30 December 2011

என்றென்றும் ராஜா ...

                              
சென்னை வானிலை மையம் இன்று " தானே " புயல் கரையை கடப்பதால் சென்னை உட்பட கடலோர பகுதிகளில் பெரும் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது , ஆனால் அதற்கு முன்பே  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் ...

வார இறுதியில் வைக்காமல் வேலை நாளில் நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்களே கூட்டம் குறைவாக இருக்குமோ என்ற எள்ளளவு சந்தேகத்தை தவிடு பொடியாக்கியது வானை பிளந்த ரசிகர்களின் கூட்டம் ... தாமதமாக ஏழு மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி  முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும்  இந்த பாட்டு இல்லையே  , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...

பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ :
                     
*** குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில்
" ஜனனி ஜனனி " யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது ***

                 
*** " அம்மா என்றழைக்காத " பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம் ... " என் இனிய", "பூவே செம்பூவே " போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் " வச்ச பார்வை " என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார் ... " பூவே " பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு , பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது ... பாடகரையும் , பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல்  ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் ***

                       
*** இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள் ... அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட் ... கான்சர்டில் அதிக பாடல்கள் பாடியவரும் இவரே...
 " நானாக நானில்லை " யில் ஆரம்பித்து " மடை திறந்து " , " கண்மணியே காதல் " , " சுந்தரி கண்ணால் " என்று மெலடிகளால் நம்மை கட்டிப் போட்டவர் " இளமை இதோ " வில் முடிக்கும் போது ஆட வைத்துவிட்டார் ... பாடல்களுக்கு நடுவில் எஸ்.பி.பி யின் இம்ப்ரோவைசெஷன் அருமை ***

*** இசைஞானி தன் குரலில் " ஜனனி " , " நான் தேடும் " , " ஒரு ஜீவன் " , அவரே முதன் முதலில் எழுதிய " இதயம் ஒரு கோவில் " என்று பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே  சிம்பொனி , பாடல் கம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார் ... தொகுத்து வழங்க வேண்டிய பிரகாஷ்ராஜும் ஒரு பார்வையாளராக இதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தார் ***


*** உலகநாயகனால் நேரில் வர முடியாததால் அவர் பேசியதை வீடியோவில் காட்டினார்கள் ... கமல் பாடிய " சுந்தரி நீயும் " பாடலை ஹரிச்சரனும் , "நினைவோ ஒரு பறவை " , " ராஜா கைய வச்சா " பாடல்களை யுவனும் பாடினார்கள் ... யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார் ***

*** தன் வசீகரிக்கும் குரலில் " சின்ன கண்ணன் " பாடலை பாடி முடித்தவுடன் பால முரளி கிருஷ்ணாவும் இசைஞானியும் இறுக தழுவிக்கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது ... பாடலை கேட்கும் போது ஜேம்ஸ் வசந்தனின் "கண்கள் இரண்டால் " பாடல் நினைவிற்கு வந்தது ***

*** சின்ன குயில் சித்ரா " புத்தம் புது காலை " , " பருவமே " , " சுந்தரி " உட்பட பல பாடல்களை பாடி உருக வைத்தார் ***

*** ஹரிஹரன் " நீ பார்த்த " பார்வையில் ராகத்தை மாற்றினாலும் குரலில் கிறங்கடித்தார் ... " என் மன வானில் " பாடலை சுருதி பிசகாமல் பாடினாலும் தமிழ் உச்சரிப்புகளை கொஞ்சம் கொலை செய்தார் ***

*** தீபன் சக்ரவர்த்தி - உமா ரமணன் குரலில் " பூங்கதவே " , கார்த்திக் - நான்சி  குரலில் " ஏதோ மோகம்  " , ஸ்ரீராம் குரலில் " இளங்காத்து வீசுதே " , பவதாரிணி குரலில் " கும் சும் " ஹிந்தி பாடல் இவையெல்லாம் சொக்க வைத்த மற்ற பாடல்கள் ***

                             
*** சிம்பொனி பின்னணியில் இசைஞானி பாடிய " இதயம் போகுதே " இரண்டே வரிகளானாலும் இதயத்தை வருடியது ...
" பா " , " அழகர் சாமியின் குதிரை " போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன ***

*** " சீனி கம் " , " பா " போன்ற படங்களின் இயக்குனர் பால்கி இந்தியாவிலேயே பின்னணி இசையில் உண்மையான இசை இயக்குனர் இசைஞானி ஒருவர் தான் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி இசையிலிருந்து தழுவி பல பாடல்களுக்கு இசையமைக்கலாம் என இளம் இசையமைப்பாளர்களுக்கு டிப்சும் கொடுத்தார்...இதை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள் ***

***ஆறு வருடங்களுக்கு முன் இதே அரங்கத்தில் நடந்த இசைஞானியின் முதல் கான்சர்டில் இடம்பிடித்த மனோ , சாதனா சர்கம் , ஸ்ரேயா கோசல் போன்றோர் இதில் மிஸ்ஸிங் ... அதே போல் சினிமா பாடல்கள் தவிர இசைஞானியின் கீதாஞ்சலி உட்பட மற்ற ஆல்பங்களிலிருந்து  பாடல்கள் இடம் பெறாததும் சற்று ஏமாற்றமே ***

*** கமல் தன் வீடியோ உரையில் குறிப்பிட்டது போல இசைஞானி தன்னுடைய சோகத்தை மறைத்து தன் இசையின் மூலம் மற்றவர்களின் சோகத்தை குறைக்கிறார் என்பது தன்னுடைய துணைவியார் ஜீவா இறந்து சில காலமே ஆன நிலையிலும் தன் இசை வெள்ளத்தால் எல்லோரையும் நேற்று கவலைகளை மறக்க செய்த இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் புலனாகிறது ***


24 comments:

Angel said...

சென்னையில் புயல் என்று கேள்விபட்டேன் .நீங்க இசை மழையில் நனைந்து வந்திருக்கீங்க .ராஜா ராஜா தான் .ஒவ்வொரு பாடலையும் மறக்காம குறிபிட்டிருக்கீங்க..பகிர்வுக்கு நன்றி

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனந்து .

Admin said...

ராஜா ராஜாதான்..
பகிர்வுக்கு நன்றி..


அன்போடு அழைக்கிறேன்..

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

ஹேமா said...

அனந்து...இளையராஜா,எஸ்.பி.பி,கமல்....நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.கடவுள் எங்களுக்குத் தந்த மூன்று இசை (ஸ்)வரங்கள் இவர்கள் !

Angel said...

சென்னையில் புயல் என்று கேள்விபட்டேன் .நீங்க இசை மழையில் நனைந்து வந்திருக்கீங்க .ராஜா ராஜா தான் .ஒவ்வொரு பாடலையும் மறக்காம குறிபிட்டிருக்கீங்க..பகிர்வுக்கு நன்றி

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனந்து .

Yaathoramani.blogspot.com said...

நிகழ்ச்சியை மிக அழகாக தொகுத்துத் தந்துள்ளீர்கள்
கேட்கும் ஆர்வத்தை அதிகம் தூண்டிப் போகிறது
தொலைக்காட்சி ஒளிபரப்பை எதிர்பார்த்து உள்ளோம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3

ananthu said...

angelin said...
சென்னையில் புயல் என்று கேள்விபட்டேன் .நீங்க இசை மழையில் நனைந்து வந்திருக்கீங்க .ராஜா ராஜா தான் .ஒவ்வொரு பாடலையும் மறக்காம குறிபிட்டிருக்கீங்க..பகிர்வுக்கு நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனந்து ...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின் ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

மதுமதி said...
ராஜா ராஜாதான்..
பகிர்வுக்கு நன்றி..
அன்போடு அழைக்கிறேன்..
வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...! நிச்சயம் வருகிறேன் ...

ananthu said...

ஹேமா said...
அனந்து...இளையராஜா,எஸ்.பி.பி,கமல்....நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.கடவுள் எங்களுக்குத் தந்த மூன்று இசை (ஸ்)வரங்கள் இவர்கள் !

ஹேமா , எனக்கு மிகவும் பிடித்த மூவரையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ...! அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே வரங்கள் ...!உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

Ramani said...
நிகழ்ச்சியை மிக அழகாக தொகுத்துத் தந்துள்ளீர்கள்
கேட்கும் ஆர்வத்தை அதிகம் தூண்டிப் போகிறது
தொலைக்காட்சி ஒளிபரப்பை எதிர்பார்த்து உள்ளோம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...! நிச்சயம் இந்த நிகழ்ச்சியை நிறைய தடவை ஒளிபரப்புவார்கள் என்று நம்புகிறேன்....! மீண்டும் பல முறை இசையை அனுபவிக்க நானும் காத்திருக்கிறேன் ... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி .

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

அனுஷ்யா said...

தவறவிட்டதில் வருத்தம்..
பகிர்ந்தமைக்கு நன்றி...

அனுஷ்யா said...

நம் வலையில் கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

ஷைலஜா said...

அனந்து நீங்க அழைச்சபடி நானும் 2011ம் பதிவு எழுதிட்டேன்..

நன்றி அழைப்புக்கு

புத்தாண்டுவாழ்த்துகள்!

ananthu said...

மயிலன் said...
தவறவிட்டதில் வருத்தம்..
பகிர்ந்தமைக்கு நன்றி...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

மயிலன் said...
நம் வலையில் கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

நன்றி...!

ananthu said...

ஷைலஜா said...
அனந்து நீங்க அழைச்சபடி நானும் 2011ம் பதிவு எழுதிட்டேன்..
நன்றி அழைப்புக்கு
புத்தாண்டுவாழ்த்துகள்!

என் அழைப்பினை ஏற்று பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

இராஜராஜேஸ்வரி said...

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் ...

இனிமையான பகிர்வு, பாராட்டுக்கள்..

பிரசன்னா கண்ணன் said...

மிகவும் தாமதமாக ஆரம்பித்து நிகழ்ச்சி நீண்டு கொண்டே சென்றதால், நான் பத்தரை மன்னிக்கே கிளம்பிவிட்டேன்..
நிகழ்ச்சியை பற்றிய உங்கள் பார்வை, முடியும் வரை இருந்திருக்கலாமோ என்று எங்க வைத்து விட்டது.. :-(

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் புயல் இல்லாத இசைஞானியின் இசை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இன்பமாக நனைந்தோம் ...
இனிமையான பகிர்வு, பாராட்டுக்கள்..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

ananthu said...

பிரசன்னா கண்ணன் said...
மிகவும் தாமதமாக ஆரம்பித்து நிகழ்ச்சி நீண்டு கொண்டே சென்றதால், நான் பத்தரை மன்னிக்கே கிளம்பிவிட்டேன்..
நிகழ்ச்சியை பற்றிய உங்கள் பார்வை, முடியும் வரை இருந்திருக்கலாமோ என்று எங்க வைத்து விட்டது.. :-(

நிகழ்ச்சியை சரியான நேரத்தில் துவக்கியிருந்தால் தாமதத்தை தவிர்த்திருக்கலாம் ..உங்களுடன் அப்படியே ஒத்துப்போவதில் மிக்க மகிழ்ச்சி

பிரசன்னா கண்ணன் said...

நன்றி ஆனந்து..
நானும் அடுத்த நாளே இந்த நிகழ்ச்சியைப் பற்றிய என் பார்வையை என் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்..
நேரமிருப்பின் படித்து பார்க்கவும்..

ananthu said...

நன்றி ஆனந்து..
நானும் அடுத்த நாளே இந்த நிகழ்ச்சியைப் பற்றிய என் பார்வையை என் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்..
நேரமிருப்பின் படித்து பார்க்கவும்..

நிச்சயம் வந்து பார்க்கிறேன் ...உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

Anonymous said...

இளையராஜா,எஸ்.பி.பி,....கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.கடவுள் எங்களுக்குத் தந்த இசை (ஸ்)வரங்கள் இவர்கள் ! - baskar

ananthu said...

Anonymous said...
இளையராஜா,எஸ்.பி.பி,....கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.கடவுள் எங்களுக்குத் தந்த இசை (ஸ்)வரங்கள் இவர்கள் ! - baskar

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி .. .!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...