தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விஜய்க்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன் , வேலாயுதம் , நண்பன் வெற்றிகளை தொடர்ந்து துப்பாக்கியிலும் ;சரவெடி வெடித்திருக்கிறார். வழக்கமாக விஜய் படங்களில் வரும் பஞ்ச் வசனங்கள் , குத்துப்பாட்டு , ஏய் , ஊய் என்று கத்தும் வில்லன்கள் , டாடா சுமோவில் வரும் அடியாட்கள் இவைகளெல்லாம் இல்லாமலேயே துப்பாக்கியை நன்றாக சுட வைத்திருக்கிறார் ஏ . ஆர் .முருகதாஸ் ...
விடுமுறைக்கு தன் குடும்பத்தை பார்க்க மும்பைக்கு வரும் ஆர்மி மேன் ஜகதீஷ் ( விஜய் ) அங்கு தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிருப்பதை அறிகிறார் . தன் விடுமுறை முடிவதற்குள் குண்டுவெடிப்புகளையும் , அதற்கு காரணமானவனையும் எப்படி அழிக்கிறார் என்பதே கதை . ஆக்சனுக்கு நடுவில் அவ்வப்போது விஜய் ரிலாக்ஸ் செய்வதற்காக நிஷாவை ( காஜல் அகர்வால் ) லவ்வுகிறார் கம் கவ்வுகிறார் ...
ஆக்சன படத்தில் விஜய் அடக்கி வாசித்திருப்பது தான் புதுசே ஒழிய குறுந்தாடி தவிர கெட்டப்பில் விஜய்க்கு நோ சேன்ச். படம் முழுவதும் விஜய் துறுதுறுப்பாக இருப்பது பெரிய ப்ளஷ் . படத்தின் ஆரம்பத்திலும் , முடிவிலும் மட்டுமே ராணுவ உடையில் வந்து விஜய் நம்மை பெருமூச்சு விடவைத்திருப்பது மிகப்பெரிய ப்ளஷ் . மனிதர் ஆட்டம் , பாட்டத்தோடு ஹிந்தி , ஆங்கிலம் என்று மற்ற மொழிகளிலும் பேசி புகுந்து விளையாடியிருக்கிறார் .
விஜயுடன் சேர்த்து ரசிகர்களையும் ரிலாக்ஸ் ! செய்வதாய் நினைத்து கடுப்பேற்றுகிறார் மணிபர்ஸ் உதட்டழகி காஜல் அகர்வால் . கலகலவென்று அறிமுகம் ஆகும் காஜல் கேரக்டர் அதை தக்கவைத்துக் கொள்ளாமல் போனது அவர் குற்றமல்ல . படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் போல இவர் வந்து போவது பெரிய குறை ...நண்பனில் கலக்கிய சத்யனுக்கு இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார் . பில்லா 2 வில் அஜித்திடம் அடி வாங்கிய வில்லன் வித்யுத் இதில் விஜயிடம் அடி வாங்குகிறார் அவ்வளவே . ஜெயராம் கொஞ்சம் அறுத்தாலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ...
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை . எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம் , இயக்குனரின் விருப்பப்படி விட்டுவிட்டார் போல . ஹாரிஸ் " அண்டார்டிகா " , " கூகிள் " போன்ற தன் டெம்ப்ளேட் பாடல்களால் தாளம் போட வைக்கிறார் . மற்ற பாடல்கள் படத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல சலிப்பை தருகின்றன . பின்னணி இசைக்காக கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார் என்று சொல்லலாம் ...
சாதாரணமான கதைக்கருவை சுவாரசியமாக்கும் திரைக்கதை , ரமணா , ஏழாம் அறிவு போல நீள , நீளமாக இல்லாமல் தேசப்பற்றை சுருக்கென்று ஏற்றும் பளிச் வசனங்கள் , எதிர்பாரா நேரத்தில் வைக்கப்படும் ட்விஸ்ட் , அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் போன்றவை துப்பாக்கியை தூள்பாக்கி என்று சொல்ல வைக்கின்றன .
செல்போன் டவரை வைத்தே விஜய் எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனும்போது அதை விட்டுவிட்டு வில்லன் விஜயை தேடி அலைவது திரைக்கதைக்கு உதவியிருந்தாலும் லாஜிக்கை பொறுத்தவரை பெரிய சொதப்பல் . படத்தின் நீளம் , விஜய் - காஜல் காதல் காட்சிகள் , " நம்ம பயலுக அமெரிக்காவே போனாலும் அண்ட்ராயர் தான் போடுவாங்க்ய " என்பது போல விஜய் - வித்யுத் இருவருக்குமிடையே நடக்கும் ஒண்டிக்கு ஒண்டி க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ( அதிலும் சண்டை என்ற பெயரில் விஜய் டான்ஸ் ஸ்டெப்ஸ் போடுவதெல்லாம் ஓவர் ) போன்ற குறைகள் துப்பாக்கியை தப்பாக்குகின்றன .
" ஒன் மேன் ஆர்மி " யாக விஜய் சுற்றி வந்தாலும் அவரை அன்டர்ப்ளே செய்யவிட்டு அனைவரையும் ரசிக்க வைத்த விதத்திலும் , மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தால் தன் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி ஹீரோக்கள் ரீச் ஆக முடியும் என்பதை நிரூபித்த விதத்திலும் ஏ . ஆர் . முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி - ஏ .ஆர் . 47...
ஸ்கோர் கார்ட் : 43
12 comments:
அப்படியெனில் படம் நன்றாக ஓடும். பரவாயில்லை இந்த வருட பெரிய படங்கள் வரிசையில் துப்பாக்கியாவது காபாத்தியதே....
அப்படியெனில் படம் நன்றாக ஓடும். பரவாயில்லை இந்த வருட பெரிய படங்கள் வரிசையில் துப்பாக்கியாவது காபாத்தியதே....
இந்த வருடத்தில் நண்பன் , பில்லா 2 இரண்டையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் ...
செம ஹிட்...
நீங்கள் சொன்னது போல் இயக்குனரிடம் முழுமையாக ஒப்படைத்தவர்களின் படங்கள் எல்லாம் ஹிட் தான்... (சில படங்களைத் தவிர...)
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
Billa 2 failed film
திண்டுக்கல் தனபாலன் said...
செம ஹிட்...
நீங்கள் சொன்னது போல் இயக்குனரிடம் முழுமையாக ஒப்படைத்தவர்களின் படங்கள் எல்லாம் ஹிட் தான்... (சில படங்களைத் தவிர...)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !
தொழிற்களம் குழு said...
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !
தினபதிவு said...
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !
அருள் said...
நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா? இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்?
"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!"
http://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !
Shajan said...
Billa 2 failed film
So called failed film collected more than 100 crores in the 1st week itself ...
Post a Comment