14 January 2012

நண்பன் - வெற்றியாளன் ...



முதல்வன் படத்திற்காக பத்து வருடங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டிய விஜய் - ஷங்கர் இருவரும் இப்போது நண்பனில் கை கோர்த்திருக்கிறார்கள் ... " 3 இடியட்ஸ் " ரீமேக் வாயிலாக அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நண்பன் ஜெயித்திருக்கிறான் ... அமீர்கான் நடிப்பில் சேத்தன் பகத்தின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான படத்தை விஜய்யின்  இமேஜிற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ...

வெங்கட் ( ஸ்ரீகாந்த் ) , சேவற்கொடி செந்தில் ( ஜீவா ) இருவரும் குசும்பனின்
( சத்யன் ) உதவியுடன் தங்களின் வாழ்க்கையையே நல்ல படியாக மாற்றியமைத்து விட்டு திடீரென காணாமல் போய் விட்ட நண்பன் பாரிவேந்தனை ( விஜய் ) தேடி போகிறார்கள் ... தேடலுக்கிடையில் நண்பன் யார் ? என்ன செய்தான் ? என்பதை பிளாஷ்பேக் மூலம் அழகாக விளக்குகிறார்கள் ... தேடிய  நண்பன் இவர்களுக்கு கிடைத்தானா ? என்பதே மீதி கதை ...

கல்வியை உணர்ந்து படிக்க வைக்காமல் இயந்திரத்தனமாக மனப்பாடம் செய்ய வைக்கும் பயிற்றுவித்தல் முறையும் , அதை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களும் , தங்களின் ஆசையை பிள்ளைகளின் மேல் திணிக்கும் பெற்றோர்களும் ,  பள்ளி - கல்லூரிகளில் இருக்கும் ரேங்கிங் சிஸ்டமும் மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் ...


போக்கிரிக்கு பிறகு பெரிய வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு கடந்த வருடம் காவலன் நல்ல பெயரையும் , வேலாயுதம் கொஞ்சம் வசூலையும் வாங்கிக்கொடுத்தன ... ஆனால் இவையிரண்டையும் பெரிய அளவில் வாங்கிக்கொடுத்திருக்கிறான் நண்பன் ... வழக்கம் போல கெட் -அப்பை மாற்றாவிட்டாலும் , பஞ்ச் டயலாக் , சண்டை இவைகளில்லாத வித்தியாசமான கேரக்டரில் தன்னை முழுமையாக புகுத்தி படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் விஜய் ... கீப் இட் அப் விஜய் ... உங்ககிட்ட இருந்து இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்  !


மற்ற இருவரை விட ஜீவா கல்லூரி மாணவனாக வெகு இயல்பாக பொருந்துகிறார். ஏழை மாணவன் என்பதை தன் நடிப்பாலும் , உடல்மொழியாலும் நன்றாக வெளிப்படுத்துகிறார்... தண்ணியடித்து விட்டு வகுப்பறையில் இவர் செய்யும் கலாட்டா கல கல ... மாதவன் இடத்தில் ஸ்ரீகாந்தை நினைத்து பார்ப்பது கஷ்டம் என்றாலும் தன் லிமிடேசனை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் ... குறிப்பாக அப்பாவிடம் தன் எதிர்காலத்திற்காக மன்றாடும் காட்சி அற்புதம் ...


ஒல்லியான இலியானா தன் இடுப்பாலும் , நடிப்பாலும் நம்மை கவர்கிறார் ! இராணியின் இயல்பான நடிப்பை தன் ஓவர் ஆக்டிங்கால் கெடுத்து விடுவாரோ என்ற பயத்தை ஆங்காங்கே ஏற்படுத்தினாலும் , அனுபவம் வாய்ந்த நடிப்பால் சத்யராஜ் சபாஷ் போட வைக்கிறார் ...

தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பெரிய காமெடி பண்ணியவர் சத்யன் , ஆனால் நண்பனை பார்த்த பிறகு " 4 இடியட்ஸ் " என்று கூட பெயர் வைக்கலாமென சொல்லுமளவிற்கு காமெடியனாக மட்டுமல்ல  நல்ல நடிகனாவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ... எஸ்.ஜே.சூர்யா வந்தவுடன் தியேட்டரில் பயங்கரமாக கை தட்டுகிறார்கள் ! ஹீரோ ஆசையையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு  கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறினால் அவருக்கு நல்ல எதிர்காலம் என்று நினைக்கிறேன் ...

ஹாரிஸ் ஜெயராஜ் " சைய்ய சைய்யா " வில் இருந்து " அஸ்க் அஸ்க் " , " சலே சலோ " வில் இருந்து " என் நண்பன் போல " இப்படி ஏ.ஆர்.ஆரின் மெட்டுக்களை உருவியிருந்தாலும் வழக்கம் போல பாடல்களை ஹிட் செய்து விட்டார் ... மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு   ஊட்டியின்  ஹேர்பின் வளைவுகளை டாப் ஆங்கிளில் காட்டி மிரள வைக்கிறது ...



ரீமேக் படங்களாக இருந்தாலும் ஈயடிச்சான் காப்பி செய்வதை பொதுவாக யாரும்  விரும்புவதில்லை , இருப்பினும் இந்த படம் பார்த்த பிறகு நல்ல வேலை எதையும் மாற்றவில்லையே என "  3  இடியட்ஸ் " பார்த்தவர்களையும் , கதை நன்றாக இருந்தால் எந்த ஹீரோவும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என "  3 இடியட்ஸ் " பார்க்காதவர்களையும் சொல்ல வைத்ததே படத்தின் பெரிய பலம்...

பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கல்லூரி வாழ்க்கையை காட்டும் போது சரளமாக செல்போனை பயன்படுத்துவது , இலியானாவின் திருமண காட்சியை ஹிந்தி படத்தை போல வட இந்திய ஸ்டைலில் வைத்திருப்பது , என்ன தான் ஆள் மாறாட்டம் செய்திருந்தாலும் நண்பர்களை மட்டுமின்றி காதலியையும் பத்து ஆண்டுகளாய் வேறெந்த விதமான அழுத்தமான காரணமும் இல்லாமல் விஜய் பிரிந்திருப்பது , நகைச்சுவையாகவே நகர்த்திக்கொண்டு போவதால்
" 3  இடியட்ஸ் " ஏற்படுத்தியதை போன்ற சீரியஸ் பாதிப்பை ஏற்படுத்த தவறியது போன்ற சிலவற்றையும் குறைகளாக சொல்லலாம்  ...

ரீமேக் படமாக இருந்தாலும் ஷங்கரின் முந்தைய வெற்றிப்படங்களின் வசூலுக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கும் நண்பன் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரின் பார்வைக்கும் ஒரு வெற்றியாளன் ...

ஸ்கோர் கார்ட் : 45 

12 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லாயிருக்குய்யா விமர்சனம். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது
பகிர்வுக்கு நன்றி
தங்க்ளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 1

அனுஷ்யா said...

சச்சினுக்கு பிறகு நீண்டநாள் கழித்து இரசிகர் வட்டத்தை கடந்தும், ஆமிர்கானை பிரதிபலிக்க முயற்சி செய்யாமலும் விஜயாகவே விஜய்...(அவரோடு ஆடும்போதுதான் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் இத்தனை நாளாய் ஒப்பேத்தியிருக்கிறார்கள் என்பது விளங்குகிறது..) தமிழ் இரசிகர்களுக்கு இந்த size zero எல்லாம் ஒத்து வராது என்றாலும் இலியானா நல்லாவே மனசுல ஒட்டிக்கிச்சு..( 'இருக்காண்ணா' பாடலில் ஹன்சிகாவை நினைத்தால்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா )..பாடல் காட்சியமைப்பிலும்,பாத்திரங்கள் தேர்விலும் மட்டும் ஷங்கர் டச்..குறிப்பாக சத்யனும் சத்யராஜும்..( விஜயைப்போல சத்யராஜும் அவருக்கே உரிய பாணியில் செய்திருந்தால் இன்னும் இரசித்திருக்கலாம்..) ஈரம்,vtv இரண்டையும் விட மேலும் மெருகுடன் மனோஜ் பரமஹம்சா (ஊட்டி மற்றும் தனுஷ்கோடியில் உச்சமான கேமரா தாண்டவம்)
கோயம்பத்தூரில் விருமாண்டி சந்தானம் வடக்கத்திய முறையில் திருமணம் நடத்துவது, ஹிந்தியில் இருந்த ஒரு சீரியஸ் மூட் இல்லாமல் போனது,மிக முக்கியாமாக ரஹ்மான் இல்லாதது போன்ற குறைவிற்கும் குறைவான குறைகளுடன் எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் கடந்து இந்த பொங்கலுக்கு-- 'நண்பன்' iz well....

படித்துறை.கணேஷ் said...

ஷங்கர் மாதிரியான மிகச்சிறந்த படைப்பாளிக்கு ரீ-மேக் போன்ற விஷயங்கள் தேவையா? அவர் போன்றவர்கள் புதிது புதிதாக செய்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

படம் இன்னும் பார்க்கவில்லை. உங்களின் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.

"மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் ..."

நல்ல விமர்சனம்!

இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

Anonymous said...

உங்களின் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ananthu said...

ஹாலிவுட்ரசிகன் said...
நல்லாயிருக்குய்யா விமர்சனம். நன்றி.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Ramani said...
விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது
பகிர்வுக்கு நன்றி
தங்க்ளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 1

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !

ananthu said...

படித்துறை.கணேஷ் said...
ஷங்கர் மாதிரியான மிகச்சிறந்த படைப்பாளிக்கு ரீ-மேக் போன்ற விஷயங்கள் தேவையா? அவர் போன்றவர்கள் புதிது புதிதாக செய்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

நீங்கள் சொல்வது போல ஷங்கர் திறமைசாலி தான் ... ஆனால் எந்த ஒரு திறமைசாலிக்கும் ஒரு கட்டத்தில் கற்பனை வறட்சி வரும் ... அது மட்டுமல்லாமல் ஓவர் ஒரே லைனை வைத்துக்கொண்டு அவர் படத்தையே சொல்லாமல் ரீமேக் செய்வதற்கு " 3 இடியட்ஸ் " போன்ற தரமான படத்தை நன்றாக ரீமேக் செய்ததில் தப்பில்லை ! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்லாயிருக்குங்க.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
படம் இன்னும் பார்க்கவில்லை. உங்களின் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது.

"மாணவர்களை தேர்வில் வெற்றி பெற செய்தாலும் வாழ்க்கையில் தோற்கடித்து விடுகின்றன என்பதை செவிட்டில் அறைவது போல சொல்கிறது படம் ..."
நல்ல விமர்சனம்!
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...