22 November 2011

குறும்பட கார்னர் - போஸ்ட்மேன் ...


Thumbnail

   "  பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வகையினானே " என்ற நன்னூலின் கூற்றுக்கேற்ப உலகில் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே ... இதை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லி விடலாம் , ஆனால் நமக்கு வரும் போது தான் அதன் உண்மையான வலியும், அர்த்தமும் புரியும் ... 

   தொலைபேசியின் வருகைக்கு பிறகு மக்கள் தபால்துறையை எப்படி மறக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் தேசிய விருது பெற்ற குறும்படமே " போஸ்ட்மேன் " ... அந்த ஊரே அவனை வெறும் போஸ்ட்மேனாக பார்க்காமல் நண்பனாக , உறவினனாக பார்ப்பதில் மூர்த்திக்கு ரொம்ப பெருமை ... 


    எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது ... இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார்... போஸ்ட்மேனை கண்டுகொள்ளாமல் ஆளாளுக்கு தொலைபேசியில் பிஸியாக இருப்பது ஒரு நல்ல உதாரணம் ...

    திரைப்படத்திக்குண்டான காதல் , சென்டிமென்ட் , சோகம் , காமெடி  இதையெல்லாம் அழகாக இந்த குறும்படத்தில் புகுத்தியதே இயக்குனரின் சாமர்த்தியம் ... பாட்டிக்காக பேரன் எழுதுவது போல மூர்த்தி எழுதும் கடிதங்கள் க்யூட் ஹைக்கூ ... 

    ஹீரோவாக வரும் இஸ்வரின் முகம் அவரின் ஒட்டு தாடி போலவே தமிழுக்கு கொஞ்சம் அன்னியமாக இருந்தாலும் முக பாவங்கள் நன்றாக இருக்கின்றன ... தீனா காதல் காட்சிகளில் இசைஞானியின் பாடலை உபயோகப்படுத்தியிருந்தாலும் கிளைமாக்ஸ் உட்பட பின்னணி இசையில் மனதை வருடுகிறார் ... மற்றொரு முக்கியமான அம்சம் அபிநந்த ராமானுஜத்தின் ஒளிப்பதிவு ... ஆற்றுப்படுகையில் போஸ்ட்மேன் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வருவது கண்கொள்ளா காட்சி ... 

    படத்தை பார்த்து முடித்தவுடன் சின்ன வயதில் தீபாவளி , பொங்கலுக்கு நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கிடந்த நாட்கள் கண்முன் வந்து போவதை யாரும் தவிர்க்க முடியாது ...

இயக்கம் : மனோகர்

தயாரிப்பு : எல்.வி.பிரசாத் அகாடமி


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது ... இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார்... /

very nice

Anonymous said...

குறும்பட அறிமுகத்துக்கு நன்றி அனந்து... பிரியமானவளின் கடிதத்துக்கு காத்திருப்பது...ம்ம்ம்ம்ம்ம்

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது ... இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார்... /
very nice

மிக்க நன்றி ...

Anonymous said...

Pl check your Spam Folder..

ananthu said...

ரெவெரி said...
குறும்பட அறிமுகத்துக்கு நன்றி அனந்து... பிரியமானவளின் கடிதத்துக்கு காத்திருப்பது...ம்ம்ம்ம்ம்ம்

உங்களின் தொடர் உற்சாகங்களுக்கு நன்றி நண்பா !

ananthu said...

ரெவெரி said...
Pl check your Spam Folder..

Yes..I have checked it and removed from spam..What happened ?..is problem not over?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...