1 January 2014

தமிழ் சினிமா 2013 - TAMIL CINEMA 2013 ...


டந்த வருடம் ரிலீசான 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் 80க்கும் மேற்பட்டவை புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வந்திருப்பதும் , கமல் , அஜித் , சூர்யா என மெகா ஸ்டார்களின் படங்கள் ஹிட் ஆகியிருப்பதும் மொத்தத்தில் வெறும் பத்து சதவிகித படங்கள் கூட ஹிட் ஆகாததன் இழப்பை  கொஞ்சம் மறக்கடிக்கின்ற்ன . பாரதிராஜா , மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் சறுக்கினாலும் நலன் குமாரசாமி ,  பாலாஜி குமார் , விக்ரம் சுகுமாரன் போன்ற புதுமுகங்கள் நம்பிக்கை தருகிறார்கள் .  விஸ்வரூபம்  ரிலீசாகா விட்டால் நாட்டை விட்டே  சென்று விடுவேன் என்று கலங்கிய கமல் , தலைவா ரிலீஸ் பிரச்சனைக்காக கொடநாடு வரை சென்று விட்டு முதல்வரை பார்க்க முடியாமல் விரக்தியுடன்  திரும்பி வந்த விஜய் என்று சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆண்டாகவும் 2013 இருந்தது . வாலி ,டி.எம்.எஸ் , பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற ஜாம்பவான்களின் மறைவு ,  விஸ்வரூபம் .. பிரச்சனையை திறம்பட சமாளித்த உலகநாயகனின் துணிவு ,  இந்திய சினிமா 100 கொண்டாட்டங்களில் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமாக சினிமா கலைஞர்கள் காட்டிய கனிவு போன்றவை 2013 ஆம் நாட்டின்  சிறப்பம்சங்கள் . முதல் ஆறு மாதங்களை பற்றி அறிய காண்க : அரையாண்டு சினிமா 2013 ... 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2013

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. கண்ணா லட்டு தின்ன ஆசையா 
 2 .விஸ்வரூபம் 
 3. பரதேசி  
 4. சூது கவ்வும் 
 5. நேரம்  
 6. ஆதலால் காதல் செய்வீர்  
 7. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 8. பாண்டிய நாடு 
 9. விடியும் முன் 
10. மதயானைக் கூட்டம் 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  கண்ணா லட்டு தின்ன ஆசையா 
2.  விஸ்வரூபம்
3.  சூது கவ்வும்
4.  தீயா வேலைசெய்யணும் குமாரு
5.  சிங்கம் 2 
6  .ராஜா ராணி
7.  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
8. ஆரம்பம்
9 .பாண்டிய நாடு
10.பிரியாணி


ப்ளாக்பஸ்டர்  : விஸ்வரூபம்

டாப் டென் பாடல்கள்

1. கண்ணா லட்டு ( க.லதி.ஆ )
2. எவனென்று நினைத்தாய் ( விஸ்வரூபம் )
3. ஆஹா காதல் ( மூன்று பேர் மூன்று காதல் )  
4. மின்வெட்டு நாளில் ( எதிர்நீச்சல் )
5. காசு பணம் ( சூது கவ்வும் )
6. பிஸ்தா ( நேரம் )
7. கடல் ராசா ( மரியான் )
8. வாங்கன்னா ( தலைவா )
9. ஹே பேபி ( ராஜா ராணி )
10.பனங்கள்ளா ( இரண்டாம் உலகம் )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - பரதேசி
 கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன்   ( விஸ்வரூபம்   )
 கவர்ந்த நடிகை - பார்வதி   ( மரியான் )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - பாரதிராஜா  ( பாண்டியநாடு  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - துளசி ( ஆதலால் காதல் செய்வீர் )
 கவர்ந்த காமெடி நடிகர் -  பவர் ஸ்டார்  ( க.ல.தி.ஆ  )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ராகுல் போஸ் ( விஸ்வரூபம்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா   ( மூ.பே.மூ.கா )
 கவர்ந்த பின்னணி இசை - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  ( இளையராஜா   )
 கவர்ந்த ஆல்பம் - மூன்று பேர் மூன்று காதல் ( யுவன் ஷங்கர் ராஜா )
 கவர்ந்த பாடல் -  ஆனந்த யாழை ( தங்க மீன்கள்   )
 கவர்ந்த பாடகர் - கானா பாலா  ( ஹே பேபி )
 கவர்ந்த பாடலாசிரியர் - வைரமுத்து  ( எவனென்று  )
 கவர்ந்த வசனகர்த்தா - நவீன்  ( மூடர் கூடம் )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - நலன் குமாரசாமி ( சூது கவ்வும் )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சானு வர்கீஸ்  ( விஸ்வரூபம் )
 கவர்ந்த இயக்குனர் - பாலா   ( பரதேசி   )
 கவர்ந்த புதுமுகம் - நஸ்ரியா  ( நேரம் )

வசூல் ராஜாக்கள் 

கமல்ஹாசன் ( விஸ்வரூபம் )
சூர்யா ( சிங்கம் 2 )
அஜித்குமார் ( ஆரம்பம் ) 

ஏமாற்றங்கள்

அலெக்ஸ் பாண்டியன் 
கடல் 
நய்யாண்டி
அன்னக்கொடி 
இரண்டாம் உலகம்

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  




















3 comments:

Philosophy Prabhakaran said...

மதயானைக்கூட்டம் டாப் டென்னில் போடுற அளவுக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா... ரொம்ப நல்லது...

டாப் டென் பாடல்களை பொறுத்தவரையில் உங்கள் இசை ரசனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் போல தெரிகிறது... குத்து பாடல்களை விரும்பிக் கேட்பீர்களோ ?

நீங்கள் தவறவிட்டதாக நான் கருதும் பாடல்கள் :-
உனைக் காணாத (விஸ்வரூபம்)
மூங்கில் காடு (கடல்)
அவத்த பையா (பரதேசி)
இன்னும் கொஞ்ச நேரம் (மரியான்)

ஆல் ஓவர் பதிவர்களின் ஒரு மனது கருத்தாக பார்வதி பிடித்த நடிகையாக இருக்கிறார் :)

ananthu said...

mments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Philosophy Prabhakaran said...

மதயானைக்கூட்டம் டாப் டென்னில் போடுற அளவுக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா... ரொம்ப நல்லது...

டாப் டென் பாடல்களை பொறுத்தவரையில் உங்கள் இசை ரசனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் போல தெரிகிறது... குத்து பாடல்களை விரும்பிக் கேட்பீர்களோ ?
நீங்கள் தவறவிட்டதாக நான் கருதும் பாடல்கள் :-
உனைக் காணாத (விஸ்வரூபம்)
மூங்கில் காடு (கடல்)
அவத்த பையா (பரதேசி)
இன்னும் கொஞ்ச நேரம் (மரியான்)
ஆல் ஓவர் பதிவர்களின் ஒரு மனது கருத்தாக பார்வதி பிடித்த நடிகையாக இருக்கிறார் :)

மதயானைக் கூட்டம் மதுரைப் பின்னணியில் எடுக்கப்பட்ட யதார்த்தமான பதிவு என்பதால் பிடிக்கும் . உண்மையில் நான் டாப் 10 இல் விட்டு விட்டதாய் நினைத்து வருந்திய படம் ஹரிதாஸ் . பாடல்களை பொறுத்தவரை எனக்கு பிடித்தமானதும் , அதே சமயம் அனைவருக்கும் பிடித்த வகையில் பிரபலமானதாகவும் இருக்கும் பாடல்களை தேர்வு செய்தேன் . நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களும் எனக்கு பிடிக்கும் . நீண்ட நாட்கள் கழித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...