நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்து விட்டு தீபாவளிக்கு வந்திருந்தாலும் விடிவி க்கு பிறகு விரல்வித்தைகள் காட்டாத சிம்புவை ரசிக்க வைத்திருக்கும் படம் போடா போடி . சிம்பு - வரலக்ஷ்மி ஜோடி படத்தின் பல குறைகளை மறக்கடிக்க வைத்திருப்பது உண்மை . பெரிதாக எதையும் யோசிக்காமல் வெவ்வேறு மனநிலைகள் கொண்ட இருவரின் வாழ்க்கையை மட்டும் பொழுதுபோக்காக மெச்சூரிட்டியுடன் பதிவு செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் ...
லண்டனில் வசித்தாலும் கலாச்சார ரீதியாக அந்த வாழ்க்கையோடு ஒத்துப்போகாத அர்ஜுன் ( சிம்பு ), அதே கலாச்சாரத்தில் ஊறிப்போன நிஷா
( வரலக்ஷ்மி ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் , பின்பு ஒத்துவராமல் பிரிகிறார்கள் , கடைசியில் புரிந்து கொண்டு சேர்கிறார்கள் . இந்த ஒன் லைனை கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் சுவைபட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...
சிம்புவிற்கு இது அல்டிமேட் கேரக்டர் . படம் முழுவதும் வரலக்ஷ்மியையும் வைத்துக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் . ஆட்டம் , பாட்டத்தோடு சேர்த்து குழந்தை மேலிருக்கும் அன்பை சொல்லி அழும் இடத்தில் தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார் . தன் பழைய படங்களை மேற்கோள் காட்டி சிம்பு பேசுவதை தவிர்த்திருந்தால் அவருடைய கேரக்டர் இன்னும் யதார்த்தமாக மனதில் பதிந்திருக்கும் ...
வரலட்சுமிக்கு இது முதல் படம் போல தெரியவில்லை , அந்த அளவிற்கு தன் மொத்த திறமையையும் காட்டி ( நடிப்ப மட்டும் தாங்க சொன்னேன் ! ) நடித்திருக்கிறார் . தயாரிப்பாளரின் பணப்பற்றாக்குறை வரு அணிந்திருக்கும் உடைகளில் நன்றாகவே தெரிகிறது. அம்மணி முக்கால்வாசி படத்தில் வெறும் குட்டி டவுசருடன் தான் வருகிறார் . படம் பல வருடங்கள் தயாரிப்பில் இருந்ததும் வருவின் உடல் எடையில் கூடுதலாகவே தெரிகிறது...
சிம்பு - கணேஷ் காம்பினேஷன் இந்த படத்திலும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . கணேஷ் பேசும் போதெல்லாம் கைதட்டுகிறார்கள் ... ஷோபனாவிற்கு கண்ணை உருட்டுவதை தவிர பெரிதாய் வேலையில்லை . இவர் கேரக்டரில் பெரிய அழுத்தமுமில்லை ... தரன் இசையில் " லவ் பண்லாம " , " அப்பன்மவனே " பாடல்கள் அருமை . ஆனால் அடிக்கொரு தடவை பாட்டை போடுவதை தவிர்த்திருக்கலாம் .
லண்டனில் வளர்ந்த பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு தமிழ்ப்பொண்ணு இப்படித்தான் இருக்கணும் என்றெல்லாம் ஓவர் வசனம் பேசும் இடத்தில் சிம்பு கேரக்டர், மனதில் ஒட்டாத வருவின் சல்சா நடனம் மற்றும் அந்த போட்டியில் ஜெயிப்பதற்காக இருவரும் எடுக்கும் முயற்சி , ரசிக்க வைத்தாலும் அளவுக்கு மீறிய அடல்ஸ் ஒன்லி மேட்டர்ஸ் , அனைத்து தரப்பினரையும் கவராமல் போகும் கதைக்களம் போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் திருமணம் பற்றிய அட்வைஸ் எல்லாம் செய்யாமல் இருவரை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு ஒரு லவ் ஸ்டோரியை லைவாக போரடிக்காமல் சொன்ன விதத்திற்காகவே படத்தை பார்க்கலாம் .
எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக பார்த்தால் போகிற போக்கில் தெளிக்கப்படும் கா(ம)மெடிகளை நிறையவே ரசிக்கலாம் . படத்தை கால தாமதம் இல்லாமல் ரிலீஸ் செய்து , ஒஸ்திக்கு கொடுத்த ஓவர் பில்ட் அப்பில் பாதியையாவது கொடுத்து ப்ரமோ செய்திருந்தால் படம் நிச்சயம் சிம்புவின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் ...
ஸ்கோர் கார்ட் : 41
4 comments:
Good
41 மிகவும் அதிகம்...
kaliyukam said...
Good
நன்றி ...!
தொழிற்களம் குழு said...
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
http://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
நன்றி ...!
Post a Comment