22 May 2011

உன் நினைவுகளோடு....

ஒவ்வொரு முறையும்                               
உன்னைப்  பார்த்து விட்டு
திரும்பும் போது                                            
உயிரற்ற உடலாய் 
பயணப்படுகிறேன்..........                                                  
                                                     
                                                                                                                                                                                        
பேருந்துப்  பயணங்களில்
பின்னோக்கி விரையும்  
மரங்களைப்  போல
உன்னை நோக்கித்  தாவுது
என் மனக்குரங்கு .....

நிலவினைக்  காட்டி
சோறூட்டும் அன்னை 
விரலினை பிடித்துக் கொண்டு 
அடங்கள் செய்யும்
சிறு குழந்தை போல
உன்
நினைவுகளில் தவழ்கிறது
என் மனக்குழந்தை .......

எனக்கு
உயிர் கொடுத்தாள்  தாய்
என்
பேனாவிற்கு "உயிர்மை"
கொடுத்தவள் நீ...                           
                                           
                                                                                                    
கல்லூரிக்  காலங்களில்
கன்னியரை மயக்க
கவிதைகள் புனைந்தேன் பல...
"கண்டதும் காதல்"-
காமக் கிளர்ச்சிகளை காதல் என 
தப்பாக கற்பிதங்கள் 
செய்து கொள்ளும்
வயது அது ....

இது
உன்னை பற்றிய கவிதை
மட்டும் அல்ல 
உண்மையை பற்றியதும் கூட...

என் 
ஒவ்வொரு பயணத்தின் போதும்
எனை மறக்காமால் 
எடுத்து  வரச்  சொல்லி
நீ
எழுதிக் கொடுக்கும்
பொருட்கள் பல..
ஆனால்
நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் .....
                                                                            
பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான் 
உன்னை பிரிந்திருப்பதால் ...

உன்னைக் காணும்
அந்த
ஒரு நாளிற்காக
ஒவ்வொரு நாட்களையும்
பிரயத்தனப்பட்டு
கடத்திக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு......


9 comments:

மதுரை சரவணன் said...

அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

kms.pblishing said...

ethai nee kondu vanthai athai nee kondu sella

ananthu said...

நன்றி

Anonymous said...

\\\\பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான்
உன்னை பிரிந்திருப்பதால் ...\\

\\ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்து விட்டு
திரும்பும்போது
உயிரற்ற உடலாய்
பயணப்படுகிறேன்.......... \\

இப்படியாகத்தான் சொல்லத் தோன்றுகிறது இந்தக் கவிதையிடம்...

செல்லக் குழந்தையாய் இருக்கும் கணவனுக்கு பிரசவம் மறு ஜென்மமாய்த் தோன்றும் இயல்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

உயிரற்ற உடலாய் நாம் பயணிப்பதை காதலன்றி வேறேதும் தரவல்லதன்று...

\\நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் .....\\

ரசிக்க வைத்த வரிகள்... நினைவுகளை சுமக்கும் சுகம்... சுகத்தை சுமக்கும் நினைவுகள்... இரண்டுமே சுகம்தானே...

உங்களின் அடுத்த கவிதைக்கான காத்திருப்புடன்...

-நுண்மதி.

Ganesh said...

eppadio aduthavan kavithaya koncham maathi ezhuthitte...sathiyama sol ithu un kavithaya?....aamanu sollathe naan proof kaatuven

ananthu said...

eppadio aduthavan kavithaya koncham maathi ezhuthitte...sathiyama sol ithu un kavithaya?....aamanu sollathe naan proof kaatuven

Adutthavan kavithaiya suda vendiya avasiyam enakkillai nanbaa ... ithu naalu varushangalukku munnaaidi naan eluthina kavitha... irukkira velaiyila etho mana thirupthikkaaga blog eluthinaa athula intha imsai verava ?

ananthu said...

nunmadhi said...
\\\\பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான்
உன்னை பிரிந்திருப்பதால் ...\\

\\ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்து விட்டு
திரும்பும்போது
உயிரற்ற உடலாய்
பயணப்படுகிறேன்.......... \\

இப்படியாகத்தான் சொல்லத் தோன்றுகிறது இந்தக் கவிதையிடம்...

செல்லக் குழந்தையாய் இருக்கும் கணவனுக்கு பிரசவம் மறு ஜென்மமாய்த் தோன்றும் இயல்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

உயிரற்ற உடலாய் நாம் பயணிப்பதை காதலன்றி வேறேதும் தரவல்லதன்று...

\\நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் .....\\
ரசிக்க வைத்த வரிகள்... நினைவுகளை சுமக்கும் சுகம்... சுகத்தை சுமக்கும் நினைவுகள்... இரண்டுமே சுகம்தானே...
உங்களின் அடுத்த கவிதைக்கான காத்திருப்புடன்...

-நுண்மதி.

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி நுண்மதி....

ananthu said...

மதுரை சரவணன் said...
அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

ananthu said...

Rathnavel said...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...