8 December 2012

விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா ...



லகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா ? தவறா ? என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ  07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும்  தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் ஜெயராம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முழு தொகுப்பு  தமிழ் ப்ளாக் உலக வரலாற்றில் முதன்முறையாக இதோ உங்களுக்காக ( யாராவது முன்னரே எழுதியிருந்தால் கம்பெனி பொறுப்பல்ல ஹி .. ஹி ... ) :


  • ஒரு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஒரு இடத்தில் நடத்துவது என்பதே      சாதாரண காரிமயமல்ல , அப்படியிருக்க அதையே மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே தினத்தில் நடத்துவதென்பது எவ்வளவு சிரமம் என்பது அங்கே நடந்த பரபரப்பிலிருந்தும் , நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது  ( இதுலயும் உலகநாயகன் ஒரு ட்ரென்ட்செட்டர் )

  • எம்.ஐ.பி ( மோஸ்ட் இம்பார்டன்ட் பெர்சன் ) , வி.வி.ஐ.பி , வி.ஐ.பி என்று மூன்று பாஸ்கள் கொடுத்திருந்தார்கள் , அதில் எம்.ஐ.பி யில் மட்டும் பிரபலங்கள் அமர்ந்திருக்க மற்ற இரண்டையும் ரசிகர்கள் ஆக்ரமித்தார்கள் . எம்.ஐ.பி யில் இருந்ததால் இசைஞானி மற்றும் உலகநாயகனை மிக அருகாமையில் ரசிக்க முடிந்தது ( எதுக்கு இந்த விளம்பரம் )      

  • நிகழ்ச்சியை அறிமுகம் செய்த பெண் ஒரு இடத்தில வாய் தவறி ஜெயா டி .வி என்பதற்கு பதில் விஜய் டி .வி என்று சொல்லிவிட்டு பின்பு சுதாரித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ... ( பேமண்ட் அவுட்டா ?!  )   

  • மதுரையில் நடந்த நிகழ்ச்சியை திரையில் காட்டிய போது சென்னையை விட அதிக கூட்டத்தையும் ,ஆரவாரத்தையும் காண முடிந்தது . மதுரையில் இசைபேழையை ஒரு ரசிகரே வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது ... ( பாசக்கார பயலுக

  • ஜெயா டி .வி யின் ராகமாலிகா குழுவினர் கமல்ஹாசனின் பழைய பாடல்களை பாடினார்கள் ... ( பொழுத ஓட்டனும்ல

  • ஜெயராம் மூன்றாம்பிறை படத்தின் கமல் - ஸ்ரீதேவி குரல்களை நன்றாக மிமிக்ரி செய்ததோடு தன் 25 வருட கால நட்புக்காக கமல் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே போர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததையையும் நன்றியோடு  நினைவு கூர்ந்தார்  ( ஆ..ஆ..ஆ ) 

  • பாடகர் கார்த்திக் போட்டு வைத்த காதல் திட்டத்தில் ஆரம்பித்து மேகம் கொட்டட்டும் வரை கமல் பாடல்களை பாடி நம்மை இசை மழையில் நனைத்தார் ... ( நல்ல வேலை உண்மையிலேயே மழை வரல )

  • கமல் கொன்னக்கோல் வாசிக்க சங்கர் மகாதேவன் பாடிய " உன்னை காணாமல் " பாடலை தரணி , லிங்குசாமி , ஏ .ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தனர் . கமல் குரலில் மாயா , மாயா என்ற வரிகள் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ... ( குரலுக்கு மட்டும் தனியா ஏதாவது காயகல்பம்  சாபிடுவாரோ ?!

  • " சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம் ஆனால் அவருக்கு இயக்குனர்கள் தயிர் சாதம் தான் வைத்தார்கள் , எனவே எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன் " என்று கமல் தானே படத்தை இயக்குவதற்கான காரணத்தை சொன்னதாக முருகதாஸ் ஒரு தகவலை சொன்னதோடு கமலுக்கேற்ற சமையலுடன் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லி ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார் ... ( உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  

  • படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் - எஸான் - லாய் மூவரையும் கமல் அறிமுகம் செய்ததோடு இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம்  என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

  • சங்கர் மகாதேவன் குரலில் " எதை கண்டு " பாடலை இயக்குனர்கள் பாரதிராஜா , கே.எஸ்.ரவிக்குமார் , வசந்த் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தார்கள் . ரவிக்குமார் கமலிடம் படங்களுக்கு இடையே ஏனிந்த இடைவெளி என்றும் நடு நடுவே  என்னை போன்ற இயக்குனர்களையும் வைத்து படம் பண்ணலாமே என்றும் ரசிகர்கள் கேட்பதாக சொல்லி அவர் கேட்டுக்கொண்டார் ... ( நல்லா வருவீங்க தம்பி )

  • பாரதிராஜா பேசும் போது முன்னணி  நடிகராக இருக்கும் போதே  கமல் 16 வயதினிலே படத்திற்காக கோமணம் கட்டிய துணிச்சலை பாராட்டியதோடு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே நடிகர் கமல் என்றும் புகழாரம் சூட்டினார் ... ( உடலும் ரசிகனுக்கு பணமும் ரசிகனுக்கு  )    

  • ஜெயராம் கமலிடம் நீங்க ஹாலிவுட்டுக்கு போகும் போது  எந்த நடிகைக்கு கிஸ் அடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு " நான் எச்ச பண்றதுகாகவா அங்க போறேன் " என்று சொல்லி கமல் காமெடி செய்தார்... ( பயபுள்ளைக திருந்த விட மாட்டேன்றாய்ங்களே

  • பிரபு , ராம்குமார் , விக்ரம் பிரபு மூவரும் மேடையேறிய போது பிரபு கமலை அண்ணே என்று அழைத்து பாசத்தை காட்டினார் ... ( சிவாஜி செத்துட்டாரா ?! எவன் சொன்னது ?  

  • படத்தின் கதாநாயகிகளான ஆண்ட்ரியா , பூஜா இருவரும் கமலுக்கு இடம் , வலது என அழகாக நின்று கொண்டிருந்தார்கள் . ஆண்ட்ரியா பாடியதை விட பூஜா தப்பு தப்பாக பேசிய கொஞ்சும் தமிழ் அழகாக இருந்தது ...                ( நைட் நேரத்துல ஆண்ட்ரியாவ  அரை கவுன்ல பாத்ததுல இருந்து தூக்கம் போச்சு  )  

  • விழாவின் முடிவில் பிரபலங்கள் உட்பட படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவரும்  மேடை ஏற்றப்பட்டார்கள் . இரண்டு பாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்தது மற்றும் ஸ்பீக்கரின் இரைச்சல் போன்ற சில குறைகளை தவிர இசை வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது ... ( இந்த தடவ பொங்கல் ஜனவரி 11 ல தான்)

10 comments:

கோவை நேரம் said...

செம...வர்ணனை...

கார்த்திக் சரவணன் said...

கமெண்டுகள் அருமை... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிமுகம்.... காத்திருக்கிறேன் பாடலைக் கேட்பதற்கும் படம் பார்ப்பதற்கும்....

ananthu said...

கோவை நேரம் said...
செம...வர்ணனை...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

ஸ்கூல் பையன் said...
கமெண்டுகள் அருமை... நன்றி...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
நல்ல அறிமுகம்.... காத்திருக்கிறேன் பாடலைக் கேட்பதற்கும் படம் பார்ப்பதற்கும்....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

vels-erode said...

இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம் என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

Sorry. AALAVANTHAN not produced with RAJKAMAL BANNER. It was by 'Kalaipuli'Dhanu

damildumil said...

//இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம் என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )//

ஆளவந்தான் படம் ராஜ்கமல் தயாரிப்பு அல்ல, தாணுவின் தயாரிப்பு. குருதிப் புணல் உங்க நியாபத்துக்கே வரலையா??

ananthu said...

velumani D. said...
இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம் என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

Sorry. AALAVANTHAN not produced with RAJKAMAL BANNER. It was by 'Kalaipuli'Dhanu

I KNEW IT WAS PRODUCED BY THAANU BUT I HAD MENTIONED ABOUT ALAVANTHAN DUE TO SANKAR - ESAN - LAI NOT FOR ILAYARAJA ...

ananthu said...

damildumil said...
//இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம் என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )//
ஆளவந்தான் படம் ராஜ்கமல் தயாரிப்பு அல்ல, தாணுவின் தயாரிப்பு. குருதிப் புணல் உங்க நியாபத்துக்கே வரலையா??

ஆளவந்தான் தாணுவின் தயாரிப்பு என்று நன்றாகவே தெரியும் , நான் நியாபகத்தை அழிக்க நினைத்தது ஆளவந்தான் படத்திற்கு சங்கர் - எஸான் - லாய் இசையமைத்து படம் ஓடாமல் போனதே அந்த நினைவுகளை ... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...