7 August 2011

நட்பிற்கினியவளே...

வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...
                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...
                               
என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...

13 comments:

Anonymous said...

Good one ananthu-Madhu

ananthu said...

Thanks..Madhu..

கவிமுகில் said...

அருமையான கவிதை, வாழ்த்துகள்.

ananthu said...

கவிமுகில் said...
அருமையான கவிதை, வாழ்த்துகள்.

நன்றி..

Anonymous said...

//வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...//

தூய்மையான நட்பை பறைசாற்றும் அழகான வரிகள்.ஒரிரு முறைகளுக்கு மேல் படித்துப் பார்த்தேன்.மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று...!

ஊர் ஆயிரம் பேசினாலும், நட்பு தடம் மாறுவதில்லை என்பதை அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள் போலும்...!

நல்ல கவிதைக்கு நன்றி அனந்து...!

முனைவர் இரா.குணசீலன் said...

நட்பூ...

அருமையான கவிதை..

ananthu said...

nunmadhi said...
//வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...//

தூய்மையான நட்பை பறைசாற்றும் அழகான வரிகள்.ஒரிரு முறைகளுக்கு மேல் படித்துப் பார்த்தேன்.மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று...!

ஊர் ஆயிரம் பேசினாலும், நட்பு தடம் மாறுவதில்லை என்பதை அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள் போலும்...!
நல்ல கவிதைக்கு நன்றி அனந்து..

உங்கள் பின்னூட்டத்தை பார்த்தாலே நீங்களும் கவிதை நன்றாக எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன் ... வருகைக்கு நன்றி ....

ananthu said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நட்பூ...
அருமையான கவிதை..

நன்றி ...

அனைவருக்கும் அன்பு  said...

மெல்லிய நூல்தான் ஆனாலும் எளிதில் தகர்துவிடமுடியாத சிலந்தியின் வலை போன்றது நட்பு ..........உங்களின் ஆழ்ந்த நட்பின் சுவாசிப்பு .......மகிழ்வை தருகிறது ........எளிய நடை எதார்த்தம் உணர்த்தும் வரிகள் அழகு

Anonymous said...

வாசிக்க ரசனையாக நன்றாக உள்ளது . நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

arul said...

arumai

ananthu said...

கோவை மு.சரளா said...
மெல்லிய நூல்தான் ஆனாலும் எளிதில் தகர்துவிடமுடியாத சிலந்தியின் வலை போன்றது நட்பு ..........உங்களின் ஆழ்ந்த நட்பின் சுவாசிப்பு .......மகிழ்வை தருகிறது ........எளிய நடை எதார்த்தம் உணர்த்தும் வரிகள் அழகு

உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

kovaikkavi said...
வாசிக்க ரசனையாக நன்றாக உள்ளது . நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...