பொதுவாக வெற்றிப் படங்களை இரண்டு வகைக்குள் அடக்கலாம் . ஒன்று படம் பார்த்து முடித்த பின்னும் காட்சிகளின் பாதிப்பு சில காலம் தொடர்வது, இரண்டு படம் பார்க்கும் போது எதைப்பற்றியும் யோசிக்காமல் என்ஜாய் செய்து விட்டு வெளியே வந்தவுடன் மறந்து விடுவது . நானும் ரவுடி தான் இதில் இரண்டாம் வகை ...
சிறு வயதிலிருந்தே ரவுடியாக வேண்டுமென்கிற கொள்கையில் ! இருக்கும் பாண்டு பாண்டி ( விஜய் சேதுபதி ) க்கு ஒரு சோதனை . காதலி காதம்பரி
( நயன்தாரா ) யின் பெற்றோர்களை கொன்ற நிஜ ரவுடி கிள்ளிவளவனை
( பார்த்திபன் ) கொல்ல வேண்டும் . இந்த ஆஸ் யூசுவல் ரிவென்ஜ் ஸ்டோரியை படு காமெடியாக சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் ...
இ.ஆ.பா.கு விற்கு பிறகு வெற்றியை தேடி அலைந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த படம் நல்ல தீர்வு . போலீஸ் செலக்சனில் முன்னாள் ஒடுபவனிடம் போலீசை விட ரவுடி தான் பெருசு என்று ப்ரைன் வாஷ் செய்யும் ஆரம்ப காட்சியிலிருந்து தொடங்கி விடுகிறது அவர் ராவுடி . இவரது கண்களே நன்றாக பேசும் போது படபடவென உதடுகள் பேசுவதை தவிர்த்திருக்கலாமோ?! . இந்த வருடத்தின் நாயகி நயன்தாரா தான் என்பதில் சந்தேகமே இல்லை . மாயா வை தொடர்ந்து மற்றொருமொரு மைண்ட் ப்ளோயிங் பெர்ஃபார்மன்ஸ் . காது கேட்காத பெண் காதம்பரி ! யாக நடித்ததோடு சொந்தக்குரலிலும் முதன்முறையாக பேசி நடித்திருக்கிறார் . இனிமே இவங்களே தொடர்ந்து டப்பிங் பேசலாம் . அப்பா இறந்தது தெரிந்தவுடன் ரோட்டில் அழுது கொண்டே நயன் போகும் ஸீன் காமடிப் படத்திலும் லேசாக கலங்க வைக்கிறது . இன்டர்வெல் ப்ளாக்கில் வரும் லிப் டு லிப் பேசும் ஸீன் தேவையா ?! . என்று கேட்க வைத்தாலும் வித்தியாசம் ...
லீட் பேர் தவிர சூயிங்கம் மென்று கொண்டே சேட்டையாக பேசும் பார்த்திபன், கிடைக்கிற கேப்பில் காமெடி கடா வெட்டும் ஆர்.ஜே .பாலாஜி , " மொதல்ல அந்த பொண்ணு பேசுறத நிப்பாட்ட சொல்லுங்கப்பா " என்று புலம்பும் ஆனந்தராஜ் , பிள்ளைக்காக பார்த்து மார்க் போடுங்க என்று கெஞ்சும் போலீஸ்காரம்மாவாக ராதிகா இவர்களோடு மன்சூர்அலிகான் , மொட்டை ராஜேந்திரன் , ராகுலாக வரும் பெரியவர் என எல்லோருமே தங்கள் பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள் ...
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை பளிச்பளிச் என்று காட்டுகிறது . முதலில் தான் ஹீரோவாக நடிக்கவிருந்ததாலோ என்னவோ அனிருத் தின் இசை இந்தப் படத்தில் கூடுதல் தெறி யாக இருக்கிறது . பாடல்களை இயக்குனர் சரியான விதத்தில் பயன்படுத்தியதும் சூப்பர் . காது கேட்காத ஹீரோயின் , காதலனின் உதவியோடு பெற்றோர்களை கொன்றவனை பழிவாங்கும் கதைக்கு எங்குமே செண்டிமெண்டையோ , ஹீரோயிசத்தையோ புகுத்தாமல் தான் எடுத்துக்கொண்ட கண்டெண்டிற்கு ஏற்றபடி ஃப்ரெஸ்ஸாக இயக்குனர் சொன்ன விதத்திற்காக இந்த நானும் ரவுடி யை நம்பி பார்க்கலாம் ...
ஸ்கோர் கார்ட் : 43
ரேட்டிங் : 3.5 * / 5 *
1 comment:
முதலில் தான் ஹீரோவாக நடிக்கவிருந்ததாலோ என்னவோ அனிருத் தின் இசை இந்தப் படத்தில் கூடுதல் தெறி யாக இருக்கிறது . \\ Now what role he played?
Post a Comment