எப்படி இருக்கிறாய்
பெண்ணே !
நீ
எங்கே இருக்கிறாய்
என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விசும்பலுடன் நான்...
காலத்தின் கைங்கர்யத்தால்
நாம் பிரிந்தாலும்
நம் காதலை
பிரிக்காமல்
பெயர்களில் தாங்கியபடி
நிற்கிறது ஒற்றை மரம்...
புத்தருக்கு ஞானம்
பிறந்தது
போதி மரத்தில்
எனக்கு
காதல் பிறந்தது
ஒற்றை மரத்தில்...
மரத்தின் மடியில்
நமக்கு நாமே நிழலாய்
எத்தனை நாட்கள்
நின்றிருக்கிறோம்...
உன்னைப் பார்த்த
பிறகு தான்
என் கிறுக்கல்களும்
கவிதைகளாயின...
உனக்காக நான் எழுதிய
கவிதைகளில்
பயன்பட்டவர்கள் பலர்...
இன்று
அவர்களெல்லாம்
கல்யாணமாகி குழந்தைகளுடன்...
நல்ல வேலை
நாம் சந்தித்த நாட்களில்
நம்மிடம்
கைபேசி இல்லை...
இருந்திருந்தால்
ஒரு நாள் பிரிவிற்கே
உதடுகளில் முத்தம்
கிடைத்திருக்குமா ?...
அந்த
முத்தத்தின் ஈரம்
என் இதழ்களில்
உன் பிரிவினால்
ஈரம்
என் கண்களில்...
புகை பிடிப்பதை
குறைக்கச் சொன்னாய்
விட்டொழித்தேன்.!
கோபம் கூடாதென்றாய்
காந்தியைப் போலானேன்...
நீ
சொன்னதையெல்லாம் செய்தேன்
உன்னை
மறந்து விடச் சொன்னாயே
அதைத் தவிர..
மண்ணுக்குள் போனாலும்
மறக்க முடியுமா
அந்த நாட்களை!
ஒரு பார்வைக்கு
ஏங்கிய நாட்கள்...
ஒரே பார்வையில்
ஓராயிரம் அர்த்தம்
சொன்ன நாட்கள்...
கோடையில்
குளிர்ந்த நாட்கள்...
பனியில்
வேர்த்த நாட்கள்...
எத்தனை முறை
பேசிக் கொண்டாலும்
சாகும் வரை
சலிக்காத நாட்கள்...
உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த
வாழ்க்கையில்
நீ
ஏன் வரவில்லை
என்று யோசித்தேன்...
இன்று
உன்னைப் பிரிந்திருக்கும்
இந்த நாட்களை
நான்
ஏன் வாழ்கிறேன்
என்று யோசிக்கிறேன்...
இருந்தும் வாழ்கின்றேன்!
நம்
மூன்றாண்டு காதலில்
மூச்சைப் பிடித்தபடி...
சயனைடு உண்டவன்
ருசியை உணறும் முன்
செத்துப் போவான்...
நானும்
மனதால் மரித்துப் போனேன்
நீ
பிரிந்த அந்த நொடியில்...
நம் பிரிவின்
ஒரே பயன்
இது போன்ற
சில
நூறு கவிதைகள்...
அதில் ஒன்றாவது
உன்
கைகளில் சேரும்
என்ற நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...
12 comments:
அருமையான கவிதை சகோ
நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...//
nice....
நன்றி தமேஷ் ....
நன்றி இராஜராஜேஸ்வரி...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
எத்தனை முறை
பேசிக் கொண்டாலும்
சாகும் வரை
சலிக்காத நாட்கள்...
சலிக்காத அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
/Rathnavel said/நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நன்றி....
சலிக்காத அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்
நன்றி இராஜராஜேஸ்வரி
அனந்து, தங்களின் இந்தப் பதிவைப்பற்றி வலைச்சரத்தில்(http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_20.html)குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
RAMVI said...
அனந்து, தங்களின் இந்தப் பதிவைப்பற்றி வலைச்சரத்தில்(http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_20.html)குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
பார்த்தேன் ரசித்தேன் ! மிக்க நன்றி ...
//நம் பிரிவின்
ஒரே பயன்
இது போன்ற
சில
நூறு கவிதைகள்...
அதில் ஒன்றாவது
உன்
கைகளில் சேரும்
என்ற நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...\\
இப்படியான நம்பிக்கையினாலேயே கவிஞர்கள் உருவாகிறார்கள்.
சயனைடு உண்டவன் ருசியை உணரும் முன் செத்துப்போவதும், பிரிவை உணரும் முன் காதலன் மனதால் மரித்துப் போவதும் அழகான உவமைகள்...
\\புகை பிடிப்பதை
குறைக்கச் சொன்னாய்
விட்டொழித்தேன்.!
கோபம் கூடாதென்றாய்
காந்தியைப் போலானேன்...//
உண்மைக் காதல் மிளிர்கிறது உங்கள் வரிகளில்...
அடுத்த கவிதை எப்போ...?
காத்திருக்கிறேன்...
- நுண்மதி.
//உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த
வாழ்க்கையில்
நீ
ஏன் வரவில்லை
என்று யோசித்தேன்...//
ரசித்த வரிகள்..!:)
nunmadhi said...
//நம் பிரிவின்
ஒரே பயன்
இது போன்ற
சில
நூறு கவிதைகள்...
அதில் ஒன்றாவது
உன்
கைகளில் சேரும்
என்ற நம்பிக்கையில்
நிமிர்ந்து நிற்கிறேன்
ஒற்றை மரமாய்...\\
இப்படியான நம்பிக்கையினாலேயே கவிஞர்கள் உருவாகிறார்கள்.
சயனைடு உண்டவன் ருசியை உணரும் முன் செத்துப்போவதும், பிரிவை உணரும் முன் காதலன் மனதால் மரித்துப் போவதும் அழகான உவமைகள்...
\\புகை பிடிப்பதை
குறைக்கச் சொன்னாய்
விட்டொழித்தேன்.!
கோபம் கூடாதென்றாய்
காந்தியைப் போலானேன்...//
உண்மைக் காதல் மிளிர்கிறது உங்கள் வரிகளில்...
அடுத்த கவிதை எப்போ...?
காத்திருக்கிறேன்...
- நுண்மதி.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நுண்மதி.
...!
திவ்யா @ தேன்மொழி said...
//உன்னைச் சந்திப்பதற்கு முன்
நான் வாழ்ந்த
வாழ்க்கையில்
நீ
ஏன் வரவில்லை
என்று யோசித்தேன்...//
ரசித்த வரிகள்..!:)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment