13 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஓ.கே ...


        
சினிமா எடுப்பவர்களில் இரண்டு வகை உண்டு ... ஒவ்வொரு படத்திலும் புதிதாக எதையாவது செய்வது அல்லது செய்ய முனைவது , பெரிதாக எதையும் பற்றி கவலைப்படாமல் தனக்கு எது சரியாக வருமோ ரிஸ்க் எடுக்காமல் அதில் மட்டுமே பயணிப்பது ... இதில் இரண்டாவது வகையான இயக்குனர் ராஜேஷ் தன் முதல் இரண்டு படங்களை போலவே இப்படத்திலும் காமெடி குதிரையில் சந்தானத்தின் உதவியுடன் போரடிக்காமல் பயணம் செய்திருக்கிறார் ...

கதையை பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் சொல்கிறேன் ... சத்யம் தியேட்டரில் வேலை பார்க்கும் சரவணன் ( உதயநிதி ஸ்டாலின் ) சத்யம் தியேட்டர் ஓனர் பையன் போல டிப் டாப் ட்ரெஸ்சுடன் தன் நண்பன் பார்த்தாவுடன் ( சந்தானம் ) வெட்டியாக ஊர் சுற்றுகிறார் ... ஒரு நாள் ட்ராபிக் சிக்னலில் மீராவை ( ஹன்சிகா ) சந்தித்தவுடன் எல்லா ஹீரோக்களும் என்ன செய்வார்களோ அதையே அவர் டெபுடி கமிஷனரின் மகள் என்று தெரிந்தும் செய்கிறார் ... கடைசியில் காதலியின் கையை பிடித்தாரா என்பதை இயக்குனர் தன் பாணியில் சொல்லியிருக்கிறார் ...

                                     
ஆரம்ப காட்சிகளில் ஏனோ தானோ என்று இருந்தாலும் போக போக பக்கத்து வீட்டு பையனை போல பரிச்சியம் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின் ... க்ளோஸ் அப்பில் நடிப்பிற்கு புதுசு என்று தெரிந்தாலும் அலட்டி கொள்ளாத நடிப்பால் அட போட வைக்கிறார் ... குறிப்பாக ஹன்சிகாவிற்கு பார்த்த மாப்பிள்ளை அவரை மூக்கை உடைத்தவுடன் உதயநிதி ரியாக்சனுடன் ஒரு ஆட்டத்தை போட்டு க்ளாப்சை அள்ளுகிறார்...டான்ஸ் மாஸ்டர் இவரை அதிகம் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ எல்லா பாடல்களுக்கும் ரொம்பவே சாப்ட் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து பாக்யராஜ் போல உதயநிதியை உடற்பயிற்சி செய்ய வைத்துவிட்டார் ...

                                      
படத்தில் ஹன்சிகாவை சின்னத்தம்பி குஷ்பூ போல இருப்பதாக ஹீரோ சொல்கிறார் ஆனால் அவரோ இப்போதிருக்கும் குஷ்பூ போல ஓவர் புஷ்டியாகவே இருக்கிறார் ... சில ஹீரோயின்களை பார்த்தால் காதல் வரும் , சில ஹீரோயின்களை பார்த்தால் காமம் வரும் , ஏனோ ஹன்சிகாவை பார்த்தால் மட்டும் எதுவும் வரமாட்டேன் என்கிறது ...நடிப்பை பொறுத்தவரையில் ஓ.கே ...;

சந்தானத்தை பற்றி என்ன சொல்ல ? கவுண்டமணி நடிக்காத குறையை தீர்த்து வைக்கிறார் ...இந்த படத்தில் கலாய்ப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தன் மேனரிசம் மூலமும் நன்றாகவே சிரிக்க வைக்கிறார் ... சரண்யா தனக்கு ஏன் தேசிய விருது கொடுத்தார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ... இவருக்கும் , அழகம் பெருமாளுக்கும் இடையேயான ட்ராக் ஒரு அழகான குட்டி கதை ...


யுவனை விட்டு விட்டு ராஜேஷ் ஹாரிசுடன் சேர்ந்ததில் பாதிப்பில்லை ... நா.முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன .. குறிப்பாக " காதல் ஒரு " , " வேணாம் மச்சான் " பாடல்கள் அருமை... சினேகா , ஆர்யா சில சீன்களே வந்தாலும் நல்ல ரெஸ்பான்ஸ் ... 

படம் போவது தெரியாமல் சிரித்தாலும் இயக்குனரின் முந்தைய இரண்டு படங்களிலும் பார்த்த அதே கதை , யூகிக்க முடிகின்ற அடுத்தடுத்த சீன்கள் இவையெல்லாம் இன்னும் எத்தனை படம் தான் இப்படியே எடுப்பாரோ என்று கேட்க வைக்கின்றன ... காமடியான பல சீன்களை எடுத்து அதை கதையாக சொல்லாமல் கதையுடன் கூடிய காமெடி படத்தை எடுத்தால் நிச்சயம் காதலிக்க நேரமில்லை , மைக்கேல் மதன காமராஜன் , உள்ளத்தை அள்ளித்தா போல என்றுமே மனதில் நிற்கும் படங்களை இயக்குனர் ராஜேஷாலும் தர முடியும் ... இயக்குனர் முயற்சி செய்வாரா என்பதை அடுத்த படத்தில் பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

16 comments:

ganesan sivanandam said...

nice and impartial comments.thanks.

ananthu said...

ganesan sivanandam said...
nice and impartial comments.thanks.

Thanks for your comments ...

MANO said...

good review... my review is hear....
http://feelthesmile.blogspot.in/2012/04/blog-post.html

Anonymous said...

சந்தானத்தை வைத்து படத்தை ஓட்டிவிடுகிறார்கள். ஆனாலும் உங்கள்ட்ட ஓகே வாங்கிடுச்சே படம். நைஸ் ரிவ்யூ.

வித்யா

JZ said...

அப்பாடி, இன்றுதான் படம் பார்க்க போறேன் அண்ணா! உங்க விமர்சனம் மேலும் நம்பிக்கையளித்திருக்கிறது. நன்றி!

Kumaran said...

சார், பக்காவான விமர்சனம்..அருமை.தாங்கள் ரசித்தவற்றை அப்படியே தெளிவாக பதிவுசெய்துள்ளீர்கள்.மிக்க நன்றி..படம் பார்க்கிறேன்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

விச்சு said...

அனந்து சார் உங்கள் விமர்சனம் சூப்பர்.

ESWARAN.A said...

படம் எடுத்துக்கொண்டிருந்த உதய நிதி நடிக்க வந்திருக்கிறார்.. நடிப்பும் பரவாயில்லை..எதிர்கால தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு உதவும்..

ananthu said...

MANO said...
good review... my review is hear....
http://feelthesmile.blogspot.in/2012/04/blog-post.html

Thanks ...

ananthu said...

Anonymous said...
சந்தானத்தை வைத்து படத்தை ஓட்டிவிடுகிறார்கள். ஆனாலும் உங்கள்ட்ட ஓகே வாங்கிடுச்சே படம். நைஸ் ரிவ்யூ.
வித்யா

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி வித்யா ...!

ananthu said...

JZ said...
அப்பாடி, இன்றுதான் படம் பார்க்க போறேன் அண்ணா! உங்க விமர்சனம் மேலும் நம்பிக்கையளித்திருக்கிறது. நன்றி!

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Kumaran said...
சார், பக்காவான விமர்சனம்..அருமை.தாங்கள் ரசித்தவற்றை அப்படியே தெளிவாக பதிவுசெய்துள்ளீர்கள்.மிக்க நன்றி..படம் பார்க்கிறேன்.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

விச்சு said...
அனந்து சார் உங்கள் விமர்சனம் சூப்பர்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு ...!

ananthu said...

ESWARAN.A said...
படம் எடுத்துக்கொண்டிருந்த உதய நிதி நடிக்க வந்திருக்கிறார்.. நடிப்பும் பரவாயில்லை..எதிர்கால தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு உதவும்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி...!

ஹேமா said...

சந்தானத்தின் நகைச்சுவைதான் உச்சம் என்றார்கள் பார்த்தவர்கள்.பார்ப்போம்.நன்றி அனந்த் !

ananthu said...

சந்தானத்தின் நகைச்சுவைதான் உச்சம் என்றார்கள் பார்த்தவர்கள்.பார்ப்போம்.நன்றி அனந்த் !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...