பெரிய நடிகர்களை நம்பாமல் தன் கதையை மட்டுமே நம்பி முற்றிலும் புதுமுகங்களை வைத்து படமெடுத்து அதை ஜெயிக்கவும் வைப்பதற்கு தைரியம் மட்டும் இருந்தால் போதாது , நல்ல திட்டமிடுதலும் நிறைய திறமையும் வேண்டும் ...இவையிரண்டும் தன்னிடம் இருப்பதை மீண்டும் ஒரு முறை இயக்குனர் பாலாஜி சக்திவேல் நிரூபித்திருக்கும் படம் " வழக்கு எண் 18/9 " ...
ஆசிட் வீசப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கும் ஜோதி
( ஊர்மிளா ) என்ற வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போலிஸ்;இன்ஸ்பெக்டர் குமாரவேல் (முத்துராமன் ) மேற்கொள்ளும்;விசாரணையிலிருந்து தொடங்குகிறது படம்...
முதல் பாதியில் சந்தேகத்தின் ;பேரில் ரோட்டோர கடையில்வேலைசெய்யும் வேலு ( ஸ்ரீ ) விசாரிக்கப்பட,;இரண்டாம் பாதியில் +2 படிக்கும் வீட்டுக்கார பெண் ஆர்த்தி ( மனிஷா );கொடுக்கும் புகாரின் பேரில் தினேஷ் ( மிதுன் ) என்ற +2 படிக்கும் பணக்கார பையன் விசாரிக்கப்ப்டுகிறான் ...சட்டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே எப்படி தன் கடமையை எப்படி செய்கிறது என்பதை;காதல் , காமம் , நட்பு , துரோகம் இவற்றையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்து சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...
ஸ்ரீ விளிம்பு நிலை இளைஞனாக அப்படியே பொருந்துகிறார்.இவர்;சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் அழுகையாய் இருந்தாலும் ;அழுத்தமாய் இருக்கின்றன ...இவர் ஊர்மிளாவை ஒரு தலையாய் காதலிப்பதாலோ என்னவோ இவர் மேல் வரும் பச்சாதாபம் இவர் காதல்;மேல் வரவில்லை ...படம் முழுவதும் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக;சாதாரணமக வந்து போகும் ஊர்மிளா கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க;வைக்கிறார் ...இவர் அம்மாவாக நடித்திருக்கும் வயதான பெண்மணி ;கவனத்தை ஈர்க்கிறார் ...
மனிஷா , மிதுன் இருவரும் ட்ரையான முதல் பாதியிலிருந்து கலகலப்பான இரண்டாம் பாதிக்கு நம்மை அழைத்து செல்கிறார்கள் ...ஆசையும் ,பயமும் கலந்த மிடில் கிளாஸ் பெண்ணையும் , பெண்ணாசை பிடித்து அலையும் பணக்கார பையனையும் மனிஷா ,மிதுன் இருவரும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்கள் ...
எங்கே பிடித்தார்கள் என்று தெரியவில்லை , இன்ஸ்பெக்டராக வரும்;முத்துராமனின் நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது ...இவர் மட்டுமல்ல ;விபச்சார பெண் ,ரோட்டோர கடை ஓனர் , கூத்துக்கார சிறுவன் , மிதுனின் அம்மா , மனிஷாவின் தோழி இப்படி நிறைய பேர் தங்கள் இயல்பான ;நடிப்பால் படம் பார்க்கிறோம் எனற உணர்வையே மறக்கடிக்கிறார்கள் புதுமுகங்களை இவ்வளவு இயல்பாக நடிக்க வைத்தற்க்கே இயக்குனருக்கு;ஒரு விழா எடுக்கலாம் ...
படத்தின் இயல்பு மாறாமல் டிஜிட்டலில் எடுத்திருக்கும் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அருமை ...புதுமுக இசையமைப்பாளரி பிரசன்னாவின் இசையில்;வாத்தியமே இல்லாத இரண்டு பாடல்களும் ,பின்னணி இசையும் சூப்பர் ...
தினசரி பத்திரிக்கைகளில் படிக்கும் சம்பவங்களின் பின்னணியில் தொடுக்கப்பட்ட கதை , படத்தோடு நம்மை ஒன்ற செய்யும் திரைக்கதை , அனைவரின் நடிப்பு , ஆங்காங்கே வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் , பள்ளி மாணவ மாணவிகள் செக்ஸ் ஆசைகள் மூலம் மொபைலை தவறாக பயன்படுத்தும் விதத்தை அபாய கோட்டை தாண்டாமல் தரமாக சொன்ன விதம் , ராம் , விருமாண்டி ஸ்டைலில் இருவரின் பார்வையிலிருந்து கதையை சொன்னாலும் கன்டினுட்டி மாறாமல் சொன்ன நேர்த்தி இவையெல்லாம் வழக்கு எண்னை வழக்கமான சினிமாவிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன ...;
நீளமாக விவரிக்கப்படும் ஆரம்ப காட்சிகள் ,செல்போனால் தன்னை படம்பிடிப்பது கூட தெரியாமல் பழகிக் கொண்டிருக்கும் மனிஷாவின்;கதாபாத்திரம் ,தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக வைக்கப்பட்டது போன்ற கிளைமாக்ஸ் இது மாதிரியான சில குறைகள் இருந்தாலும் கதைக்காக உலக டி.வி.டி க்களை தேடி அலையாமல் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை ;வைத்தே உலக சினிமாவை கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையை ;கொடுத்திருக்கும் வழக்கு எண் 18/9 நிச்சயம் வளர்ச்சிக்கான பாதை ...
ஸ்கோர் கார்ட் : 45
8 comments:
மறுபடியும் நம்மிருவரும் ஒரே படத்தை செலக்ட் செய்து பார்த்திருக்கிறோம்...
// தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக வைக்கப்பட்டது போன்ற கிளைமாக்ஸ் //
மறுபடியும் ஒரே சிந்தனை... நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா... அடுத்தமுறை இருவரும் சேர்ந்து ஏதாவது படம் பார்க்கலாமா...
நச்சுனு ஒரு விமர்சனம் அண்ணா! படம் இனித்தான் பார்க்கப் போகிறேன்..
வலைஞன் said...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
நன்றி
வலையகம்
உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
Philosophy Prabhakaran said...
மறுபடியும் நம்மிருவரும் ஒரே படத்தை செலக்ட் செய்து பார்த்திருக்கிறோம்...
// தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்ற ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக வைக்கப்பட்டது போன்ற கிளைமாக்ஸ் //
மறுபடியும் ஒரே சிந்தனை... நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா... அடுத்தமுறை இருவரும் சேர்ந்து ஏதாவது படம் பார்க்கலாமா...
இருவரின் ரசனைகளும் ஒத்துப்போவதில் மகிழ்ச்சியே ... நான் சென்னை கமலாவில் தான் படம் பார்த்தேன் ...அடுத்த வாரம் சென்னையில் இருக்க மாட்டேன் ...நிச்சயம் ஒரு நாள் படத்திற்கு சேர்ந்து போகலாம் ...உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
JZ said...
நச்சுனு ஒரு விமர்சனம் அண்ணா! படம் இனித்தான் பார்க்கப் போகிறேன்..
கண்டிப்பாக பார்க்கவும் ...உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
// அடுத்த வாரம் சென்னையில் இருக்க மாட்டேன்... நிச்சயம் ஒரு நாள் படத்திற்கு சேர்ந்து போகலாம் //
அடுத்த வாரமே பார்க்க வேண்டுமென்று இல்லை... உங்களுக்கு முடிகிறபோது சொல்லுங்கள்...
Philosophy Prabhakaran said...
// அடுத்த வாரம் சென்னையில் இருக்க மாட்டேன்... நிச்சயம் ஒரு நாள் படத்திற்கு சேர்ந்து போகலாம் //
அடுத்த வாரமே பார்க்க வேண்டுமென்று இல்லை... உங்களுக்கு முடிகிறபோது சொல்லுங்கள்...
கண்டிப்பாக சொல்கிறேன்..உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
krishy said...
மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
Post a Comment