முதல் படம் புதிய பாதை க்கு பிறகு அதே போல பெரிய ஹிட் கொடுக்கா விட்டாலும் தனது வித்தியாசமான அணுகுமுறையால் தன் ஒவ்வொரு படைப்பின் மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் வித்தகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் க.தி.வ.இ மூலம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் ...
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் டி.வி.டி க்களை சுடாமல் தன் டீமுடன் வீட்டிலியே உட்கார்ந்து டிஸ்கசன் செய்கிறார் இயக்குனர் தமிழ் ( சந்தோஷ் ) . தமிழுக்கு கதை கிடைத்ததா ? அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டுப் போகும் காதல் மனைவி ( அகிலா ) திரும்பி வந்தாளா என்பதை நிறைய சுவாரசியங்கள் , கொஞ்சம் கடி என்று தனது கலவையில் தந்திருக்கிறார் பார்த்தி ...
சந்தோஷ் - அகிலா இருவருமே கதைகேற்ற நல்ல தேர்வு . இருவர் முகத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது . நண்பர்கள் குழு வீட்டில் உட்கார்ந்து அடிக்கும் டிஸ்கஷன் கூத்தால் தனது ப்ரைவசி பாதிக்கப்படுவதை சொல்லி அழும் எக்ஸ்சென்ட்ரிக் அகிலா கதாபாத்திரம் யதார்த்தம் . இருவரின் காதல் , அன்னியோன்யம் , சண்டை எல்லாவற்றிலுமே இயக்குனர் பளிச்சிடுகிறார் . ..
தேவர் படங்களில் ஆரம்பித்து சின்னத்தம்பி , ஈ என்று சினிமா செய்தி துணுக்குகளை அள்ளித் தெளிக்கும் அசிஸ்டன்ட் டைரக்டராக தம்பி ராமையா . படம் முழுக்க சிரிக்க வைப்பவர் 58 வயதாகியும் தன் 28 வயதான பெண்ணிற்கு இன்னும் கல்யாணம் செய்து வைக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ததும்பும் தந்தை கேரக்டரில் அண்ணன் ராமையாவாக படத்தையே தூக்கி நிறுத்துகிறார் . எல்லா துறைகளிலும் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாத இது போன்ற என்சைக்லோபீடியாக்கள் நிச்சயம் இருப்பார்கள் . தம்பி ராமையா வை அடிக்கடி வாரும் உதவி இயக்குனர் சுருளி கவர்கிறார் . பவர் ஸ்டார் கெட்டப்பில் வந்து தப்பு தப்பு இங்கிலீசில் கதை சொல்லி படம் கிளைமேக்சில் முடிய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லும் தயாரிப்பாளர் சிம்ப்ளி சூப்பர்ப் ...
" முதல் 20 நிமிடத்துக்குள் கதையை சொல்லி இடைவேளையில் ஷாக் ப்ரேக் கொடுத்து ப்ரீ க்ளைமேக்சில கொஞ்சம் நிப்பாட்டி கடைசியில படத்த முடிக்கணும்னு நாங்க ஒரு பார்மெட் வச்சிருப்போம் . அத நேத்து வந்த குறும்பட பசங்க தூக்கி எரியறதா " என்று தம்பி ராமையா வை புலம்ப விட்டு பல சீனியர் இயக்குனர்களின் ஆதங்கத்தை போட்டுடைப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . பேஸ் புக் , ட்விட்டரில் கமென்ட் போடுபவர்கள் மட்டுமல்லாமல் தண்ணி கேன் போடும் நபருக்கு கூட இருக்கும் சினிமா அறிவை அழகாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன் ...
பாலச்சந்தர் பட பாணியில் வரும் இரண்டாவது ஹீரோயின் , நடுநடுவே வந்து பேசி கொஞ்சம் கடிக்கும் பார்த்திபன் , கதை விவாதத்தில் இருந்த சுவாரசியம் தமிழ் சொல்லும் உண்மைக் கதையில் இல்லாமல் போவது , கதை இல்லை என்று என்ன தான் டேக் லைன் போட்டிருந்தாலும் , திரைக்கதை , வசனம் இரண்டும் கவனிக்க வைத்தாலும் நம்மை ஒன்ற வைக்கும் ஒன் லைன் எதுவும் இல்லாமல் வெறும் சீன்களின் கோர்வையாக படம் இருப்பது போன்றவை மைனஸ் . படம் எடுப்பதற்கு டிஸ்கசன் செய்வார்கள் , ஆனால் அந்த டிஸ்கசனையே ரசிக்கும் படியான படமாக கொடுத்து 25 வருடங்கள் கடந்தும் இன்றைய குறும்பட இயக்குனர்களுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு க்ளாப் ...
ஸ்கோர் கார்ட் : 43
2 comments:
அவரது கதை விவாத குழுவில் நம்மையும் சேர்த்திருந்தாரே. பட வாய்ப்பு கிடைத்தது என்று நான் சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.
thambi ramaiah shouts much in this film.... the film is o.k.
Post a Comment