" ரெட் டஸ்ட்" ட்ராய் எழுதி டாம் ஹூப்பர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ரஷ்ய படம்....சவுத் ஆப்பிரிக்காவில் 1986 ஆம் ஆண்டு ஹென்ரிக்ஸ் என்ற காவல் துறை அதிகாரியின் கீழ் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை நடத்த ட்ராக் என்ற குழு 2000 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா வருகிறது...காவல் துறையின் கொடுமைகளுக்குள்ளான அலெக்ஸ் பாண்டோ ( சிவேடேல் ) சார்பில் வாதாடுவதற்காக நியூ யார்க்கில் இருந்து வருகிறார் லாயர் சரா ( ஹிலாரி ஸ்வன்க் )...
1986 ஆம் ஆண்டு அலெக்ஸ் உடன் சேர்த்து விசாரிக்கப்பட்ட ஸ்டீவ் என்ன ஆனான் என்ற உண்மையை அறிவதற்காக அமைக்கப்பட்ட இந்த குழு ஹென்ரிக்ஸ் , அலெக்ஸ் இருவரையும் விசாரித்து கடைசியில் உண்மையை கண்டுபிடிப்பதே கதை... இன வெறியால் கருப்பு இன மனிதர்களை விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தும் காட்சிகளை அலெக்ஸ் நினைவுகளில் ஆங்காங்கே படத்தின் சுவாரஷ்யம் குறையாமல் காட்டியிருப்பது அருமை...
பழைய நினைவுகளில் மூழ்கும் போது கண்களில் பயம் காட்டுவது , விசாரணையில் உண்மையை வரவழைப்பதற்க்காக ஹென்றிக்ஸுடன் நேருக்கு நேர் நின்று வாதாடுவது , நண்பனைக் காட்டிக்கொடுத்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியில் புலம்புவது என நிறைய இடங்களில் சிவேடேல் நன்றாக நடித்திருக்கிறார்...சிரிக்கும் போது அழகாக இருக்கும் சிவேடேல் படத்தில் முக்கால் வாசி அழுத வண்ணமே இருக்கிறார்....
வக்கீல் சராவாக வரும் ஹிலாரி திறமையாக வாதாடி உண்மையை வரவழைக்கிறார்..குறிப்பாக விசாரணை நடந்த இடம் காவல் நிலையம் அல்ல பண்ணை வீடு என்கிற உண்மையை ஹென்ரிக்ஸ் வாயில் இருந்து வரவழைப்பது ஒரு உதாரணம்...கோர்ட் சம்பத்தப்பட்ட காட்சிகள் மிக யதார்த்தம்...தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹிலாரி..
படத்தில் மனதை பிசையும் காட்சிகள் நிறைய...ஸ்டீவ் கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள்..குறிப்பாக ஸ்டீவ் ரத்த புழுதியில் கடைசியாக அலெக்ஸ்ஐ பார்க்கும் காட்சி நிறைய அர்த்தங்கள் சொல்கிறது...தன்னை துரோகி என்று சொல்லும் ஒருவனை அடித்து வலி என்றால் என்ன என்று அலெக்ஸ் புரிய வைக்கும் காட்சி ..அலெக்ஸ் வாந்தியெடுக்கும் போது உடனே தான் அணிந்திருக்கும் டீ சர்ட்டை சிறுவன் கழட்டிக் கொடுக்கும் காட்சி.. ஸ்டீவ் என்ன ஆனான் என்று தெரிந்தவுடன் அவனுடைய வயதான தாயார் அழும் காட்சி என்று சில உதாரணங்களை சொல்லலாம்..
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வசனங்கள் மிகவும் கூர்மை....ஒரு காட்சியில் அலெக்ஸ் சாராவிடம் சொல்லும் வசனம்.."நான் ச்டீவை அவன் வலியில் இருந்து காபாற்றுவதற்க்காக அவனை நோக்கி விரல்களை நீட்டினேனா..இல்லை என்னுடைய வலியில் இருந்து தப்பிப்பதற்கு செய்தேனா? ... சிறு வயதில் தான் விளையாடிய மைதானத்திற்கு வரும் சாராவைப் பார்த்து "மரத்தில் என்ன தேடுகிறீர்கள்?" என காவலாளி கேட்க "என் முதல் காதலனின் பெயரை தேடுகிறேன்"..என சரா சொல்லும் பதில் மற்றொரு உதாரணம்...மனதை வருடும் இசை படத்தின் பலம்...
டாம் ஹூப்பருக்கு இது முதல் திரைப்படம் என்பது கூடுதல் செய்தி...மனித உரிமை மீறல்கள் என்றவுடன் அறுவறுக்கத்தக்க வகையில் ரத்த புழுதியில் படம் எடுக்காமல் பட தலைப்பை மட்டும் "சிவப்பு புழுதி" என்று வைத்திருக்கிறார் இயக்குனர்...ரத்தம் குறைவாக இருந்தாலும் காட்சிகளில் அழுத்தம் அதிகம்........
ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் படம் முடிந்து வெளி வந்தவுடன் வழக்கம் போல நண்பர்களுடன் சினிமாவைப் பற்றிய அரட்டை மிக நேரம் நீண்டது ...... உலக சினிமாக்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் ஒரு கேள்வி.
.ஏன் நம்மூர் இயக்குனர்கள் நல்ல நாவல்களை படமெடுக்க முற்படுவதில்லை?.
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என்று எல்லாமே தானே செய்ய வேண்டும் என்ற எண்ணம்
காரணமாக இருக்கலாம்...மற்றவர்கள் கதைகளையும் எடுக்க முற்படாததால் தான் கற்பனை மலட்டுத் தன்மை தவிர்க்க முடியாததாகி விட்டது ... அதே சமயத்தில் அந்த காலத்திலேயே உலக தரத்தில் எடுக்கப்பட்ட அந்த நாள் , உதிரி பூக்கள்,முள்ளும் மலரும் , 16 வயதினிலே போன்ற சில படங்களையும் நினைவு கூர்ந்தோம்.........
ஒரு காலத்தில் நேரத்தைப் போக்குவதற்காக சினிமாவைப் பற்றி பேச ஆரம்பித்து இன்று சினிமா பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரிவதில்லை....
9 comments:
Excellant review in 3 aspects: 1. Highlights of the movie and the finer moments in the movie explicitly highlighted and mentioned here which qualifies movie reviews english magazines. 2. Raising questions to our directors why they dont want to handle novel based subjects ( except Thankar Bachan and very few others) 3. Comparison of old classics. My points 2 & 3 cannot be raised when you are reviewing a tamil masala flicks.... I would try to download this movie and enjoy it...
Tuesday, July 12, 2011
Thanks Easwarn...
அருமையான ஆழமான விமர்சனத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி..இன்னும் படத்தை பார்க்கவில்லை சார்.உங்களது எழுத்துக்கள் படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது.
இத்தனை நாட்கள் எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணேன் என்று தெரியவிலை.அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
நல்ல விமர்சனம்.
இது போல் இன்னும் நல்ல உலக திரைப்படம் அறிமுகப்படுத்துங்கள்.
Kumaran said...
அருமையான ஆழமான விமர்சனத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி..இன்னும் படத்தை பார்க்கவில்லை சார்.உங்களது எழுத்துக்கள் படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது.
இத்தனை நாட்கள் எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணேன் என்று தெரியவிலை.அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
இது போன்ற உற்சாகங்களே என்னை தொடர்ந்து எழுத வைக்கின்றன , மிக்க நன்றி ...!
Arun J Prakash said...
நல்ல விமர்சனம்.
இது போல் இன்னும் நல்ல உலக திரைப்படம் அறிமுகப்படுத்துங்கள்.
மிக்க நன்றி ...!
சிறப்பான விமர்சனம் :-)
udanpirappe said...
சிறப்பான விமர்சனம் :-)
மிக்க நன்றி ...!
yappadi inda site miss aachi thanks boss enimay nan daily pappen.
Post a Comment