1 November 2011

வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...

   

      ரீமேக் படங்கள் மட்டுமே இயக்கிய ராஜா , கில்லி போன்ற ரீமேக் படங்களால் உச்சத்தை எட்டிய விஜய் இருவருடனும்  இணைந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரைட்ஸ் வாங்காமல் தயாரித்திருக்கும்  ரீமேக் படமே
 " வேலாயுதம் " ... தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து கொண்டிருந்த விஜய்க்கு இந்த படம் சின்ன கமர்சியல் ப்ரேக் ...

    அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதற்கு " வேலாயுதம் " வருவான் என்று பத்திரிக்கையாளர் ஜெனிலியா கதை கட்டி விட , இதற்கிடையில் தான் உயிரையே வைத்திருக்கும் தங்கையின்  கல்யாண செலவுக்கு சீட் பணத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் உண்மையான  வேலாயுதம் விஜய் ...விஜய் அக்கிரமக்காரர்களை அழித்தாரா ? அவர் தங்கையின் கல்யாணம் நடந்ததா ? என்பதே மீதி கதை...

     பல வெற்றிப் படங்களின் சீன்களை ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி அதில் சிலவற்றை பொறுக்கி எடுத்ததே படத்தின் திரைக்கதை... விஜய்யின்  வழக்கமான பாட்டு , டான்ஸ் , பைட்டு , காமெடி , தங்கை சென்டிமென்ட் என போகிறது படம் ...
           
    விஜய் தனக்கேற்ற டெயிலர் மேட்   கதாபத்திரத்தில் ஜொலிக்கிறார் ... எண்ணை வழியும் கருப்பு முகத்தோடு சுற்றுபவர் பாடல்களில்  மட்டும் வெளுப்பாக இருக்கிறார் ... சூர்யா சிக்ஸ் பேக்கை வயிற்றில் காட்டினால் விஜய் த்ரீ பேக்கை விலா எலும்பில் காட்டி வெற்றுடம்புடன் எதிரிகளை அடிக்கிறார் ... தங்கை இறந்தவுடன் அழும் இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நடிக்கிறார் ...

     விஜய்யை சுற்றி சுற்றி வரும் அத்தை பெண்ணாக கொழுக் மொழுக் ஹன்சிகா ... ம்ம் எங்களுக்கும் தான் கிராமத்துல அத்தை பொண்ணு இருக்கு , ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க ... பாடல்களில் தொப்பையை காட்டுவதை தவிர இவருக்கு பெரிதாக வேறொரு வேலையுமில்லை ...

                                         
                                                                         
    பொதுவாக லூசு பொண்ணு போல நடிக்கும் ஜெனிலியாவுக்கு இதில் சீரியஸ் வேடம் ... அம்மணி முக பாவங்களில் ஸ்கோர் செய்கிறார் ... தங்கையாக சரண்யா பெர்பெக்ட் ... சூரி ஆரம்பித்து வைக்கும் காமெடியை சந்தானம் டேக் ஓவர் செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது...

     சில படங்களில் நிறைய வில்லன்களை வைத்து வெறுப்பேத்துவார்கள் , ஆனால் இதில் உள்துறை அமைச்சராக வரும் வில்லனே குண்டு வைப்பது , கள்ள நோட் அடிப்பது , பெண்களை கடத்துவது என்று எல்லா அக்கிரமங்களையும் செய்வதாக  காட்டி வெறுப்பேத்துகிறார்கள்...காதெல்லாம் முடி வச்சுகிட்டு , கண்ண கண்ண உருட்டிக்கிட்டு வர கார்ட்டூன் கேரக்டரை எங்கப்பா புடிச்சீங்க ?  இது பத்தாதுன்னு பாகிஸ்தானிலிருந்து வந்து  சென்னையில் குண்டு வைக்கும் டெர்ரரிஸ்ட் வில்லன் வேற ... விஜயகாந்தும் , அர்ஜுனும் படங்களில் நடிக்காததால் விஜய் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருப்பார் போல ...

    விஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன ... அதிலும் சரியான இடங்களில் பாடலை பொறுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள் ...



    பழைய காமெடி தான் என்றாலும் விஜய்யின் கோழி சேசிங் சீனில் ஆரம்பித்து சூரி , சந்தானம் உதவியில் விறுவிறுவென போகிறது முதல் பாதி படம் ... விஜய் கற்பனை வேலாயுதமாக இருந்த போது உள்ள பரபரப்பு இரண்டாவது பாதியில் உண்மையான வேலாயுதமாக மாறி பறந்து , பறந்து சண்டை போடும் போது புஸ்சென்று போய் விடுகிறது ...


     விஜய் பாணி படமென்றாலும் படம் ஆரம்பித்து பதினைத்து நிமிடங்கள் கழித்தே விஜய் வருவது ,அரைமணி நேரம் கழித்து  முதல் பாடலும் , முக்கால் மணி நேரம் கழித்தே முதல் பைட்டும் இருப்பது , விஜய் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசுவது , கடைசியில் குத்து பாடல் வைக்காமல் செண்டிமெண்ட் பாட்டு வைத்தது இப்படி சில வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார்கள் ... மற்றபடி பி ,சி சென்டர்களில் படம் ஒடுமென்றாலும் வேலாயுதத்தை நீளாயுதமாக இல்லாமல் கொஞ்சம் ட்ரிம் செய்து , புதிதாக யோசித்து விறுவிறுப்பான சீன்களை வைத்திருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய  வெற்றிப்படமாக அமைந்திருக்கும் ...  
" நண்பன் " கை கொடுப்பானா ? பொங்கலுக்கு பிறகு பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

13 comments:

Tamilthotil said...

நண்பரே நன்றாக எழுதியிருந்தீர்கள்.

அனுஷ்யா said...

மிக நேர்த்தியான விமர்சனம்..விஜயின் திறமைகள் வீணடிக்கப்பட்ட மற்றொரு குப்பையே வேலாயுதம்..ஆனால் இரசிகர்கள் இந்த தயிர்சாதத்தை சாப்பிட்டுவிட்டு "பிரியாணி சூப்பர்ல.." என்று சொல்லிக்கொள்வதே வேதனை...நண்பனும் யோகனும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

Anonymous said...

மிக அருமையான விமர்சனம்.வாழ்த்துக்கள்

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

ரைட்ஸ் வாங்கிட்டாங்க!!

ananthu said...

மயிலன் said...
மிக நேர்த்தியான விமர்சனம்..விஜயின் திறமைகள் வீணடிக்கப்பட்ட மற்றொரு குப்பையே வேலாயுதம்..ஆனால் இரசிகர்கள் இந்த தயிர்சாதத்தை சாப்பிட்டுவிட்டு "பிரியாணி சூப்பர்ல.." என்று சொல்லிக்கொள்வதே வேதனை...நண்பனும் யோகனும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

நன்றி ..விஜய் ரசிகர்கள் பசியில் இருப்பதால் பழைய சோறு கூட பிரியாணியாக தெரிகிறது போல ...

ananthu said...

ரெவெரி said...
மிக அருமையான விமர்சனம்.வாழ்த்துக்கள்

மிக்க நன்றி ...

ananthu said...

கிருபாகரன் said...
ரைட்ஸ் வாங்கிட்டாங்க!!

நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ஆசாத் என்ற தெலுங்கு படத்தின் மூலக்கதையை வாங்கியிருந்தாலும் மாற்றங்கள் செய்வதாக நினைத்து பல படங்களின் சீன்களை ரைட்ஸ் வாங்காமல் ரீமேக் செய்துவிட்டார்கள் ...ராஜா முந்தைய ரீமேக் படங்களில் முழு படத்தையும் அப்படியே தழுவியிருப்பார் ...

ராஜி said...

Thanks for good review

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

prabhu said...

mailan

ananthu said...

ராஜி said...
Thanks for good review...

Thanks...

ananthu said...

உலக சினிமா ரசிகன் said...
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

வருகைக்கு நன்றி ... நிச்சயம் உங்கள் பதிவை படிக்கிறேன் ...

ananthu said...

prabhu said...
mailan...

Thanks..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...