1 September 2012

முகமூடி - மினியேச்சர் ...


ஞ்சாதே , யுத்தம் செய் போன்ற படங்களை உலக சினிமாப் படங்களின் பாதிப்புகளில் எடுத்தவர் , ஒரு உலக சினிமா படத்தை அப்படியே உல்டா செய்து நந்தலாலா வாக எடுத்தவர் இப்படி எவ்வளவோ சொன்னாலும் தன் படங்களை எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர்களுள் ஒருவர் மிஷ்கின்  ... இவர் சூப்பர் ஹீரோ கதையை வைத்து ஜீவா நடிப்பில் தந்திருக்கும் படம் முகமூடி ...

சென்னையில் வயதானவர்கள் வீட்டை தேடி தேடி கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல் ... அந்த கொள்ளை கும்பலை பிடிக்கும் பொறுப்பு அசிஸ்டன்ட் கமிஸனர் கெளரவிடம் ( நாசர் ) கொடுக்கப்படுகிறது ...  இதற்கிடையில் மாஸ்டர் சந்துருவிடம் ( செல்வா ) குங்க்பூவை கற்றுக்கொண்டு தண்டசோறாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் ஆனந்த் ( எ ) ப்ரூஸ்லீ ( ஜீவா ) ஏ.சி யின் பெண் ஆர்த்தியை ( பூஜா ஹெக்டே ) காதலிக்கிறார்... ஒரு சந்தர்ப்பத்தில் நரேன் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ஏ.சி யை கொல்லும் முயற்சியில் போலீசின் சந்தேகப் பிடியில் ஜீவா மாட்டிக் கொள்கிறார் ... காதலியை கவர்வதற்காக போட்ட முகமூடியுடன் ஜீவா கொள்ளைக் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதே கதை ...


படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நடிகர் ஜீவா ... இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு நன்றாகவே தெரிகிறது , ஆனாலும் சிக்ஸ் பேக் வைக்க சொல்லி ஜீவாவை கஷ்டப்படுத்தாமல் அந்த வேலையை டெய்லரிடமே விட்டுவிட்டார் மிஷ்கின்... சூப்பர் மேன் போல பேண்டிற்கு  மேல் ஜட்டி போட்டும் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லாததால் ஜீவா ஏனோ நம்மை கவரவில்லை ...

அழகிப் போட்டிகளில் ஜெயிப்பவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதை ஒரு முறை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பூஜா ... பேக்கிலிருந்து ஸ்டெப் ஸ்டெப் பாக இவரை அறிமுகம் செய்து அட போங்கடா என்று சொல்ல வைக்கிறார்கள் ... கொடூரமான வில்லனாக அறிமுகமாகி
க்ளைமேசில் ஜீவாவை பார்த்து " பேட்மேன் , ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் " என்றெல்லாம் சகிக்க முடியாத மேனரிஷத்தில் வசனம் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார் நரேன் ...ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டிய இவருடைய கேரக்டர் அபத்தமாக மாறியது அந்தோ பரிதாபம் ...


செல்வாவை பார்த்து ஜீவா உட்பட  அனைவரும்  " மாஸ்டர் , மாஸ்டர் "  என்று உயிரை விடுகிறார்கள் , ஆனால் அவரோ குங்க்பூ மாஸ்டர் போலல்லாமல் முழுக்கை பனியனை போட்டுக்கொண்டு " என்ன  மூணு இட்லி ஒரு பொங்கல் பார்சலா " என்று கேட்கும் சரக்கு மாஸ்டர் போலத்தான் இருக்கிறார் ..நந்தலாலா படத்தில் ஒரு சீனில் லாரி ஒட்டி சென்ற நாசருக்கு இந்த படத்தில் கனமான கதாபாத்திரம் ... வழக்கம் போல நன்றாகவே செய்திருக்கிறார் ... கிரீஸ் கர்னார்ட் கதாபாத்திரம் படத்தில் உள்ள மற்ற ஓட்டைகளை போலவே பெரிய ஓட்டை ... மிஷ்கினின் மனதிற்கு ஏற்ப லோ ஆங்கிள்  , வைட் டாப் ஆங்கிளில் கேமராவை நகர்த்தியிருக்கிறார் சத்யா ... அவர் என்ன செய்வார் பாவம் ?! ...

" கத்தாழ " , " கன்னித்தீவு " அளவிற்கு இல்லாவிட்டாலும் " நாட்டுல " பாட்டில் நன்றாகவே மெலடி குத்து போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கே ... " வாய மூடி " பாடலாலும் , " டார்க் நைட் " படத்தின் இசையை நியாபகப்படுத்தினாலும் பின்னணி இசையாலும் மனதில் பதிகிறார் கே ...

பேட்மேன் , சூப்பர் மேன் போல தமிழில் ஒரு படத்தை தர முயற்சித்ததற்காக இயக்குனர் மிஷ்கினை பாராட்டலாம் ... வழக்கமான தண்டசோறு ஹீரோவாக இருந்தாலும் குங்க்பூவை வைத்து பிணையப்பட்ட பின்னணி , மார்க்கெட் சண்டை உட்பட ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் , பிரமாதமான பின்னணி இசையுடன் ஜீவா முகமூடியாக மாறும் காட்சி , ஆங்காங்கே பளிச்சிடும் மிஷ்கின் டைப் ஷாட்கள் , இரண்டாவது பாதிக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல் பாதி போன்றவற்றால் மனதை தொடுகிறார் மிஷ்கின் ...


பெரிய பில்ட் அப் கொடுத்துவிட்டு சப்பென்று நகரும் இரண்டாம் பாதி , பெரிதும் கவனிக்க வைக்காத செல்வா - நரேன் பிளாஷ்பேக் காட்சிகள் , ஆஸ்பத்திரி சண்டை , கூன் விழுந்த வேரக்டர் , மடியில் விழுந்து சாகும் நண்பன் , பாம்பு போல காலை சுற்றி சுற்றி வரும் லோ ஆங்கிள் ஷாட்கள் , வசனமே இல்லாமல் நெடு நேரம் நகரும் காட்சிகள் இப்படி படம் நெடுக வழக்கமான மிஷ்கினின் மேக்கிங் ஸ்டைல் இவையெல்லாம் நம் முகத்தை கொஞ்ச நேரம் நேரம் மூட வைக்கின்றன . கொள்ளை கும்பல் நடத்தும் குங்க்பூ ஸ்கூல் , கிரீஸ் கர்னார்ட் வைத்திருக்கும் ஆராய்ச்சி கூடம் , திடீரென ஜீவா தரிக்கும் சூப்பர் ஹீரோ வேடம் இவையெல்லாம் மிஷ்கின் எந்நேரமும் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடி போல புரியாத புதிராகவே இருக்கின்றன ...

இரண்டரை மணி நேரத்திற்கு மேல் படத்தை வளர்க்காமல் தட்டி , ஒட்டி இரண்டாவது  பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் முகமூடி தமிழ் சினிமா உலகத்திற்கு முக்கிய மூடியாக இருந்திருக்கும் , அதிலும் குழந்தைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து ஜீவா மீட்கும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய க்ளைமேக்ஸ் காட்சி க்ரீஷ் கர்னார்ட் &  கோ வின் குளறுபடிகளால் மொக்கையாகி போனது ... பொருளாதார , வியாபார காரணங்களினால் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு  பிரம்மாண்டத்தை கொடுக்க முடியாமல் போனாலும் , க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே மூலம் மிஷ்கின் முகமூடியை ஹாலிவுட் படங்களின் மினியேச்சர் மாதிரி இல்லாமலாவது தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

16 comments:

MARI The Great said...

எல்லோரும் சண்டைக்காட்சி நன்றாக எடுத்திருப்பதாக கூறுகிறார்கள், அதற்காக ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்! முயற்சிபோம்! நன்றி நல்ல விமர்சனம்!

திண்டுக்கல் தனபாலன் said...

40 மார்க்... ரொம்ப அதிகம் தான்... ...ம்... Minimum மார்க் இவ்வளவு தானோ...?

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :

(1) Edit html Remove Indli Vote button script

(2) Remove Indli Follow Widget

தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நினைத்திருக்கும் ஒரு படம். ஆனா நீங்க சொல்றத பார்த்தா பார்க்க வேண்டாம் போல!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கோவை நேரம் said...

நல்ல விமர்சனம்...பார்க்கலாம்.தானே

ananthu said...

வரலாற்று சுவடுகள் said...
எல்லோரும் சண்டைக்காட்சி நன்றாக எடுத்திருப்பதாக கூறுகிறார்கள், அதற்காக ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்! முயற்சிபோம்! நன்றி நல்ல விமர்சனம்!

அதற்காக வேண்டுமானால் ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
40 மார்க்... ரொம்ப அதிகம் தான்... ...ம்... Minimum மார்க் இவ்வளவு தானோ...?
(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :(1) Edit html Remove Indli Vote button script
(2) Remove Indli Follow Widget
தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

தானாகவே முன் வந்து உதவி செய்யும் உங்களுக்கு நன்றி நண்பா ... நீங்கள் வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வந்திருந்தீர்களா ?

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
பார்க்க நினைத்திருக்கும் ஒரு படம். ஆனா நீங்க சொல்றத பார்த்தா பார்க்க வேண்டாம் போல!

எதிர்பார்ப்புகளே இல்லாமல் போனால் ஒருமுறை பார்க்கலாம் ...! உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.

நன்றி ...!

ananthu said...

கோவை நேரம் said...
நல்ல விமர்சனம்...பார்க்கலாம்.தானே

எதிர்பார்ப்புகளே இல்லாமல் போனால் ஒருமுறை பார்க்கலாம் ...! உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

Padman said...

முகமூடிக்குள் இருக்கும் முகத்தை முகதாட்சண்யம் இல்லாமல் விமர்சித்துள்ள பாங்கும், ரசிக்கும்படியாக அதனை கூறியிருக்கும் விதமும் அருமை. பாராட்டுகள்.

ananthu said...

Ananda Padmanaban Nagarajan said...
முகமூடிக்குள் இருக்கும் முகத்தை முகதாட்சண்யம் இல்லாமல் விமர்சித்துள்ள பாங்கும், ரசிக்கும்படியாக அதனை கூறியிருக்கும் விதமும் அருமை. பாராட்டுகள்.

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

Yaathoramani.blogspot.com said...

நல்ல இயக்கு நர்கள் கொஞ்சம்
மேடையில் விரிவாக்ப் பேசத் துவங்கிவிட்டாலே
படங்களில் சொதப்பத் துவங்கிவிடுகிறார்கள்
அது மட்டும் ஏன் எனத் தெரியவில்லை
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
மார்க்தான் கொஞ்சம் அதிகமோ ?

Tamilthotil said...

தெளிவான நேர்த்தியான விமர்சனம். என்ன செய்வது கதைக்கு தேவையானதை விட்டு விட்டு தனக்குத் தேவையானதை புகுத்த நினைப்பதினாலேயே பல இயக்குனர்கள் தோற்கிறார்கள்.முகமூடியும் அவ்வகை சினிமா தான்

ananthu said...

Ramani said...
நல்ல இயக்கு நர்கள் கொஞ்சம்
மேடையில் விரிவாக்ப் பேசத் துவங்கிவிட்டாலே
படங்களில் சொதப்பத் துவங்கிவிடுகிறார்கள்
அது மட்டும் ஏன் எனத் தெரியவில்லை
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
மார்க்தான் கொஞ்சம் அதிகமோ ?

மார்க் பற்றி எனக்கும் அதே சிந்தனை இருந்தது ...
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

Tamilraja k said...
தெளிவான நேர்த்தியான விமர்சனம். என்ன செய்வது கதைக்கு தேவையானதை விட்டு விட்டு தனக்குத் தேவையானதை புகுத்த நினைப்பதினாலேயே பல இயக்குனர்கள் தோற்கிறார்கள்.முகமூடியும் அவ்வகை சினிமா தான்

உண்மை தான் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...