8 February 2013

விஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்...

ண்மையில் விஸ்வரூபம்படம் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் வழக்கமான கமல் படம் போலவே சென்டர்களில் நல்ல வரவேற்புடனும் மற்ற இடங்களில் ஆவரேஜாகவும் ஓடியிருக்கும் .ஆனால்  தமிழ்நாட்டின் தடை காரணமாக உலகம் முழுவதும் படம் வசூலை குவித்திருப்பதோடு இங்கேயும் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . இதற்கு காரணமான அனைவருக்கும் கமல் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார் ...

தமிழ் முஸ்லிம் ஆப்கான் தீவிரவாத முஸ்லிம்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருந்த பேராபத்தை தவிர்க்கிறார் என்பதே படத்தின் கரு.அமெரிக்க வாழ் கதக் நடனக்கலைஞர் விஸ்வநாத்தை ( கமல்ஹாசன் ) அணுக்கதிர் ஆராய்ச்சியில் டாக்டரேட் பட்டம் பற்ற அவர் மனைவி நிருபமா ( பூஜா ) தன்னை போலவே கணவனுக்கும்  ஏதாவது கள்ளத்தொடர்பு இருக்கிறதா என்று வேவு பார்க்கிறார் . கிணறு வெட்ட பூதமாய் கமல் முஸ்லிம் என்பதும் அவர் ஆப்கான் தீவிரவாதிகளுக்கே பயிற்சி கொடுத்தவர் என்பதும் தெரிய வருகிறது . இதற்கான முடிச்சுகள் ஒவ்வொன்றையும் விலாவாரியாக விஸ்வரூபம் எடுத்து சொல்லியிருக்கிறார் கமல் ...

தயாரிப்பு , இயக்கம் என்று எந்த சுமைகளையும் காட்டிக்கொள்ளாமல் கமல் கதக் கலைஞராக பெண்ணியல் தன்மையோடு நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார் . அழுது கொண்டே அடிவாங்கும் போதும் , ஆக்ரோஷமாய் அவர்களை பின்னியெடுக்கும் போதும் அட்டகாச ஆக்சன் கமல் . கதக் கலைஞராகவும் , தீவிரவாதியாகவும் நம்மை கவர்ந்த அளவிற்கு நார்மல் கமல் படத்தில் கவரவில்லை . " ஆ ... ஆ " என்று அழுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கமல் அடக்கியே வாசித்திருப்பது ஆறுதல் ... 

படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் பூஜா . அழகாக இருப்பதோடல்லாமல் திறந்த மனதுடன் போல்டாக நடித்திருக்கிறார் . பொதுவாக் கமல் படங்களில் காட்டப்படும் லூசு பிராமணப் பெண்ணாக இல்லாமல் கணவனுக்கு  துரோகம் ( மனசால மட்டும் தானாம் ) செய்யும் அறிவாளி அறிவியல் பெண்ணாக வருகிறார் பூஜா . சுய லாபத்திற்காக கல்யாணம் செய்து கொண்டு , அவருக்கு துரோகம் செய்யும் பிராமணப் பெண்ணாக ஹீரோயினை காட்டும் கமல் , அது போதாதென்று அவள் அசைவம் விரும்பி சாபிடுவதாகவும் சொல்கிறார் . கதைக்கு எந்த விதத்தில் இது தேவை என்பது கமலுக்கே வெளிச்சம் . பிறப்பால் பிராமணராக இருப்பதால் அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற அலட்சிய போக்கு கமலிடம் அதிகரித்து வருகிறது ... 

ஆண்ட்ரியா படத்தில் இருக்கிறார் . பூஜாவுடன் இவர் பேசும் சில சீன்கள் க்யூட் . கமலுக்கு சரி சமமான ரோலில் ராகுல் போஸ் தமிழுக்கு நல்ல அறிமுகம் . கண் உருட்டலிலும் , தொண்டை கரகரப்பிலும் அவர் காட்டும் வில்லத்தனம் வசீகரம் . நாசர் , சேகர் கபூர் போன்றோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் ... 

" உன்னை காணாமல் " , " விஸ்வரூபம் " போன்ற சிறப்பான பாடல்களோடு நின்று விடாமல் பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள் சங்கர் - எசான் - லாய் . வைரமுத்துவின்  " யாரென்று தெரிகிறதா " பாடலின் வரிகள் படத்தையும் தாண்டி  கமலின் நடைமுறை சிக்கலகளுக்கும் அருமையாய் பொருந்துகிறது . அமெரிக்க தெருக்களிலும் , ஆப்கான் குகைகளுக்குள்ளும் சானு வர்கீசின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . ஆப்கான் மலைகளை நம் கண் முன் கொண்டு வருகிறார் கலை இயக்குனர் லால்குடி இளையராஜா . இவற்றோடு சேர்த்து எடிட்டிங் , கிராபிக்ஸ் என்று எல்லா டெக்னிக்கல் விஷயங்களும் உலகத்தரம் . மொத்தத்தில் கமலுடன் சேர்த்து எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள் ... 

தீவிரவாதி படம் என்றவுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை , தேசப்பற்று வசனங்கள் என்றெல்லாம் வழியாமல் மிக நேர்த்தியாக தீவிரவாதிகள் பற்றிய டீட்டைளிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் கமல் . டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் மகனை போருக்கு தயார்படுத்தும் தந்தை , மனைவிக்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டரையே முக்காடு போட  சொல்லும் மத வெறி பிடித்த கணவன்  , முதல் நாள் ஊஞ்சலில் சிறு பிள்ளை போல ஆடிவிட்டு மறு நாள் அமெரிக்க டாங்கியை அழிக்கும் தற்கொலை படை இளைஞன் , ஒருவனை தூக்கிலிட சொல்லி விட்டு புறாவுக்கு உணவு போடும் வில்லன் , மகன் தூக்கிலிடப்படுவதை பார்த்து கதறும் தாய் , கலவர பூமியிலும் ஒடியாடி விளையாடும்  சிறுவர்கள் என்று ஆப்கான் விவகாரங்கள் எல்லாமே களத்திலும் , எடுக்கப்பட்ட விதத்திலும் தமிழுக்கு முற்றிலும் புதிது ...

ஆப்கானை விட்டு கதை மறுபடியும் அமெரிக்காவிற்கு வந்த பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது . சீசியம் மூலம் வெடிகுண்டு தயாரிப்பது , அதை தயாரிப்பதன் மூலம் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்திக்கொள்ளும் ஜிகாதிகள் , புறாக்கள் மூலம் போலீசை திசை திருப்பி விட்டு வேறு இடத்தில் குண்டு வைப்பது போன்றவைகளும் புதிது தான் என்றாலும் அவற்றை சொன்ன விதத்தில் கமல் வேகம் காட்ட தவறிவிட்டார் . இடைவேளைக்கு பிறகு எல்லா சீன்களும் சப் டைட்டிலிலேயே ஓடுவதும் , கமல் கதை சொல்வதற்கு கையாண்ட விதமும் , படத்தை ரசிப்பதற்கு அறிவியல்  ஞானமும் வேண்டும் என்கிற அளவிற்கு விஸ்வரூபம் கொஞ்சம் குழப்பத்தை தருவதையும் மறுப்பதற்கில்லை ...

ஒரு போஸ்டரை மட்டும் காட்டி விட்டு  தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொள்ளும் கமல் , அமரிக்காவில் சர்வ சாதாரணமாக உலா வரும் ஆப்கான் தீவிரவாதிகள் இப்படி லாஜிக் குளறுபடிகளும் படத்தில் உண்டு ... கமல் ஹாலிவுட்டுக்குள் நுழைவதால் அமெரிக்க ஆதரவு படமெடுக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் ஒரு சீனில் அமரிக்கர்கள் பெண்கள்  , குழந்தைகளை தாக்க மாட்டார்கள் என்று உமர் சொன்ன அடுத்த செகண்ட் பெரிய குண்டு வீட்டை தாக்கி அனைவரும் பலியாவது கமலின் நடுநிலைக்கு சான்று ...

அதே நேரம் கதை நடப்பது ஆப்கானில் , ஆப்கான் தீவிரவாதிகள் தண்டனையை நிறைவேற்றும் போது குர்ரான் படிப்பது , ஜிஹாத் 
( புனிதப்போர் ) வெற்றியடைய தங்கள் உயிரையே பணயம் வைப்பது , அடிக்கடி காட்டப்படும் தொழுகைகள் , பிடிபட்ட அமெரிக்க பணயக்கைதியை கழுத்தை அறுத்து கொல்வது போன்றவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்றோ , ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு  காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் . சர்ச்சைகளையெல்லாம் தாண்டி படத்தை எடுத்த விதத்திலும் , அதை மார்க்கெட் செய்த விதத்திலும் , விஸ்வரூபம் பார்ட் 2 விற்கு எதிர்பார்ப் பை ஏற்ப்படுத்திய  விதத்திலும் நிறையவே விவேகம் காட்டியிருக்கிறார் எழுதி , இயக்கி , தயாரித்திருக்கும் கமல்ஹாசன் ... 

ஸ்கோர் கார்ட் : 47 

14 comments:

DiaryAtoZ.com said...

Good Review, Thank you

ananthu said...

DiaryAtoZ.com said...
Good Review, Thank you

Thanks for your comments ...

Adirai khalid said...

முஸ்லிம்கள் இலவச விளம்பரப் படுத்தவில்லை என்றால் இந்தப் படம் பத்தோடு பதினொன்று

இசுலாமியர்களால் விளம்பரப் படுத்தப்பட்டதால் திரைப் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காண சென்று ஏமாந்து போவர்வர்கள் என்பது உறுதி படத்தில் அந்த அளவிற்கு அபத்தம்

கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை

அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன் ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’

அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை

தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்

அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்

Anonymous said...

The film is a class. Nice neutral review.

Prem S said...

//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் ///

உண்மை உண்மை எனக்கும் தோன்றியது இது ..

Unknown said...

முழு படத்தையே தடை செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் கூச்சலிட்ட இஸ்லாமிய தலைகள் இப்போது ஏழு காட்சிகளை வெட்டினால் போதும் என்று இறங்கி வந்திருப்பதை காணும் போது எங்கடா போச்சு உங்க வீரம் என்றே சொல்ல தோன்றுகிறது. இப்போதாவது முஸ்லிம்கள் தங்கள் "தலைகள்" எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

Anonymous said...

Murugan தாங்கள் சொல்வது தவறு. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடியது உண்மைதான். பிரச்சனை பெரிதாகி பின் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழலில்
விட்டுக்கொடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.

Anonymous said...

எனக்கு சத்தியமா படம் புரியல்ல...நானும் ஹாலிவுட் படம் எல்லா பார்த்து இருக்கான்...ஆனால் இந்த படம் ஆப்கானிஸ்தான் பகுதி ஒரு வசனமும் புரியல்ல. சும்மா ஹாலிவுட் தரம் எல்லாம் தேவை இல்லாத உசுப்பு ஏற்றிவிடல்.

இரண்டு சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது, இரண்டு பாடல்கள் நல்ல இருந்தது

என்ன பொறுத்துவரை இது ஒரு high budget படம், மற்றபடி ஹாலிவுட் தரம் எல்லாம் இல்லை.

உங்க விமர்சனம் நடு நிலைமை இருந்தாலும் உங்கள மாதிரி படத்தை அறிவியல் மாதிரி பார்க்க வெகு சிலரால் மட்டும்தான் முடியும். எங்கல மாதிரி சாமானியர்கள் படம் பாக்றது பொழுது போக்கிற்கு மட்டும் தான். அப்பிடி பார்க்கும் பொழுது இந்த படம் ஒரு வேஸ்ட் padam

ananthu said...

Halidh Mohammed said...
முஸ்லிம்கள் இலவச விளம்பரப் படுத்தவில்லை என்றால் இந்தப் படம் பத்தோடு பதினொன்று

இசுலாமியர்களால் விளம்பரப் படுத்தப்பட்டதால் திரைப் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காண சென்று ஏமாந்து போவர்வர்கள் என்பது உறுதி படத்தில் அந்த அளவிற்கு அபத்தம்

கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன் ‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’
அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம் அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
Friday, February 08, 2013

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

Anonymous said...
The film is a class. Nice neutral review.

Thanks for your comments ...

ananthu said...

Prillass s said...
//ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் ///
உண்மை உண்மை எனக்கும் தோன்றியது இது ..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

Murugan Muruga said...
முழு படத்தையே தடை செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் கூச்சலிட்ட இஸ்லாமிய தலைகள் இப்போது ஏழு காட்சிகளை வெட்டினால் போதும் என்று இறங்கி வந்திருப்பதை காணும் போது எங்கடா போச்சு உங்க வீரம் என்றே சொல்ல தோன்றுகிறது. இப்போதாவது முஸ்லிம்கள் தங்கள் "தலைகள்" எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

Anonymous said...
Murugan தாங்கள் சொல்வது தவறு. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடியது உண்மைதான். பிரச்சனை பெரிதாகி பின் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய சூழலில்
விட்டுக்கொடுக்கவேண்டியது கட்டாயமாகிறது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

ananthu said...

Anonymous said...
எனக்கு சத்தியமா படம் புரியல்ல...நானும் ஹாலிவுட் படம் எல்லா பார்த்து இருக்கான்...ஆனால் இந்த படம் ஆப்கானிஸ்தான் பகுதி ஒரு வசனமும் புரியல்ல. சும்மா ஹாலிவுட் தரம் எல்லாம் தேவை இல்லாத உசுப்பு ஏற்றிவிடல்.இரண்டு சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது, இரண்டு பாடல்கள் நல்ல இருந்தது
என்ன பொறுத்துவரை இது ஒரு high budget படம், மற்றபடி ஹாலிவுட் தரம் எல்லாம் இல்லை.
உங்க விமர்சனம் நடு நிலைமை இருந்தாலும் உங்கள மாதிரி படத்தை அறிவியல் மாதிரி பார்க்க வெகு சிலரால் மட்டும்தான் முடியும். எங்கல மாதிரி சாமானியர்கள் படம் பாக்றது பொழுது போக்கிற்கு மட்டும் தான். அப்பிடி பார்க்கும் பொழுது இந்த படம் ஒரு வேஸ்ட் padam

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...