25 September 2011

மீளா நிலை ...

எதிர்பாரா நேரத்தில்
அழைக்கிறாய்
எதிபார்க்கும் தருணங்களில்
ஏனோ அலைக்கழிக்கிறாய் ...

எது சொன்னாலும்
சிரிக்கிறாய்
என்னை 
பைத்தியக்காரனாக்கி விட்டு ...

ஆணாதிக்கம் என்கிறாய்
என்னை
அடிமைப்படுத்தியது தெரியாமல் ...

காந்தீயம் பேசுகிறாய்
கண்களில்
பொய் சொல்லிக் கொண்டே ...

ஏனிந்த முரண்பாடு ?

முரண்பாடுகளின்
மொத்த உருவமாய்
நீ
இருந்தாலும்
மனம்
உன்னிடம் மட்டும் மண்டியிடுகிறது ...

உன்னுடன்
கைகள் கோர்ப்பதற்காகவே
நீண்டன என் பயணங்கள் ...

ஆயுளில்
ஒரு வருடம்
குறைவது தெரிந்தும்
கொண்டாடப்படும்
பிறந்த நாளை
போல

மீண்டு வர முடிந்தும்
பிடித்திருக்கிறது
இந்த
மீளா நிலை ...

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் காதல்...

அழகிய காதல் கவிதை..
பரிகொடுத்தேன் மனதை...

ananthu said...

# கவிதை வீதி # சௌந்தர் said
முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் காதல்...

அழகிய காதல் கவிதை..
பரிகொடுத்தேன் மனதை...

நன்றி சௌந்தர் ...

Anonymous said...

\\எது சொன்னாலும்
சிரிக்கிறாய்
என்னை
பைத்தியக்காரனாக்கி விட்டு ...//

இது காதலில் மட்டுமே உணரப்படக் கூடிய விஷயம்.காதலனால் மட்டுமே நினைத்து நினைத்து மகிழக் கூடியது. நிதானித்து, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...!

\\மீண்டு வர முடிந்தும்
பிடித்திருக்கிறது
இந்த
மீளா நிலை ...//

இது காதலர்களால் மட்டுமே உணரப்படக் கூடியது. அது மகிழ்வான தருணமானாலும்,மனக்கசப்பு தரும் தருணமானாலும்...!

மனதில் நிற்கின்ற வரி, இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும்...!

உங்களது கவிதைகள் மேலும் பெருக வாழ்த்துக்கள் அனந்து...!

\மீண்டு வர முடிந்தும்

உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி நுண்மதி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...