கடந்த மூன்று மாதங்களுக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட சிறிய படங்கள் புற்றீசலைப் போல வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிலிருந்து சற்று மாறுபட்டு மின்மினி பூச்சியைப் போல கவனிக்க வைத்திருக்கும் படம் " ராட்டினம் " ...
நண்பர்களுடன் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதி அசோக்கின் ( கே.எஸ்.தங்கசாமி ) தம்பி ஜெயத்திற்கும் ( லகுபரன் ) க்கும் , அரசு உத்தியோகத்தில் பெரிய போஸ்ட்டில் இருப்பவரின் மகளான பள்ளி மாணவி தனத்திற்கும் ( சுவாதி ) இடையே வரும் காதல் , இரு வீட்டாருக்கும் இது தெரிந்தவுடன் ஏற்படும் பிரச்சனை , வழக்கத்திலிருந்து மாறுபட்ட க்ளைமாக்ஸ் இவை மூன்றையும் கலந்து தலையை சுற்ற வைக்காமல் ராட்டினத்தை சுற்றியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி ...
லகுபரன் பார்த்தவுடன் பிடிக்காமல் போனாலும் படம் பார்த்து முடிக்கும் போது பிடித்துப் போகிறார் ...ஹீரோயின் உட்பட படத்தில் அறிமுகம் ஆகியிருக்கும் டஜனுக்கும் மேற்பட்ட புதுமுகங்களோடு ஒப்பிடும் போது இவர் பார்ப்பதற்கு பெட்டராக இருப்பதும் காரணமாக இருக்கலாம் ...
சுவாதிக்கு நடிப்பு வருகிறது ... முகம் தான் பள்ளி மாணவி போல அல்லாமல் க்ளோஸ் அப் காட்சிகளில் பள்ளி ஆசிரியை போல இருக்கிறது ...இவர்களை தவிர ஹீரோயினின் அப்பா , ஹீரோவின் அண்ணி இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்... இப்படத்தின் இயக்குனர் ஒரு நடிகராக நம்மை பெரிதாய் கவரவில்லை ... மற்ற நடிகர்களையெல்லாம் ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து செலக்ட் செய்திருப்பார்கள் போல... நடிப்பில் அத்தனை அமெச்சூர்தனம் ...பின்னணி இசை பெரிதாக இல்லை , பாடல்கள் ஓகே...
முன்பாதி நீளமாக இருந்தாலும் படத்தில் காதல் எபிசோட் நச்சென்று இருக்கிறது ... போலீஸ் மூலம் இருவரின் காதலும் வெளிச்சத்திற்கு வந்த பிறகே படம் சூடு பிடிக்கிறது ... இடைவேளையில் இருந்து படம் முடியும் வரை அந்த டெம்போவை குறைய விடாமல் பார்த்துக் கொண்டதற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ...கதை காதல் ,நாடோடிகள் போன்ற படங்களை நியாபகப்படுத்தினாலும் அதை சொன்ன விதம் சூப்பர்... லொக்கேஷன் சேஞ்ச் அதிகம் இல்லாமலேயே திரைக்கதையை சுவாரசியமாக எடுத்து சென்ற விதமும் அருமை ...
நிறைகள் இருந்தும் புது முகங்களின் நடிப்பும் , ஹீரோ நண்பர்களுடன் தண்ணியடிப்பது போல வரும் ரிப்பீட்டட் காட்சிகளும் , முழு சினிமாவாக நம்மை சிலாகிக்க விடாமல் செய்யும் சில டெக்னிக்கல் சமாச்சாரங்களும் ராட்டினத்தை பின்னுக்கு இழுக்கின்றன ...
நடிகர்கள் தேர்வு , இசை , ஷாட்கள் வாயிலாக படத்தை கொண்டு செல்லும் விதம் இவைகளில் இயக்குனர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ராட்டினம் நம்மை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கும். இருப்பினும் முதல் படத்திலேயே சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்ததை எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழுத்தமாகவும் , தெளிவாகவும் சொன்ன விதத்திற்காக நிச்சயம் ராட்டினம் சுற்றலாம் ...
ஸ்கோர் கார்ட் : 43
4 comments:
அழகான படம் ...அழகான விமர்சனம் ...
ரெவெரி said...
அழகான படம் ...அழகான விமர்சனம் ...
உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி...!
chicha.in said...
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Thanks ...
ஆனந்த விகடன் விமர்சனம் போல
அனந்துவின் விமர்சனத்தை எதிர்பார்த்தும் சிலர் இருக்கிறோம்
அதில் நானும் ஒருவன்
படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்
Post a Comment