An Exclusive Interview with Actor Arulnithi
இன்று தன் மௌனமான வெற்றியின் மூலம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்திருப்பவர் நடிகர் அருள்நிதி ... ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வரின் பேரன் , பெரிய தயாரிப்பாளரின் மகன் , முன்னணி தயாரிப்பாளர்களின் தம்பி , வெற்றி பட ஹீரோ என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் பேட்டி என்றவுடன் தன் முக்கியமான அலுவல்களுக்கிடையேயும் நமக்காக நேரம் ஒதுக்கினார் ... மூன்றாம்கோணம் தமிழ் வலைப்பத்திரிக்கையின் பொங்கல் சிறப்பு மலருக்காக கைபேசி மூலம் வெகு இயல்பாகவும் , தெளிவாகவும் முதன் முறையாக நடிகர் அருள்நிதி அளித்த பிரத்யேக பேட்டி இதோ :
அனந்து : வணக்கம் ... முதலில் என் சார்பாகவும் , மூன்றாம்கோணம் வலைபத்திரிக்கை சார்பாகவும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும், பொங்கல் நல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ...
அருள்நிதி : வணக்கம் சேம் டு யு ...
*** குழந்தைபருவம் ***
அனந்து : சின்ன வயசுல நீங்க எப்படி சார் ? மௌனகுரு மாதிரி அமைதியா ? இல்ல பயங்கர வாலா ?
அருள்நிதி : அமைதியால்லாம் இல்ல ... கொஞ்சம் வாலு தான் ... நல்லா படிக்கணும்னு பூந்தமல்லியில் இருக்கிற ஒரு ஹாஸ்டல்ல போட்டாங்க ... அங்க சிம்பு சார் கூட என் சீனியர் தான் ...
அனந்து : அப்போ பயங்கர சுட்டித்தனம் பண்ணிருப்பீங்கன்னு சொல்லுங்க !
அருள்நிதி : அதெல்லாம் இல்ல ( சிரிக்கிறார் ) ... வேற வேற க்ளாஸா இருந்ததினால ஹாய் - பாய் தான் சொல்லிக்க முடிஞ்சது ...
*** குடும்பம் ***
அனந்து : நீங்க எவ்வளவு பெரிய குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கீங்கன்னு எல்லோருக்கும் தெரியும் ... இருந்தாலும் தெரியாத சுவாரசியமான விசயங்களை தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம் !
அருள்நிதி : நான் சின்ன வயசா இருக்கும் போது எல்லாரும் தாத்தாவோட கோபாலபுரம் வீட்ல தான் கூட்டு குடும்பமா இருந்தோம் ... எனக்கு உதய் அண்ணன் தான் அப்போ ரோல் மாடல் ... அவர் என்னவாக போறாரோ அதே தான் நானும் ஆவேன்னு சொல்லுவேன் ... இப்ப கூட அவர் மாதிரியே சினிமாவுக்கும் வந்துட்டேன் ...!
*** கல்லூரி வாழ்கை ***
அனந்து : பள்ளி பருவத்துல சிம்பு உங்க சீனியர் , அதே போல விஜய் , சூர்யா படிச்ச லயோலா கல்லூரியில தான் நீங்களும் படிச்சிருக்கீங்க , அந்த அனுபவத்தை பத்தி சொல்ல முடியுமா ?
அருள்நிதி : நான் காலேஜ் முடிச்சு ஒரு தடவ ஆட்டோல போகும் போது , ஆட்டோ ஓட்டும் அண்ணன் " தம்பி இதுல விஜய் , சூர்யா லாம் வந்திருக்காங்க தெரியுமான்னு " கேட்டார் ...
அனந்து : பிற்காலத்துல நீங்களும் அவங்கள மாதிரி பெரிய ஹீரோ ஆவீங்கன்னு அவரே ஹின்ட் கொடுத்திருக்காரோ ...!
அருள்நிதி : அதெல்லாம் தெரியல ... என் குடும்ப பின்னணி அவருக்கு நல்லாவே தெரியும் ... அப்போ எனக்கு கிடைச்ச பேரு என் தாத்தாவால வந்தது..
அனந்து : பரவாயில்ல , இப்போ யாராவது அந்த ஆட்டோல போனா அருள்நிதி வந்த ஆட்டோன்னு நிச்சயம் சொல்லுவார் !
அருள்நிதி : அடடா ! ( சிரிக்கிறார் )
*** சினிமா அறிமுகம் ***
அனந்து : முதல் சினிமா அறிமுகம் ?
அருள்நிதி : எனக்கு நாலு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் , அப்போ
" அருள்நிதி கம்பைன்ஸ் " பேனர்ல எங்க அப்பா " கோபுர வாசலிலே " படத்தை தயாரிச்சார் ... படத்துல கொள்ளுபாட்டி போட்டோவுக்கு பூ போடற மாதிரி ஒரு சீன் வரும் . அதுல என்ன வலுக்கட்டாயமா பூ தூவ வச்சாங்க , ஆனா இப்போ நான் வலுக்காட்டாயமா வம்சம் படத்துல நடிக்க வந்துட்டேன் ...
அனந்து : உங்கள சின்ன வயசுல வலுக்கட்டாயமா பூ தூவ வச்சுருக்கலாம் , ஆனா மௌனகுரு வெற்றிக்கு பிறகு அடுத்த படத்துக்கு ரசிகர்கள் உங்களுக்கு பூக்கள் தூவ தயாரா இருக்காங்க !
அருள்நிதி : பூ தூவராங்களோ இல்லையோ , அவங்க ஏமாறாத மாதிரி நான் அடுத்த படம் கொடுக்கணும் , அவ்வளவு தான் ...
அனந்து : வம்சம் வாய்ப்பு எப்படி வந்தது ?
அருள்நிதி : உதய் அண்ணன் தயாரிப்புக்காக கதை கேட்டுக்குட்டு இருந்தாரு ... அப்போ பாண்டிராஜ் சார் சொன்ன கதை எனக்கு சரியான அறிமுகமா இருக்கும்னு அண்ணன் பீல் பண்ணாரு ...
அனந்து : அப்பா உடனே ஒத்துக்கிட்டாரா ?
அருள்நிதி : நீங்க வேற , என் படிப்புக்காக நிறைய புக்ஸா வாங்கி வச்சுருந்தாரு ( சிரிக்கிறார் ) , அப்புறமா அம்மா சொல்லி தான் சம்மதிச்சாரு , அவரே படத்தையும் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு ...
*** இயக்குனர்கள் ***
அனந்து : உங்களை இயக்கிய இயக்குனர்கள் பற்றி ?
அருள்நிதி : பாண்டிராஜ் சார் என்ன அறிமுகப்படுத்தி என்னால நடிக்க முடியும்னு காட்டினார் ... ரெண்டாவது படம் கமர்சியலா பண்ணேன் ... சாந்தகுமார் சார் மௌனகுரு மூலமா முழுமையான நடிகனாக எனக்குன்னு ஒரு இடத்தை ஏற்படுத்தியிருக்கார்னு சொல்லலாம் ...!
*** நடிகைகள் ***
அனந்து : மூணு படத்துலயும் சுனைனா , ப்ரனிதா , இனியா இப்படி மூணு ஹீரோயின்களோட நடிச்சுட்டீங்க ! இதுல யார் கூட நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சுன்னு நினைக்கிறீங்க ? ( மாட்டிவிட்டுட்டேனே !)
அருள்நிதி : வில்லேஜ் , சிட்டி , மிக்ஸ்ட் இப்படி மூணுமே வேற வேற களங்கள்... ஹீரோயின்களோடு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சோ இல்லையோ இயக்குனர்களோட நல்லா வொர்க் அவுட் ஆச்சு ...( தப்பிசுட்டோம்ல ! )
*** மௌனகுரு ***
அனந்து : மௌனகுரு உங்களுக்கு செட்டாகும்னு எப்படி நம்பினீங்க ?
அருள்நிதி : வம்சம் படம் பண்ணும் போதே நான் மௌனகுரு கதைய கேட்டேன், ஆனா உதயனுக்கு அப்புறம் தான் பண்ண முடிஞ்சது... பக்காவா முழு கதையையும் சாந்தகுமார் சார் சொல்லும் போதே புடிச்சது ... அப்புறமா ரஷ் பாக்கும் போதே படம் நிச்சயம் பேசப்ப்படும்னு நம்பினேன் , இவ்வளவு பெரிய வெற்றிய எதிர்பார்க்கல ! அதிலும் குறிப்பாக படம் ரிலீசான மூணாவது வாரத்துலயே நிறைய தியேட்டர்களும் , ஷோக்களும் இன்க்ரீஸ் ஆகியிருக்கரத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ...
*** மௌனகுருவின் வெற்றி ***
அனந்து : பொதுவா சினிமாவுல ஜெயிக்கறது எவ்வளவு கஷ்டமோ , அத விட அத தக்க வச்சுக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம் ... மௌனகுருவோட வெற்றிய எப்படி எடுத்துக்கிறீங்க ?
அருள்நிதி : ரொம்ப சந்தோசமா இருக்கு , அதே சமயத்துல கூடுதல் பொறுப்புணர்வோட இருக்கேன் ... பேருக்கு படம் பண்றத விட வருஷத்துக்கு ஒரு படம் பண்ணா கூட இந்த மாதிரி நல்லதா நச்னு படம் பண்ணனும்னு ரொம்ப தெளிவா இருக்கேன் ... ரிஸ்க் எடுத்தாலும் தரமான , வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் ...
*** பிடித்த காட்சிகள் ***
அனந்து : மௌனகுரு படம் பார்க்கும் போதே நிறைய காட்சிகளை இயல்பாக நம் வாழ்க்கையோடு ரிலேட் செய்ய முடிந்தது , அந்த விதத்தில் உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சிகள் ?
அருள்நிதி : படத்தோட வெற்றிக்கு அதான் காரணம் ... படம் நெடுக எனக்கு பிடிச்ச சீன்ஸ் நிறைய இருக்கு , குறிப்பா என் அம்மா என்ன தோல்ல அடிக்குற சீன் , என்ன விட்டுற மாட்டேல்ல என்று இனியாவிடம் நான் சொல்ற சீன் , ஸ்ட்ரைக் சீன் இப்படி நிறைய இடங்களில் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது ...
*** அடுத்த படம் ***
அனந்து : இப்போ உங்களோட அடுத்த படத்த பார்க்கறதுக்கு எல்லோரும் ரொம்ப ஆர்வமா இருக்கோம் ... முடிவு பண்ணிட்டீங்களா ?
அருள்நிதி : இன்னும் பேச்சுவார்த்தையில தான் இருக்கு , கூடிய சீக்கிரமே அறிவிப்பு வரும் ...
*** அரசியல் ***
அனந்து : அரசியல் சம்பந்தமான கேள்விகளை நீங்க தவிர்ப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் கேட்கிறேன் ! எதிர்காலத்துல அரசியலுக்கு வருகிற எண்ணம் இருக்கா ?
அருள்நிதி : மௌனகுரு படத்துல ஒரு சீன்ல நான் நாலு போலிஸ்காரங்க முன்னாடி முட்டி போட்டு உட்கார்ந்திருப்பேன் , அந்த மாதிரி சினிமாவுக்காக இமேஜ் பார்க்காம நடிக்கறது தான் என்னோட விருப்பம் , மத்தபடி நீங்க சொல்ற மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு இல்லை ...
*** கல்யாணம் ***
அனந்து : என்ன ஐடியால்ல இருக்கீங்க ? லவ் மேரேஜா இல்ல அரேஞ்சுடா ?
அருள்நிதி : கண்டிப்பா கல்யாணம் ஆகும் போது பத்திரிக்கை கொடுப்பேங்க ... அப்போ தெரிஞ்சுப்பீங்க !
*** நன்றி ***
அனந்து : இந்த பேட்டி மூலமாக யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா?
அருள்நிதி : மொதல்ல எங்க அப்பா அம்மாவுக்கும் , அப்புறமா உதய் அண்ணன் உட்பட என் குடும்பத்தாருக்கும் , பாண்டிராஜ் சார் , சாந்தகுமார் சார் இருவருக்கும் , ரசிகர்களுக்கும் , மௌனகுரு படத்தை பாராட்டிய அனைத்து பத்திரிக்கைகளுக்கும் , குறிப்பாக படம் ரிலீஸ் ஆன உடனே தரமான படம் என்பதை உணர்ந்து இணையதளத்தில் நல்ல படியாக விமர்சனம் செய்த உங்களை போன்ற இணையதள எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ...
அனந்து : நான் கேட்டவுடன் , எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தற்கு மிக்க நன்றி ...!
அருள்நிதி : நன்றி ...!
23 comments:
நல்லாயிருக்குங்க.
நல்லா வந்திருக்கு பேட்டி...அருள்நிதிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
பொதுவா டிவிலையோ பேப்பர்லையோ சினிமாகாரங்க பேட்டியெல்லாம் நா படிக்க மாட்டேன்...
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் படிக்கிறேன்..
நல்லா இருக்கு..
ரொம்ப நல்ல கேள்விகள், தன்னடக்கமான பதில்கள். பேட்டி என்பதை விடவும் ஒரு படி மேலே போய், ஒரு நல்ல கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்ட ஒரு உணர்வு...
பகிர்வுக்கு நன்றிகள் பல அனந்து...
- நுண்மதி
அருமையான பேட்டி..தங்களுக்கு எனது வாழ்த்துக்களோடு கூடிய நன்றிகள்.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்லாயிருக்குங்க.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
ரெவெரி said...
நல்லா வந்திருக்கு பேட்டி...அருள்நிதிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
மயிலன் said...
பொதுவா டிவிலையோ பேப்பர்லையோ சினிமாகாரங்க பேட்டியெல்லாம் நா படிக்க மாட்டேன்...
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் படிக்கிறேன்..
நல்லா இருக்கு..
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
ரொம்ப நல்ல கேள்விகள், தன்னடக்கமான பதில்கள். பேட்டி என்பதை விடவும் ஒரு படி மேலே போய், ஒரு நல்ல கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்ட ஒரு உணர்வு...
பகிர்வுக்கு நன்றிகள் பல அனந்து...
- நுண்மதி
பொதுவாக என் கவிதைக்கு மட்டும் பின்னூட்டமிடும் நீங்கள் முதன் முதலாய் இதில் பின்னூட்டம் இட்டதிற்கு மிக்க நன்றி நுண்மதி ...!
Kumaran said...
அருமையான பேட்டி..தங்களுக்கு எனது வாழ்த்துக்களோடு கூடிய நன்றிகள்.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
மௌனகுரு இன்னும் பாக்கல அனந்து.உங்க பேட்டி பாக்கணும்போல இருக்கு.தொடர்ந்து நல்ல படங்கள் தர அருள்நிதி அவர்களிடம் கேட்டுக்கொள்வோம் !
அருமைன பேட்டி நண்பரே பகிர்வுக்கு நன்றி
அருமைன பேட்டி நண்பரே பகிர்வுக்கு நன்றி
அருமை...அருமை
S.R.Seshan
Anonymous said...
அருமை...அருமை
S.R.Seshan
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி Seshan ...!
ஹேமா said...
மௌனகுரு இன்னும் பாக்கல அனந்து.உங்க பேட்டி பாக்கணும்போல இருக்கு.தொடர்ந்து நல்ல படங்கள் தர அருள்நிதி அவர்களிடம் கேட்டுக்கொள்வோம் !
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா ...!
mohandivya said...
அருமைன பேட்டி நண்பரே பகிர்வுக்கு நன்றி
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
உங்களோட கேள்விகள்,அதற்கு அருள்நிதியோட பதில்கள் எல்லாமே நன்றாக இருக்கு.நல்ல தொகுப்பு.
RAMVI said...
உங்களோட கேள்விகள்,அதற்கு அருள்நிதியோட பதில்கள் எல்லாமே நன்றாக இருக்கு.நல்ல தொகுப்பு.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
nice speech very good
my best friend mr.arulnithi ku en vaalthukkal nice speech meeting
mm said...
nice speech very good
Thanks ...
mm said...
my best friend mr.arulnithi ku en vaalthukkal nice speech meeting
Thanks ...
Post a Comment