13 January 2019

பேட்ட - PETTA - பரட்டயிஸம் ...


சிவாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . இந்த நேரத்தில் டை ஹார்ட் ரஜினி ரசிகர் , இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் ரஜினி கை கோர்த்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டது . அதை அவர் தீர்த்து வைத்தாரா ? பார்க்கலாம் ...

பிரதமர் அலுவலக ரெக்கமெண்டேஷனில் ஒரு காலேஜ் வார்டனாக காளி 
( ரஜினி ) சேருகிறார்  . அங்கு நடக்கும் ராக்கிங் , கான்டீன் காண்ட்ராக்ட் அடாவடிகளை தன் அடிதடியால் அடக்குகிறரார் . அவர் உண்மையிலேயே அங்கு சேர்ந்தது ஒரு மாணவனை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் என இண்டெர்வெல்லில் தெரிகிறது . பிஎம்ஓ ரெக்கமெண்டில் வந்ததால் சப்ஜெக்ட்  சீரியஸாக இருக்கும் என்று பார்த்தால் கடைசியில் வெறும் லவ் மேட்டராக வைத்து ஃபர்ஸ்ட் ஆஃபில் கொடுத்த  மரண பில்ட் அப் பை செகண்ட் ஆஃபில் படுக்க வைப்பதே பேட்ட ...


சூப்பர் ஸ்டார் இந்த வயதிலும் அவ்வளவு இளமையாக , அதே ஸ்டைலோடு துடிப்பாக இருக்கிறார் , தேங்க்ஸ் டு கேமரா , காஸ்டியூம் & மேக்கப் டீம் . அடியாட்களை அடித்து ஓட விடும் முதல் சீனிலிருந்து குட்டிக்கதை சொல்லி படத்தை முடிக்கும் க்ளைமேக்ஸ் வரை நிச்சயம் ரஜினி மரண மாஸ் . ஒவ்வொரு ஃப்ரேமிலும் சூப்பர் ஸ்டாரை  கார்த்திக் & திரு ரசித்து செதுக்கியிருக்கிறார்கள் . அவருடன் இழையோடும் அந்த இன்னொசன்ஸை இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து காண முடிகிறது ...

சிம்ரன் கொஞ்ச சீன்களில் வந்தாலும் கிறங்க வைக்கிறார் . சசிகுமார் , திரிஷா படத்தில் இருக்கிறார்கள் . விஜய் சேதுபதி ரஜினிக்காக இந்த வேடத்தில் ஒத்துக்கொண்டிருப்பார் . சதமடிக்கும் பெரிய மேட்ஸ்மேனுக்கு முன்னாள் வேகமாக முப்பது ரன் அடிக்கும் சின்ன பேட்ஸ்மேன் போல அவர் நிலைமை . செம்ம வில்லன் நவாஸுதீன் சித்திக்கை வடக்கிலிருந்து கூட்டி வந்து மொக்கை செய்திருக்கிறார்கள் . அவருக்கு ஈக்குவலான ரோல் கொடுத்து பயன்படுத்தியிருந்தால் படம் வேற லெவெலில் இருந்திருக்கும் ...

அனிருத் " மரண மாஸ் " , " உல்லாலா " பாடல்களில் உருக வைக்கிறார் . பிஜிஎம் மும்  பட்டையை கிளப்புகிறது . படத்தில் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் திரு . ஊட்டி , உ.பி எல்லாமே அவர் லென்ஸ் வழியாக கொள்ளை அழகு . இந்த வயதிலும் ரஜினி போடும் சண்டைகளை ரசிக்க வைத்திருக்கும் பீட்டர் ஹைனுக்கு பாராட்டுக்கள் ...


அநியாயம் நடக்கும் இடத்துக்கு ஹீரோ ஆஜர் ஆகிறான் , எதிரிகளை துவம்சம் செய்கிறான் என்று பக்கா மாஸ் என்டெர்டைனராக நகரும் முதல் பாதி படத்துக்கு ப்ளஸ் . ரஜினி - சிம்ரன் காதல் காட்சிகள் , பாபி சிம்ஹாவின் அடாவடி , ஹாஸ்டலை கைக்குள் கொண்டு வரும் ரஜினியின் ஹீரோயிசம் எல்லாமே நம்மை கட்டிப்போடுகின்றன . ரசிகனின்  பல்ஸை கரெக்டாக பிடித்து முதல் பாதியை நகர்த்தியிருக்கிறார்  கார்த்திக் சுப்புராஜ் . இரண்டாம் பாதியில்  பழைய டிவிடிக்கள் நிறைய பார்த்த எஃ பெக்ட் ...

தன் முஸ்லீம் நண்பன் மாலிக் ( சசிகுமார் ) மதுரையில் பெரிய இந்து சாதி பெண்ணை கரம் பிடிக்க ரஜினி உதவுவதும் , அந்த பெண்ணின் அண்ணன்காரன் இவர்களை பழி வாங்க துரத்தும் வழக்கமான காதல் தான் கதையின் மையப்புள்ளி என தெரியும் போது சப்பென்று ஆகி விடுகிறது . இத்தனை வருடங்கள் ஹீரோ , வில்லன் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கெல்லாம் விடையில்லை ...

இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி வருவதால் படம் கொஞ்சம் ஒப்பேறுகிறது . முஸ்லீமை நண்பனாகவும் , வில்லனை சாமி பக்தியுள்ள இந்துவாகவும் காட்டியதால் அதை சமன் செய்வது போலவோ என்னமோ  ரஜினி ராமர் கதை சொல்லி படத்ததை  முடிக்கிறார் . க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் கூட ஆச்சர்யத்தை தருவதை விட ரஜினி கேரக்டர் மேல் கோபத்தையே தருகிறது . படத்தின் நீளம் , குறிப்பாக இரண்டாம்  பாதியில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது . இப்படி சில குறைகள் படத்தை பின்னுக்கு இழுத்தாலும் அதையெல்லாம் மறந்து பேட்டயை பார்க்க வைப்பது பரட்டையிஸம் ...

ரேட்டிங்   : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43


2 comments:

Anonymous said...

Nice review. College seens shot at darjeeling

Anonymous said...

என்னதான் சொன்னாலும் அந்த மொக்கை அஜித் படத்துக்கு பேட்ட மண்டி போட்டிருக்கு
இந்த அசிங்கத்துக்கு ரஜினி நாண்டுக்கிட்டு சாகலாம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...