5 August 2011

கண்களில் விழுந்தாய்...

          
கண்களில் விழுந்தாய்
காதலில் கரைந்தாய்..
                                    
சந்தோசம் கொடுத்தாய்
கவலைகள் கெடுத்தாய்...

எனக்கு வலித்தால்
நீ துடித்தாய்
துன்பம் காட்டாமல்
நடித்தாய்...

எனை பார்த்துக்கொண்டாய்
குழந்தையாய்
உனை பார்த்ததில்லை
அகந்தையாய்...
                                       
என் மீது
எனக்கே
நம்பிக்கை ஊட்டினாய்
என்னுள்
ஞானத்தீ மூட்டினாய்...

துவண்ட போது
தேற்றினாய்
திறமைகளை போற்றினாய்...

எனக்காக பிறந்தாய் 
சுயநலம் மறந்தாய்...

இப்படி எல்லாமே தந்தாய்...

காமமற்ற பொழுதுகளில் 
நீ
மேலும் ஒரு தாய்...  

 

7 comments:

Anonymous said...

காமமற்ற பொழுதுகளில்
நீ
ஒரு தாய்...

அருமையான வரிகள்...

Anonymous said...

Super Sir

Anonymous said...

காமமற்ற பொழுதுகளில்
நீ
ஒரு தாய்...

அருமை Ananthu
-Madhu

மதுரை சரவணன் said...

super...vaalththukkal

ananthu said...

Reverie said...
காமமற்ற பொழுதுகளில்
நீ
ஒரு தாய்...

அருமையான வரிகள்...

நன்றி...

Anonymous said...
காமமற்ற பொழுதுகளில்
நீ
ஒரு தாய்...

அருமை Ananthu
-Madhu

நன்றி Madhu...

மதுரை சரவணன் said...
super...vaalththukkal

Thanks Saravanan...

Anonymous said...

\\எனக்கு வலித்தால்
நீ துடித்தாய்
துன்பம் காட்டாமல்
நடித்தாய்...\\

\\எனை பார்த்துக்கொண்டாய்
குழந்தையாய்
உனை பார்த்ததில்லை
அகந்தையாய்...\\

\\ எனக்காக பிறந்தாய்
சுயநலம் மறந்தாய்...\\

\\காமமற்ற பொழுதுகளில்
நீ
மேலும் ஒரு தாய்... \\

ஆடவனும் அவன் அன்புக்குரியவளும்
மணமாவதற்கு முன்
உங்கள் வரிகளை ஒருமுறை
உணர்ந்தால் போதுமே...

விவாகரத்து விடைபெற்று
வேதனைகள் தடைபட்டு
இதயங்கள் இணைந்து
இன்பம் தேடி வர...

நான் ஒவ்வொரு முறை இந்தக் கவிதையைப் படிக்க வரும்போதும் குறைந்தது நான்கு முறையாவது படிப்பது வழக்கம். என்னைக் கட்டிப்போட்ட கவிதை இது. இன்றுதான் பின்னூட்டமிட முடிந்தது. அடுத்த காதல் பயணத்திற்கான எதிர்பார்ப்புடன்...

- நுண்மதி.

ganesh said...

காமமற்ற பொழுதுகளில்
நீ
மேலும் ஒரு தாய்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...