கடந்த இருபது ஆண்டு கால கழக ஆட்சியில் எது நடந்ததோ இல்லையோ எதிர் கட்சியினரை கைது செய்வது என்பது வழக்கமாக நடந்தேறி வருகிறது ... இருவரில் எவர் இதை முதலில் ஆரம்பித்திருந்தாலும் புரையோடிவிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை இனி யாரும் கலைப்பது கடினம்...
இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம்,ஒழுங்கை நிலை நாட்டுவதே முதல் இலக்கு என்று சொன்ன முதல்வர் அதை செய்தும் காட்டி வருகிறார்..இது வரை 50க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் நில அபகரிப்பு வழக்குகளிலும்,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்..
சாதாரண நிர்வாகிகளில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் , அன்பழகன் போன்ற பெருந்தலைகள் வரை யாரையும் காவல் துறை விட்டு வைக்கவில்லை..தேசிய மனித உரிமை கழகத்திடம் தி,மு.க வினர் நேரில் சென்று முறையிடும் அளவிற்கு விஷயம் முற்றி விட்டது...
சொத்து குவிப்பு, டான்சி உட்பட இருபத்தியேழு வழக்குகள் தி.மு.க வின் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்டன..ஆனால் அதில் ஒன்றை தவிர மற்ற வழக்குகளில் இருந்து கோர்ட் அவரை விடுவித்தது..இவையெல்லாம் அப்போது எந்த வித ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டவையா ? அப்படியென்றால் அது பழி வாங்கும் நடவடிக்கை இல்லையா ?..இந்த கேள்விகளுக்கு தி.மு.க விடம் பதில் இல்லை...
செஸ் விளையாட்டில் முதலில் சிப்பாய்,மந்திரி,ராணி என ஒவ்வொன்றாய் அடித்து விட்டு கடைசியில் ராஜாவிற்கு வருவார்கள்..காங்கிரஸின் கைங்கைர்யத்தால் முதலில் ராஜாவே கைது செய்யப்பட்ட பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார்...தி.மு.கவும் தேர்தல் கூட்டணி என்று சொல்லி சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டது ....
ஒரு பக்கம் எல்லோரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலினோ "ஏய் நானும் ஜெயிலுக்கு போறேன், எல்லோரும் நல்லா பாத்துங்குங்க,நானும் ரவுடி தான் ரவுடி தான்" என்று "தலைநகரம்" வடிவேலு பாணியில் கலைவாணனை கைது செய்வதற்கு முன்னாள் தானாகவே வலிய வந்து வேனுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார் ..
பொதுவாக பேரணி என்றாலே சலசலக்கும் மதுரை மு.க.அழகிரியின் வலது,இடதுகளான அட்டாக் பாண்டி,பொட்டு சுரேஷ் இவர்களின் கைதால்
வெலவெலத்துப் போனது...பேரணியில் கூடிய சிலரும் காவல்துறையினரை பார்த்ததும் "ஏய் ..கை முறுக்கு, சுண்டல் " என்று கூவி விட்டு பேருந்துகளை நோக்கி விரைந்ததாக ஒரு நம்பத்தகுந்த தகவல்...
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித இரண்டாம் யோசனைக்கும் இடமே இல்லை..அதிலும் குறிப்பாக இப்போது கைது செய்யப்பட்டு வரும் பெரும்பாலானோர் மக்களுக்கு சேவைகள் மட்டுமே புரிந்த தியாகிகளும் அல்ல...
கட்டப் பஞ்சாயத்து, காவல் துறையின் செயல்பாட்டில் தலையீடு போன்ற செயல்களில் ஈடுபடும் ஆளும்கட்சியினருக்கும் முதல்வர் எச்சரிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான ஆரம்பம்..
தி.மு.கவினர் கைது பழி வாங்கும் படலமா? பதர் அறுக்கும் வைபவமா? எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்களின் மீது எந்த வித கட்சி பேதமுமின்றி காவல் துறை நடவடிக்கை வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ....
5 comments:
நல்ல பதிவு.
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
Reverie said...
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
தி.மு.க வினர் கைது பழியே!!
வசந்தி முருகன் said...
தி.மு.க வினர் கைது பழியே!!
நன்றி... !
Post a Comment