31 March 2012

3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி ...

சூப்பர் ஸ்டார் மகளின் இயக்கத்தில் அவரின் மருமகன் ஹீரோ - சூப்பர் ஆக்டரின் மகள் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பான காம்பினேஷன் , தனுஷை ஒரே நாளில் ஒபாமாவாக்கிய " வை திஸ் கொலவெறி டி " பாடல் , அதை அருமையாக மார்கெட்டிங் செய்த விதம் , அட்ராக்டிவான ஸ்டில்கள் இவையெல்லாம் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுத்திருந்தாலும் ,  ஐஸ்வர்யா தனுஷை  பார்த்து  " வை திஸ் கொலவெறி " என்று கேட்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது படம் ...

முதல் சீனிலேயே தனுஷ் இறந்து கிடக்க அவரின் மீதான ஸ்ருதியின் நினைவலைகளில் தொடங்குகிறது கதை ... பணக்கார தொழிலதிபரின் மகன் ராம் ( தனுஷ் ) , தன் மகளை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்ப வேண்டுமென்ற முயற்சியில் இருக்கும் ஒரு தாயின் மகள் ஜனனி ( ஸ்ருதி ) இருவருமே +2 வில் இருந்து காதலித்து , பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்... இரண்டாவது பாதியில் தனுஷ் பயோ போலர் டிஸார்டர் என்ற மனவியாதியில் அவதிப்பட்டதும் , அதன் முடிவில் என்ன ஆனார் என்பதும் நண்பன் செந்தில்
( சுந்தர் ) பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து விளக்கப்படுகிறது ...

தனுஷ் பள்ளி மாணவன் , குடும்பஸ்தன் என்ற இரு வேடங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார் ... குறிப்பாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு அழும் காட்சி அற்புதம் ... அதே சமயம் நன்றாக நடிக்கிறார் என்பதற்காக ஒரே மாதிரியான மாதிரியான பாத்திர தேர்வுக்குள் சிக்கிக்கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும் ... இதே தவறை தான் தனுஷ் தன்னை ஆக்சன் ஹீரோவாக முன்னிறுத்த சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களில் நடித்த போதும் செய்தார் ... ஷோ சேஞ்ச் த கியர் மாமு !

உண்மையிலேயே அவர் கொடுத்து வைத்தவர் ... அவர் பெற்ற தேசிய விருதுக்காகவோ , சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை , அப்பா - அண்ணனை தொடர்ந்து மனைவியும் அழகான ஹீரோயினுடன் நெருக்கமாக நடிக்க வைத்திருக்கும் கொடுப்பினையை தான் சொல்கிறேன் ...

ஸ்ருதிக்கு நடிப்பு இயற்கையாகவே வருகிறது ... பள்ளி பருவங்களில் தனுஷை விட நம்மை அதிகம் கவர்வது இவரே ... ஐ லவ் யு சொல்லும் காட்சிகளில் க்யுட் ... நிறைய இடங்களில் இவரை அழ விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் ... தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயன் அடிக்கும் கமன்ட்ஷ்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் ... மற்றொரு நண்பன் சுந்தரை பள்ளி மாணவனாக ஏற்க முடியாவிட்டாலும் இரண்டாவது பாதியில் நடிப்பை பாராட்டலாம் ...

பிரபு , பானுப்ரியா , ரோகினி இவர்களெல்லாம் சரியான பாத்திர தேர்வுகள் ... இளையராஜா , ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே இவ்வளவு புகழ் அடைந்தது அனிருத் ஆகத்தான் இருக்க முடியும் ... எல்லா பாடல்களுமே அருமை , ஆனால் பின்னணி இசையில் கவனம் தேவை ... " கொலவெறி " பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. ஒளிப்பதிவு பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ... எடிட்டர் இரவில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன் , அவர் தூங்கி வழிந்திருப்பது குழப்பமான எடிட்டிங்கில் நன்றாகவே தெரிகிறது ... எக்கச்சக்க ஜம்ப் ...

இளமை துள்ளலான காதல் கதையுடன் , சுஜாதாவின் " " நாவலில் வருவது போல ஹளுஷினேஷனால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் கதையையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ... தனுஷ் - ஸ்ருதி இடையேயான பள்ளி பருவ காதல் காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்ற வைத்தாலும் , பிற்பாதியில் சொல்லப்படும் தனுஷின் மனோவியாதி  நம் மனதை கவரவில்லை ...

எந்நேரமும் பென்சிலால் எதையாவது எழுதிக்கொண்டிருந்தாலும் அழகான பிளாட் வாங்கி கொடுக்க மறக்காத அப்பா , கணவனின் நண்பன் இருக்கிறான் என்ற விவஸ்தையே இல்லாமல் கணவன் மடியில் உட்காரும் அன்பு மனைவி இவர்களிடம் கூட தன் வியாதியை தனுஷ் சொல்லாமல் விடுவது , அவரின்  மனோவியாதிக்கான எந்த பின்னணியையும் விவரிக்காதது , உற்றார் - உறவினர் முன்னிலையில் பல சடங்கு , சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற  சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) ,

" மயக்கம் என்ன " மயக்கத்தில் காட்சிகள் நகர்வது , நிறைய இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் ஏதோ டாக்குமென்டரி பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பது , பெற்றோர்கள் எதிலுமே தலையிடாமல் தேமே என்றிருப்பது இவையெல்லாம் த்ரீயை பார்க்கும் ரசிகர்களுக்கு  கொலவெறியை கொடுக்கின்றன ... ஐஸ்வர்யா தனுஷ் பாடல்களுக்கும் , அதை பிரபலப்படுத்தியதற்க்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதைக்கும் கொடுத்திருக்கலாம் ... சாரி ஐஸ் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஸ்கோர் கார்ட் : 38 

இதே விமர்சனத்தை ஆங்கிலத்தில் படிக்க http://vangablogalam.blogspot.in/2012/03/3-film-review-aishwarya-danushs.html

3 FILM REVIEW - Aishwarya Danush's Kolaveri ...

26 comments:

JZ said...

//" கொலவெறி " பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. //
இங்கேயும் சேம் கடுப்புத்தான் அண்ணா..

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கப் போன நண்பர்களின் கருத்தும் உங்கள் பார்வையை ஒத்ததே..
வழக்கமான விமர்சனங்களை காட்டிலும் ஒரு படி மேலே போயிருப்பது போல் தோன்றுகிறது.. வாழ்த்துக்கள்!!

இராஜராஜேஸ்வரி said...

பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ...

nice..

Anonymous said...

your review is scene by scene and very honest...good one.

HOTLINKSIN.COM திரட்டி said...

செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினால் அல்லவா... அதன் அனுபவம்தான் இப்படி எடுக்கத் தோன்றிவிட்டது போலும்...

Jayadev Das said...

Good review.....Thanks.

அனுஷ்யா said...

இன்னொரு நல்ல விமர்சனம் நண்பா.. வாழ்த்துக்கள்... படம் பார்க்கவில்லை.. ஆனாலும் இதுவரை எல்லா விமர்சனங்களையும் வாசித்துவிட்டேன்... படம் தேறாது என்று நினைக்கிறேன்.. பார்க்கிறேன்..:)

Vaishnavi Iyengar said...

Nice Review....சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) Punch Line...

Anonymous said...

thanks for review........

ananthu said...

JZ said...
//" கொலவெறி " பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. //
இங்கேயும் சேம் கடுப்புத்தான் அண்ணா..
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்கப் போன நண்பர்களின் கருத்தும் உங்கள் பார்வையை ஒத்ததே..
வழக்கமான விமர்சனங்களை காட்டிலும் ஒரு படி மேலே போயிருப்பது போல் தோன்றுகிறது.. வாழ்த்துக்கள்!!

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ...
nice..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Anonymous said...
your review is scene by scene and very honest...good one.

Thanks ...

ananthu said...

HOTLINKSIN.COM திரட்டி said...
செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினால் அல்லவா... அதன் அனுபவம்தான் இப்படி எடுக்கத் தோன்றிவிட்டது போலும்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Jayadev Das said...
Good review.....Thanks.

After a long time seeing your comments ... Thanks

ananthu said...

மயிலன் said...
இன்னொரு நல்ல விமர்சனம் நண்பா.. வாழ்த்துக்கள்... படம் பார்க்கவில்லை.. ஆனாலும் இதுவரை எல்லா விமர்சனங்களையும் வாசித்துவிட்டேன்... படம் தேறாது என்று நினைக்கிறேன்.. பார்க்கிறேன்..:)

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Vaishnavi Iyengar said...
Nice Review....சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) Punch Line...

Hi ... I think first time you are commenting on my blog ... Thanks

Anonymous said...

ENNAPPA IPPADI AIYDUCHI STAR PONNU NEXT SAPPA STAR U

ஹேமா said...

பாட்டு புகழ் பெற்ற அளவுக்குப் படம் இல்லையோ.சரி முதல் முயற்சிதானே !

Philosophy Prabhakaran said...

ஒவ்வொரு முறையும் நம்முடைய விமர்சனங்கள் நிறைய ஒத்துப்போகின்றன...

// பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்... //

சில சமயங்களில் சில வரிகள் கூட...

ஏன் என்ன படம் பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் கூட நம் எண்ணங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன...

Same Pinch...

Philosophy Prabhakaran said...

ஆங்கில வலைப்பூ கூட எழுதுறீங்களா... வாழ்த்துக்கள்...

Arun said...

Nice review. Every point is very true.

ananthu said...

ஹேமா said...
பாட்டு புகழ் பெற்ற அளவுக்குப் படம் இல்லையோ.சரி முதல் முயற்சிதானே !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Philosophy Prabhakaran said...
ஒவ்வொரு முறையும் நம்முடைய விமர்சனங்கள் நிறைய ஒத்துப்போகின்றன...
// பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்... //
சில சமயங்களில் சில வரிகள் கூட...
ஏன் என்ன படம் பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் கூட நம் எண்ணங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன...
Same Pinch...

ரசனைகள் ஒத்துப்போவதில் மிக்க மகிழ்ச்சி ! சில வரிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இருவரின் நடையுமே வேறு வேறு ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Philosophy Prabhakaran said...
ஆங்கில வலைப்பூ கூட எழுதுறீங்களா... வாழ்த்துக்கள்...

ஆமாம் நண்பா நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப இப்பொழுது தான் எழுத ஆரம்பித்துள்ளேன் , அதற்கும் வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன் !

ananthu said...

Arun said...
Nice review. Every point is very true.

Thanks Arun , have you seen my short film ?

ESWARAN.A said...

நான் படம் பார்க்கவில்லை...ஆனால் படம் பார்த்த இளசுகள் சொன்னது இது தான்..முதல் பாதி முத்தம்..இரண்டாவது பாதி ரத்தம்..எனவே தங்கள் விமர்சனம் படித்ததே...படம் பார்த்தது போல இருக்கிறது... நன்றி...

ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

ananthu said...

ESWARAN.A said...
நான் படம் பார்க்கவில்லை...ஆனால் படம் பார்த்த இளசுகள் சொன்னது இது தான்..முதல் பாதி முத்தம்..இரண்டாவது பாதி ரத்தம்..எனவே தங்கள் விமர்சனம் படித்ததே...படம் பார்த்தது போல இருக்கிறது... நன்றி...
ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...