல் , காதலில் பிரிவு , பிறகு சேர்வது வைகையறா கதை தான் என்றாலும் முதலிரண்டில் காதலர்கள் சேர்வார்களா என்று நமக்கிருந்த பதைபதைப்பு இதில் டோட்டலி மிஸ்ஸிங் . இதில் கார்த்தி கார்கில் போரில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு தப்பித்து வரும் போது அவர் குழந்தைக்கே மூன்று வயது ஆகி விடுகிறது . மணி யின் படங்களில் காதலர்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ இல்லையோ மறக்காமல் மேட்டர் செய்து விடுகிறார்கள் . காதலில் இருக்கும் ஆண் மேலாதிக்கத்தை சுட்டிக் காட்டிய விதத்தில் படம் கவர்கிறது . மற்றபடி படம் பார்ப்பவர்கள் போலவே மணியும் ரொம்ப க்ரிப்பாக இல்லாமல்  கேர்லெஸ்ஸாகவே இருந்திருப்பர் போல . பெட்டெர் லக் நெஸ்ட் டைம் மணி சார் ...

ரேட்டிங்க் : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40 

2 April 2017

கவண் - KAVAN - கொஞ்சமாய் கவர்கிறான் ...


பிரம்மாண்டமான படங்களை கையாள்வதில் சங்கருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் திறமையானவர் கே.வி.ஆனந்த் . இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் சுபா வுடன் இணைந்து திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார் . அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் கவண் . இதுவரை வேறு  இயக்குனர்கள் படங்களில் நடிக்காத டி.ஆர் பல வருட இடைவெளிக்கு பிறகு திரையில் வருவது படத்தின் டிஆர்.பி ஏறுவதற்கு உதவியிருக்கும் ...

ஜென்1 டி.வி யில் வேலைக்கு சேரும் திலக் ( விஜய் சேதுபதி ) சேனலை No.1 ஆக்குவதற்காக அடாவடி அரசியல்வாதியுடன் ( போஸ் வெங்கட் ) கை கோர்த்துக் கொண்டு  எம்.டி ( ஆகாஸ்தீப் ) செய்யும் தில்லு முல்லுகளை பொறுக்க முடியாமால் பொங்கியெழுவதே கவண் . சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வியாபார நோக்கை மட்டும் மனதில் கொண்டு செயல்படும் பல நான்காவது தூண்களின் கள்ளாட்டத்தை  கமர்சியலாய் காட்சிப்படுத்துகிறான் இந்த கவண் ...

சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு கவண் நிச்சயம் நல்ல கமர்சியல் பிரேக் . அலட்டிக்கொள்ளாமல் தனக்கே உரித்தான பாணியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் . சில சமயங்களில் வசனங்களை தின்று  விட்டால் கூட உடல் மொழியால் சமன் செய்கிறார் . சபலப்பட்டு விட்டு மடோனா வை சமாளிக்கும் இடம் சூப்பர் . மடோனா க்ளோஸ் அப் காட்சிகளில் மயங்க வைக்கிறார் . கேரளத்துக்கே உரிய பெரிய மனசால் கிறங்க வைக்கிறார் . மத்தபடி நடிப்பு , சாரி அத நான் கவனிக்கல . அயன் அளவுக்கு இல்லாமல் இதில் ஜெகனை அண்டர் யுடிளைஸ் செய்திருக்கிறார்கள் . மீடியா பெர்சனாலிட்டியாக பூர்ணிமா பக்கா மேட்ச் ...


டி.ஆர் படத்துக்கு பலம் , அதே சமயம் சில இடங்களில் பலவீனமும் கூட . முதல் பாதியில் இவர் வந்து பழைய படங்களை பற்றி ஜென் டி.வி எம்.டி யிடம்  பாடம் எடுப்பது படுத்தல் . இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதிக்கு இணையாக வரும் டி.ஆர் நடிப்பை விட மிமிக்ரி செய்து அப்லாஸ் வாங்குகிறார் . விக்ராந்த் நடிப்பில் அப்துல் கேரக்டர் முஸ்லீம் இளைஞனுக்கு மீடியாவால் நேரும் துன்பத்தை கொஞ்சம் மிகை கலந்து வெளிச்சம் காட்டுகிறது . வருசத்துக்கு அதிகபட்சம் நாலு படம் படத்துக்கு நாலு பாட்டு இதுக்கே போட்டதையே போடும் ஆதியை என்னத்த சொல்ல . கே.வி - ஹாரிஸ் கூட்டணியின் இழப்பு நன்றாக தெரிகிறது ...

கோ , மீடியா டைகூனாக பிரகாஸ்ராஜ் நடித்த பூலோகம் , முதல்வன் என்று மற்ற படங்களை  ஆங்காங்கே கட் செய்து கவணில் பேஸ்ட் செய்திருக்கிறார்கள் . டி.ஆர்.பி  எகுறனும்னா எதுவும் தப்பில்ல என்று ஊடகங்கள் செய்யும் உல்டா வேலைகளை ஜாலியாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறான் கவண் . ஆனால் அழுகைக்காக ஒரு சிறுவனை பூர்ணிமா அடிப்பதெல்லாம் ஓவர் . இண்டெர்வெல் ப்ளாக் கை முடித்த விதம் ஹைக்கூ ...

முதல் பாதி முழுவதும் மீடியா மேட்டரை வைத்து நன்றாகவே ஒப்பேற்றியவர்கள் அதன் பிறகு கெமிக்கல் ஃபேக்டரி , போராட்டம் என்று அரைத்த மாவையே அரைத்து போரடிக்கிறார்கள் . ஜென் 1 டி.வி ல எத லைவா போட்டாலும் மக்கள் பாக்குறாங்க சரி லேகிய விளம்பரம் பண்ற முத்தமிழ் டி.வி ல எதையோ போட்டாலும் எல்லாரும் பாப்பாங்களா ? அது என்ன லைவ் கிரிக்கெட் மேட்சா ?. சில சமயம் நாம்ம படத்துக்கு வந்தோமா இல்ல வீட்ல நியூஸ் சேனல் பாக்குறோமாங்குற டவுட்டு நமக்கு வரத்தான் செய்யுது . இப்படி கமர்சியல் பிரேக்குகளின் டூ மச் குறுக்கீடுகளால் கவண் கொஞ்சமாய் கவர்கிறான் ...

ரேட்டிங்க்           : 3 * / 5 * 
ஸ்கோர் கார்ட் : 42






26 March 2017

கடுகு - KADUGU - காரத்தை குறைத்திருக்கலாம் ...


ரண்டாவது  படம் கோலி சோடா மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் . முதல் படம் போலவே மூன்றாவது படத்திலும் தனது கதையை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் . பரத் - ராஜகுமாரன் என்று வித்தியாச கூட்டணியிலேயே  புருவம் உயர்த்த வைத்தவர் அதில் ஜெயித்தாரா ? பார்க்கலாம் ...

அழிந்து போன புலிவேஷக்கலையின் மிஞ்சியிருக்கும் சொற்ப கலைஞர்களுல் ஒருவன் புலி ஜே பாண்டி ( ராஜகுமாரன் ) . தரங்கம்பாடி க்கு 
மாற்றல் ஆகும் இன்ஸ்பெக்டருடன் எடுபிடியாக செல்லும் பாண்டி அங்கே 14 வயது சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக வெடித்து சிதறுவதே கடுகு ...

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதையை படித்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது . ஆனால் சினிமாவில் யாரும் தொடாத அந்த புலிவேஷத்தை கையிலெடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . குள்ளமான தோற்றத்தில் சாதுவாக இருக்கும் ராஜகுமாரன் இந்த கேரக்டருக்கு சரியான தேர்வு . முதல் சீனிலேயே அவருடைய கேரக்டரை எஸ்ட்டாப்ளிஸ் பண்ண விதம் சிறப்பு . சாது மிரண்டால் பாணியில் அவர் க்ளைமேக்க்ஷில் பொங்கி எழுவது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தாலும் யதார்த்த கதைக்களனுக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது . அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர் நிறைய அழுது கொண்டே இருப்பது தொய்வு ...


ஓவர் ஆக்டிங்க் செய்து நம்மை சில இடங்களில் நெளிய வைக்கும் ராஜகுமாரனுக்கு எதிர்ப்பதமாக தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார் பரத் . தவறிழைக்கும் மந்திரியை பலமிருந்தும் சுய லாபத்துக்காக எதிர்க்காமல் மவுனம் காத்து குற்ற உணர்ச்சியில் வாடும் நம்பி யாக வரும் பரத் பெர்ஃபெக்ட். ஆனால் இவர் நல்லவரா ? கெட்டவரா என்கிற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்கும் போல . புலி வேஷம் கட்டுபவர்  என்று என்ன தான் லாஜிக் சொன்னாலும் பக்கா பாக்சரான பரத் தை ராஜகுமாரன் பாய்ந்து பாய்ந்து அடிப்பதெல்லாம் காதில் பூ . இதற்கு பதில் பரத் எவ்வளவு அடித்தும் இவர் நியாயத்துக்கு போராடுபவராக காட்டி அதன் மூலம் பரத் மனம் திருந்துவது போல காட்டியிருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும் ...

விஜய் மில்டனின் சகோ பரத் சீனிக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை . முதல் பாதி தொய்வில்லாமல் நகர்வதற்கு இவர் முக்கிய காரணம் . அதே போல இவர்  காதலில் நடக்கும் ஆள்  மாறாட்டம் பெரிதும் கவரவில்லை . காதலுக்கு வெளி அழகு முக்கியமில்லை என்பதை தெளிவாக உணர்த்தும் கேரக்டராக டீச்சர் எபி . அதில் நடித்திருக்கும் பிரசித்தா வுக்கும் , அந்த கேரக்டரின் பின்புலத்தை சி.ஜி மூலம் நெகிழ்ச்சியாக சொன்ன விதத்துக்கும் பாராட்டுக்கள் ...


" கெட்டவங்களை விட தப்பு நடக்கும் போது தட்டிக்கேக்காம போற நல்லவங்க தான் தப்புக்கு காரணம் " , " நேத்து வரை அண்ணா , மாமா ன்னு அசையா பேசின பொண்ணு இன்னிக்கு ஆம்பளைங்கள பாத்தாலே பயந்து ஓடுறா சார் " போன்ற வசனங்கள் சூப்பர் . ஃபேஷ்புக் , வாட்ஸ் அப் என்று நடப்பு தொழில் நுட்பத்தை வைத்து காமெடி செய்திருப்பது அருமை . முதல் பாதியை தொய்வில்லாமல் நகர்த்தி இடைவேளையில் டென்ஷனோடு முடித்த திரைக்கதைக்கு  ஒரு பூங்கொத்து . ஆனால் இடைவேளைக்கு பிறகு நடக்கும் ட்ராமாக்களை பார்க்கும் போது  நல்லாத் தானேய்யா போய்கிட்டு இருந்துச்சு என்று கேட்கத்  தூண்டுகிறது ...

எளியவன் வலியவனை எதிர்க்கும் கதை . இதில் கடைசியில் எளியவன் ஜெயிப்பதைத் தான் அனைவரும் விரும்புவார்கள் என்று இயக்குனருக்கும் தெரியும் .  அதையே செய்திருக்கிறார் ஆனால் ஓவர் எமோஷனலை பிழிந்து . பரத் கேரக்டரில் உள்ள குழப்பம் , எமி டீச்சர் பிரச்சனை  தெரிந்தும் அந்த சிறுமியை நேரில் பார்க்காமலேயே இருப்பது , சிறுமி அந்த பிரச்சனையை தாயிடம் கூட சொல்லாமல் தற்கொலை அளவு போவது , பக்கா சினிமாத்தனமான கிளைமேக்ஸ் சண்டை இப்படி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் . என்ன கொஞ்சம் காரத்தை குறைத்திருக்கலாமோ என்று தோன்றினாலும் நாட்டில் சுற்றி நடக்கும் பாலியல் வன்முறைகளை பார்க்கும் போது இது போன்ற கன்டென்ட் சூழலுக்கு தேவையானது தான் ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 *  

ஸ்கோர் கார்ட் : 43



11 March 2017

மாநகரம் - MAANAGARAM - மஸ்ட் வாட்ச் ...


திட்டமிட்டு ரிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணி பார்க்கும்  படங்கள் சொதப்பும் வேளையில் , சும்மா பாக்கலாமே என்று போகும் சின்ன பட்ஜெட் படங்கள் செம்மையாக இருக்கும் . மாநகரம் அதில் ரெண்டாம் வகை . நடிகர்களை தவிர்த்து இயக்குனர் உட்பட அனைவரும் புதுவரவுகள் என்பதை நம்ப முடியவில்லை ...

வேலைக்காக சென்னை வரும் ஸ்ரீ , அவரை இண்டெர்வியூ செய்யும் எச்.ஆர் பெண்ணை ( ரெஜினா ) பல வருடங்களாக காதலிக்கும் சுதீப் , கார் ஓட்டுநர் சார்லீ , ஒரு கடத்தல் கும்பல் இவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களின் சுவாரசிய தொகுப்பே மாநகரம் ...

வழக்கு , ஓ.ஆ வை தொடர்ந்து ஸ்ரீ க்கு சரியான படம் . வேலை தேடும் இளைஞனாக வெகு இயல்பாக பொருந்துகிறார் . கிளைமேக்ஸ் சண்டையில் இவரது ஆக்ரோஷம் அதிர வைக்கிறது . நல்ல உயரம் , உடல் மொழியுடன் வரும் சுந்தீப் கிஷன் கேரக்டர் ஸ்கெட்சில் ஹீரோயிசம் இருந்தாலும் காட்சிகள் இயல்பாகவே இருக்கின்றன . ரெஜினா ரெஃ ப்ரிஜிரே ட்டரில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் . படத்தின் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் இவர் மட்டுமே . சார்லீ , மது போன்றோர் சரியான தேர்வு . சீரியசான படத்தில் காமெடி என்ற பெயரில் கொலை செய்யாமல் ராமதாஸ் ப்ளாக் காமெடியால் ராவடி செய்கிறார் . இவரை சரியாக பயன்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...


படத்திற்கு இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே பக்க பலமாக இருந்து ஸ்மால் பட்ஜெட் படத்துக்கு ரிச் லுக்கை கொடுக்கின்றன . வேகமான திரைக்கதை என்பது வெறும் கேமராவை அங்குமிங்கும் ஆட்டுவதோ , டாட்டா சுமோவை வேக வேகமாக ஓட்டுவதோ இல்லை என்பதை சீனியர் இயக்குனர்கள் லோகேஷிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் .அதிலும் குறிப்பாக வேறு வேறு சம்பவங்களை சரியாக கோர்ப்பதென்பது தனி கலை. அதை எடிட்டர் பிலோமின் ராஜ் உதவியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கச்சிதமாக செய்திருக்கிறார் .  நீண்ட நாட்கள் கழித்து முற்றிலுமாக நம்மை ஒன்றை வைத்த படம் ...

மாநகரம் என்ற தலைப்பை பார்த்தவுடன் சிட்டி யில் நடக்கும் அட்ராஸிட்டிகளை  படம் பிடித்து கடைசியில் பாடம் எடுப்பார்களோ என்று பயந்தால் ஏமாற்றமே , சார்லி , ஸ்ரீ இருவரும் காருக்குள் பேசிக்கொள்ளும் வசனங்களிலேயே சிட்டி பற்றிய ஒரு ஒரு அவுட்லுக்கை ஸ்வீட் அண்ட் சார்ட்டாக கொடுத்திருப்பது க்யூட் . சஸ்பென்சாக போகும் படத்தில் சில நிமிடமே இருந்தாலும் வரும் லவ் பாட்டு , பி.கே.பி பற்றி கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்ட் அப் இவை தவிர படத்தில் பெரிய குறைகள் இல்லை. மிரட்டும்  கதையெல்லாம் ஒண்ணுமில்லை , நெஞ்சை நக்கும் கிளைமேக்ஸ் இல்லை , உருக விடும் நடிப்பும் இல்லை ஆனால் திரைக்கதை என்கிற வஸ்து
ஒரு படத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர நினைப்பவர்களுக்கு மஸ்ட் வாட்ச் இந்த மாநகரம் ...

ஸ்கோர் கார்ட் : 46 

ரேட்டிங்   : 3.75* / 5 * 


8 March 2017

குற்றம் 23 - KUTTRAM 23 - குடும்ப க்ரைம் நாவல் ...


வெற்றியோ தோல்வியோ நம்பிக்கை தரும் இயக்குனர்கள் சிலரில் ஒருவர் அறிவழகன் . சுபா , பி.கே.பி இவர்களுக்கெல்லாம் அண்ணன் க்ரைம் மன்னன் ராஜேஷ்குமாரோடு இணைந்திருக்கும் படம் குற்றம் 23 . நாவலை வெள்ளித்திரையில் அப்படியே கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல . அதை இந்த கூட்டணி திறம்படவே செய்திருக்கிறது எனலாம் ...

கர்ப்பிணிப் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதன் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளை ஏ.சி.பி வெற்றி ( அருண்விஜய் ) அவிழ்க்கும் மெடிக்கல் த்ரில்லரே குற்றம் 23 . க்ரிப்போடு பக்கா  த்ரில்லராக இருந்திருக்க வேண்டிய படம் குடும்ப செண்டிமெண்டால் கொஞ்சம்  அப்படியிப்படி தள்ளாடுகிறது ...

திறமையிருந்தும் பெரிய பிரேக் கிடைக்காமல் அல்லாடும் நடிகர் அருண்விஜய் . இதில் காப் வேஷத்தில் கச்சென பொருந்துகிறார் . காதல் காட்சிகளில் குறும்புன்னகையோடு கடந்து போகிறார் . இவருக்கு ஜோடியாக மஹிமா நல்ல தேர்வு . ஆறாது சினத்தில் ரோபோ ஷங்கரை திணித்தது போலல்லாமல் இதில் தம்பி ராமையா வை அளவோடு உபயோகப்படுத்தியிருக்கிறார் அறிவழகன் . அபிநயா , அர்விந்த் , வம்சி எல்லாமே கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள் . விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை , பாஸ்கரின் ஒளிப்பதிவு எல்லாமே படத்தின் தரத்தை உயர்த்துகின்றன ...


அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை வைத்து முதல் பாதியில் முற்றிலுமாக ஒன்றை வைக்கிறார் இயக்குனர் . சாட்சிக்கார பெண்ணிடம் ஹீரோ சரண்டர் ஆவது ஹைக்கூ . ஹீரோ வீட்டிலேயே ஒரு சாவை ஏற்படுத்தி இண்டெர்வெல்லில் வைக்கும் ட்விஸ்ட் இன்ட்ரெஸ்டிங் . ஆனால் அதை இரண்டாம் பாதியில் தக்க வைக்கத் தவறிவிட்டார்கள் ...

செயற்கை முறை கருத்தரிப்பை வைத்து பிண்ணப்பட்டிருக்கும் கதையின் கரு வீக்காக இருந்தாலும் லாஜிக் முடிச்சுகளை சரியாகவே போட்டு அவிழ்க்கிறார்கள் . அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடக்க ஹீரோ தனது சவுகரியத்துக்கேற்ப விசாரணை நடத்துவது   நெருடல் .  ஸ்பெர்ம் டொனேஷனை வைத்து விக்கி டோனர் மாதிரியான ஜாலி படங்கள் ஹிந்தியில் வந்து கொண்டிருக்க இங்கே அதன் சீரியஸ் பக்கத்தை தொட்டிருக்கிறார்கள் . மேக்கிங்க் வைஸ் ஸ்டைலிஷாக இருந்தாலும் ஷார்ட் ன் ஸ்வீட் க்ரைம் நாவலாக இல்லாமல் குடும்ப சென்டிமெண்டையும் சேர்த்து குடும்ப க்ரைம் நாவலாக வந்திருக்கிறது குற்றம் 23 ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43


12 February 2017

சிங்கம் 3 - SI3 - சர்க்கஸ் ...


ரு வழியாக பதுங்கி பதுங்கி கடைசியில் வந்தே விட்டது சிங்கம் 3 . முதல் இரண்டு பாகங்களில் இருந்த கர்ஜனை குறைந்து சத்தம் அதிகமாக கேட்டாலும் ஹரி - சூர்யா காம்பினேஷனில் வேறெதையும் புதிதாக எதிர்பார்க்க முடியாதென்பதால் ஏமாற்றமில்லை . சூர்யா  வின் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு ஆந்திராவில் கதைக்களனை அமைத்திருக்கிறார்கள் ...

ஆந்திர  உள்துறை அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க  அங்கே சென்று கமிஷனர் கொலை  வழக்கை கையிலெடுக்கிறார் துரைசிங்கம் ( சூர்யா )  . அதன் பின்னணியில் இருக்கும் சதியை ஆஸ்திரேலியா வரை சென்று முறியடிக்கிறார் . என்ன நமக்கு  தான் காதுல ங்கொய்னு கேட்டுக்கிட்டே இருக்கு ...

சூர்யா ஏழு வருடமாகியும் உடலையும் குரலையும்  அப்படியே கிண்ணென்று வைத்திருக்கிறார் . இந்த உயரத்துக்கு தமிழ்நாடு போலீஷே அதிகம்  இதுல இன்டர்நேஷனலா என்று நெருடினாலும் தனது உடல்மொழியால் அதை சமன் செய்கிறார் . முதல் பாகத்தில் லவ்வராக இருந்தவர் படிப்படியாக முன்னேறி இப்போது சிங்கத்துக்கு ஆன்டியாகியிருக்கிறார்  அனுஷ்கா . ரெஸ்ட் ரூம் என்றால் என்னவென்று தெரியாதவரை  எல்லாம் எப்படி போலீசில் சேர்த்தார்கள்  ? சூரி யை வைத்து சிரிக்க வைக்கிறேன்  பேர்வழி  என்று முகம் சுழிக்க வைக்கிறார்கள் ...


ஸ்ருதி க்கு சூர்யாவை சைட் அடிப்பது தவிர பெரிய  வேலையில்லை . இவரை சாகடிக்காதது  ஆறுதல் என்றாலும் சூரியோடு சேர்ந்து காமெடி செய்ய வைத்து நம்மை சாவடிக்கிறார்கள் . நான் தமிழன்டா  என்று கூவும் ஹீரோக்கள் படத்திலேயே ஹிந்தி வில்லன்கள் தான் இருப்பார்கள் . நான் இந்தியன் என்று கர்ஜிக்கும் சூர்யா படத்தில் வேறு யார் இருக்கப்போகிறார்கள் ?! . அதிலும் சூர்யா விடம் அடி வாங்கி சாவதற்கு அவ்வளவு பெரிய எக்சர்ஸைஸ் எதற்கு ?. ராதிகா கொஞ்ச நேரம் வந்தாலும் நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார் ...

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே மாதிரி உருட்டினாலும் பாட்டில் தாளம் போடவாவது வைப்பார் . இதில் ஹேரிஸ் ஜெயராஜ் சாரி ஜெயராஜ் . ப்ரியனின் ஒளிப்பதிவு பெர்ஃ பெக்ட் . விஜயனின் எடிட்டிங்கில் கட்டிங் ஓட்டிங் சிங்கத்தின் வேகத்தை கூட்டுகின்றன . தமிழ்த்திமிரு பேசாமல் ஒரு கட்டம் மேல போய் இந்திய இறுமாப்பை காட்டும் ஹரி யின் வசனங்கள் விறுவிறு ...

ஹரியின் டெம்ப்லேட் படம் . என்ன ஏதென்று யோசிப்பதற்குள் ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து போல படம் கடகடவென ஓடி  இடைவேளை வந்து விடுகிறது . திரும்பவும் பாப்கார்ன் சாப்பிட்டு முடிப்பதற்குள் சூர்யா பக்க பக்க மாய் டயலாக் பேசி முடித்து விடுகிறார் . முடிவில் என்ன நடக்குமென்பது கண்ணை மூடிக்கொண்டாலும் தெரியுமென்பதால் நாம் சாவகாசமாக சாப்பிட முடிகிறது . காமெடி , காதல் இவை சொதப்பினாலும் அதிரடி ஆக்சன்களால் படத்தை  நிறுத்துகிறார் ஹரி . முதல் இரண்டு பாகங்களை விட படம் குறைவு தான் என்றாலும் பரபரவென்று கத்திக்கொண்டே பறந்து பறந்து ஏதாவது சாகசம் செய்து கொண்டேயிருக்கிறது இந்த சர்க்கஸ் சிங்கம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங்   : 2.75 * / 5 * 

14 January 2017

பைரவா - BAIRAVAA - பலவீனம் ...


விஜய் க்கு இயக்குனர் பரதன் மேல் சாஃப்ட் கார்னெர்  என நினைக்கிறேன் . அதனால் தான் ஏற்கனவே ஏ.டி.எம் எதிர்பார்த்த பணம் தராத போதும் பைரவா வில் வா என்று கை கோர்த்திருக்கிறார் . பைரவா வை இயக்குனர் ஆங்காங்கே கமர்ஷியலாக குரைக்க வைத்தாலும் பை அண்ட் லார்ஜ் ஒன்ஸ் மோர் ஆவெரேஜ் அட்டெம்ப்ட் பை பரதன் ...

பேங்கில் ரெக்கவரி ஏஜெண்ட் ஆக பணிபுரியும் பைரவா ( விஜய் ) மேனேஜரின் மகள் கல்யாணத்தில் மலர்விழியை ( கீர்த்தி சுரேஷ் ) பார்த்தவுடன் மையல் கொள்கிறார் . சொந்த ஊர் திருநெல்வேலியில் அவளுக்கு காலேஜ் கரெஸ்பாண்டண்ட் பி.கே ( ஜெகபதி பாபு ) வால் பிரச்சனை என்று தெரியவர அதை தனது ஹீரோயிசத்தால் எப்படி தவுடுபொடியாக்குகிறார் என்பதே பைரவா ...

கில்லி போலவே ஹீரோயினுக்கு வரும் பிரச்சனையை தனி ஆளாக நின்று துவம்சம் செய்யும் துள்ளல் கேரக்டர் விஜய்க்கு . படத்தின் பல சுமாரான சீன்களை இவரது மாஸ் இமேஜ் தூக்கி நிறுத்தினாலும்  பல்லை
ஒவராகவே கடித்து இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் நம்மை பஞ்சர் ஆக்குகின்றன . விஜய் படங்களிலேய மிக சுமாரான ஓப்பனிங்க் சாங்க்  இதுவாகத்தான் இருக்கும் . காமெடியன் சதீஷ் கொடுத்து வைத்தவர் . விஜய்க்கு ஈக்குவலாக ஆடும் அளவுக்கு ஸ்லோவாக பாட்டு அமைந்தது அவர் அதிர்ஷ்டம் ...

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நல்ல வேளை  அரை லூசாக நடிக்கவில்லை . அழகாக இருப்பதோடு அளவாகவும் நடித்து இம்சை செய்யாமல் இருக்கிறார் .
சதீஷ் சாவகாசமாக செய்யும் காமெடிகள் சிரிப்பை தரவில்லை . மாற்றாக விஜய் கொடுத்த ரெண்டு அறையில் இன்ஸ்பெக்டர் மனது மாறி குடும்பத்தோடு சேர்வது செம்ம காமெடி . தம்பி ராமையா வை வீணடித்திருக்கிறார்கள் . ஆரவாரம் இல்லாத வில்லனாக ஜெகபதி பாபு கவர்ந்தாலும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் டேனியல் பாலாஜி ஸ்கோர் செய்கிறார் ...

சுகுமாரின் ஒளிப்பதிவு , அனல் அரசு வின் ஸ்டண்ட் காட்சிகள் படத்துக்கு பலம் . வரலாம் வா பைரவா வில் மட்டும் தெரிகிறார் சந்தோஷ் நாராயணன் . மற்றபடி இதுவரை வந்த அவர் படங்களிலேயே படு சுமாராக இருக்கிறது பைரவா ...

மாஸ் ஹீரோ படம் , பொங்கல் ரிலீஸ் இதை மட்டும் மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள் போல . எப்படியிருந்தாலும் முதல் மூன்று நாட்கள் கூட்டம் வந்துவிடும் என்பது கணக்கு . கில்லி கதையை அப்படியே கிள்ளி எடுத்து படம் பண்ணதில் தப்பில்லை . ஆனால் அதில் பாதியாவது திரைக்கதையில் இருக்க வேண்டாமா ? ! . எந்த காலத்திலாவது 64 லட்ச ரூவா பணத்த எந்த பேங்க் மேனேஜராவது டாக்குமெண்டெல்லாம் கொடுத்து அப்படியே காசா வாங்கிட்டு வருவானா ? . கந்து வட்டி காரனே ஆயிரம் ஃபார்மாலிட்டி வச்சிருக்கான் . இப்படி கீர்த்திக்காக ஊருக்கு போகும் போது கோயம்பேட்டிலேயே அனாதையாக நிற்கும் விஜய் யின் பைக்கை போல கேட்பாரற்றுக் கிடக்கிறது கதை ...

விஜய் இல்லாமல் 20 நிமிடங்களுக்கு மேல் பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் தைரியம் . விஜய் - வில்லன்களுக்கிடையே நடக்கும் சீன்களில் சுவாரசியம் கூட்டினாலும் ஏற்கனவே பழக்கப்பட்ட விஷயமாகவே படுவது சறுக்கல் . விஜய்க்கு இருக்கும் ஒப்பனிங்குக்கு அவரை நம்பி படமெடுத்ததில் தப்பில்லை . நிச்சயம் அவர் படத்துக்கு பலம் . ஆனால் அவரை மட்டுமே நம்பி மற்ற அம்சங்களில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டது பலவீனம் ...

ஸ்கோர் கார்ட் : 40 

ரேட்டிங் : 2.5 * / 5 * 

2 January 2017

தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016


2016 தமிழ் சினிமா  வுக்கு ஒரு சுமாரான ,அதே நேரம் குழப்பமான வருடம் எனலாம். 
வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அதே வருடம் லாஜிக் சுத்தமாக இல்லாத ரெமோ , இருமுகன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் , ரசனைக்குமான இடைவெளியை நிறையவே காட்டுகிறது . இசைஞானி யின் 1000 மாவது படம் , கபாலி வசூலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது , விஜய் சேதுபதியின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் தியேட்டரில் ஓடியது எல்லாம் வருடத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவுதம் மேனன் , விக்ரம் குமார் போன்றோரின் படங்கள் சொதப்பினாலும் இறுதிச்சுற்று , உறியடி போன்ற படங்களின் மூலம் சுதா , விஜயகுமார் போன்றோர் அதிகம் கவனிக்க வைத்திருக்கிறார்கள் . சூப்பர் ஸ்டார் தனக்கு இணை யாருமில்லை  என்பதை கபாலி மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் . விஜய் , சிவகார்த்திகேயன் எல்லாம் வெற்றிகளின் மூலம் தங்களது மார்க்கெட்டை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . சென்ற வருடம் தங்கமகனில் தொங்கிய தனுஷின் புகழை கொடி உயரே  பறக்க வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏழு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் , கமல் , அஜித் துக்கு ஒரு படம்  கூட வராதது ஏமாற்றமே ...

முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : 

அரையாண்டு தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016 HALF YEARLY REVIEW 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2016

கவர்ந்த படங்கள் 

  விசாரணை 
  இறுதிச்சுற்று 
  காதலும் கடந்து போகும் 
  இறைவி 
  உறியடி
  ஜோக்கர்
  குற்றமே தண்டனை / ஆண்டவன் கட்டளை  
  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 
  கொடி 

      தங்கல் ( தமிழ் )
  
   டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் 

   ரஜினி முருகன்  
   இறுதிச்சுற்று   
   பிச்சைக்காரன் 
   தெறி 
   வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
   கபாலி 
   இருமுகன் 
   ரெமோ 
   தேவி 
   கொடி 
     

 ப்ளாக்பஸ்டர்  :  கபாலி - KABALI - 
  
 டாப் டென் பாடல்கள்

1. பாருருவாய ( தாரை தப்பட்டை )
2. உன்மேல ஒரு கண்ணு ( ரஜினி முருகன் )
3. ஏய் சண்டைக்காரா  ( இறுதிச்சுற்று  )
4. ஒன்னு ரெண்டு   ( இறைவி   )
5. அக்கினிக்குஞ்சொன்று    ( உறியடி )
6. என்னங்க சார்  ( ஜோக்கர்  )
7. மாய நதி  ( கபாலி )
8. மக்க கலங்குதப்பா ( தர்மதுரை )
9. ஹெலெனா ( இருமுகன் )
10.தள்ளிப் போகாதே  ( அச்சம் என்பது மடமையடா )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - விசாரணை
 கவர்ந்த நடிகர் -  ரஜினிகாந்த்  ( கபாலி  )
 கவர்ந்த நடிகை - திரிஷா  ( கொடி )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரக்கனி  ( விசாரணை   )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - குலப்புள்ளி லீலா   ( மருது )
 கவர்ந்த காமெடி நடிகர் -  சதீஷ்  ( ரெமோ   )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  சூர்யா  ( 24 )
 கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன்  ( இறைவி )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் - இளையராஜா  ( தாரை தப்பட்டை  )
 கவர்ந்த ஆல்பம் - அச்சம் என்பது மடமையடா   ( ஏ.ஆர்.ரஹ்மான்  )
 கவர்ந்த பாடல் - பாருருவாய   ( தாரை தப்பட்டை  )
 கவர்ந்த பாடகி -  தீ  ( ஏய் சண்டைக்காரா  )
 கவர்ந்த பாடகர் - சத்யபிரகாஷ்  ( பாருருவாய )
 கவர்ந்த பாடலாசிரியர் - தாமரை  ( தள்ளிப் போகாதே  )
 கவர்ந்த வசனகர்த்தா - சமுத்திரக்கனி  ( அப்பா   )
 கவர்ந்த கதாசிரியர் - சந்திரகுமார்  ( விசாரணை  )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - விஜயகுமார்  ( உறியடி  )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  டான் மாச்சார்த்தூர்   (அச்சம் என்பது மடமையடா  )
 கவர்ந்த இயக்குனர் - வெற்றிமாறன்  ( விசாரணை )


வசூல் ராஜாக்கள் 

ரஜினிகாந்த்  ( கபாலி   )
விஜய்   ( தெறி )
சிவகார்த்திகேயன்   ( ரஜினி முருகன் / ரெமோ   ) 

ஏமாற்றங்கள்

தாரை தப்பட்டை 
அச்சம் என்பது மடமையடா

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

Related Posts Plugin for WordPress, Blogger...