மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும் , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும் செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு விளையாட்டு வீரனை வரிசையில் நின்று வரவேற்கிறார்கள் . இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால் நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...
கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட் மேட்சில் முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர் இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...
எளிமை , ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..
4 comments:
சிறப்பிற்கு சிறப்பு...
தமிழ் 1௦ மூலம் வாசிக்க வந்தேன்... பதிவு நன்றாக இருந்தது. சச்சினின் கடைசி உரை மிகவும் உணர்சிகரமாக இருந்தது.. எனக்கு மிகவும் பிடித்தது.. :)
திண்டுக்கல் தனபாலன் said...
சிறப்பிற்கு சிறப்பு...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Parathan Tl said...
தமிழ் 1௦ மூலம் வாசிக்க வந்தேன்... பதிவு நன்றாக இருந்தது. சச்சினின் கடைசி உரை மிகவும் உணர்சிகரமாக இருந்தது.. எனக்கு மிகவும் பிடித்தது.. :)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Post a Comment