1 August 2011

யார் கடவுள் - சிறுகதை

                                                                                     
     மதிய உணவுக்குப்பின் முழிப்பும் இல்லாத ,தூக்கமும் இல்லாத ஒரு மந்தமான சூழலுக்குள் சிவா ஆட்பட்டுக்கொண்டிருக்கும் போது 'என்னமோ ஏதோ" என்ற கோ பாடலுடன் அவன் செல்போன் ஒலித்தது.. சலிப்புடன் எடுத்தவன் சுரேஷ் பெயரைப்பார்த்ததும் சந்தோசமானான்...

     "டே மச்சி எப்படிடா இருக்க" -
    "ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குடா" 
  "ஹே கன்க்ராட்ஸ்...சுகப் பிரசவம் தானே! ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க.?" -
   "ரொம்ப நல்லா இருக்காங்கடா! நாலு வருஷம் கடவுள வேண்டினது வீணா போகல, இல்லேனா இத்தனை கஷ்டத்துக்கப்புறமும் சுகப்பிரசவமா ஆகியிருக்குமா" -

    "டே திருந்தவே மாடியாடா? கண்ணுக்கு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காப்பாத்தின டாக்டர்ஸ விட்டுட்டு கண்ணுக்கே தெரியாத கடவுள போய் பாராற்றியேடா! -     "டே அப்படில்லாம் சொல்லாதடா..நிச்சயம் நான் கும்புடுற சாமி தாண்டா இதுக்கு காரணம்..இல்லேனா இத்தனை நாளா  ஏன் இது நடக்கல.. உனக்கு நம்பிக்கை இல்லேனா அதுக்காக இப்படி சொல்றதா ?.....
                                          
   "சரிடா..கடவுள் இருக்கார்னா ஏன் டாக்டர்சா தேடி தேடி போய் டெஸ்ட் பண்றாங்க... கோவிலுக்கு போயிட்டு அப்படியே விட்டுற வேண்டியது தானே!....
  "அததுக்கு நேரம் வரும் போது கடவுளே பாத்து செய்வாரடா." -

 " ஆமா அவருக்கு ஒவ்வொன்னா பாத்து செய்யருது தான் வேல , போடா உலகத்திலேயே மனுஷன் கண்டுபிடிச்ச ரெண்டு மோசமான விஷயம் சொல்லு"

     சிவா இப்படி கேட்டவுடன் சட்டென்று சுரேஷ் " அணு ஆயுதமும்,மதமும்" என்றான்..ஆனால் அவன் சிவாவிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை....
                                                       
  "இல்லவே இல்ல " கடவுளும் , காசும் " நீ சொன்ன மத்ததெல்லாம் இத வெச்சு வந்ததுதான்...இப்ப கூட நீ கடைசியா பாத்த டாக்டர் தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து இத நடத்திருக்காங்க புரிஞ்சுக்கோ" -

சிவா இப்படி சொல்லவே சுரேஷ் கொஞ்சம் குழம்பி போனான்.....

"சரி அதெல்லாம் விடு..குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போற..நல்ல மாடர்ன் பேரா வைடா.."

 "அதாண்டா ஒண்ணுமே புரியல..என்ன பேர் வைக்கிறதுன்னு" -
                                                        
  "நான் ஒரு ஐடியா சொல்லட்டா , பேசாம உன் மனைவிக்கு பிரசவம் பாத்த லேடி டாக்டர் பேரே வைச்சுடு..என்னைக் கேட்டா உன் சந்தோசத்துக்கு அவங்க தான் காரணம்.."

   இது சரியான யோசனையாகப் படவே சுரேஷ் சரியென சொல்லி போனை கட் செய்தான்.....

   இனிப்புகள்,பழங்களுடன் டாக்டர் அறைக்குள் சென்றான் சுரேஷ்.....

 "டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..."

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்..குழந்தைக்கு என்ன பேர் வைக்க போறீங்க"

"உங்க பேரை தான் டாக்டர் வைக்க போறேன்" -
  "என் பேரா ..ஏன்னு தெரிஞ்சுக்கலாமா ?"

"என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க..நீங்க கொடுத்த ட்ரீட்மென்ட் தான் குழந்தை பொறக்க காரணம் . .நீங்க எனக்கு கடவுள் மாதிரி."
                                                   
"அப்படியா ? யார் சொன்னா?..என் கைல எதுவும் இல்ல..எல்லாம் கடவுள் செயல்..நீங்க ஒரு பிரதோஷம் விடாம சிவன் கோவிலுக்கு போவீங்கன்னு உங்க மனைவி சொன்னாங்க...
அதனால சிவன் பேரையோ ,சக்தி பேரையோ வைங்க அதான் பொருத்தமாக இருக்கும்"..

நாங்கல்லாம் வெறும் மனுஷங்க எங்கள கடவுளாக்கிடாதீங்க"

     டாக்டரின் அறையை விட்டு சுரேஷ் புது நம்பிக்கையுடன் வெளியே வந்தான்...

6 comments:

Anonymous said...

வழக்கம் போல் அருமையான பதிவு

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

ananthu said...

Reverie said...
வழக்கம் போல் அருமையான பதிவு

உங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி...

Rathnavel said...
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி...

V.KAVEANANTH & V.NANDHANA said...

நன்றி

pragnan said...

அன்பு அனந்து, சிறுகதையையும் சிறப்பாகச் சொல்ல முடியும் என்று காட்டியிருக்கும் பதிவு. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. அது ஆய்வில் அகப்படாதது. அனுபவத்தில் புரிபடுவது. அவரவர்
அனுபவத்தைப் பொறுத்து இப்படியாகவும்
அப்படியாகவும் அல்லது எப்படியுமே இல்லாததாகவும் தென்படுகிறது. இந்த மூன்று கோணத்தையும் உங்கள் சிறுகதை சொல்கிறது. வாழ்த்துகள். அன்புடன் பிரக்ஞன்

ananthu said...

அன்பு பிரக்ஞன் என் சிறுகதைக்கு பொருத்தமான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...