14 November 2011

நூறாவது நூறு ...

                      
    நம் நாட்டில் எவ்வளவோ மதங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை தங்கள் மதமாகவும் , சச்சினை அதன் கடவுளாகவும் வழிபடும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் ...

    சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதலே சாதாரணமான இந்தய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை  அசாதரணமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது ... அதிலும் கடந்த முதல் டெஸ்டில் சச்சின் 76 ரன்களுக்கு அவுட் ஆனார் ... அவர் படபடப்புடன் இருந்தது அவருடைய சாட் செலக்ஷனில் நன்றாகவே தெரிந்தது.

    இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் சச்சின் பதட்டப்படாமல் தன்னுடைய  நேச்சுரல் கேமை ஆடினாலே தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்வார் என்பது வல்லுனர்களின் கணிப்பு... அதிலும் போட்டி அவருக்கு லக்கியான ஈடன் மைதானத்தில் நடைபெறுவதும் , வீக்கான மேற்கிந்திய தீவுகளுடன் மோதுவதும் அவருக்கு சாதகமாக இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள். ஏற்கனவே சச்சின் ஈடன் மைதானத்தில் மூன்று முறை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ...

                                     
    இந்த வருடம் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய 99 வது அடித்த சச்சின் அதற்கு பிறகு மற்ற போட்டிகளில் நூறாவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே ...

    அதிலும் குறிப்பாக செமி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களுக்கு அவர் அவுட் ஆனதில் பலருக்கு பி.பி எகிறியது ... உலக கோப்பை வெற்றி தந்த மாபெரும் சந்தோசத்தில் அந்த ஏமாற்றம் சிறிது காலம் மறக்கப்பட்டது ...

    இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது ... இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் ஒட்டு மொத்த ஆட்டமும் சொதப்பலாக இருந்ததால் கடைசி டெஸ்டில் 9 ரன்களில் சச்சின் தவறவிட்ட சதம் பெரிய சத்தத்தை எழுப்பவில்லை ...இங்கிலாந்தை நாம் பழி தீர்த்த 5  ஒரு நாள் போட்டிகளிலும் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை ...

               
     சாதனையின் மறு பெயர் சச்சின் ... தன் பதினாறாவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இன்று வரை அதிக டெஸ்ட் ரன்கள் , அதிக ஓ.டி,ஐ ரன்கள் , ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் இப்படி எத்தனையோ சாதனைகள் அவருக்கு பின்னால் இருந்தாலும் கடந்த 8  மாதங்களில்  ஒ.டி.ஐ மற்றும் 5  டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில்   அனைவருக்கும் வருத்தமே ...

     அவருக்கும் வருத்தம் இருக்காதா என்ன? .சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே  நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது ...

14 comments:

இராஜராஜேஸ்வரி said...

சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது .../

சந்தோஷப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

..சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதல் நிறைவேற் வாழ்த்துக்கள்..

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது .../
சந்தோஷப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

வழக்கமான உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ...

ananthu said...

சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதல் நிறைவேற் வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிச்ச்யம் நிறைவேறும் என நம்புவோம்
அருமையான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

Anonymous said...

நூறு கோடி இதயங்களின் வேண்டுதல் நிறைவேற் வாழ்த்துக்கள்...

குழந்தைகள் தின வாழ்த்துகள்...

Unknown said...

ஆ வடை போச்சே...

ananthu said...

Ramani said...
நிச்ச்யம் நிறைவேறும் என நம்புவோம்
அருமையான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 1

மிக்க நன்றி...

ananthu said...

ரெவெரி said...
நூறு கோடி இதயங்களின் வேண்டுதல் நிறைவேற் வாழ்த்துக்கள்...
குழந்தைகள் தின வாழ்த்துகள்...

நன்றி...குழந்தைகள் தின வாழ்த்துகள்...

ananthu said...

வெண் புரவி said...
ஆ வடை போச்சே...

கவலைப்படாதீங்க ! வடை நிச்சயம் ... நன்றி ...

சிவகுமாரன் said...

அவர் சாதனையை முறியடிக்க வேறு யாரும் இல்லாததால் , கவலை வேண்டாம் .சச்சின் சாதிப்பார்

ரிஷபன் said...

கடந்த 8 மாதங்களில் 4 ஒ.டி.ஐ மற்றும் 5 டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில் அனைவருக்கும் வருத்தமே ..

விரைவில் வருத்தம் போகும்.. என்று நம்புவோம்.

ananthu said...

சிவகுமாரன் said...
அவர் சாதனையை முறியடிக்க வேறு யாரும் இல்லாததால் , கவலை வேண்டாம் .சச்சின் சாதிப்பார்

நிச்சயம் சாதிப்பார் , அதில் சந்தேகம் இல்லை ... ஆனாலும் இடனில் சாதித்தால் இன்னும் சந்தோசமா இருக்கும் ... நன்றி

ananthu said...

ரிஷபன் said...
கடந்த 8 மாதங்களில் 4 ஒ.டி.ஐ மற்றும் 5 டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில் அனைவருக்கும் வருத்தமே ..
விரைவில் வருத்தம் போகும்.. என்று நம்புவோம்.

முதல் இன்னிங்க்ஸ் முடிஞ்சிட்டாலும் உங்களைப் போலவே நம்பிக்கையுடன் நான் ... நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...