20 October 2012

பீட்சா - சாப்பிடலாம் ...


திகில் படங்கள் எனக்கு பிடிக்கும் , அதிலும் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த " ப்ளாக் & வைட் " என்னை கவர்ந்த க்யூட் குறும்படம் என்பதால் பீட்சாவிற்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் சென்றேன் . படம் பார்ப்பவர்கள் நிச்சயம் பீட்சாவில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் ...

பீட்சா டெலிவரி செய்யும் மைக்கேல் ( விஜய் சேதுபதி ) தன் லவ்வர் அனு
( ரம்யா நம்பீசன் ) வுடன் " போத்திக்கிட்டு படுத்தா என்ன படுத்துக்கிட்டு போத்தினா என்ன " என்கிற நினைப்பில் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் பாணியில் வசித்து வருகிறார் . பேய் , பூதம் , அமானுஷ்யங்களில் நம்பிக்கையுள்ள அனு மைக்கேலிடம் ஒரு நாள் அவற்றை நேரில் சந்திக்கும் தருணம் உனக்கும் வரும் என்கிறார் . அனு சொன்னது போல அந்த ஒரு நாளும் வருகிறது , அதன் பிறகு என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள் ...


விஜய் சேதுபதிக்கு இந்த படம் ஒரு மைல்கல் . மனிதர் பங்களாவிற்குள் தனியாளாக இருந்து கொண்டு பயப்படும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் .  காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது . குள்ளநரி கூட்டத்திற்கு பிறகு காணாமல் போய் விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட ரம்யா நம்பீசன் சிறிய இடைவெளிக்கு பிறகு பீட்சாவில் நடித்திருக்கிறார் . அம்மணியின் உடம்பு அவரது கேரக்டர் போலவே கொஞ்சம் அப் நார்மலாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார் ...

இரண்டு லீட் கேரக்டர்களை தவிர படத்தில் வரும் பிட்சா சாப் ஓனர் சண்முகமாக வரும் நரேன் , இரண்டு பிட்சா கடை ஊழியர்கள் , பேய் பங்களாவில் வரும் கணவன் - மனைவி என்று சின்ன சின்ன ரோல்களில் வருபவர்கள் கூட நம்மை கவர்கிறார்கள் , அதிலும் பேய்  பங்களாவில் குளியல் உடையுடன் முடியை துவட்டிக்கொண்டே வரும் பூஜா " பீட்சாவே ஆறிடும் " என்று விஜய் சேதுபதியிடம் சொல்லும் போது நம்மை சூடேற்றுகிறார் ...


படத்தின் ஒளிப்பதிவு உலகத்தரம் . லொக்கேசன்களை மாற்றாமல் நம்மை படத்தோடு ஒன்ற செய்வதற்கு , நடிப்பும்  திரைக்கதையும் போதாது , ஒளிப்பதிவும் மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் கோபி அமர்நாத் . ரொமாண்டிக் சாங்கில் இசை , ஒளிப்பதிவு , படம் பிடித்த விதம் எல்லாமே அருமை . திகில் படம் என்பதற்காக வெறும் இரைச்சலை இசையாக கொடுக்காமல் தரமாக பின்னணி இசையை தந்திருக்கிறார்  சந்தோஷ் நாராயண் . சில காட்சிகளில் இவர் இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ என்கிற எண்ணமும் தோன்றாமல் இல்லை ...

த்ரில்லர் வகை படங்கள் எடுப்பதென்பது இரு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதத்தை கையாள்வது போன்றது . கொஞ்சம் பிசகினாலும் பார்ப்பவர்கள் கேலி செய்து சிரித்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது . பொதுவாக  நிறைய பேர் ஜாலி படத்தை பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்வதை போல பேய்  படத்தை பார்த்து பயந்து நடுங்கினேன் என்று சொல்வதற்கு விருப்பப்படுவதில்லை . தமிழ்  சினிமாவில் திகில் படங்களுக்கான ரசிகர்கள் குறைவு என்று கூட சொல்லலாம் .இது போன்ற   தடங்கல்கள் இருந்தும் தன் முதல் படத்தையே த்ரில்லர் வகை படமாக எடுத்ததற்கும் , அதில் தேவையில்லாமல்  பாடல்  , காமெடி , கிளாமர் போன்றவற்றை புகுத்தி எந்தவித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் இரண்டு லீட் கேரக்டர்கள் மற்றும் ஒன்றிரண்டு லொக்கேசன்களை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டதற்கும்  இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் ...


அனு  கர்ப்பமானவுடன் " நாம ரெண்டு பேரும் கேர்லெஸா இருந்திட்டோமோ " என்று மைக்கேல் சொல்வது , மைக்கேல் நண்பர்களிடம் அனு  கர்ப்பமான விஷயத்தை பற்றி பேசும் போது அவர்கள் " வேணுமின்னா காண்டம் கம்பனி மேல கேஸ் போட்டுரலாம் " என்று சொல்லி கிண்டல் செய்வது போன்ற இடங்களில் வசனங்கள் க்யூட் ...


விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் பின்னர் கொஞ்ச நேரம் தொய்வாக நகர்கிறது . ரம்யா - விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் நன்றாக இருந்தாலும் யாருமில்லாத வீட்டில் இருவரும் திருமணம் செய்துகொள்வது , அவர்கள் அனாதை  ஆசிரம பின்னணி , பேய் பற்றி அவர்கள் பேசிக்கொள்வது போன்றவை பெரிதும் ரசிக்கும் படியில்லை ...

மூன்று வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வரும் அனுவை ஏன் யாருமே பாத்ததில்லை ?, அப்படியே பார்த்திரா விட்டாலும் போலீசில் ஒரு போட்டோ கூடவா கேட்க மாட்டார்கள், பேய் வீட்டிலிருந்து யார் பீட்சாவிற்கு ஆர்டர் கொடுத்தார்கள் என்பதை  ஏன் முதலாளி கண்டுகொள்ளவேயில்லை , கடைசியில் அனு என்ன ஆனாள் ? போன்ற கேள்விகள் நம்மை குடைந்தாலும் இயக்குனர் நம்மை படத்தோடு என்கேஜ் செய்துவிடுவதால் நாம் அந்த ஏன்களை கொஞ்சம் எட்டப்போடலாம்...

டேஸ்டாக இருக்கும் பீட்சாவை  இன்னும் கொஞ்சம்  பாஸ்டாகவும் டெலிவரி செய்திருக்கலாமோ என்று தோன்றினாலும் வரிசையாக தாண்டவம் , மாற்றான் என்று தேடிப்  போய் பார்த்து மாறி மாறி நொந்து போவதற்கு நிச்சயம் பீட்சா - சாப்பிடலாம் ...

ஸ்கோர் கார்ட் : 46


12 comments:

வெங்கட் நாகராஜ் said...

படம் பார்க்கலாம்னு சொல்றீங்க! குறிச்சு வைச்சுக்கறேன்....

Sathish said...

பொதுவாக நிறைய பேர் ஜாலி படத்தை பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்வதை போல பேய் படத்தை பார்த்து பயந்து நடுங்கினேன் என்று சொல்வதற்கு விருப்பப்படுவதில்லை #

அருமையான வரிகள் , சிறப்பான விமர்சனம் - தீவளி வரை வேடிக்கபோகும் பட்டாசு - பிட்சா

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க வேண்டும்... (44 மார்க் தானா...?)

விமர்சனத்திற்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

போனா போகட்டும் சாப்பிடலாம்'ன்னு சொன்னா மாதிரி இருக்கு... 51 மதிப்பெண்கள் கொடுக்கலாம் உங்களுடைய ஸ்கோர் கார்டு படி...

Tamilthotil said...

டேஸ்டாக இருக்கும் பீட்சாவை இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டாகவும் டெலிவரி செய்திருக்கலாமோ என்று தோன்றினாலும் வரிசையாக தாண்டவம் , மாற்றான் என்று தேடிப் போய் பார்த்து மாறி மாறி நொந்து போவதற்கு நிச்சயம் பீட்சா - சாப்பிடலாம் ...

நிறையப் பேர் சொல்கிறார்கள்.படம் நன்றாக வந்திருக்கிறது என்று. அவசியம் பார்க்க வேண்டும்.

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
படம் பார்க்கலாம்னு சொல்றீங்க! குறிச்சு வைச்சுக்கறேன்....

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

ananthu said...

Sathish said...
பொதுவாக நிறைய பேர் ஜாலி படத்தை பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்வதை போல பேய் படத்தை பார்த்து பயந்து நடுங்கினேன் என்று சொல்வதற்கு விருப்பப்படுவதில்லை #
அருமையான வரிகள் , சிறப்பான விமர்சனம் - தீவளி வரை வேடிக்கபோகும் பட்டாசு - பிட்சா

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

ananthu said...



நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை பிரபா. Philosophy Prabhakaran said...
போனா போகட்டும் சாப்பிடலாம்'ன்னு சொன்னா மாதிரி இருக்கு... 51 மதிப்பெண்கள் கொடுக்கலாம் உங்களுடைய ஸ்கோர் கார்டு படி...

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை பிரபா. எனக்கு படத்தின் கதை , அதை சொன்ன விதம் , ஒளிப்பதிவு , நடிப்பு , எடிட்டிங் என எல்லாமே ரொம்ப பிடித்திருக்கிறது , ஆனால் நான் பயங்கரமாய் திகிலடைந்து போன சீன்கள் படத்தில் ஒன்றிரண்டு மட்டுமே , அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியே தனக்கு நடந்ததை கூறுவதால் அவருக்கு பேயால் ஒன்னும் ஆகிவிடவில்லை என்று தெளிவாக தெரிந்து திகிலை குறைக்கிறது . என் ஸ்கோர் கார்ட் படி படத்தை நீங்கள் க்ரேட் என்கிறீர்கள் , என்னை பொறுத்தவரை சில குறைபாடுகளால் சூப்பர் என்று மட்டுமே சொல்ல முடிகிறது . அதற்கேற்றபடி என் ஸ்கோர் கார்டிலும் திருத்தம் செய்துள்ளேன் ...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
பார்க்க வேண்டும்... (44 மார்க் தானா...?)
விமர்சனத்திற்கு நன்றி...

மார்க்க கூட்டிட்டேன் சந்தோசமா ?! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

ananthu said...

Tamilraja k said...
டேஸ்டாக இருக்கும் பீட்சாவை இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டாகவும் டெலிவரி செய்திருக்கலாமோ என்று தோன்றினாலும் வரிசையாக தாண்டவம் , மாற்றான் என்று தேடிப் போய் பார்த்து மாறி மாறி நொந்து போவதற்கு நிச்சயம் பீட்சா - சாப்பிடலாம் ...
நிறையப் பேர் சொல்கிறார்கள்.படம் நன்றாக வந்திருக்கிறது என்று. அவசியம் பார்க்க வேண்டும்.

அவசியம் பார்த்து விட்டு சொல்லுங்கள் .

Yaathoramani.blogspot.com said...

அருமையாக மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

ananthu said...

அருமையாக மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...