கமல் பொதுவாக ஒரு சீரியஸ் படத்திற்கு பிறகு காமெடி படம் பண்ணுவார் , அந்த பாணியில் ஜாலியாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் விக்ரமும், சுசீந்திரனும் கை கோர்த்திருக்கும் படம் " ராஜபாட்டை " ... காமெடி படமானாலும் அதையும் சீரியசாக திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்பதை ராஜபாட்டையில் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார்கள் ...
வில்லனாக வேண்டுமென்ற கனவோடு சினிமாவில் பைட்டராக வலம் வந்து கொண்டிருக்கும் அனல் முருகன் ( விக்ரம் ), அனாதை ஆஸ்ரம இடத்திற்காக தட்சிணா மூர்த்தியை ( கே.விஸ்வநாத் ) துரத்தும் நில மாபியா கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுகிறார் ... கடைசியில் நில அபகரிப்பு மூலம் ஊரையே அடித்து உலையில் போடும் அரசியல்வாதி அக்காவிடமிருந்து விஸ்வநாத்தையும் , ஆஸ்ரமத்தையும் விக்ரம் மீட்டாரா என்பதே கதை ...
தெய்வதிருமகளில் நடித்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் உடற்கட்டுடன் இருக்கிறார் விக்ரம் ... க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிந்தாலும் கெட்அப்பில் மறைக்கிறார் ... முதல் காட்சியிலேயே காமெடி பைட் மூலம் அறிமுகமாகும் விக்ரம் பிறகு முப்பது , நாப்பது அடியாட்களை சீரியசாக அடிக்கும் போது கூட நமக்கு சிரிப்பு வருவது கேரக்டரைஷேஷன் கோளாறு ...
படத்தின் முதல் பாதியை நகர்த்தி செல்லும் இரண்டாவது ஹீரோ கே.விஸ்வநாத் ... கமலுக்கே நடிப்பு சொல்லி தந்தவர் என்பதை நிரூபிக்கிறார். இவர் கொடுக்கும் காதல் டிப்ஸ் எல்லாம் அதர பழசு என்றாலும் இவர் சொல்லும் போது அழகாக இருக்கிறது ... விக்ரமுக்கும் , இவருக்கும் இடையேயான நட்பில் அழுத்தம் இல்லாததால் வா , போ என்று விக்ரம் இவரை அழைக்கும் போது நெருடுகிறது ...
ஹீரோயினாக நடித்திருக்கும் தீக்ஷா சேத் உயரமாக இருக்கிறார் , முகத்தில் ஒரு பொலிவே இல்லை ... டூயட் தவிர படத்தில் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை ... சொல்லப்போனால் ஹீரோயினை விட வில்லி அக்காவாக நடித்திருப்பவர் முகத்தில் தெரிகிறது பொலிவு ... வில்லிக்கு பக்கபலமான வாப்பா கேரக்டரில் பிரதீப் பொருத்தமாக இருக்கிறார், விக்ரம் பல கெட்டப்களில் வந்து இவரிடம் குறுக்கு விசாரணை செய்யும் காட்சிகள் கல கல ...
" அசிங்கத்த பாத்தா அவார்ட் வாங்க முடியுமாப்பா " , " நான் கோ டைரக்டர் , கோ படத்தோட டைரக்டர் இல்ல " என்று சொல்லும் தம்பி ராமையாவின் காமெடியும் , விக்ரமிடம் பயந்து நடுங்கும் அருள்தாசின் காமெடியும் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் சமாச்சாரங்கள் ...
யுவனின் இசையில் " பொடி பையன் " , " பனியே " பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன ...யுவன் , மதி , ராஜீவன் இப்படி நிறைய டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது ... பாஸ்கர் சக்தியின் வசனங்களும் பெரிதாக உதவவில்லை ...
விக்ரம்-விஸ்வநாத் நடிப்பு, விக்ரம் சாங் சீக்குவன்ஸ் யோசிக்கும் போது பைட்டர்கள் வந்தவுடன் சாங்கையே அவாய்ட் செய்வது , பதிவாளர் அலுவகத்தில் புகுந்து புத்திசாலித்தனமாக இட பத்திர பதிவை நிறுத்துவது, வேகமாக செல்லும் இரண்டாம் பாதி , சில இடங்களில் தேவையில்லாத பைட்களை தவிர்த்திருப்பது போன்றவை படத்தின் ப்ளஸ் ...
விக்ரமின் கேரக்டரைஷேஷன் , இம்ப்ரெஸ் செய்யாத கதை , திரைக்கதை , என்ன தான் பைட்டராக இருந்தாலும் ஊரையே ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதி அனுப்பும் ஆட்களை கொட்டாவி விட வைக்கும் அளவுக்கு விக்ரம் அடித்துக் கொண்டேயிருப்பது , சப்பென்று முடிந்து விடும் க்ளைமாக்ஸ் , லட்டு பிகர்களுடன் விக்ரம் ஆடியும் வீணடிக்கப்பட்ட " லட்டு லட்டு " பாடல் இவையெல்லாம் மைனஸ் ... மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்...
இணை இயக்குனர் சீனுவிடம் இருந்து நடப்பு நிகழ்வான நில அபகரிப்பை வைத்து எழுதப்பட்ட கதை ! யை வைத்து முழு நீள ஆக்சன் மசாலாவாக எடுக்கலாமா ? அல்லது காமெடியாக எடுக்கலாமா ? என்ற குழப்பத்திலேயே படம் நெடுக சுசீந்திரன் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு ராஜபாட்டை ஒரு ரெண்டுங்கெட்டான் ...
ஸ்கோர் கார்ட் - 38
12 comments:
ராஜபாட்டை ராஜ நடை போடாது என்கிறீர்களா???
விரிவான விமர்சனம். விக்ரமை விரயமாக்கிவிட்டார்கள் போலுள்ளதே.
guys check this ..
http://www.isaithuli.com/musicians/yuanshankar-raja/56-musicianyuanshankar-raja/983-rajapattai.html
அருமையான விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
கடம்பவன குயில் said...
ராஜபாட்டை ராஜ நடை போடாது என்கிறீர்களா???
விரிவான விமர்சனம். விக்ரமை விரயமாக்கிவிட்டார்கள் போலுள்ளதே.
நடையே போடலையே ! விக்ரமை மட்டுமா விரயமாக்கியிருக்கிறார்கள் ! வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
ffffvd said...
guys check this ..
http://www.isaithuli.com/musicians/yuanshankar-raja/56-musicianyuanshankar-raja/983-rajapattai.html
Saturday, December 24, 2011
Thanks...
இராஜராஜேஸ்வரி said...
அருமையான விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
/// மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்...////
உண்மை தானுங்கோ ஆனால் இனியும் திருந்தவார்களோ தெரியல..
vikram actinga comment pana yevanukum thakuthi ila...mangatha velayutham nala padama......
Raja said...
vikram actinga comment pana yevanukum thakuthi ila...mangatha velayutham nala padama......
I thing you have not read the review properly...I have not criticised vikram's acting but his characterization in the film is not good ... i also like his acting skills but no one is above criticism ... pls dont compare unnecessarily with other movies ...Thanks ...!
♔ம.தி.சுதா♔ said...
/// மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்...////
உண்மை தானுங்கோ ஆனால் இனியும் திருந்தவார்களோ தெரியல..
நிச்சயம் திருந்துவார்கள் ... ஏனென்றால் விக்ரம் , சுசீந்திரன் இருவரும் திறமைசாலிகள்....இந்த படம் ஒரு சோதனை முயற்சி அவ்வளவே ...!
Major disappointment by Suseenthran...& some extent by Vikram too... I never expected Susee&Vikram to have such a useless product... This season is full of disappointments... films like, Mayakkam Enna, WORSTHI, and the 3rd BIG disappointment is this movie... "Mouna guru" is the only exception. Susee better luch next time... do not spoil your name - Eswaran Kandaswamy
Anonymous said...
Major disappointment by Suseenthran...& some extent by Vikram too... I never expected Susee&Vikram to have such a useless product... This season is full of disappointments... films like, Mayakkam Enna, WORSTHI, and the 3rd BIG disappointment is this movie... "Mouna guru" is the only exception. Susee better luch next time... do not spoil your name - Eswaran Kandaswamy
Yes me too ...! but " Maykkam enna " is ok for me because of theme ... Thanks for your comments...
Post a Comment