8 July 2010

இராவணன் விமர்சனம்

                  
      இராவணன் பெயரிலியே இராமாயண கதை தான் என்றாலும் மணி படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன். மகாபாரதத்தில் இருந்து தளபதி, சத்யவான் சாவித்திரியில் இருந்து ரோஜா என எடுத்திருந்தாலும் அவர் சொன்ன விதத்தில் நேர்த்தியும் , தரமும் இருக்கும் . ஆனால் மற்றபடங்களை போல இல்லாமல் இதில் நேரடியாக கதை சொல்வதில் சுவாரசியம் குறைகிறது ...

      படத்தின் முதல் காட்சியிலயே   தேவ் ( பிரிதிவிராஜ் ) மனைவி ராகினியை ( ஐஸ்வர்யா  ராய் ) வீரா ( விக்ரம் ) கடத்தி விடுகிறார் . விறுவிறுப்பாக ஆரம்பம் ஆகும் படம் சிறிது நேரத்திலயே மந்தம் ஆகி விடுகிறது ... எஸ்பி தேவை பழி தீர்க்க அவர் மனைவியை கடத்தும் விக்ரம் அவள் அழகில் மயங்குவது அமெச்சூர் தனம்....

     வழக்கம் போல விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தும் அவர் பாத்திர படைப்பு நன்றாக இல்லை... படம் முழுவதும் ஐஸ்வர்யா   ராய் குழப்பமாக இருக்கிறார் அவர் கேரக்டர்  போல... நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் கச்சிதம்... பிரபு, பிரிதிவிராஜ் , ப்ரியாமணி அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்....

     படப்பிடிப்பு  தளமும் அதை படம் பிடித்த விதமும் அற்புதம் . கிளைமாக்ஸ் சண்டை மனதில் நிற்கிறது.. . இசைப்புயல் பின்னணி இசையில் ஏமாற்றி விட்டார்... வசனமும் கிளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் மேம்போக்காக இருக்கிறது....

     கார்த்திக்கை அனுமார் போல மரத்திற்கு மரம் தாவ விட்டதை தவிர்த்திருக்கலாம் . முன்னா விபீஷணன் போல தூது போகிறார். பிரபு கும்பகர்ணன் ப்ரியாமணி சூர்பனகை என நான் சொல்ல தேவை இல்லை...நேர்த்தியாக எடுத்திருந்தாலும் பழக்கப்பட்ட கதை என்பதால் சலிப்பு தட்டுகிறது....

     வழக்கமாக மணி படத்தில் வரும் துறுதுறுப்பான காட்சிகள் இதில் இல்லாதது ஏமாற்றம். காட்சிகளில் போதுமான ஆளுமையும்  , ஆழமும் இல்லை... இராமாயண கதையை புது கோணத்தில் பார்த்திருந்தாலும் புதுமையாக எடுக்காததால் படம் மனதில் பதியவில்லை...எவ்வளவு குறை இருந்தாலும்    டெக்னிகல் விசயங்களில்   மணி படம் ஒரு அனுபவம் என்பதை மறுப்பதற்கு இல்லை .அனந்து,ராவணன்,விக்ரம்,

1 comment:

Cinema Virumbi said...

Dear Ananthu,

Pl. flip thro' my 'Raavan' ( Hindi) movie review in Tamil.

http://cinemavirumbi.blogspot.com

Bye!

Cinema Virumbi

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...