8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


5 comments:

ராஜ் said...

ஆனந்து,
சர்க்கார் படத்தோட ஆரம்பத்துல "இந்த படம் காட் பாதர்ரை தழுவி எடுக்க பட்டுள்ளதுன்னு" ராம் போட்டாரு. ரீமேக் ரைட்ஸ் காசு குடுத்து வாங்கினாரா இல்லையான்னு தெரியல. எனக்கு என்னமோ இது பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்ட மாதிரி தான் தெரியுது. வேந்தர் மூவீஸ்ல இது அவங்களுக்கு நாளாவது படம், மாணவர் படை பிரச்சனை பண்ணனுமுன்னு இருந்தா மித்த படத்துக்கு பண்ணி இருக்கலாம். அப்ப விட்டுட்டு இப்ப பண்ணுறது காமெடியா இருக்கு.

raamraam said...

NAATTULA EVVAlaVO PRACHCHINAI IRUkkA IDHU THEVAIYAA?

ananthu said...

எனக்கும் அதே எண்ணம் தான் ராஜ் . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

raamraam said...
NAATTULA EVVAlaVO PRACHCHINAI IRUkkA IDHU THEVAIYAA?
Sunday, August 11, 2013

Thanks ...

Vignesh Selvam said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...