" அப்பா " சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ ... வெளியில் சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளே அழ வைக்கும் மனிதர் ... கல்யாணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருப்பவர் கூட ஒரு அவசரம் என்றால் அணுகும் நபர் ...
"அப்பா வந்தார் " குறும்படம் இந்த பாசத்தை குறைவான நிமிடங்களில் நிறைவாக பதிய வைக்கும் குறும்படம் ... அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்ட ஒரு மகனுக்கு முன்னால் திடீரென பத்து வருடங்கள் கழித்து அப்பா வந்து நின்றால் எப்படி இருக்கும் ? ...
அப்பாவாக சுவாமிநாதன் நடராஜனும் , மகனாக நவீன் நாதனும் நன்றாக நடித்திருக்கிறார்கள் ... அதிலும் அப்பாவாக வருபவர் அப்பப்பா என்ன இயல்பான நடிப்பு ... ஒளிப்பதிவு அருமை ... இசை ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் முடிவில் மனதில் நிற்கிறது ... வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து நம்மவர்கள் பணியாற்றியிருக்கும் படம் ...
படத்தின் ஆரம்ப காட்சிகளில் கிளைமாக்ஸ் காட்சிக்கான லீட் கொடுத்ததை தவிர்த்திருக்கலாம் ... வேலை நிமித்தமாகவோ , குடும்ப சூழ்நிலையாலோ அப்பாவை பிரிந்து வாழ்பவர்களுக்கு ஒரு நிமிடம் அவரை நினைவுபடுத்தும் படம் ...
இயக்கம் : வெங்கடேஷ் பாபு தயாரிப்பு : தீபா ராமானுஜம்
இயக்கம் : வெங்கடேஷ் பாபு தயாரிப்பு : தீபா ராமானுஜம்
No comments:
Post a Comment