21 November 2012

அஜ்மல் கசாப் கதம் கதம் ...


26/11/2008 ஆம் ஆண்டு மும்பையில்  நடந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது . பல இந்தியர்களின் உயிரை குடித்த அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவனான  அஜ்மல் கசாப் அதே நவம்பர் மாதமான இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான் ...

நம் நாட்டிற்க்கு எதிராக தீவிரவாதம் செய்த அயல் நாட்டவனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு  வருடங்கள் பிடித்திருக்கின்றன . அவன் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட பல கோடிகள் இனி அரசாங்கத்திற்கு மிச்சம் . கசாப்பின் தூக்கு தண்டனைக்கு எதிரான  கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து தண்டனையை சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது அரசு . அரசாங்கம் செய்த துணிச்சலான , மிக உருப்படியான காரியங்களுள் இது ஒன்று என அடித்து சொல்லலாம் ...

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துடையவர்கள் கூட  இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் மரண தண்டனையை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் . இந்த மரண தண்டனையால் இறந்தவர்கள் திரும்ப உயிருடன் வந்து விடுவார்களா என்றோ தீவிரவாதத்தை முற்றிலும்  ஒழித்து விட முடியுமா என்றோ கேள்வி கேட்கும் அறிவாளிகள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும் . போன உயிர் திரும்ப வராது தான் , ஆனால் இனிமேலும் உயிர்கள் போகாமல் தடுக்கலாம் . தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இது முடிவல்ல ஆரம்பமே ...

2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் தான் அங்கு அதன் பிறகு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் . நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோ  அல்லது  அதில் சம்பந்தப்பட்டவர்களை ஜாதி , இன , மதங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பதோ மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு சமம் ...

அஜ்மல் கசாப் ஒருவனை தூக்கில் போட்டதோடு நின்று விடாமல் அப்சல் குரு உட்பட இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றி   , நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்து மக்களை காப்பதிலும் அரசாங்கம் தன் கடமையை செவ்வென செய்யும் என அனைவரும் நம்புவோம் ...


9 comments:

Think Tank said...

அஜ்மல் கசாப் யார்? அவன் பாகிஸ்தான் கைக்கூ-யா? அல்லது இந்திய உளவுத்துறையின் தயாரிப்பா? இரண்டாவது கேள்விக்கு அர்த்தம் இருக்கிறது. ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அஜ்மல் கசாப் கைதியாக இருந்தான். அப்போது இந்திய உளவுத்துறைக்கும் அவனுக்கும் இடையிலே நெருக்கம் ஏற்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். அஜ்மலை இந்திய உளவுத்துறை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விக்கு விடை விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.
இதுபோன்ற பல கேள்விகள் அவனது மரண தண்டனையோடு முடிந்துவிட்டது.
அஜ்மல் கசாப் அப்பாவி மக்களைக் கொன்ற கொலைகாரன். அவன் ஒரு குற்றவாளி. ஆனால் அவன் மட்டுமே குற்றவாளி அல்ல. அவனுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ஏன் மூடி மறைக்கப்பட்டன?
சரி, 166 பேரைக் கொன்ற அஜ்மல் கசாபுக்கு தூக்கு! ஒரிஸ்ஸாவில் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களையும், அவரது இரு மகன்களையும் உயிரோடு தீவைத்துக் கொளுத்திய பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாராசிங்கிற்கு என்ன வகை தண்டனை?
பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஹரியானாவில் 6 த-த்துகளைக் கொன்ற உயர்சாதி தீவிரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?
மண்டல் கமிஷனுக்கு எதிராகப் போராடிய உயர் சாதியினர் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் மீது மண்ணெண்ணெயைக் கொட்டி எரித்துவிட்டு அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீக்குளித்துள்ளார்கள் என்று பரப்புரை செய்த பயங்கரவாதிகளுக்கு என்ன வகை தண்டனை?
பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு, மும்பையில் 2 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு, குஜராத்தில் 3 ஆயிரம் இந்தியர்களைக் கொன்றவர்களுக்கு, இந்திரா காந்தியின் கொலைக்கு பதிலடியாக 3 ஆயிரம் சீக்கியர்களைக் கொன்றவர்களுக்கு என இதுபோன்ற பயங்கரவாதங்களைச் செய்தவர்களுக்கு என்ன வகை தண்டனைகள் வழங்கப் போகிறார்கள் நீதிமான்கள்?
பயங்கரவாதத்திற்கு, பயங்கரவாதிகளுக்கு சாதி மதம் இனம் மொழி என வரையறை இல்லை. அவர்கள் குற்றவாளிகளே. பயங்கரவாதத்தை உறுதியாக, உளப்பூர்வமாக எதிர்க்கிறோம். அதுபோல் ஆளுக்கொரு நீதி என்பதையும் எதிர்க்கிறோம்.

Think Tank said...

மும்பையில் 2008 நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குத-ல் 166 பேர் கொல்லப்பட்டனர். அதில் காவி தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய தீவிரவாத தடுப்பு படையின் அதிகாரி "தியாகி' ஹேமந்த் கர்கரேயை இத்தாக்குத-ன் பரபரப்புக்கு மத்தியில் "காவி ஆதரவு உளவாளிகள்' சுட்டுக் கொன்றதும் அப்போதுதான்! வழக்கம்போல் பழி தீவிரவாதிகளின் மீது போடப்பட்டு "அபிநவ் பாரத்'தின் எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்பையை நிலைகுலைய வைத்த அந்நிய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டான். அவனது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் இன்று புனே சிறையில் அவசர அவசரமாக கசாப் தூக்கி-டப்பட்டிருக்கிறான்.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மொத்தப் பிரச்சனைகளும் பின்னுக்குத் தளளப்பட்டு இதுதான் பேசப்படும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் அமளி மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றி-ருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை மாற்றியிருக்கிறது. இதுதான் அஜ்மல் கசாப் அவசர அவசரமாக தூக்கி-டப்படுவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்.

Think Tank said...

எதிர்பார்த்தபடி பாஜக வரவேற்றிருக்கிறது. மேலும், பால்தாக்கரேயின் மரணத்தால் அவர்களின் வட்டாரத்தின் மீது உருவாகி இருக்கும் அனுதாப அலையையும் தகர்த்திருக்கிறது காங்கிரஸ். இது சிவசேனா, பாஜகவுக்குப் புரியவில்லை. காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு ஐ.பி. என்ற உளவு அமைப்பின் மூளை உதவியிருக்கிறது.
அதிரடியாய், ரகசியமாய் அஜ்மல் கசாபை தூக்கி-ட்டது போல் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரையோ, அல்லது அப்பாவி அப்சல் குருவையோ இப்படி செய்துவிட முடியாது என்பது அதிகார வர்க்கத்திற்குத் தெரியும். தமிழ்நாடும் காஷ்மீரும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் புரியும். அது ஒருபுறம் இருக்கட்டும்.
நீதிமன்றங்களில் அரசியல் குறுக்கீடும் லஞ்சமும் தலைவிரித்தாடும் இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனை முறையை ஏற்கலாமா? என்ற வாதம் ஒருபுறம் வலுவடைந்து வரும் நிலையில், சில விவாதங்கள் எழுந்துள்ளன.

Padman said...

நண்பர் திங் டேங், செப்டிக் டேங் நாறுவது போல் கருத்து கூறியிருக்கிறார். பல பேரை படுகொலை செய்த தீவிரவாதி சட்டப்படி மரணதண்டனைக்கு ஆளாகி இருக்கிறான். அவ்வளவுதான். இதற்கு மதச் சாயம், அரசியல் சாயம் எல்லாமும் பூசி அவர் அலசுவது ஏன்? அவருக்கு எதனால் எரிகிறது? அதிலும் அப்பாவி அப்சல் குருவாம். இவரே தீர்ப்பு வழங்கிவிட்டார். புத்திசாலித்தனமாகப் பேசுவதாய் நினைத்து ராஜீவ் கொலையாளிகளையும் சுட்டிக்காட்டி தமிழர்களின் ஆதரவைத் திரட்டப் பார்க்கிறாராம். வீணாய்ப்போன ராஜீவ் கொலையால்தானே இலங்கைத் தமிழர்களுக்கு இந்த இழிநிலை? அதனால்தானே இலங்கையில் ஊழிக்கூத்து நடந்தபோதுகூட தாய்நாட்டுத் தமிழர்கள் வாளாவிருந்தார்கள்? அது இருக்கட்டும். இவர் சொன்ன மற்ற வகை தீவிரவாதிகளும் மரண தண்டனைக்கு உரியவர்களே! காந்திஜியைக் கொன்ற கோட்சேயை தேசப் பிரிவினை பயங்கரங்களைக் காரணம் கூறி மரணதண்டனையில் இருந்து விடுவித்தார்களா? அல்லது அவ்வாறு விடுவிக்க வேண்டும் என்று பெரும்பான்மையினர் கேட்டார்களா? சொந்த நாட்டுக்காரனையே தூக்கில் போட்ட பிறகு அயல்நாட்டு பயங்கரவாதிக்கு ஏனிந்த ஆராதனை? மேலும் சாதி சமயக் கலவரங்களையும், தீவிரவாதச் செயல்களையும் பிரித்துப் பார்க்கவேண்டும், இரண்டும் கண்டனத்துக்கும், தண்டனைக்கும் உரியவையே என்றபோதிலும். அதேநேரத்தில் ஒரு கும்பல் ஆத்திரத்தில் செய்யும் கொலைகளையும், ஒரு குழு திட்டமிட்டு படுகொலை நிகழ்த்துவதையும் ஒப்பிடுவது அறிவுடையோர் செயலா? அன்று. அறிவை வைத்துக்கொண்டு அழிவை விதைக்கும் தீயோர்கள் செயல். மரண தண்டனையே கூடாது என்பது மடமையின் உச்சகட்டம். அப்பாவிகள் பலருக்கு எவ்வித முகாந்திரமுமின்றி மரணத்தைக் கொடுத்த தீவிரவாதிகளுக்கு அனைத்துவித ஆதாரங்களுடன், வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, சட்ட ரீதியில் மரண தண்டனையை நிறைவேற்றியதில் என்ன தவறு?

Aathiga Tamilan said...

Deepavali valthukkal. :-)

ananthu said...

திங் டேங் நான் சொல்ல நினைத்த சில பதில்களை அனந்த பத்மநாபன் அவர்களே சொல்லிவிட்டார் . மற்றபடி கசாப் தூக்கில் அரசியல் இல்லை , அதில் தேவையில்லாமல் மதத்தை புகுத்தும் உங்கள் எழுத்தில் தான் அரசியல் இருக்கிறது . நீங்கள் சொல்லும் எல்லா குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு , அவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்குமானால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. மற்றபடி கசாப் தூக்கில் அரசியல் இல்லை , அதில் தேவையில்லாமல் மதத்தை புகுத்தும் உங்கள் எழுத்தில் தான் அரசியல் இருக்கிறது .உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

ananthu said...

நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள் . உங்களின் பதில்களில் ஆழ்ந்த அரசியல் ஞானம் தெரிகிறது . உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி பத்மன்... !

ananthu said...

Aathiga Tamilan said...
Deepavali valthukkal. :-)


உங்கள் தீபாவளி வாழ்த்துக்களின் சூட்சுமம் புரிகிறது . தீபாவளி வாழ்த்துக்கள் ...!

ananthu said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/

உங்கள் தீபாவளி வாழ்த்துக்களின் சூட்சுமம் புரிகிறது . தீபாவளி வாழ்த்துக்கள் ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...