முதல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா வில் நடித்து விட்டார் ஜி.வி என நினைக்கிறேன் . அடல்ட் செக்ஸ் பேஸ் மூவி தமிழுக்கு போல்டாக பட்டாலும் படத்தில் காமெடி என்கிற பெயரில் காம நெடி மட்டுமே தூக்கலாக இருக்கிறது ...
வெர்ஜின் பையன் ஜீவா ( ஜி.வி.பிரகாஷ்குமார் ) தனது சிறு வயது தோழிகள் தீபிகா ( ஆனந்தி ) , அதிதி ( மனிஷா யாதவ் ) இருவரையும் லவ் பண்ணி கடைசி வரை கன்னி கழியாமல் இருந்து பல்பு வாங்குவதே கதை . வழக்கமான காதல் தோல்வி ஹீரோ புலம்பலை செக்ஸ் , டபுள் மீனிங் ஜோக்குகளை சேர்த்து அடுத்த கியருக்கு தாவியிருக்கிறார்கள் ...
ஆரம்ப காலங்களில் தனுஷை இமிடேட் செய்தது இருக்கிறது ஜி.வி.யின் தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜ் . முதல் படத்திற்கு இந்த பட நடிப்பு தேவலாம் என்றாலும் இன்னும் லாட்ஸ் டு கோ . எப்பவுமே மூஞ்சில விரக்தியா ? கொஞ்சம் வெரைட்டியும் காட்டுங்க பாஸ் ! . இரண்டு ஹீரோயின்களில் ஆனந்தி பெரிய விழிகளில் அழகாய் பேசுகிறார் . க்ளைமேக்சில் இவர் ஏற்கனவே அடிபட்ட மேட்டரை உடைக்கும் போது நமக்கே " என்னமா இப்புடி பண்ணிட்டியேம்மா " என்று ஜி.வி மேல் வருத்தம் வரத்தான் செய்கிறது . மாங்கு மாங்கென்று குடிக்கும் பெண்ணாக மனிஷா . நான் ஏன் குடிக்கக்கூடாது என்று ஜி.வி யை இவர் மடக்கும் சீன் சூப்பர் . கிளாமரா டவுசரோட நடிக்குற பொண்ணுக்கு கொஞ்சம் மூஞ்சியோட சேத்து மத்த இடத்துக்கும் மேக்கப் போட்டா தேவல ! . ஜோதிகா ஜம்மென்று 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இது போன்ற படங்கள் சிம்ரனுக்கு தேவையா ?! . வி.டி.வி கணேஷ் பெரிசாக இம்ப்ரெஸ் செய்யவில்லை ...
சரக்கை வாங்கிக் கொடுத்து விட்டு சைட் டிஷுக்கு தன் கன்னத்தை காட்டும் ஒரு ஹீரோயின் , சரக்கடித்து விட்டு வரும் ஹீரோ வை ட்ரங்கஅன்ட் டிரைவ் ஸ்டடியாக இருக்காது என்பதால் தொட விடாமல் ஏய்க்கும் மற்றொரு ஹீரோயின் என்று இதுவரை ஹீரோயின்ளை அப்பாவிகளாக அல்லது லூசுகளாக மட்டும் காட்டி வந்த இயக்குனர்களுக்கு மத்தியில் டெர்ரெர்ராக காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் . ஆனாலும் கடைசியில் பெண்களை மட்டும் ஹீரோவை வைத்து திட்ட விடுவதில் ஆதிக்கிடம் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே . ஒரு காலத்தில் இலை மறை காய் மறையாக இருந்த செக்ஸ் சமாச்சாரம் செல்போன் வருகையால் தெருச்சரக்காகி விட்ட இந்த காலத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்கிற டைட்டிலுக்கு பதில் ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் என்று வைத்திருக்கலாம் . அதற்கேற்ப படம் விடலை (ஹி ஹி ) பசங்களையும் , குடும்பஸ்தனாகியும் கள்ளத்தனமாக பலான சிடி பார்க்கும்
( என்ன தான் பிட் போடாவிட்டாலும் ) விட்ட பசங்களையும் கவரும் . குடும்ப குத்துவிளக்குகள் அந்த பட போஸ்டர் பக்கம் கூட செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ...
ஸ்கோர் கார்ட் : 39
ஸ்கோர் கார்ட் : 2.25*/5*
பின்குறிப்பு : ( படத்தை எதிர்த்து மாதர் சங்கங்கள் கேஸ் போடுதோ இல்லையோ த்ரிஷா , நயன்தாரா ரெண்டு பேரும் போடாம இருந்தா சரி )
பத்த வச்சுட்டியே பர ட்ட !
1 comment:
வணக்கம்...
வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
Post a Comment