தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு விக்ரம் - இயக்குனர் விஜய் இருவரும் அதே டீமுடன் மீண்டும் தாண்டவத்தில் கை கோர்த்திருக்கிறார்கள் ... படம் வருவதற்கு முன்பே கதை என்னுது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி எழுப்பிய குற்றச்சாட்டும் , அதை தொடர்ந்து அவருக்கு நியாயம் வழங்க முடியவில்லை என்று அமீர் உட்பட எட்டு பேர் பதவி விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , படத்தை பார்த்த பிறகு இதுக்காகவா இப்படி அடிச்சுக்கிட்டாங்க என்கிற நினைப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது ...
2011 இல் லண்டனில் ஒரு குண்டு வெடிப்பு , அதை தொடர்ந்து வரிசையாக சில கொலைகள் , கொலைகளை துப்பறியும் வீரகத்தி பிள்ளை ( நாசர் ) பார்வையிழந்த கெனி ( விக்ரம் ) தான் இதற்கு காரணமென்று கண்டுபிடிக்கிறார் ... பிறகு பார்வையிழந்தவர் கெனி இல்லை , அவர் எக்ஸ் ரா ஆபீசர் சிவா என்பதையும் , எதற்கு கொலைகள் செய்தார் என்பதையும் எந்த வித ஆக்ரோஷமும் இல்லாமல் நீ .. ள .. தாண்டவமாய் சொல்லியிருக்கிறார்கள் ... கொலாட்ரல் , டேர் டெவில் போன்ற படங்களை நினைவு படுத்தும் கதை தான் என்றாலும் விஜய்க்கு இது ஒன்றும் புதிதில்லை என்பதால் விட்டு விடுவோம் ...
கண் பார்வையிழந்த கெனி , ரா ஆபிசர் சிவா என்று இரண்டு தோற்றத்தில் வரும் விக்ரம் உடல் மொழியாலும் , உடற்கட்டாலும் நம்மை கவர்கிறார் , ஆனால் முகம் மட்டும் வயதை காட்டிக் கொடுக்கிறது ... இரண்டு , மூன்று அடிகளில் எதிரிகளை இவர் வீழ்த்தும் சண்டைக்காட்சிகள் அருமை ... அனுஷ்கா எனக்கு பிடித்த நடிகை , ஆனாலும் இந்த படத்தில் ஹோண்டா ஆக்டிவாவில் வரும் ஆன்டி போல தழுக் , முழுக் என்று இருக்கிறார் ... இவர் நடிப்பதற்கு ஒன்றும் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை... டூயட் காட்சிகளில் இளமை ததும்பவில்லை , மற்றவை ( சரி விடுங்க ) ...
எமி பார்வையிழந்த கெனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ... சமூக சேவை என்ற பெயரில் சர்ச்சில் இவருடன் சேர்ந்து போட்டோக்ராபர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன , மற்றபடி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை ... கொலை நடக்கும் இடங்களில் தானாய் வந்து மாட்டிக்கொள்ளும் டாக்ஸி டிரைவர் வேடத்தில் சந்தானம் ... நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் படத்தின் முடிவு முன்னமே தெரிந்து விட்டதோ என்னமோ மனிதர் டல்லாகவே இருக்கிறார் ...
துப்பறியும் இலங்கை தமிழர் வேடத்தில் வரும் நாசர் அந்த ஸ்லாங்கோடு ஒத்துப்போக முடிந்த வரை முயற்சித்திருக்கிறார் ... தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வை விக்ரமின் நண்பனாக இருந்து கொண்டே பணத்திற்காக வில்லனாக மாறுவதை போல காட்டியிருப்பது சலிப்பை தருவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை ... இவருக்கும் , விக்ரமிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி விறுவிறுப்பு ... விக்ரமின் அம்மாவாக சரண்யா , மாமாவாக எம்.எஸ்.,பாஸ்கர் , சில சீன்களே வந்தாலும் " தப்பாச்சே " என்று சொல்லி சிரிக்க வைக்கும் தம்பி ராமையா , பாலாஜி , லக்ஷ்மிராய் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் ...
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ... விஜய் - ஜி.வி கூட்டணி வழக்கம் போல கிளிக் ஆகியிருக்கிறது ... 25 வது படத்திற்காக ஜி.வி மெனக்கட்டிருப்பது " ஒரு பாதி கதவு " , " உயிரின் உயிரே " போன்ற மெலடிகளில் நன்றாகவே தெரிகிறது ...
பழி வாங்கும் கதை என்றாலும் வன்முறையையும் , வழக்கமான ஹீரோயிஷத்தையும் தவிர்த்திருப்பது , பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், மெதுவாக கொண்டு சென்றாலும் முதல் பாதியில் முடிந்தவரை சஸ்பென்ஷை தக்க வைத்தது , விக்ரம் - அனுஷ்கா திருமண காட்சிகள் , கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒலி எழுப்பி அது ஏற்படுத்தும் எதிரலைகள் மூலம் ( எக்கோலொகேஷன் ) எதிரில் இருப்பவர்களை அடையாளம் காணும் முறையில் விக்ரம் பயிற்சி எடுப்பது போன்றவை தாண்டவத்தில் நம்மை லயிக்க வைக்கின்றன ...
முந்தைய படமான தெய்வதிருமகள் - திருட்டு தேவதை என்ற போதும் திரைக்கதையாலும் , விக்ரம் - சாரா நடிப்பாலும் நம்மை ரசிக்க வைத்த விஜய் பெரிதும் கவராத கதை , மிக நீளமான திரைக்கதை , விக்ரம் நண்பனையே துரோகியாக இனம் கண்டு கொள்ளும் காட்சிகள் , அரைகுறையாய் கொடுக்கப்பட்ட த்ரில்லர் , ஆங்காங்கே மட்டும் மனதை தொடும் காதல் , ரசிக்க வைக்காத நகைச்சுவை இவற்றால் தாண்டவத்தில் நிறையவே தடுமாறியிருப்பது நன்றாக தெரிகிறது...
ஸ்கோர் கார்ட் : 40
14 comments:
எனக்கு ஆரம்பத்திலிருந்தே கதையில் ஒட்ட முடியவில்லை. படம் கடைசியில் நொண்டிக் காலில் ஆடிய தாண்டவமாகி விட்டது... :(
எனக்கும் இதே தான் தோன்றியது. விஜய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
நானும் உங்களை போல் தான் எழுதி உள்ளேன், ஒரே டேஸ்ட் :):)
@எனக்கும் இதே தான் தோன்றியது. விஜய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்."
அவர் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் செய்யுறாரு
எந்த வித எதிர்பாப்பும் இல்லாது நம்ம டாக்குத்தர் விஜய் படத்துக்கு போற மாதிரி இதுக்கும் போனா பிரச்சினை இல்லை
தாண்டவம்....வெறும் கால்களில்...அப்படித்தானே...
பரவாயில்லை ரகம் தான்...
இந்தியாவின் தலை சிறந்த 5 ரா ஆபிசர்களில் ஒருவருக்கு திருமணம்.அதற்கு 2 நாட்கள் முன்பு வரை அது(திருமணம்)பற்றி அவருக்கு தெரியவில்லை.இப்படி பட்ட பதவிகளில் இப்படி பட்ட ஆபிசர்கள் இருந்தால் நாம முன்னேறி விடுவோம்.
ஹாலிவுட்ரசிகன் said...
எனக்கு ஆரம்பத்திலிருந்தே கதையில் ஒட்ட முடியவில்லை. படம் கடைசியில் நொண்டிக் காலில் ஆடிய தாண்டவமாகி விட்டது... :(
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
ராஜ் said...
எனக்கும் இதே தான் தோன்றியது. விஜய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
நானும் உங்களை போல் தான் எழுதி உள்ளேன், ஒரே டேஸ்ட் :):)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
நபி வழி said...
எந்த வித எதிர்பாப்பும் இல்லாது நம்ம டாக்குத்தர் விஜய் படத்துக்கு போற மாதிரி இதுக்கும் போனா பிரச்சினை இல்லை
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
நபி வழி said...
@எனக்கும் இதே தான் தோன்றியது. விஜய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்."
அவர் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் செய்யுறாரு
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
கோவை நேரம் said...
தாண்டவம்....வெறும் கால்களில்...அப்படித்தானே...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
திண்டுக்கல் தனபாலன் said...
பரவாயில்லை ரகம் தான்...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!
சேக்காளி said...

Post a Comment