18 April 2012

பழையன புகுதலும் - பார்க்கத் துடிக்கும் படங்கள் ...



ந்த வருடம் வெளியான படங்களில் " கர்ணன் " சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியிருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதோடு , கர்ணன் போல ஏற்கனவே பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் மறு வெளியீடு செய்வதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபடவும் வைத்திருக்கிறது ... இது போன்று எல்லா படங்களையும் மறு வெளியீடு செய்வார்களா என்று தெரியவில்லை , ஆனால் ஒரு ரசிகனாக நான் திரையில் பார்க்க விரும்பும் எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ :


சந்திரலேகா

எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு , இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு $ 600000 /. பட்ஜெட்டில் அந்த காலகட்டத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் படம் " சந்திரலேகா " .எம்.கே.ராதா , டி.ஆர்.ராஜகுமாரி , ரஞ்சன் , என்.எஸ்,கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றே சொல்லலாம்



வீர பாண்டிய கட்டபொம்மன்

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன் , பத்மினி உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  1959 ஆம் ஆண்டு வெளியான " வீர பாண்டிய கட்டபொம்மன் " வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது ... ஆக்ஸ் துறையுடன் சிம்ம குரலில் சிவாஜி பேசிய வசனங்களை பெரிய திரையில் பார்ப்பது போல நினைத்து பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது ...

திருவிளையாடல்

சிவாஜி - சாவித்திரி ஜோடியில் வெளி வந்த மற்றுமொரு வெற்றி படம்
" திருவிளையாடல் " ... ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படத்தில் எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் என்றுமே நினைவில் நீங்காமல் இருப்பது சிவபெருமானாக நடித்த சிவாஜிக்கும் , தருமியாக நடித்த நாகேசுக்கும் இடையேயான வசனங்களும் , பால முரளி கிருஷ்ணா குரலில் " ஒரு நாள் போதுமா " பாடலும் ...


ஆயிரத்தில் ஒருவன்

சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி ரசிகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரை பார்த்து முற்றிலும் பிரமித்த படம் " ஆயிரத்தில் ஒருவன் " ...1965  இல் சிவாஜிக்கு ஒரு திருவிளையாடல் என்றால் எம்.ஜி.ஆருக்கு " ஆயிரத்தில் ஒருவன் " ... எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , நம்பியார் , நாகேஷ் போன்றவர்களின் நடிப்பிற்காகவும் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலி எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களுக்காகவும் எத்தனை  முறை பார்த்தாலும் சலிக்காத படம் ...


 
எங்க வீட்டு பிள்ளை

டபுள் ஆக்டிங்கில் ஆள் மாறாட்டத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அவை எவையும் " எங்க வீட்டு பிள்ளை " யை மிஞ்ச முடியாது. வாலியின் வரிகளில் " நான் ஆணையிட்டால் " பாடல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக போவதை மக்களுக்கு முன் கூட்டியே உணர்த்தியது ...

காதலிக்க நேரமில்லை

பெரிய ஹீரோக்கள் படம் மட்டும் தான் மனதில் நிற்க வேண்டுமா ? நிச்சயம் இல்லை என்று " காதலிக்க நேரமில்லை " படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள் ... அறிமுக ஹீரோ ரவிச்சந்திரன் , காஞ்சனா , முத்துராமன் , நாகேஷ் இவர்கள் கூட்டணியுடன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், ஸ்ரீதரின் இயக்கமும் யாரமையுமே படம் பார்க்க நேரமில்லை என்று சொல்ல வைக்காது ... நாகேஷ் , பாலையாவிடம் சொல்லும் பேய் கதையை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும் ...



அதே கண்கள்
 
ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை ஆக்சன் ஹீரோவாகவும் ஆக்கிய அருமையான த்ரில்லர் படம் " அதே கண்கள் " , த்ரில்லர் படமாக இருந்தாலும் நாகேஷ் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் ... 

16 வயதினிலே


ரஜினி , கமல்
இருவரும் இணைந்து நடித்த எத்தனையோ படங்களுள் அவர்களின் நடிப்புக்காக மட்டுமின்றி , வெறும் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளி உலகுக்கு எடுத்து வந்த ட்ரென்ட் செட்டர் பாரதிராஜாவின் இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படம் " 16  வயதினிலே " ... இவை தவிர மயிலாக ஸ்ரீதேவியின் நடிப்பு , கவுண்ட மணியின் அறிமுகம் , இசைஞானியின் இசை இவையெல்லாம் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ...


நாயகன்

தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை உடைத்ததில் பாரதிராஜா ஒரு ட்ரென்ட் செட்டர் என்றால் அதை " நாயகன் " படத்தின் மூலம் தொழில் நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற விதத்தில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட் செட்டர் ... கமல் , தோட்டா தரணி , பி.சி.ஸ்ரீராம் இவர்களுக்கெல்லாம் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இசைஞானிக்கு கிடைக்காமல் போனது காலத்திற்கும் மனதில் நிற்கும் வருத்தம் ... 




பாட்ஷா

எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் " ரஜினிகாந்த் " ... அவரை மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் " பாட்ஷா " தான் மாஸ் ஹீரோயிசத்தின் உச்சக்கட்டம் ... " நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி கோடி தடவை கூட கேட்கலாம் ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் " பாட்ஷா " ...


16 comments:

Anonymous said...

மறுபடி பார்க்கத்துடிக்கும் படங்கள்...

கோவை நேரம் said...

லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே...

Kumaran said...

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த அனுபவம் தனி சுவை..அதை நானும் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன்..அதுவும் எங்க வீட்டு பிள்ளை படத்தை, எம்ஜிஆர் அவர்களின் நடிப்பை என்னால் என்னாளும் மறப்பது கடினம்..தங்களது பகிர்வை போல..மிகவும் அருமை..மிக்க நன்றி.

விச்சு said...

உங்கள் செலக்‌ஷன் அருமையாக உள்ளது.

ஹாலிவுட்ரசிகன் said...

தியேட்டர்ல ரிலிஸ் பண்ணினாலும் நமக்கு பார்க்க கிடைக்காது. ரீமாஸ்டர்ட் டீவிடி போட்டாங்கண்ணா பார்க்கலாம். லிஸ்டில் உள்ள சில படங்களில் சிலது குறித்துக் கொண்டேன்.

Unknown said...

ஆம் நண்பரே நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனம் அனைவருக்கும் தெரிந்த வசனம்

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா .... நல்ல தொகுப்பு !

ananthu said...

ரெவெரி said...
மறுபடி பார்க்கத்துடிக்கும் படங்கள்...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே...

உண்மை தான் ... பத்துக்குள் இருக்க வேண்டும் என நினைத்ததால் குறைத்துவிட்டேன் ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Kumaran said...
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த அனுபவம் தனி சுவை..அதை நானும் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன்..அதுவும் எங்க வீட்டு பிள்ளை படத்தை, எம்ஜிஆர் அவர்களின் நடிப்பை என்னால் என்னாளும் மறப்பது கடினம்..தங்களது பகிர்வை போல..மிகவும் அருமை..மிக்க நன்றி.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

விச்சு said...
உங்கள் செலக்‌ஷன் அருமையாக உள்ளது.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

ஹாலிவுட்ரசிகன் said...
தியேட்டர்ல ரிலிஸ் பண்ணினாலும் நமக்கு பார்க்க கிடைக்காது. ரீமாஸ்டர்ட் டீவிடி போட்டாங்கண்ணா பார்க்கலாம். லிஸ்டில் உள்ள சில படங்களில் சிலது குறித்துக் கொண்டேன்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Vairai Sathish said...
ஆம் நண்பரே நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனம் அனைவருக்கும் தெரிந்த வசனம்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
ஆஹா .... நல்ல தொகுப்பு !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

இராஜராஜேஸ்வரி said...

எவர் கிரீன் படங்கள் ரச்னை அருமை..

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
எவர் கிரீன் படங்கள் ரச்னை அருமை..

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...