3 March 2019

தடம் - THADAM - தடம் பதிக்கும் ...


டையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி - அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால்
கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் ...

ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் ...

எழில் , கவின் என இரு கதாபாத்திரத்தில் ஒரு மரு கூட வித்தியாசம் இல்லாமல் வந்தாலும் உடல் மொழியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார் அருண் விஜய் . குற்றம் 23 க்கு பிறகு அமைந்த நல்லதொரு வேடத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் . இரண்டு ஹீரோயின்களில் தன்யா அழகிலும் வித்யா கதாபாத்திரத்திலும் கவர்கிறார்கள் . சோனியா அகர்வாலுக்கு வலுவான கேரக்டெர் ...


யோகி பாபு , ஜார்ஜ் மரியான் இருவரும் சீரியஸான படத்தில் தேவையான அளவு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . பெப்சி விஜயன் , ஸ்ம்ருதி போலீசாக பெர்ஃபெக்ட் . கோபிநாத்தின் ஒளிப்பதிவு , ஸ்ரீகாந்தின் எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பலம் . அருண்ராஜின் பின்னணி  இசை பெப் கொடுத்தாலும் மங்காத்தா வை நினைவு படுத்துகிறது ...

வித்தியாசமான கதைக்களன் , விறுவிறுப்பான திரைக்கதை இரண்டும் தான் தடத்தை தூக்கி நிறுத்துகின்றன . எழில் , கவின் இருவரும் ஒரே மாதிரி இருப்பது குழப்பம் தந்தாலும் போக போக ஒன்ற முடிகிறது . இருவரில் கவின் சம்பந்தப்பட்ட சீன்கள் சிம்ப்ளி சூப்பர்ப் . இண்டெர்வெல் சஸ்பென்ஸ் முடிச்சோடு  விடப்படும் படம் அதன் பின்னர் சூடு பிடிக்கிறது . ஸ்டேஷனுக்குள் தொடர்ந்து சீன்கள் வந்தாலும் சலிப்பை தராததற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் ...

இன்வெஸ்டிகேஷனில் சில லாஜிக் சொதப்பல்ஸ் உண்டு . டீட்ட்டைலாக சொன்னால் சுவாரசியம் கெட்டுப்போகும் . உதாரணத்திற்கு சொன்னால் போர்ஸ் ஏரியாவில் ஒரு கொலை நடக்கிறது . தெருக்கு தெரு சிசிடிவி இருக்கும் போது பெரிய ஏரியாவில் இல்லாமலா போகும் ? அவ்வளவு மழையிலும் ரத்தக்கறை காயாமல் இருப்பது எப்படி ? சில சில கேள்விகளை தடம்  எழுப்பினாலும் படம் போகிற போக்கில் அதை யோசிக்க விடாமல் செய்வது புத்திசாலித்தனம் . பேட்ட , விஸ்வாசம் கமர்ஷியல் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் தடம் வியாபாரத்தையும் தாண்டி நிச்சயம் இந்த வருடம் தடம் பதிக்கும் ...

ரேட்டிங்க் : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 45


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...