12 September 2015

யட்சன் - YATCHAN - வழிப்போக்கன் ...


புள் ஹீரோ சப்ஜெக்டுகளை வைத்து ஹிட் கொடுப்பதில் வல்லவரான விஷ்ணுவர்தன் தன்னுடைய ஃபேவரட் ஹீரோ ஆர்யா  , தம்பி கிருஷ்ணா இருவரையும் இணைத்து இயக்கிருக்கும் படம் யட்சன் . சுபாவின் க்ரைம் கதை , நல்ல டெக்னிகள் டீம் என்று முந்தைய படங்களைப் போலவே ஹிட் அடிப்பதற்கு நிறைய வாயப்புகள் இருந்தும் அதை வீணாக்கியிருக்கிறார்கள் அல்லது இழந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்...

தூத்துக்குடியில் கொலை செய்து விட்டு சென்னைக்கு தப்பி வரும் சின்ன ரவுடி சின்னா ( ஆர்யா ) , பெரிய நடிகனாக வேண்டுமென்கிற வெறியில் சென்னைக்கு வரும் கார்த்திக் ( கிருஷ்ணா ) இருவரும் ஒரு புள்ளியில் இடம் மாறும் போது நடக்கும் திருப்பங்களே யட்சன் . கேட்கும் போது விறுவிறுப்பாக இருக்கும் கதையை கிரிஸ்பாக கொண்டு போகாமல் ப்ளாக் காமெடியை புகுத்தி கொஞ்சம் இழுஇழுப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் ...

அறிந்தும் அறியாமலும் படத்தின் குட்டி போல ஒரு கேரக்டர் ஆர்யாவுக்கு . சக நடிகரான அஜித்தை தல தல என்று கொண்டாடும் ரசிகனாக வரும் ஆர்யா அலட்டிக் கொள்ளாமல் அழகாக நடித்திருக்கிறார் . ரவுடிகளுக்கு மத்தியில் அவர் லவ்வை ப்ரொபோஸ் செய்யும் விதமே அழகு . கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் கற்றது களவு , கழுகு போன்ற படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர் கிருஷ்ணா . தன் அண்ணனாக இருந்தாலும் முதன் முறை பெரிய இயக்குனருடன் கை கோர்த்திருக்கிறார் . ஆடிஷனில் நடித்துக் காட்டும் சீனில் ஸ்கோர் செய்யும் கிருஷ்ணா படத்தில் நடிகனாக பெயர் வாங்க நிறைய ஸ்கோப் இருந்தும் நழுவ விட்டிருக்கிறார் . அவர் வசன உச்சரிப்புகளையும் , முக பாவங்களையும்  கரக்ட் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ...


தீபா சன்னிதி  , சுவாதி ரெட்டி இருவரில் இரண்டாமவர் கவர்கிறார் . தெத்துப்பல் தெரிய சிரிக்கும் அழகிலும் , லவ்வரின் அப்பாவை கலாய்க்கும் இடத்திலும் ஸ்வாதி பழனி பஞ்சாம்ருதம் . தன்னை கொல்ல வந்தவனை கூட காதலிக்கும் மிகப் பெரிய மனசு ( மனசு மட்டுமா !? ) தீபா சன்னிதிக்கு . வில்லனாக அதில் ஹுசைன் லிப் மூவ்மேண்டில் இடித்தாலும் " நான் என்ன சொன்னேன் " என்று மாறி மாறி கேட்கும் இடத்தில் கைதட்டல் வாங்குகிறார் . இவர் கேரக்டரில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் டேஸ்டி . வழக்கம் போல ஓவர் ஆக்டிங் செய்தாலும் படம் தொய்வடையும் போது அண்ணன் போல இருந்து காப்பாற்றுகிறார் தம்பி ராமையா .

ஆர்.ஜே பாலாஜியின்   குரல் மற்றும் ஹியுமர் சென்ஸ் படத்துக்கு பலம் . ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆனது பலவீனம் . பொன்வண்ணன் சீர்யசான கேரக்டரா ? இல்லை காமடியனா என்பதில் இயக்குனருக்கே குழப்பம் போல . அஜய் ரத்னம் மேல் என்ன கோபமோ ?! . கமிஷனராக இருந்தவரை இன்ஸ்பெக்டர் ஆக்கி விட்டார்கள் . சென்ராயன் , பைவ் ஸ்டார் கிருஷ்ணா , ஒய்.ஜி , எஸ்.ஜே சூர்யா என்று படத்தில் நிறைய காஸ்டிங் பட் எக்செப்ட் எஸ்.ஜே நாட் மச் இம்ப்ரெசிங் .  யுவனின் இசையில் பாடல்கள் சூப்பர் . ஆனால் அவர் குரலில் வந்த " கொஞ்சலாய் " , " இன்னும் என்ன " என்று இரண்டு மெலடிகளையும் ஒன்றை ஆர்.ஜே பாலாஜிக்கு கொடுத்தும் , மற்றொன்றை குத்துப் பாட்டுக்கு நடுவில் வைத்தும் வீணடித்திருக்கிரார்கள் . அயிட்டம் சாங்குக்கு ஆர்த்தியை ஆட வைத்தது அமேசிங் ...

ஆர்யா , கிருஷ்ணா இடம் மாறும் சீன் ( அது கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா ? ) , வில்லன் கேரக்டரின் ட்விஸ்ட் , அட போட வைக்கும் சில ப்ளாக் காமெடிகள் , விஷ்ணு - யுவன் கூட்டணி என படத்திற்கு நிறைய ப்ளஸ்கள் . திடுக் திடுக் திரைக்கதை அமைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் நம்மை ஒன்ற வைக்காமல் பயணிக்கும் படம் , சீரியசாக இருந்திருக்க வேண்டிய படம் ஓவர் காமெடி முயற்சிகளால் சிலாக்கியாகி போனது போன்றவை பெரிய மைனஸ் . ஒரு படத்தின் வெற்றிக்கு  திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தனி ஒருவன் . அதே சுபா யட்சனில் இருந்தும் எந்த மேஜிக்கும் நிகழாதது துரதிருஷ்டம் . க்ரைமுக்கும் , காமெடிக்கும் நடுவில் தள்ளாடி , இயக்குனரின் முந்தைய படங்கள் அளவுக்கு இம்பேக்டை ஏற்படுத்தாத இந்த  யட்சன் ஒரு வழிப்போக்கன்  ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங்              : 2.5* / 5* 


1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...