25 August 2013

மழலை - எனது குறு குறும்படம் ...

லைஞர் டி.வி யில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் போல ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் விளம்பர உலகம் என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் . இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம் . இந்த போட்டிக்கான முதல் சுற்றில் எனது குறும்படம் நல்லதோர் வீணை தேர்ந்தெடுக்கப்படவே அடுத்த சுற்றுக்கான போட்டியாக மழைநீர் சேகரிப்பு என்கிற தலைப்பில் அதனை பற்றி விளக்கும் விதமாக இரண்டரை நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு குறும்படத்தை இயக்க சொல்லியிருந்தார்கள் ...

இது போன்ற நிபந்தனைக்குட்பட்ட போட்டிகளில் நமது சுதந்திரம் பாதிக்கப்படும் அசௌகரியம் இருந்தாலும் நமது திறமையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்ததால் எனது டீமுடன் களத்தில் இறங்கிவிட்டேன் . முப்பது செகன்ட்களுக்குள் ஒரு விளம்பரம் எடுத்து விடலாம் , அதே போல ஐந்து நிமிடங்களுக்கு குறும்படம் எடுக்கலாம் . ஆனால் இதில் இரண்டரை நிமிடங்களுக்குள் படம் இருக்க வேண்டும் அதே நேரம் அந்த தலைப்பை பற்றிய முழு விளக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே எனக்கு விடப்பட்ட சவால் . ஒரு வழியாக படத்தை எடுத்து சேனலுக்கு கொடுத்தாகிவிட்டது ..

ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வர நீண்ட நாட்கள் ஆகவே சேனலை தொடர்பு கொண்ட போது தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விலகி விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது  தெரிய வந்தது . பிறகு நீண்ட தாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் யூ டியூபில் ஏற்ற முடிந்தது . இந்த குறு குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு.ஸ்ரீஹரி மற்றும் பட வேலைகள் இருந்தும் நான் கூப்பிட்டவுடனேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட திரு.சங்கரநாராயணன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் ) அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . குறு குறும்படத்தை கீழே பார்க்கவும் ...

10 comments:

கார்த்திக் சரவணன் said...

அருமையாக இருக்கிறது நண்பரே, மழைநீர் சேமிப்பின் அவசியத்தை இரண்டு நிமிடங்களில் இரண்டு பேரை மட்டும் கொண்டு உணர்த்தியது சிறப்பு... நன்றி...

கோவை நேரம் said...

சூப்பர்...வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

Anonymous said...

இதை குறும்படம் என சொல்ல முடியாது. அந்தக்கால தூர்தர்ஷனில் வரும் மேடை நாடகம் போல இருக்கிறது. காட்சியில் விறுவிறுப்பு இல்லை.
வளவளவென வசனம்.
இதே படத்தை 30 நிமிடத்தில் விறுவிறுப்பாக தயாரித்து விடலாம்.

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

வாழ்த்துக்கள் நண்பரே.
http://kmurugaboopathy.blogspot.com/2013/04/blog-post_8.html
http://kmurugaboopathy.blogspot.com/2013/08/blog-post.html
எனது மகன் உருவாக்கிய குறும்படம் மேற்கண்ட முகவரியில் உள்ளது. தாங்கள் கண்டு ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்

ananthu said...

ஸ்கூல் பையன் said...
அருமையாக இருக்கிறது நண்பரே, மழைநீர் சேமிப்பின் அவசியத்தை இரண்டு நிமிடங்களில் இரண்டு பேரை மட்டும் கொண்டு உணர்த்தியது சிறப்பு... நன்றி...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

கோவை நேரம் said...
சூப்பர்...வாழ்த்துக்கள்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Anonymous said...
இதை குறும்படம் என சொல்ல முடியாது. அந்தக்கால தூர்தர்ஷனில் வரும் மேடை நாடகம் போல இருக்கிறது. காட்சியில் விறுவிறுப்பு இல்லை.
வளவளவென வசனம்.
இதே படத்தை 30 நிமிடத்தில் விறுவிறுப்பாக தயாரித்து விடலாம்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Thursday, August 29, 2013

ananthu said...

k.murugaboopathy sivagiri erode said...
வாழ்த்துக்கள் நண்பரே.
http://kmurugaboopathy.blogspot.com/2013/04/blog-post_8.html
http://kmurugaboopathy.blogspot.com/2013/08/blog-post.html
எனது மகன் உருவாக்கிய குறும்படம் மேற்கண்ட முகவரியில் உள்ளது. தாங்கள் கண்டு ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Thursday, August 29, 2013

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லது... நன்றி...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Thursday, August 29, 2013

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...