8 June 2013

மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ...


2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவாரா  என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று கோவாவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்ககுகிறது . ஏற்கனவே  2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? என்கிற பதிவில் மோடி பிரதமராவதற்கான  வாய்ப்புகளை அலசிவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் கட்சியினரின் அலை மோடிக்கு சாதகமாக இருந்தாலும் பி.ஜே.பி யில் பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த அத்வானி , ராஜ்நாத் சிங் , அருண் ஜெட்லி போன்ற மற்ற தலைவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் குறிப்பாக வாஜ்பாய் அரசில் துணை பிரதமாராகவும் , உடல்நிலை காரணமாக வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் அத்வானியின் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது . இவர்கள்  இருவருக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை மீடியாக்கள் ஊதி பெரிதுபடுத்தினாலும் அதை முற்றிலும் ஒதுக்கி விட முடியாது ...

உடல்நிலை சரியில்லாததால் அத்வானி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மோடி , அத்வானி இருவருக்கும் மிக நெருக்கமான உமா பாரதிக்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்டதாகவும் , அதனால் அவரும் கூட்ட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன . மற்ற கட்சிகள் போல இல்லாமல் உண்மையிலேயே ஜனநாயக ரீதியில் இயங்கும் பி.ஜே.பி யை  பொறுத்தவரை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவு இருந்தாலும் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்ட பிறகே அவரை பிரதம வேட்பாளராக அறிவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ...


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் இடைத்தேர்தலில் 2 பாராளுமன்ற மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரசிடமிருந்து மோடி தலைமையிலான பி.ஜே.பி கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . அதே போல பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மோடியை எதிர்த்து வரும் நிதிஷ் குமாரின் நிலைப்பாடில் மாற்றம் அவசியம் என்பதும் ஊர்ஜிதமாகிறது . மோடிக்கு இந்த அளவு செல்வாக்கு வளராமல் இருந்திருந்தால் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்த அத்வானி யின் பெயர் பிரதமர் பதவிக்கு இப்பொழுது ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் . அத்வானிக்கு இதில் மனஸ்தாபம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ...

கட்சியின் சீனியர் என்ற முறையிலும் , தகுதியின்  அடிப்படையிலும் மோடிக்கு அத்வானி சளைத்தவரில்லை என்ற போதிலும் இப்போழுதுள்ள சூழ்நிலையில் மோடி காலத்தின் கட்டாயம் . சுயநலமில்லாமல் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அத்வானி இந்த உண்மையை புரிந்து கொண்டு மோடிக்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம் . பொதுவாக அதிக திறமை வாய்ந்தவர்கள் ஒருமித்த முடிவை உடனடியாக எடுக்க முடியாது என்பார்கள் . ஒருவர் கட்டளையிட மற்றவர்கள் அடிபணியும் வழக்கத்திற்கு மாறாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் எல்லா விதத்திலும் பிரதமர் பதிவிக்கு தகுதி வாய்ந்த மோடி முன்னிறுத்தப்படுவாரா என்கிற மக்களின் கேள்விக்கு தாமதிக்காமல் இந்த தேசிய செயற்குழு கூட்டம் முடிவதற்குள்ளாகவே பி.ஜே.பி அறிவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம் ...


2 comments:

Anonymous said...

இன்றைக்கு ஒரு ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரின் பதிவில் கண்டது:
அர்ஜுன் சர்பத் மோடிக்கு கடிதம் எழுதினாராம் அதில் மோடியை தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்க சொல்லி கடிதம் எழுதி இருக்காராம்..

அரவுசருங்களா ஓடாத சைக்கிள வாங்குறதுக்கு மோடி என்ன உங்கள போல முழு லூசா? அவர் என்னைக்குமே முக்கா லூசு தான்யா... குஜராத்த தாண்டி ஒரு அடி தடிக்கி விழுந்தாலும் மோடிமஸ்தானுக்கு ஒரு ஓட்டு விழாது.. அது அந்த கேடிக்கும் தெரியும்.. ஆனால் இது அர்ஜுன் சர்பத்க்கு தெரியாமல் போனது வேடிக்கை தான்

ananthu said...

Anonymous said...
இன்றைக்கு ஒரு ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரின் பதிவில் கண்டது:
அர்ஜுன் சர்பத் மோடிக்கு கடிதம் எழுதினாராம் அதில் மோடியை தமிழ்நாட்டில் அதுவும் கோவையில் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்க சொல்லி கடிதம் எழுதி இருக்காராம்..அரவுசருங்களா ஓடாத சைக்கிள வாங்குறதுக்கு மோடி என்ன உங்கள போல முழு லூசா? அவர் என்னைக்குமே முக்கா லூசு தான்யா... குஜராத்த தாண்டி ஒரு அடி தடிக்கி விழுந்தாலும் மோடிமஸ்தானுக்கு ஒரு ஓட்டு விழாது.. அது அந்த கேடிக்கும் தெரியும்.. ஆனால் இது அர்ஜுன் சர்பத்க்கு தெரியாமல் போனது வேடிக்கை தான்

உங்களின் கருத்துரையிலேயே மோடியின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சி நன்றாக தெரிகிறது . பல நியாயமார்கள் இப்படிதான் இந்தியா முன்னேறிவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் . என்ன செய்ய ? ! ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...