1 July 2012

அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல் ...

திரைப்பட தயாரிப்பாளர்கள் - தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த  வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 , ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன ...

வேலாயுதத்தை தொடர்ந்து  நண்பன்   வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும்  சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான்   ...  வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால்  ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை ...  

மெரினா  மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின்   மெரினா  அலைகள்  கால் தொடவில்லை ...  எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  இல் இருந்த  தோனி அரவான் இரண்டுமே அதை பூர்த்தி செய்யாமல் போனதில் வருத்தமே , அதே போல நல்ல முயற்சியான  அம்புலி அரை  நிலவாய் போனதும் துரதிருஷ்டமே ... 

கழுகு பறந்த உயரம் குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதத்தால் இயக்குனர் சத்ய சிவாவிற்கு நல்ல பெயரோடு சேர்த்து அடுத்த படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது ... குறும்படமாக நல்ல பெயரை பெற்ற காதலில் சொதப்புவது எப்படி படமாகவும் சொதப்பாமல் வசூலை பெற்று குறும்படம் எடுப்பவர்களுக்கிடையேயும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது ... 

வெறும் பாடல்களும் , பப்ளிசிட்டியும் மட்டுமே படம் ஓடுவதற்கு போதுமானதாகி விடாது என்பதை முப்பொழுதும் உன் கற்பனைகள் , 3 இரண்டுமே நிரூபித்திருக்கின்றன , அதிலும்  3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி  என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது ...  கர்ணன்  நூறு நாட்களுக்கும் மேல் ஓடி காலத்தால் அழியாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டான் ...

ராஜேஷ் தனக்கு எது வருமோ அதை சரியாக செய்து   ஒரு கல் ஒரு கண்ணாடி  யை டபுள் ஓகே செய்துவிட்டார் . இவருடைய பாச்சா அடுத்தமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதே பாணிக்கு பெயர் போன சுந்தர்.சி யின்  கலகலப்பு வெற்றி பெற்றதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை ... அர்பன் ரொமாண்டிக் ஸ்டோரியை ஸ்டைலாக சொன்ன விதத்தில்  லீலை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்... 

தரமான படங்களின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீராத பசியை தீர்த்து வைத்த வகையில்  வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...  ராட்டினம் சுற்றலாம்  என்ற போதும் அழகி , விடிவி வரிசையில் ஒரு படம் என்றெல்லாம் சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .  கிருஷ்ணவேணி பஞ்சாலை  நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தால் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பாள்.

பில்லாவின் ரிலீஸ் தேதியையே ஒத்திப் போடுமளவிற்கு ஓவர்
பில்ட் அப்புடன் வந்த சகுனி ரசிகர்களை சலிப்பூட்டியதை தவிர வேறோன்றும் உருப்படியாக செய்யவில்லை ... வருட முடிவிற்குள் வருமென்று எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுள் கமலின் விஸ்வரூபம் , அஜித் நடிப்பில் பில்லா 2 , விஜய் நடிப்பில் துப்பாக்கி , சூர்யா நடிப்பில் மாற்றான் இவைகளெல்லாம் மிக முக்கியமானவை ... 

18 comments:

Philosophy Prabhakaran said...

ராட்டினம் அவ்வளவு நல்ல படமா நான் இன்னும் பார்க்கவில்லையே...

Philosophy Prabhakaran said...

தடையறத் தாக்க எங்க மேன்...?

Anonymous said...

Raattinam is feel good movie... Just like Kadhal film and climax is so different from Kadhal movie...Liked it so much....

கோவை நேரம் said...

என்னது..அம்புலி..அரை நிலவா..? நல்லா தெரியுமா..?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் சார் ... புட்டு புட்டு வச்சிட்டீங்க... எனக்கு பிடித்தது : காலத்தால் அழிக்க முடியாத காவியம் - கர்ணன்... வாழ்த்துக்கள் ! நன்றி

JR Benedict II said...

Good review.. But u missed thadayara thaaka.. Manankothi paravai also not bad.. Urumi n some dual language films also collects well..

Keep it up..

Anonymous said...

இதில் எந்த படமுமே நான் இதுவரையில் பார்க்கவில்லை என்பதை சொல்லவே வெட்கமாய் உள்ளது...நல்ல அலசல்...

ananthu said...

Philosophy Prabhakaran said...
ராட்டினம் அவ்வளவு நல்ல படமா நான் இன்னும் பார்க்கவில்லையே...

யதார்த்தமான கதை , அழுத்தமான க்ளைமாக்ஸ் இவற்றிற்காக படத்தை பார்க்கலாம் , ஆனால் படம் முழுவதும் ஒரு அமெச்சூர்த்தனம் இருப்பது போலவே படுகிறது ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Philosophy Prabhakaran said...
தடையறத் தாக்க எங்க மேன்...?

நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை !

ananthu said...

Annbhu said...
Raattinam is feel good movie... Just like Kadhal film and climax is so different from Kadhal movie...Liked it so much....

it may be a feel good movie but we cant compare with KATHAL ... Thanks ....

ananthu said...

ரெவெரி said...
இதில் எந்த படமுமே நான் இதுவரையில் பார்க்கவில்லை என்பதை சொல்லவே வெட்கமாய் உள்ளது...நல்ல அலசல்...

நண்பா நீங்க சினிமாவே பார்க்கறதில்லையா இல்லை தமிழ் சினிமாவே பார்க்கறதில்லையா !?உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

ஹாரி பாட்டர் said...
Good review.. But u missed thadayara thaaka.. Manankothi paravai also not bad.. Urumi n some dual language films also collects well..

Except urumi i have not seen other movies yet ... Thanks ...

ananthu said...

கோவை நேரம் said...
என்னது..அம்புலி..அரை நிலவா..? நல்லா தெரியுமா..?

அம்புலி பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்பதில் ஐயமில்லை , இருப்பினும் அம்புலி அரை நிலவே ...
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

JR Benedict II said...

நண்பரே இந்த பதிவை என் பதிவு ஒன்றுக்கு லிங்க் கொடுத்துள்ளேன். மறுப்புக்கள் இருந்தால் தெரிவியுங்கள்..
http://ideasofharrypotter.blogspot.com/2012/07/10_04.html

ananthu said...

ஹாரி பாட்டர் said...
நண்பரே இந்த பதிவை என் பதிவு ஒன்றுக்கு லிங்க் கொடுத்துள்ளேன். மறுப்புக்கள் இருந்தால் தெரிவியுங்கள்..
http://ideasofharrypotter.blogspot.com/2012/07/10_04.html

தாராளாமாக செய்யுங்கள் நண்பா , மறுப்பேதுமில்லை ...

Philosophy Prabhakaran said...

அனந்து... வருகிற சனிக்கிழமை தேவி பாரடைஸ் காலை பத்தரை மணி காட்சிக்கு உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துவிட்டேன்... சாக்கு போக்கு எதுவும் சொல்லாமல் வந்துவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

உங்கள் மொபைல் நம்பர் தரவும்...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல அலசல் சார் ... புட்டு புட்டு வச்சிட்டீங்க... எனக்கு பிடித்தது : காலத்தால் அழிக்க முடியாத காவியம் - கர்ணன்... வாழ்த்துக்கள் ! நன்றி
Monday, July 02, 2012

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

ananthu said...

Philosophy Prabhakaran said...
அனந்து... வருகிற சனிக்கிழமை தேவி பாரடைஸ் காலை பத்தரை மணி காட்சிக்கு உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துவிட்டேன்... சாக்கு போக்கு எதுவும் சொல்லாமல் வந்துவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
உங்கள் மொபைல் நம்பர் தரவும்...

Thanks prabha , I have sent mail to you , pls check and revert ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...