எந்தவித கணக்கீடுகளுக்குள்ளும்
அடங்குவதில்லை
நம் காதல் ...
விழுந்து எழுந்து
வளைந்து நெளிந்து
ஏதோ ஒரு விகிதத்தில்
அது
ஓடிக்கொண்டேயிருக்கும் ...!
உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் ...
பூமராங் போல
எங்கே போனாலும்
என் மனம்
மீண்டு வந்து
உன் கைகளுக்குள்ளேயே அடங்கும் ...!
அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...
உனக்காக கவிதைகள்
என்ற பெயரில்
நான்
ஏதேதோ கிறுக்கியதால் தான்
சொன்னான் பாரதி
தமிழ் இனி மெல்ல சாகும் ...!
கடன் கொடுத்தார்
நெஞ்சம் போல்
பதைபதைக்க வைத்தாலும்
பிரிந்திருக்கையில்
உலகமே நீயாய்
உன்னோடிருக்கையில்
நீயே உலகமாய்
எல்லாமுமாய் என்னுள்
எரிந்து கொண்டேயிருக்கும்
தீயாய்
நம் காதல் ...!
11 comments:
நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
அடடா... என்ன சொல்றது அனந்து...? பேச விடாம செஞ்சுட்டீங்களே...
இருந்தாலும், சொல்லணுமில்ல...
\\அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...\\
வந்து போனா சரிதான்...
\\உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் ...\\
இந்த மாதிரி, இயந்திரத்தனமாக படிக்க வைக்காமல் உணர வைப்பதால்தான் உங்கள் கவிதைகள் என்னைக் காத்திருக்க வைக்கிறது....
வழக்கம் போல் அடுத்த கவிதைக்கான காத்திருப்புடன்...
- நுண்மதி.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
kavithai (kovaikkavi) said...
நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
நல்ல படைப்பு நண்பரே...
\\அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...\\
-:)
ம்...இதுதான் காதலின் தன்மை.அழகான காதல் அனந்து !
கலக்கல் அனந்து!!
அடடா... என்ன சொல்றது அனந்து...? பேச விடாம செஞ்சுட்டீங்களே...
இருந்தாலும், சொல்லணுமில்ல...
\\அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...\\
வந்து போனா சரிதான்...
\\உன்னுடன் இனி பேசுவதில்லை
என்று சொல்லியாவது
முறிந்த
நம் பேச்சுவார்த்தை
மீண்டும் தொடங்கும் ...\\
இந்த மாதிரி, இயந்திரத்தனமாக படிக்க வைக்காமல் உணர வைப்பதால்தான் உங்கள் கவிதைகள் என்னைக் காத்திருக்க வைக்கிறது....
வழக்கம் போல் அடுத்த கவிதைக்கான காத்திருப்புடன்...
- நுண்மதி.
நுண்மதி உங்களின் பின்னூட்டங்களும் என்றுமே இயந்திரத்தனமாய் இருந்ததில்லை , உணர்வுப்பூர்வமான இது போன்ற உற்சாகங்களே என்னை தொடர்ந்து கவிதை எழுத வைக்கின்றன !உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!...
ரெவெரி said...
நல்ல படைப்பு நண்பரே...
\\அழகான பெண்கள்
கடக்கும் போது
அடடா என வழிந்தாலும்
முறைப்புடன் உன் முகம்
கண் முன் ஒரு கணம்
வந்து போகும் ...\\
-:)
நண்பா உங்களின் பின்னூட்டம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி !
தால் வைக்கிறது !துரோகம் செய்தேன்
ஹேமா said...
ம்...இதுதான் காதலின் தன்மை.அழகான காதல் அனந்து !
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா ...!
Abhi said...
கலக்கல் அனந்து!!
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி அபி ...!
Post a Comment