14 July 2011

நான் "வெஜ்" - நயன்தாரா

                                
       பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார் , பிரபுதேவா - நயன்தாரா திருமணம் எப்போது?.., "ஸ்ரீ ராம ராஜ்ஜியம்" தெலுங்கு படத்தோடு நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு, ஷூட்டிங் கடைசி நாளில் நயன்தாரா கண்ணீர் மல்க விடை பெற்றார் ... இவையெல்லாம் சமீப காலமாக பத்திரிக்கைகளை அலங்கரிக்கும் முக்கிய செய்திகள் ..                      

              பிரபலங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வருவது சகஜம் தான் என்றாலும்,மிக சமீபத்தில் நயன்தாரா பற்றி நான் படித்த செய்தியே இந்த பதிவிற்கு மூல காரணம்......"ஸ்ரீ ராம ராஜ்ஜியம்" படத்தில் சீதையாக நடிக்கும் நயன்தாரா அந்தப் படத்தில் நடித்த காலகட்டத்தில் சுத்த சைவ உணவையே உண்டதாகவும்,கடுமையான ஒழுக்கத்தை கடைபிடித்ததாகவும் சொல்லியிருக்கிறார்..மேலும் அம்மன் வேடத்தில்
நடிக்கும் நடிகைகள் கூட படம் முடியும் வரை கோயில்களுக்கு தொடர்ந்து செல்வதாகவும் கூறியிருக்கிறார் ...
                                          
                   நடிகர்கள் தான் ஒரு படத்திற்காக நான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று ஓவர் பில்ட் அப் கொடுப்பார்கள் என்று பார்த்தால் இப்போது அந்த வரிசையில் நயன்தாரா.. கதா நாயக, நாயகிகள் சினிமாவில் இருப்பது போல் தான் நிஜத்திலும் இருப்பார்கள் என்ற மக்களின்
நம்பிக்கையெல்லாம் மலையேறி விட்ட இன்றைய கால கட்டத்தில் இந்த மாதிரியான ஜோடனைகலெல்லாம் தேவை தானா..?
                                                                        
            நயன்தாரா சைவ உணவையும் , ஒழுக்கத்தையும் தன் வாழ்நாள் முழுக்க கடைபிடிக்கப் போவதாக சொல்லியிருந்தால் அதைப் பாராட்டலாம்..இந்தப் படத்திற்காக இவற்றை கடைபிடித்தேன் என சொல்வது ஏமாற்று வேலை...ஏனெனில் தனி மனித ஒழுக்கம் என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று....
அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான விஷயம் அல்ல...மேலும் ஓர் நடிகை அம்மனாக நடித்தாலும் சரி இல்லை அம்மணமாக நடித்தாலும் சரி அது வெறும் நடிப்பு தான்....அதைத்தாண்டி வேறொன்றுமில்லை..
                                               
                நல்ல வேலை நயன்தாரா வானம் படத்தில்
அனுஷ்கா நடித்த வேடத்தில் நடிக்கவில்லை... அவர் பாட்டுக்கு நடைமுறைப் பயிற்சியில் இறங்கியிருந்தால் கோர்ட்,கேஸ் என்று அலைய வேண்டியிருந்திருக்கும் ....
                                          
               பொதுவாக இந்த காலத்து நடிகைகள் உடல் அழகை மட்டுமே மூலதனமாக்குவதால் அவர்களுக்கு பொது மக்களின் மதிப்பும்,மரியாதையும் கிடைப்பது கடினம்...தேசிய விருது பெற்ற பிரியா மணி கூட தன்னை விருது நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அடுத்தடுத்த படங்களில் ( தெலுங்கு ) முடிந்த வரை கவர்ச்சி காட்டி வருகிறார்..இது அவர்களது தொழில்..அவர்களது விருப்பம்..அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை..அதே போல் அவர்களும் "ஒழுக்க" அறிக்கைகள் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை..

                                                 
            கற்புக்கரசி சீதா தேவி வேடத்தில் அடுத்தவள் கணவனை தட்டிப் பறித்த நயன்தாரா நடிப்பதா என்று சிலர் சர்ச்சையை கிளப்பினார்கள்..."தீ" என்றால் நாக்கு சுட்டு விடுமா ? அது போலத்தான் இதுவும்..ஆனால் நெருடலான ஒரு விஷயம் என்னவென்றால் கடவுள் பெயரை சொல்லி படம் எடுப்பவர்களும் சரி, கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் சரி குறி வைக்கும் ஒரே எளிமையான இலக்கு இந்து கடவுள்களும்,இந்து மத பழக்கவழக்கங்களும்...

            இங்கு எவரும் சரஸ்வதியை நிர்வாணமாக படம் வரையலாம்,ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என்று சான்றிதழ் கேட்கலாம் ,சீதையின் ஒழுக்கத்தை கேலி செய்யும் விதத்தில் திரைப்படம் எடுக்கலாம்,ஏன்  நான் தான் சீதை என்றே சொல்லிக் கொள்ளலாம்..ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்தியா "மத சார்பற்ற நாடு"..  இவர்களைப் பொறுத்த வரை இந்தியா "இந்து மத சார்பற்ற நாடு"...அதையும் மீறி உண்மையை சொல்பவர்கள் பழமை வாதிகள் ,கேள்வி கேட்பவர்கள் மத வெறியர்கள்....

7 comments:

Anonymous said...

very good finishing of the story.
srinivasan, Madurai

Eswaran Kandaswamy said...

Miga nalla karuthukal.. (Hi... Hi... innum konjam nalla photokkal pottu irukkalam)

Anonymous said...

எங்கேயோ தொடங்கி நச்சுன்னு முடித்துவிட்டீர்கள்..

ananthu said...

Anonymous said...
"very good finishing of the story"
srinivasan, Madurai

Thanks...

Eswaran Kandaswamy said...
Miga nalla karuthukal.. (Hi... Hi... innum konjam nalla photokkal pottu irukkalam)

Thanks...

Reverie said...
எங்கேயோ தொடங்கி நச்சுன்னு முடித்துவிட்டீர்கள்

Thanks...

padman said...

Pramatham. Paasangu ozukkaththai parapatchamintri kuttiyulla katturai. Muththaaippu silarathu mukaththil vizuntha arai. Thodarattum Nal Ilakkiyap Pani.

ஷஹி said...

"கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் சரி குறி வைக்கும் ஒரே எளிமையான இலக்கு இந்து கடவுள்களும்,இந்து மத பழக்கவழக்கங்களும்..." இந்த தங்களுடைய கருத்து புரியவில்லை..எதன் அடிப்படையில் குற்றம்சாட்டுகிறீர்கள் என்று கூறினால் நலம்..இந்தியா மத சார்பற்ற நாடாக இருப்பதில் தங்களுக்கு என்ன பிரச்சினை? விளக்கவும்?

ananthu said...

ஷஹி..இந்தியா மத சார்பற்ற நாடாக இருப்பதில் எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை... நான் அதை முழு மனதுடன் ஆதரிக்கிறேன்..ஆனால் பகுத்தறிவு முகமூடி பூசிக்கொள்ளும் சிலரும், போலி மத சார்பின்மையை போற்றும் அரசியல்வாதிகளும் இந்தியாவை இந்து மத சார்பற்ற நாடு என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதை எதிர்க்கிறேன்..சில உதாரணங்களை என் பதிவிலேயே காணலாம்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...