23 October 2015

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...அஜித் 

மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும்  இவரை வைத்திருக்கிறது ...


சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு  20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  .  சிவாஜிகமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...

22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே .   ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம்   அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா  போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...                   

சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார்  இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...  

முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது  , விளம்பர படங்களில் நடிக்காதது  , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு  போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான்  நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...


அறிமுகம்       :  அமராவதி  
முதல் ஹிட்  :  ஆசை 
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி 
தல அவதாரம்         : தினா 
அறிமுக இயக்குனர் : செல்வா 
பேவரட் இயக்குனர்  : சரண் ,  இப்போது சிறுத்தை சிவா 
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம் 
அடுத்த ரிலீஸ் : வேதாளம் 

அடுத்த பதிவில் விஜய்  ...18 comments:

Anonymous said...

Can you show the proof or please tell about the mangatha collection and it is truly enter the 100 crore club bro?

ananthu said...

BEHINDWOODS . KOLLYINSIDER ,superwoods.etc. plus distributor theatre owners report through sources, SUN.pictures declared 130 crs gross globally .

Anonymous said...

சிவாஜி கமல் ஐ மேன் சீயான் விக்ரம் வரிசையில் அஜித் இல்லை
உங்களுடைய இந்த பதிவு உண்மைக்கு நெருக்கமாக இருந்தது. வாழ்த்துக்கள்!
இது தொடர வேண்டும்

10E படத்தில் சும்மா போகிற போக்கில் அஜித் பெயர் சொல்லப்பட்டிருக்கும். அது ஒரு முக்கியத்துவம் இல்லாத காட்சி!

ரஜனிகூட இதேபோல் சிவகுமார் விஜயகாந்த் பெயர்களை படங்களில் சொல்லியிருப்பார்
அதைத்தான் சீயானும் செய்கிறார்

ஐ படத்தில் விஜய் பெயர் வந்தது ஞாபகம் இருக்கிறதா? அதுவும் ஒரு முக்கியத்துவம் இல்லாத காட்சியில்!

ananthu said...

NOT only in 10E . So many movies whether in important scene or normal . Even arya acted as a core ajith fan in recent film YATCHAN . We cant ignore the facts ...

ananthu said...

VIKRAM is very good actor . NO doubt on it .BUT AJITH is ultimate while crowd pulling ...

Anonymous said...

AJITH is ultimate while crowd pulling ...

ultimate என்று சொல்றீங்க
ஆனா ஐமேன் விஜய் சூர்யா போன்றவர்களுக்கும் இது சாத்தியமே!

அஜித் பேர வச்சி சின்ன நடிகர்கள் ஜெயிச்சுட்டிருக்கறது உண்மதான்!
ஆனா அந்த படங்கள்ல எத்தனை படங்கள் தரமானது என்று சொல்ல முடியுமா உங்களால்?

அஜித்தை நான் மதிக்கிறேன்
ஐமேனுக்கு இருக்கும் மிகப்பரந்த ரசிகர் பட்டாளத்தை போலவே
அஜித்துக்கும் உண்டு என்பது எனக்கு தெரியும்

ananthu said...

i do understand that you are hotcore fan of of i man vikram but the matter of the fact is opening day collectuon 10E is 6.5 crores, just wait for vedhalam opening . I feel it may even cross the greatest actor kamals thoongavanam . FYI i am a hot core kamal fan ...

ananthu said...

i do understand that you are hotcore fan of of i man vikram but the matter of the fact is opening day collectuon 10E is 6.5 crores, just wait for vedhalam opening . I feel it may even cross the greatest actor kamals thoongavanam . FYI i am a hot core kamal fan ...

Anonymous said...

Ananthu ! He acted in a advertisement of Nescafe Sunrise. Have you forgotten this? Do check it.

ananthu said...

YES i know that . that was on earlier stage of his career . HE stopped acting in ads long time back ..

Anonymous said...

நான் ஒன்னும் hardcore fan எல்லாம் கிடையாது

எனக்கு விஜய்-அஜித்-சூர்யா எல்லாரையும் புடிக்கும்
ஆனா விக்ரம் அதுக்கும் மேல!

திறமைசாலிய ஓரம்கட்டுனா எனக்கு புடிக்காது

இந்த நியுஸ படிங்க

Vikram's "I" ("Ai") has taken excellent openings at the worldwide box office.

The film, which hit screens on Bhogi Day, has raked in over ₹34 crore at the worldwide box office.

சும்மா தமிழ்நாட்டுல ஒரு ஏரியாவ மட்டும் வச்சுட்டு opening kingனு சொல்ல முடியாது

worldwideஆ இந்த சாதனைய வேதாளத்த வச்சி முறியடிக்க முடியும்னு நெனைக்குறிங்களா?

ananthu said...

இப்போ யாருங்க விக்ரம திறமைசாலி இல்லேன்னு சொன்னாங்க ? ஓரங்கட்டினாங்க ?. ஐ படத்தோட ஒபெனிங்க் மட்டும் வச்சு சொல்ல முடியாது . அப்படியே பார்த்தாலும் அந்த படத்தோட ஒபெனிங்குக்கு சங்கர் + விக்ரம் + ஆஸ்கார் + ரஹ்மான் என்கிற பிரம்மாண்ட கூட்டணியும் , பொங்கல் ரிலீசும் முக்கிய காரணம் . பரவலா அஜித் , விஜய் , சூர்யா வுக்கு அடுத்து தான் விக்ரமுக்கு ஒபெனிங் என்பது உலகத்துக்கே தெரியும் . இந்த உண்மையை ஒப்புக்கொள்வதும் , கொள்ளாததும் அவரவர் விருப்பம் . உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

karthik said...

@Anonymous.. ajith acted in advertisement was even said by him and for ur knowledge first of all he is a model and started his career on that ly. bt he stopped modelling and ad appearances once he entered film space.. reason behind is when one model some product that person is a unknown to audience and they see ly the product but when one do after featured in films, people first witness the actor.. so called 'brand' that makes value. then.. u said vikram is great actor . bla bla.. nothing offense but what about his off screen character?! why nayanthara refused to act with him? he is arrogant when in peak form and discriminated her as new comer :( and neglect her in early days bt now?! he is begging for her call sheet.. these are not just go through gossips and fact even published in many sites and magazines. still no offence on his acting skills :)

karthik said...

for the knowledge ajith acted in a slipper advertisement too in his early days which is available in youtube..u can watch if wish. truth never be hidden neither be treated-- it's as it.. proud to say i'm a simple ajith fan :)

ananthu said...

I know he had started his career as a model but he had taken a firm decision of not acting in ads once became an actor . He is sticking to that decision till now . There is no neccessary to get in to heros peesonal life . EVEN o heared vikram had helped one poor girls operation thats different . He is an good actor on screen thats it but he cant match ajiths grand mass . Thanks for comments ...

Ganesh Babu said...

Breaking point is not vaali its kathal kottai in 1996

ananthu said...

May be But i feel a VAALI is ultimate and increased his fans base ...

ananthu said...

May be But i feel a VAALI is ultimate and increased his fans base ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...